24 மே, 2011


29th Apr 2011
நடுவர்கள் உதவியுடன்தான் பார்சிலோனா ஜெயிக்கிறது-ரியல்மாட்ரிட் பயிற்சியாளர் ஜோஸ் மோரின்ஹோ குற்றச்சாட்டு

  முக்கிய போட்டிகளில் நடுவர்களின் உதவியுடன்தான் பார்சிலோனா வெற்றி பெறுகிறது என்று ரியல்மாட்ரிட் பயிற்சியாளர் ஜோஸ் மோரின்ஹோ குற்றம் சாட்டியுள்ளார்.
 சாம்பியன்ஸ் லீக் அரைஇறுதி முதல் லெக் ஆட்டத்தில் பார்சிலோனா 2-0 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட்டை தோற்கடித்தது.இந்த ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் ரியல்மாட்ரிட் வீரர் பெப் சிவப்பு அட்டைக் காட்டி வெளியேற்றப்பட்டார்.தொடர்ந்து ரியல்மாட்ரிட் பயிற்சியாளரும் களத்தை விட்டு வெளியேற்றப்£ட்டார். இந்த போட்டி முடிந்ததும் ரியல் பயிற்சியாளர் ஜோஸ் மோரின்ஹோ ஆவேசத்துடன் பேட்டியளித்தார்.
 ''ஒரு நடுவர் இரு அணியையும் சமமாக நடத்த வேண்டும்,ஆனால் ஒவ்வொரு முக்கிய ஆட்டங்களிலும் பார்சிலோனாவுக்கு சாதகமாகவே நடுவர்கள் செயல்படுகின்றனர். 'யூபா'வும் பார்சிலோனாவுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. இதற்கு காரணம் 'யுனிசெப்' அமைப்புடன் பார்சிலோனா இணைந்திருப்பதே.பார்சிலோனாவை சமூகத்துக்கு உதவும் ஒரு கால்பந்து கிளப்பாக பார்க்கின்றனர்.இதனால் அனைவருக்கும் பார்சிலோனா மேல் ஒரு கருணை பார்வை உள்ளது.''
 ''போர்ட்டோ, இன்டர்மிலான் அணிகளுடன் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை நான் வென்றேன். ஆனால் பார்சிலோனா பயிற்சியாளர் கார்டியாலா நடுவர்கள் உதவியுடன்தான் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றார். கடந்த 2008ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் அரைஇறுதி ஆட்டத்தில் செல்சியை நடுவர்களுடன் உதவியுடன்தான் பார்சிலோனா வென்றது. அதே போலவே இப்போது ரியல்மாட்ரிட்டை வீழ்த்தியுள்ளது என்றார்.''
 ஜோஸ் மோரின்ஹோவின் இந்த குற்றச்சாட்டுக்கு பார்சிலோனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.தனது வீரர்கள்,ரசிகர்கள்,பயிற்சியாளர் உள்பட அனைவரையும் ஜோஸ் மோரின்ஹோ அவமானப்படுத்தியுள்ளதாக பார்சிலோனா கருதுகிறது.எனவே மோரின்ஹோ மீது 'யூபா'வில் புகார் அளிக்க பார்சிலோன முடிவு செய்துள்ளது

கருத்துகள் இல்லை: