29 அக்., 2010

முரளிதரன் (பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முக்கிய சுழற்-பந்து வீச்சாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். (test) துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடி இதுவரை ( 788 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும் இவர் அதிகூடிய இலக்குகளை வீழ்த்திய பட்டியலில் முதலாவதாக உள்ளார்
இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன.
2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்
இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு தமிழ ரான முரளி 2005 இல் இந்தியரான மதிமலர் இராமானுதியை திருமணம் செய்துக்கொண்டார்.

சின்னசாமி முத்தையா, இலக்ஷ்மி முத்தையா தம்பதிகளுக்கு மகனாக ஏப்ரல் 17, 1972, நத்தரன்பொத்த், குண்டசாலை, கண்டியில் முரளிதரன் பிறந்தார். சிறிதரன், பிரபாகரன், சசிகரன் என்ற மூன்று சகோதரர்கள் உள்ளனர். முரளிதரனின் தந்தை இலங்கையில் பிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுனவமான லக்கிலாண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் பாடசாலைக் கல்வியை பயின்ற முரளிதரன், பாடசாலை துடுப்பாட்ட அணியில் விளையாடி அதற்கு தலைமையும் தாங்கியிருந்தார். பாடசாலைக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளிதரன் அச்சமயம் பாடசாலை துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைகேற்ப சுழற்பந்து வீச்சை தொடங்கினார். 1990 மற்றும் 1991 ஆண்டுகளில் இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் "பாட்டா ஆண்டின் சிறந்த பாடசாலை துடுப்பாட்ட வீரர்" என்ற விருதை பெற்றார். 1991ஆம் ஆண்டு தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகத்தில் இணைந்து தனது துடுப்பாட்ட வாழ்வை ஆரம்பித்தார்.
துடுப்பாட்ட வீரராக
இலங்கை அணிக்காக 1992 இல் முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார். தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியை ஆகஸ்டு 12, 1993 இல் இந்திய அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார்.
துடுப்பாட்ட உலகின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனைத் தெரிவு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் முறை உருவாக்கப்பட்டு நான்காவது வீரராக இம்முறை முரளிதரன் விஸ்டன் சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, இந்த விருதுகளை அவுஸ்திரேலியாவின் றிக்கி பொன்டிங் மற்றும் ஷேன் வோர்ன், இங்கிலாந்தின் அன்றூ பிளின்டோவ் ஆகியோர் பெற்றுள்ளனர். 1992 இல் இலங்கை அணிக்கு விளையாடத் தொடங்கியதில் இருந்து இதுவரை788அதிகமான testஇலக்குகளையும் 500ற்கும் அதிகமான ஒருநாள் இலக்குகளையும் வீழ்த்திச் சாதனை புரிந்துள்ளார்.

முத்தையா முரளிதரன் பல உலக சாதனைகளைக் நிகழ்த்தியுள்ளார்:
தேர்வு மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் மொத்தமாக அதிகூடிய இலக்குகள் பெற்றவர் 1280இலக்குகள் TEST துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் 10 இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர்
TEST துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் 5 இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர (60)
ஜிம் லேக்கர் (இங்கிலாந்து) மற்றும் முரளிதரன் மாதிரமே TEST துடுப்பாட்டத்தில் சுற்று ஒன்றில் 9 இலக்குகளை இருமுறைப் பெற்றவர்களாவர்.
தேTESTதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக 50 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர்.

தேTESTதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக ஒரு போட்டியில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர்.
வேகமான 350[10], 400[11], 450[12], 500[13], 550[14], 600[15], 650[16] மற்றும் 700[17] தேர்வு இலக்குகளைப் பெற்றவர்.
நான்கு அடுத்தடுத்த தேர்வுப் போட்டிகளில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். முரளி இதனை இருமுறைச் செய்துள்ளார்]
TEST துடுப்பாட்டத்தில் நேரடி ஆட்டமிழப்புகள் அதிகமாக கொண்ட வீரர். (153) [19] [20]
அதிக சாதகமான களத்தார்/பந்துவீச்சாளர் சோடி பிடி,மகெல ஜயவர்தனா - பந்து முரளி(63) [21]

தென் அமெரிக்கா கண்டத்தில் முதலாவது ஒலிம்பிக்ஸ் - 2016


உலகின் பல விடயங்களில் தென் அமெரிக்க நாடுகள் தொடர்ச்சியாக, மேலாதிக்க சக்திகளால் ஓரங்கட்டப்பட்டு வந்த நிலையில் முதன் முதலாக 2016 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தும் பேற்றினை பிரேஸில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதாவது 2012ஆம் வருடம் இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு அடுத்ததாக, 2016 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரேஸிலின் ரியோடி ஜெனிரோவில் இடம்பெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக இந்த போட்டிகளை நடத்துவதற்காக அமெரிக்கா, ஜப்பான், ஸ்பெயின்; ஆகிய நாடுகளுடன் இந்த போட்டியை நடத்துவதற்காக பிரேசிலும் வாக்கெடுப்பில் மோதிக்கொண்டன. சிக்காக்கோவில் இந்தப்போட்டிகளை நடத்துவதற்காக அமெரிக்காவும், ரோக்கியோவில் இந்தப்போட்டிகளை நடத்துவற்காக ஜப்பானும், மட்றிட்டில் நடத்துவதற்காக ஸ்பெயினும்;, அதேவேளை ரியோடி ஜெனிரோவில் நடாத்துவதற்காக பிரேசிலும் இதில் கலந்துகொண்டன.
1904 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸை சென்லொயிஸிலும், 1932 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸை லொஸ் ஏஞ்சல்ஸிலும், 1984 மீண்டும் லொஸ் ஏஞ்சல்ஸிலும், இறுதியாக 1996ஆம் ஆண்டு அட்லான்டாவிலும் என நான்கு தடவைகள் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை அமெரிக்கா நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை 2016 ஆம் ஆண்டு சிக்காக்கோவில் இந்த போட்டிகளை நடத்த வேண்டும் என அமெரிக்கா ஜனாதிபதி பாரக் ஒபாமா உட்பட அமெரிக்கா அதிகாரிகள் பலரும் பகீரதப்பிரயத்தனம் செய்தனர்.
இந்தப்போட்டிகளை நடத்த அமெரிக்காவே தெரிவுசெய்யப்படும் என்ற கருத்துக்கணிப்புக்களே அதிகம் இருந்தமையினால் மிகுந்த நம்பிக்கையுடன், அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா, சிக்காக்கோ மேஜர் உட்பட அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு நேற்று டென்மார்க் விரைந்திருந்தனர். ஆனால்; 2016 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தும் உரிமையினை பிரேஸில் பெற்றுள்ளதாக ஒலிம்பிக்ஸ் சர்வதேச கொமிட்டி டென்மார்க்கில் அறிவித்துள்னளமை அவர்களை பலத்த ஏமாற்றமடையவே செய்திருக்கும்.


மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட வாக்களிப்பினை நாம் பார்த்தோமானால்,
முலாவது சுற்றில்
மற்ரிட் 28
ரி.ஜெனிரோ 26
ரோக்கியோ 22
சிக்காக்கோ 18

இரண்டாவது சுற்றில்
மற்ரிட் 29
ரி.ஜெனிரோ 46
ரோக்கியோ 20

மூன்றாவது சுற்றில்
மற்ரிட் 32
ரி.ஜெனிரோ 66
என்ற வாக்குகளை பெற்றிருந்தன. இந்த ரீதியில் 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தவுள்ளது பிரேஸிலின் ரியோடி ஜெனிரோ என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்கா கண்டத்தின் விளையாட்டு என்றதும் உதைபந்தாட்டம் மட்டுமே அனைவரது மனத்திரைகளிலும் விழுந்துவிடும் அதை மாற்றி மெய்வன்மை போட்டிகளையும் மிகச்சிறப்பாக நடத்தமுடியும் என பிரேஸில் நிரூபிக்கக்காத்திருப்பதாகவும், அதேவேளை உலகில் அதிசக்தி வலு மற்றும், அதி சக்தி தொழிநுட்பங்களை கொண்டு மிகத்தரமான விளையாட்டரங்கங்களை நிர்மானிக்கவுள்ளதாகவும், ஆரம்பத்திலேயே மிக அசத்தலாக தென் அமெரிக்க கண்டத்தில் முதலாவது ஒலிம்பிக்ஸை ஆரம்பித்துவைப்பதில் பிரேஸிலின் ரியோடி ஜெனிரோ பெருமை கொள்கின்றது என அந்த நாட்டின் தலைவர் அறிவித்துள்ளார்.


இந்தப்போட்டிகளை நடாத்த தாம் 1440 கோடி அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வோம் என ஒலிம்பிக்ஸை நடத்த விண்ணப்பித்த பிரேஸில் தெரிவித்திருந்தது.
இதற்கமைய முதற்கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்காக தற்போது 280 கோடி அமெரிக்க டொலர்களை பிரேஸில் முதலீடு செய்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்தப்போட்டிகளை நடத்துவதன் மூலம் 2016 ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரேஸிலுக்கு
5110 கோடி அமெரிக்க டொலர்களுக்கும் மேலான முதலீடுகளை கொண்டுவரும் என பிரேஸிலின் விளையாட்டுத்துறை அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நம்ம ஆசியாவில் இதுவரை ஜப்பான், தென்கொரியா, மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் ஒலிம்பிக்போட்டிகளை நடத்திமுடித்துள்ளன. 2100 இற்குள் இந்தியாவால் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு எந்தவித சாத்தியக்கூறுகளும் அறவே இல்லை என பல ஆய்வாளர்களாலும் அடித்து சொல்லப்பட்டுள்ளது.
இலங்கை..???? கேட்பதே பலருக்கு வேடிக்கையாகவே இருக்கும்.
பரவாயில்லை நாம் சார்க் விளையாட்டுப்போட்டிகளில் எமக்குள்ளே போட்டிவைத்து பதக்கங்களையும் அள்ளிக்குவித்தால்ப்போச்சு…


28 அக்., 2010

23rd Oct 2010
சமீபத்திய சர்வே: கால்பந்தை நேசிக்கு நகரம்;பிரேசிலின் சாபாலோ முதலிடம்

சாபாலோ
கால்பந்து எந்த நகரங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது என்று சமீபத்தில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது.பட்டியலில் தென்அமெரிக்க நகரங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.முதலிடத்தை பிரேசிலின் சாபாலோவும் 2வது இடத்தை அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சும் பெற்றுள்ளன.இத்தாலியின் மிலான் 3வது இடத்தை பிடிக்கிறது.
1.சாபாலோ- பிரேசில்
--------------------------
பீலே பிறந்த சாபாலோ உலகில் கால்பந்தாட்டத்தை அதிகம் நேசிக்கும் மக்கள் நிறைந்த நகரங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.1902ம் ஆண்டு துவக்கப்பட்ட சாபாலோ ஸ்டேட் லீக் போட்டி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.பிரேசிலின் புகழ்பெற்ற அணிகளான கொரிந்தியன்ஸ்,சான்டோஸ்,சாபாலோ,பல்மாரிஸ் போன்ற அணிகளின் தாயகம் இந்த நகரம்.2 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தில் கால்பந்து வீரர் இல்லாத வீடே கிடையாது.
2.பியூனஸ் அயர்ஸ்- அர்ஜென்டினா
--------------------------------------------
அர்ஜென்டினியர்கள் அதிகம் விரும்பு விஷயத்தில் கால்பந்துக்கு முதலிடம்.இவர்கள் விரும்பும் இன்னொரு விஷயம் நீண்ட முடி வளர்ப்பது ஆகும்.அர்ஜென்டினாவின் தலைநகரமான பியூனஸ்அயர்சில் உலகின் மிகவும் புகழ்பெற்ற இரு அணிகள் உள்ளன.அவைகள் போகா ஜுனியர்ஸ்,ரிவர் பிளேட்.இதுதவிர பொம்பரானா ஸ்டேடியமும் உலக புகழ்பெற்றது.
3.மிலான்- இத்தாலி
------------------------
உலகின் புகழ்வாய்ந்த இரு கிளப்புகளை உள்ளடக்கியுள்ளது இந்த வடக்கு இத்தாலி நகரம்.இன்டர்மிலானும் ஏ.சி.மிலானும் இல்லாத கிளப் கால்பந்தை யோசித்துக் கூட பார்க்க முடியாது.இந்த இரு கிளப்புகளும் தெருக்களையும் பேருந்துகளையும் மட்டும் பகிர்ந்துக்கொள்ளவில்லை.அதிநவீன மைதானமான சான்சிரோவையும் பகிர்ந்து கொள்கின்றன.
4.மாட்ரிட்- ஸ்பெயின்
-------------------------
உலகின் பணக்கார அணியாக கருதப்படும் ரியல்மாட்ரிட் இங்குதான் உள்ளது.அது மட்டுமல்ல ஸ்பானீஷ் லீக்கில் அசத்தி வரும் அத்லெடிகோ மாட்ரிட்டின் தாயகமும் இந்த நகரம்தான்.உலகின் புகழ்பெற்ற கால்பந்து மைதானமான சான்டியாகோ பெர்னாபூ இங்குள்ளது.
5.மான்டிவிடியோ-உருகுவே
------------------------------------
உலக கோப்பை கால்பந்து போட்டியை துவக்கி வைத்த உருகுவே தலைநகரம் இது.நாசினியாரல்,பெனாரல் என இரு புகழ்பெற்ற கிளப்புகள் இங்குள்ளன.இந்த இரு அணிகளும் பரம வைரிகள் ஆகும்.இரண்டும் மோதினால் களத்தில் அனல் பறக்கும்.இந்த நகரத்துக்கு 5வது இடம்.
6.ரியோடி ஜெனிரோ- பிரேசில்
------------------------------------
பிரேசிலின் வர்த்தக தலைநகரமான இங்குதான் உலகின் மிகப்பெரிய மைதானமான மரக்கானா உள்ளது.2014ம் ஆண்டு உலக கோப்பையின் இறுதி ஆட்டமும் இங்குதான் நடைபெற போகிறது.பொடபாகோ, பிளமிங்கோ,வாஸ்கோடகாமா,பிளமினெஸ் போன்ற அணிகள் இந்த நகரத்தில்தான் பிறந்தன.
7.லண்டன்- இங்கிலாந்து
------------------------------
இங்கிலாந்தின் தலைநகராமான இங்கு செல்சி,ஆர்சனல் என்ற இரு புகழ்பெற்ற கால்பந்துஅணிகள்உள்ளன.டாட்டன்ஹாம்,வெஸ்ட்ஹாம்,புல்ஹாம்,கிரிஸ்டல் பேலஸ் என லண்டன் முழுவதும் புகழ்பெற்ற கால்பந்து அணிகள் நிறைந்துள்ளது.இந்த நகரத்துக்குள்ள ஒரே குறைபாடு ஐரோப்பாவின் கவுரவமிக்க கால்பந்து போட்டியான, சாம்பியன்ஸ் லீக்கில் இது வரை லண்டன் அணிகள் பட்டத்தை வென்றது இல்லை என்பதே.உலகின் புகழ்பெற்ற கால்பந்து மைதானமான வெம்ப்ளி இங்கு உள்ளது.ஆனாலும் லண்டனுக்கு 7வது இடமே கிடைத்துள்ளது.
8.மெக்சிகோ சிட்டி- மெக்சிகோ
--------------------------------------
உலகின் மிகப்பெரிய நகரமான மெக்சிகோ சிட்டியில் 3 கால்பந்து அணிகள் பிரசித்தி பெற்றவை.யுனிவர்சிடால் நாசியனால்,கிரஸ் அசூல்,கிளப் அமெரிகா போன்ற கிளப்புகள் மெக்சிகோ கால்பந்துக்கு அடித்தளம்.
9.லிவர்பூல்-இங்கிலாந்து
-----------------------------
லிவர்பூல்,எவர்ட்டன் என இரு புகழ்பெற்ற அணிகள் இந்த நகரத்தில் உள்ளன.எவர்ட்டனில் இருந்து பிரிந்துதான் லிவர்பூல் உருவானது.உலகிலேயே வன்முறை நிறைந்த கால்பந்து ரசிகர்கள் இங்குதான் உள்ளனர்.லிவர்பூல் எங்கு சென்றாலும் தொடர்ந்து சென்று எதிர் அணி ரசிகர்களிடம் வம்பிழுப்பது இந்த நகர ரசிகர்களின் வழக்கம்.கால்பந்தில் வன்முறை வெடித்தால் அதற்கு நிச்சயம் ஒரு லிவர்பூல் ரசிகர் காரணமாக இருப்பார்.இந்த நகரத்துக்கு 9வது இடம்.
10.போர்ட் அல்ஜீரே- பிரேசில்
------------------------------------
இந்த பட்டியலில் 10வது இடத்தை பிரேசிலின் கிரீமியோ அணி தலைமையகம் அமைந்துள்ள போர்ட் அல்ஜீரே பெறுகிறது.

27 அக்., 2010

22nd Oct 2010
பீலேவுக்கு 70 வதுபிறந்தநாள்-அவரைப்பற்றிய 70 சிறப்பு தகவல்கள்!
', LEFT, true, BGCOLOR, '#ffffff',FADEIN,'1000')" onmouseout="UnTip()">
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே 70வது பிறந்தநாளை கொண்டாடினார்.இந்த தருணத்தில் அவரை பற்றிய 70 சுவாரஸ்யத் தகவல்களை தமிழ்ஸ்போர்ட்ஸ் நியூஸ்.காம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது.பீலேவின் பிறந்த தினம் சரியாகத் தெரியவில்லை.அவர் 1940ம் ஆண்டு அக்டோபர் 21 அல்லது 23ந் தேதிகளில் பிறந்ததாக இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறது.
1.பீலே மொத்தம் 1,283 கோல்களை அடித்துள்ளார்.இதில் 92 கோல்கள் பிரேசிலுக்காக அடித்தது.
2.மூன்று முறை உலக கோப்பையை வென்றுள்ளார்.
3.அமெரிக்க விஞ்சானி தாமஸ் ஆல்வா எடிசனை நினைவாகவே எட்சன் அரான்டஸ் டி நாசிமென்டே என்ற இயற்பெயர் அவருக்கு சூட்டப்பட்டது.
4.பீலேவை 15 வயதில் பிரபல பிரேசில் அணியான சான்டோஸ் ஒப்பந்தம் செய்தது.
5.1956ம் ஆண்டு செப்டம்பர் 7ந் தேதி கொரிந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீலே களம் இறங்கினார்.இந்த போட்டியில் 4 கோல்களை அடித்து பிரமிக்க வைத்தார்.
6.17 வயதில் பீலே உலக கோப்பையை வென்று சாதனை படைத்தார்.இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.இறுதி போட்டியில் சுவீடனுக்கு எதிராக இரு கோல்களும் அடித்தார்.
7.கடந்த 1995ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை பிரேசில் விளையாட்டுத்துறை அமைச்சராக பீலே இருந்தார்.
8.1999ம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் 20ம் நுற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரராக பீலேவை அறிவித்தது.
9.1969ம் ஆண்டு நவம்பர் 19ந் தேதி சான்டோஸ் அணிக்காக பீலே ஆயிரமாவது கோலை அடித்தார்.10 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்திற்குள் வந்து பீலேவை தலையில் வைத்து கொண்டாடினார்கள்.
10.ஒவ்வொரு நவம்பர் 19ந் தேதியையும் சாபாலோ நகரத்தில் பீலே தினமான கொண்டாடப்படுகிறது.
11.உலக கோப்பையில் பீலே 12 கோல்களை அடித்துள்ளார்.உலக கோப்பை போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்களில் பீலேவுக்கு 5வது இடம்.
12.உலக கோப்பையில் அதிக கோல் அடித்த பிரேசில் வீரர்களில் பீலேவுக்கு 2வது இடம்.ரொனால்டோவுக்கு முதலிடம்.
13.நைஜீரியாவில் அரசு படைகளுக்கும் தீவிரவாத கும்பலுக்கும் இடையே போர் நடந்த சமயத்தில் பீலே ஒரு கண்காட்சி போட்டியில் விளையாட நைஜீரியா வந்தார்.அவரது ஆட்டத்தை காண்பதற்காக 48 மணி நேரம் போர்நிறுத்தம் செய்யப்பட்டது.
14.நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக பீலே விளையாடிய போது,ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் பீலேவிடம் ஜெர்சியை மாற்றிக் கொள்ள எதிர் அணி வீரர்கள் முண்டியடிப்பார்கள்.(கால்பந்தில் போட்டி முடிந்தவுடன் எதிர் அணி வீரர்களிடம் இருந்து ஜெர்சியை பரஸ்பரம் மாற்றிக் கொள்வது வழக்கம்)பீலே விளையாடும் ஒவ்வொரு போட்டியின் போதும் 30 பீலேவின் ஜெர்சிகளை நியூயார்க் காஸ்மோஸ் வைத்திருக்கும்.
15.ஆயிரக்கணக்கான அறக்கட்டளை அமைப்புகள் நிதி திரட்டுவதற்காக பீலேவை விளையாட அழைத்துள்ளன.அவரும் சளைக்காமல் சென்று வருவார்.
16.2001ம் ஆண்டு பீலே நியூயார்க் காஸ்மோசின் கவுரவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
17.பீலேவும் மரடோனாவும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள்''மரடோனா குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடல் இல்லை'' என்று பீலே சொன்னால் மரடோனா,''பீலே மியூசியத்தில் இருக்க வேண்டியவர்''என்று பதிலளிப்பார்.
18.1966ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பாபி மூர்,''பீலேவை போன்ற ஒரு கால்பந்தாட்டக்காரரை தன் வாழ்நாளில் கண்டது இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
18.அவரது குடும்பத்தினர் பீலேவுக்கு வைத்த இன்னொரு பெயர் டீகோ. பின்னர் அவரது பள்ளி பருவத் தோழர்கள் வாஸ்கோடகாமா அணியின் கோல்கீப்பர் பெலேவின் பெயரை சூட்டினர்.அதுவே பின்னர் பீலே என்று மாறியது.
19.பீலேவின் தந்தையும் ஒரு கால்பந்து வீரர்தான்.ஒரே போட்டியில் ஐந்து கோல்களை தலையால் முட்டி அவர் அடித்துள்ளார்.ஆனால் பீலேவால் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.அதிக பட்சமாக ஒரு போட்டியில் 4 கோல்களை பீலே தலையால் முட்டி அடித்துள்ளார்.
20.1970ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் பிரேசிலுக்கான 100வது உலக கோப்பை கோலையும் பீலே அடித்தார்.
21.1958ம் ஆண்டு உலக கோப்பை கால் இறுதி ஆட்டத்தில் வேல்ஸ் அணிக்கு எதிராக பீலே முதல் கோல் அடித்தார்.
22.1994ம் ஆண்டு மனதத்துவ நிபுணரும் பாடகியுமான அசிரியா லீமோசை 2வது திருமணம் செய்தார்.
23.கால்பந்து விளையாடும் ஒவ்வொரு குழந்தையும் என்னைப் போல வர முயற்சி செய்கின்றன.அந்த குழந்தைகள் என்னை போல் ஆவதை விட நல்ல மனிதர்களாக உலகத்தில் வலம் வரவே நான் விரும்புகிறேன் என்று பீலே ஒரு முறை சொன்னார்.
24. வெற்றி பெறுவதற்கு பீலே கொடுத்துள்ள விளக்கம் ''சக்சஸ் தற்செயலாக நிகழ்வது இல்லை,கடின உழைப்பு,கற்றுக் கொள்வது,கற்றுக் கொடுப்பது,தியாகம் எல்லாவற்றுக்கும் மேலாக நாம் விரும்புவதை நேசிப்பதில் நமது வெற்றி அடங்கியிருக்கிறது''
25.20ம் நுற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரராக குத்துச்சண்டை வீரர் முகமது அலியையும் பீலேவையும் கடந்த 2000ம் ஆண்டு பி.பி.சி தேர்வு செய்தது-
26.இத்தாலியின் புகழ்பெற்ற தடுப்பாட்டக்காரரான டாஸ்சிரியோ பர்ஸ்கிச்,1970ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது பீலே பற்றி குறிப்பிட்டதாவது'' எல்லாரையும் போலத்தானே அவரும் சதையாலும் எழும்புகளாலும் படைக்கப்பட்டுள்ளார் என்று நினைத்தேன்.ஆனால் எனது கணிப்பு தவறு என்பது பின்பு எனக்கு புரிந்தது''
27.பெரும்பாலான பிரேசிலியர்கள் பீலேவை 'பெரோலா நெக்ரா' என்றே கூறுகின்றனர்.இதற்கு அர்த்தம் 'கருப்பு முத்து'
27. பெரும்பாலான நாடுகள் பீலேவை தங்கள் நாட்டு குடிமகனாக்க முயற்சி செய்தன.இதனை தடுக்க 1961ம் ஆண்டு பிரேசில் பீலேவை தேசிய சொத்தாக அறிவித்தது.
28.1975ம் ஆண்டு நியூயார்க் காஸ்மோஸ் பீலோவை ஒப்பந்தம் செய்ய விரும்பியது.அப்போது அந்த அணியின் பொது மேலாளர் கிளைவ் டோயே,''இத்தாலிக்கு போக வேண்டாம் ஸ்பெயினுக்கு போக வேண்டாம்.அங்கே சென்றால் கோப்பைகளையும் பதக்கங்களையும் வெல்லலாம்.ஆனால் அமெரிக்காவுக்கு வந்தால் ஒரு நாட்டையே வெல்லலாம்'' என்று பீலேவிடம் கூறினார்.
29.இளமை பருவத்தில் பீலேவும் அவரது நண்பர்களும் ஒரு கால்பந்து அணி வைத்திருந்தனர்.அந்த அணியின் பெயர் 'காலணி இல்லாதவர்கள்'
30.கோகோ&கோலா நிறுவனம் பிரேசிலில் பீலேவை பற்றிய ஒரு கண்காட்சி வாகனத்தை உருவாக்கியுள்ளது.இந்த கண்காட்சி வாகனம் பிரேசில் நாட்டை சுற்றிக் கொண்டே வருகிறது.
31.கிறிஸ்டியானோ ரொனால்டோ பீலே பற்றி சொன்னது'' பீலே ஒரு முறைதான் பிறக்க முடியும்''
32. மூன்று முறை உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்த ஒரே வீரர் பீலேதான்.
33.இளமை பருவத்தில் கால்பந்து வாங்க பணம் இல்லாத பீலே,''துணி,சாக்ஸ்,பேப்பர்கள் ஆகியவற்றை அடைத்து பந்து செய்து பயிற்சி எடுப்பார்.
34.ரெயில் நிலையங்களில் ஷ§க்களுக்கு பாலீஸ் போடும் பணியையும் பீலே செய்துள்ளார்.
35.''முதலிடத்தில் இருக்க வேண்டும்.இரண்டாவது இடத்தில் இருந்தால் அது வேஸ்ட்'' வெற்றி குறித்து பீலே சொன்னது.
36.பீலே ஐ.நா.அமைப்பு,யுனிசெப் அமைப்புகளின் நிரந்தர அம்பாசடர்.
37. பிரேசிலில் கால்பந்தில் இருக்கும் லஞ்ச ஊழல்களை தடுக்க பீலே ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
38.1964 நவம்பர் 24ந் தேதி பொடபாகோ அணிக்கு எதிராக சான்டோஸ் வீரரான பீலே 8 கோல்களை அடித்தார்.இந்த ஆட்டத்தில் சான்டோஸ் 11-0 என்று வெற்றி பெற்றது.
39.ஒரு முறை 8 கோல்களையும், 6 முறை 5 கோல்களையும் பீலே அடித்துள்ளார்.
40. 31 முறை 4 கோல்களும் 92 ஹாட்ரிக் கோல்களும் பீலேவின் கோல் கணக்கில் அடக்கம்.
41. 1971ம் ஆண்டு ஜுலை 18ந் தேதி யூகோஸ்லோவாகியா அணிக்கு எதிராக கடைசி சர்வதேச ஆட்டத்தில் பீலே விளையாடினார்.இந்த போட்டி 2-2 என்று டிராவில் முடிந்தது.
42.கிளப் போட்டியில் கடைசி ஆட்டம் பிளமிங்கோ அணிக்கு எதிரானது.இந்த போட்டியில் சான்டோஸ் 2&0 என்று வெற்றி பெற்றது.இது 1976 அக்டோபர் 6ந் தேதி நடைபெற்றது.
43.1977ம் ஆண்டு அக்டோபர் 1ந் தேதி பீலே விளையாடிய சான்டோஸ் மற்றும் நியூயார்க் காஸ்மோஸ் அணிகள் ஒரு கண்காட்சி போட்டியில் நியூயார்க்கில் மோதின.இந்த போட்டியில் முதல் பாதியில் சான்டோஸ் அணிக்காகவும் இரண்டாவது பாதியில் நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காகவும் பீலே விளையாடினார்.
44.மறக்கப்பட்ட மாவீரன் கரிஞ்சாவும் பீலேவும் இணைந்து விளையாடிய எந்த போட்டியிலும் பிரேசில் தோற்றது இல்லை.
45.பிரேசில் அணிக்காக 92 கோல்கள் அடித்துள்ளார்.இந்த சாதனை எந்த பிரேசில் வீரரும் இன்னும் வரை முறியடிக்கவில்லை.
46.உலக கோப்பையில் பிரேசிலின் 100வது கோலை பீலே தலையால் முட்டி அடித்தார்.
47.1980ல் பீலேவின் கால்பந்தாட்டதை வைத்து வீடியோ கேம் வந்தது.அதன் பெயர் 'பீலேஸ் சாக்கர்'
48.கராத்தே வீரர் ஜோஸ் லேன்டி ஜேனுக்கும் பீலே என்ற நிக்நேம் உண்டு.
49.புகழ் பெற்ற நெதர்லாந்து நாட்டு ஓவியர் டிக் பிரினிஸ்டன் பீலேவை ஓவியமாக வரைந்து பரிசளித்துள்ளார்.
50.1975ம் ஆண்டு பீலே நியூயார்க் காஸ்மோசில் இணைந்தார்.நியூயார்க்கில் பீலே ஆடி வந்த காலத்தில்தான் கால்பந்து அமெரிக்காவில் பிரபலமாகத் தொடங்கியது.பீலே ஆடிய போட்டியை காண சராசரியாக 13 ஆயிரம் ரசிகர்கள் திரண்டனர்.அமெரிக்காவில் அப்போது இது ஒரு சாதனை ஆகும்.
51. 1956 ஜுன் 9ந் தேதி லேவ்ராஸ் அணிக்கு எதிரான சான்டோஸ் வீரர் பீலே முதல் ஹாட்ரிக் கோல் அடித்தார்.
52.1975ம் ஆண்டு ஜுன் 5ந் தேதி நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக பீலே டல்லாஸ் டொர்னாடோஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்கினார்.இதில் கோலும் அடித்தார்.இந்த ஆட்டம் 2-2 என்று டிரா ஆனது.
53.பீலே நடித்த 'எஸ்கேப் டு விக்டரி' என்ற ஆங்கிலப் படம் உலக மக்களை வெகுவாக கவர்ந்தது.
54.2005ம் ஆண்டு வயகராவை பயன்படுத்த வேண்டாம் என்று பீலே ஒரு விளம்பர படத்தில் நடித்தார்.
55.1970ம் ஆண்டு மெக்சிகோ உலக கோப்பை போட்டியில் ஒரு ஆட்டம் துவங்க இருந்தது.காலணி லேஸ் அவிழ்ந்து விட்டது வெயிட் என்று நடுவரிடம் பீலே கையை காட்டினார்.ஏதோச்சையாக கேமரா பீலே லேசை கட்டுவதை காட்டியது.அப்போது அவர் 'பூமா' காலணியை பயன்படுத்தி வந்தார்.அந்த ஒரே நாளில் மட்டும் லட்சக்கணக்கான பூமா காலணிக்கள் விற்று தீர்ந்தன.
56.பீலே 129 முறை 3 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார்.
57.பீலேவின் 1000வது கோல் பெனால்டி முறையில் அமைந்தது.இதே போல் ஆயிரம் கோல் அடித்துள்ள இன்னொரு வீரர் ரொமாரியோ.இவரும் பெனால்டி மூலம்தான் 1000வது கோலை அடித்தார்.
58.பீலே பிறந்த நகரம் சாபாலோ.
59.பீலேவின் உயரம் 5 அடி 8 அங்குலம்.
60.பீலே இரண்டு கிளப் அணிகளுக்கு மட்டுமே விளையாடியுள்ளார்.1956 முதல் 74 வரை சான்டோஸ்காக விளையாடி 1087 கோல்களை அடித்துள்ளார்.1975 முதல் 77 வரை நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக விளையாடி 67 கோல்களை அடித்துள்ளார்.
61.பீலேவின் தந்தை பெயர் டோன்டினோ.இவர் பிளமினெஸ் அணி வீரர்.
62.பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து மைதானமான மரக்கானாவில் பீலேவின் காலடித்தடம் பதிக்கப்பட்ட நினைவு சின்னம் உள்ளது.
63.பீலேவுக்கு 1966ம் ஆண்டு திருமணம் நடந்தது.ரோஸ்மேரி என்பவரை அவர் மணந்தார்.இவர்களுக்கு இரண்டு மகள்கள்.மூத்தவர் பெயர் கெல்லி கிறிஸ்டியானா,இளையவர் ஜெனிபர்.மகன் பெயர் எடின்கோ.1978ம் ஆண்டு இந்த தம்பதிகள் விவாகரத்து செய்தனர்.
64.1994ம் ஆண்டு பீலே இரண்டாவது திருமணம் செய்தார்.இதன் மூலம் பீலேவுக்கு இரட்டை குழந்தைகள் உண்டு.பெயர் ஜோசுவா,செலாஸ்டே
65.டைம் இதழ் 20ம் நுற்றாண்டின் 20 முக்கிய மனிதர்களில் ஒருவராக பீலேவை தேர்வு செய்தது.
66.கடந்த 2000ம் ஆண்டு 'பிபா' இணையம் மூலம் 20ம் நுற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர் யார்?என்று ஓட்டெடுப்பு நடத்தியது.இதில் மரடோனா முதலிடம் பிடித்தார்.இளைய தலைமுறையின் ஆதரவு மரடோனாவுக்கு அதிகமாக இருந்தது.ஏனென்றால் அவர்கள் பீலேவின் விளையாட்டை பார்த்தது இல்லை.இதனால் வேறு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி சிறந்த வீரராக இருவரையும் தேர்வு செய்தது.
67.உலகின் மிகப் பழமையான அணியான 'ஷெட்பீல்டு' துவங்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதையட்டி கடந்த 2007ம் ஆண்டு இன்டர்மிலானுடன் ஒரு நட்பு போட்டியில் மோதியது.இந்த போட்டியை துவக்கி வைக்கும் பெருமை பீலேவுக்கு வழங்கப்பட்டது.
68.திரைப்படம்,குறும்படம்,&
முக்கிய செய்திகள்
27/10/2010
Club for Education

விளையாட்டு

26 அக்., 2010

காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்ற ஈழத் தமிழர்.புகைப்படங்கள் வீடியோ இணைப்பு.

வெள்ளி, 8 அக்டோபர், 2010

டெல்லி காமன்வெல்த் போட்டியில் ஒரு தமிழர் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஈழத்தைச் சேர்ந்த பிரஷாந்த் செல்லத்துரை. ஆஸ்திரேலியாவுக்காக விளையாடி வருகிறார் இந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்.








சர்வதேச அரங்கில் தமிழர்கள் முத்திரை தற்போது அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் இப்போது டெல்லி காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்காக ஒரு தமிழர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.






அவரது பெயர் பிரஷாந்த் செல்லத்துரை. பூர்வீகம் ஈழம். இவரது குடும்பத்தினர் இலங்கையில் இனக் கலவரம் பெரிதாக வெடித்த 1983ம் ஆண்டு அங்கிருந்து இடம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்றனர். தற்போது சிட்னியில் வசித்து வருகிறது செல்லத்துரையின் குடும்பம்.
செல்லத்துரை ஆஸ்திரேலிய ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள முக்கிய வீரர் ஆவார். ஆஸ்திரேலியாவுக்காக டெல்லி காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்று கொடுத்துள்ளார்.





குதிரை வீரன் என்று ஆஸ்திரேலிய வீரர்களால் செல்லமாக அழைக்கப்படும் செல்லத்துரை சரியான உயரம். இதனால்தான் இந்தப் பெயரை வைத்துள்ளனராம் ஆஸ்திரேலிய சகாக்கள்.
டெல்லி காமன்வெல்த் போட்டியில் இரு போட்டிப் பிரிவுகளில் கிட்டத்தட்ட 15,000 புள்ளிகள் வரை பெற்றள்ளார் செல்லத்துரை. ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் இந்த அளவுக்கு அதிக பட்ச புள்ளிகள் கிடைப்பது மிகவும் அரிதான விஷயம். அந்த அளவில் செல்லத்துரை ஒரு சாதனையே படைத்துள்ளார்.)நன்றி http://rajkumer.blogspot.com/2010/10/2.html

24 வயதேயாகும் செல்லத்துரை ரேடியாலஜி மாணவர் ஆவார். ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்தது செல்லத்துரைக்கு எளிதாக இருக்கவில்லையாம். கடும் போராட்டங்கள், கடின பயிற்சி , கடுமையான முயற்சிக்குப் பின்புதான் அணியில் இடம் கிடைத்ததாம்.
செவ்வாய்க்கிழமை நடந்த குழுப் போட்டியில் செல்லத்துரை, ஜோசுவா ஜெபரிஸ், சாமுவேல் ஆப்போர்ட், லூக் விவடோவஸ்கி, தாமஸ் பிச்லர் ஆகியோர் அடங்கிய குழு தங்கம் வென்றது. ஜிம்னாஸ்டிக்ஸில் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த முதல் காமன்வெல்த் தங்கம் இது.
இதேபோல இன்னொரு தங்கத்தையும் வென்று இரட்டை தங்க நாயகனாக உயர்ந்துள்ளார் செல்லத்துரை.

கடந்த மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் செல்லத்துரை. இந்த முறை தங்கத்துடன் திரும்புவேன் என சபதமே போட்டிருந்தாராம். சொன்னபடி வாங்கியும் விட்டார்.
டெல்லி காமன்வெல்த் போட்டியில் தமிழர்தங்கவேட்டையாடிவருவது பெருமைக்குரிய விஷயம்தான்
பகிர்க42

20 அக்., 2010

20th Oct 2010
ஒட்டுக்கு லஞ்சம் கேட்ட செயற்குழு உறுப்பினர்கள் மீது 'பிபா' விசாரணை
உலக கோப்பை போட்டியை நடத்த வாய்ப்பு கேட்கும் நாடுகளிடம் ஆதரவான ஓட்டளிக்க லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 'பிபா'வின் இரு செயற்குழு உறுப்பினர்கள் மீதும் இன்று விசாரணை செய்யப்பட உள்ளது.
வருகிற 2018ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்த இங்கிலாந்து மற்றும் ரஷ்ய நாடுகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.இந்த போட்டியை பயன்படுத்தி 'பிபா'வில் ஓட்டளிக்கும் உரிமையுள்ள இரு செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் கல்லாப் பெட்டியை நிரப்பிக் கொள்ள திட்டமிட்டனர்.இதனால் 2018ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்த மும்முரமாக களத்தில் இறங்கியுள்ள இங்கிலாந்திடம் அந்த நாட்டிற்கு ஆதரவாக ஓட்டளிக்க லஞ்சம் கேட்தாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
நைஜீரியா கால்பந்து சங்க நிர்வாகி அமாஸ் அடாமு இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதில் முதன்மையானவர்.மற்றொருவர் ஓசானியா கால்பந்து சம்மேளனத்தலைவர் ரெனால்ட் டொமாரி.இந்த இருவரும் இங்கிலாந்துக்கு ஆதரவாக ஓட்டளிக்க பணம் கேட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த விவகாரத்தை சீரியசாக எடுத்துக் கொண்ட 'பிபா' இந்த இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இவர்கள் இருவரும் இன்று(20ந் தேதி) சூரிச்சில் உள்ள 'பிபா' தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.
இதற்கிடையே 2018ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைக்காது என்று கருதிய அமெரிக்கா போட்டியில் இருந்து விலகியுள்ளது.2022ம் ஆண்டு உலக கோப்பையில் கவனம் செலுத்தப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது.வருகிற 2018 மற்றும் 2022ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்த உள்ள நாடுகளை டிசம்பர் 2ந் தேதி சூரிச்சில் நடைபெறும் தேர்தலில் 'பிபா'வின் 24 செயற்குழு உறுப்பினர்கள் ஓட்டெடுப்பு மூலமாக தேர்வு செய்வார்கள்.
2018ம் ஆண்டு உலக கோப்பை நடத்த இங்கிலாந்து, ரஷ்யா,பெல்ஜியம்-நெதர்லாந்து,போர்ச்சுகல்-ஸ்பெயின் நாடுகளும்,2022ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்த அமெரிக்கா,கத்தார்,ஆஸ்திரேலியா,ஜப்பான்-தென்கொரிய நாடுகளும் போட்டி போடுகின்றன.



Na


சாம்பியன்ஸ் லீக்: இன்டர்மிலான்-டாட்டன்ஹாம் இன்று மோதல்
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இன்று (20ந் தேதி)நடக்கும் ஆட்டத்தில் இன்டர்மிலான் டாட்டன்ஹாம் அணியுடன்...
மேலும்..
temp-thumb
temp-thumb
temp-thumb
temp-thumb
temp-thumb
temp-thumb
right panel title
முக்கிய செய்திகள்
20/10/2010
Club for Education
right panel title
இதர செய்திகள்
right panel titleபுள்ளிகள் பட்டியல்
அணிPGWDL
No Results Found!
IndianCareerClub
right panel title
இன்றைய போட்டிகள்
CHAMPIONS LEAGUE GROUP STAGE
19/10/2010 08:45 PM
IndianCareerClub
நியூ இங்கிலாந்து ஸ்போர்ட்ஸ் வென்சர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பேஸ்பால் அணியின் பெயர் என்ன?
பாஸ்டன் ரெட் சாக்ஸ்
right panel title
உங்கள் கருத்து
கால்பந்தில் வன்முறை தலைவிரித்தாட அரசியலும் ஒரு காரணமா?
சரி
தவறு
vote
View Result
IndianCareerClub