30 ஜன., 2013

2012 நினைவு

2012 நினைவு
புதிய உற்சாகத்துடனும், நிறைய எதிர்பார்ப்புகளுடனும் புது வருடமான 2013ம் ஆண்டுக்குள் நாம் காலடி எடுத்து வைக்கும் முன், கடந்த கால 2012ம் ஆண்டின் நினைவுகளையும், சாதனைகளையும் நினைவுகூகடமைப்பட்டிருக்கின்றோம்.
ஆர்சனல் அணியில் இணையும் பெக்காம்
இங்கிலந்து கால்பந்து அணியின் முன்னாள் டேவிட் பெக்காம் ஆர்சனல் அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இளம் வயதில் 200 கோல்கள்: மெஸ்சியின் மற்றொரு சாதனை
மேட்ரிட்டில் நடைபெற்ற 'லா லிகா' கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 5-1 என்ற கோல்கணக்கில் ஒசாசுனா அணியை வென்றது.
அதிக சதம் எடுத்து ரஞ்சிக் கிண்ண சாதனையை முறியடித்த ஜாபர்

சவுராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சிக் கிண்ண இறுதிச்சுற்றில் வாசிம் ஜாபர் சதம் அடித்து கைகொடுக்க மும்பை அணி முன்னிலை பெற்றது. 
ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.
101வது அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்றது.
நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மூன்றாமிடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவை சந்தித்தார்.
மூன்று மணி நேரம் 40 நிமிடம் வரை நீடித்த இப்போட்டியில் ஜோகோவிச் 6-7, 7-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
இது, இவரது 6வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். அவுஸ்திரேலிய ஓபன் (2008, 2011-13), விம்பிள்டன் (2011), அமெரிக்க ஓபன் (2011) தொடர்களில் பட்டம் வென்றுள்ளார்.
பிரெஞ்ச் ஓபனில் கடந்த ஆண்டு இறுதிச்சுற்று வரை முன்னேறிய இவர் 2வது இடம் பிடித்தார்.
இறுதிச்சுற்றில் அசத்திய ஜோகோவிச், அவுஸ்திரேலிய ஓபனில் 4வது முறையாக (2008, 2011, 2012, 2013) சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் வரிசையில் 2வது இடத்தை அமெரிக்காவின் அகாசி (1995, 2000, 2001, 2003), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் (2004, 2006, 2007, 2010) பகிர்ந்து கொண்டார்.
முதலிடத்தில் அவுஸ்திரேலியாவின் ராய் எமர்சன் (6 முறை, 1961, 1963-67) உள்ளார்.
தவிர, ஜோகோவிச் (2011-13) அவுஸ்திரேலிய ஓபனில் “ஹாட்ரிக்” பட்டம் வென்ற மூன்றாவது வீரரானார். முன்னதாக அவுஸ்திரேலியாவின் ராய் எமர்சன் (1963-67), ஜாக் கிராவ்போர்டு (1931-33) ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தார்.
சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்சுக்கு ரூ. 13.7 கோடி பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த முர்ரேவுக்கு ரூ. 6.8 கோடி பரிசு வழங்கப்பட்டது.
கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் அவுஸ்திரேலியாவின் ஜார்மிலா காஜ்டோசோவா, மாத்யூ எப்டன் ஜோடி, செக் குடியரசின் லாசி, பிரான்டிசெக் செர்மக் ஜோடியை சந்தித்தது.
இதில் அபாரமாக ஆடிய அவுஸ்திரேலிய ஜோடி 6-3, 7-5 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று சாம்பியன் பட்டம் வென்றது. 
இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுத் தலைவராக இலங்கை அணியின் மு‌ன்னா‌ள் அணித்தலைவர் ச‌ன‌த் ஜெயசூர்யா ‌நிய‌‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுத் தலைவராக இருந்த அசந்தா டீ மெல்லின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய தெரிவுக் குழுவை இலங்கை விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
எதிர்பார்த்தபடி தெரிவுக் குழுத் தலைவராக முன்னாள் அணித்தலைவரும், எம்.பி.யுமான ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்ற உறுப்பினர்களாக ஹேமந்தா விக்ரமாரத்னே, விக்ரன் சிங்கே, ஷமிந்தா மென்டிஸ், எரிக் உபஷந்தா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளன
இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் ரி-20 தலைவராக ஏஞ்சலோ மெத்திவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

உப தலைவராக தினேஸ் சந்திமால் அறிவிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன், இலங்கை ரெஸ்ட் அணித் தலைவர் மற்றும் உப தலைவர் பின்னர் நியமிக்கப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

22 ஜன., 2013

4 ஆயிரம் ஓட்டங்களை வேகமாக கடந்து சாதனை படைத்த கோஹ்லி
இங்கிலாந்து அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் கோஹ்லியின் அதிரடியால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சிட்னி ஒருநாள் போட்டிக்கு ஜெயவர்த்தன கடும் எதிர்ப்பு
சிட்னி ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இதற்கு இலங்கை அணித்தலைவர் ஜெயவர்த்தன கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியின் முடிவில், இலங்கை 2-1 என்று முன்னிலை வகித்தது.