விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் 7 முறை தொடரைக் கைப்பற்றிய சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
லண்டனில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-1' வீரரான செர்பியாவின் நேவாக் ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை எதிர்கொண்டார். இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், முதல் செட்டை 7-6, என்ற கணக்கில் வென்றார். சுதாரித்துக் கொண்ட பெடரர், இரண்டாவது செட்டை 7-6 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுத்தார். இதற்கு மூன்றாவது செட்டை 6-4 என வென்று ஜோகோவிச் பதிலடி கொடுத்தார். தொடர்ந்து நடந்த நான்காவது செட்டிலும் ஜோகோவிச்சின் கையே ஓங்கியிருந்தது.
இந்த செட்டை 6-3 என மிகச்சுலபமாக வென்றார் ஜோகோவிச். முடிவில், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 7-6, 6-7, 6-4, 6-3 என்ற செட்களில் பெடரரை வீழத்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் ஜோகோவிச் தனது 9வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் 3-வது விம்பிள்டன் பட்டத்தையும் வென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக