டிவில்லியர்ஸ் புதிய சாதனை
அபுதாபியில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 2 ஆவது நாளான நேற்று முன்தினம் தென்னாபிரிக்க அணி முதல் இனிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 584 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தென்னாபிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் 278 ஓட்டங்கள் (418 பந்து,23 பவுண்டரி,6 சிக்ஸர்)குவித்து கடைசிவரை களத்திலிருந்தார்.
இதன் மூலம் டெஸ்டில் தென்னாபிரிக்க வீரர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் என்ற சிறப்பை டிவில்லியர்ஸ் பெற்றார். இதற்கு முன்பு தென்னாபிரிக்க வீரர்களில் கப்டன் ஸ்மித் 277 ஓட்டங்கள் (இங்கிலாந்துக்கு எதிராக 2003 ஆம் ஆண்டு) எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இச்சாதனையை டிவில்லியர்ஸ் கடந்ததும் இனிங்ஸ் முடித்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக