13 டிச., 2010

10th Dec 2010
பக்கத்து நாடுகளுடன் இணைந்து கத்தார் உலக கோப்பை போட்டியை நடத்துமா?
 உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள கத்தார் அருகில் உள்ள நாடுகளுடன் இணைந்து போட்டியை நல்ல முறையில் நடத்த முன்வர வேண்டும் என்று 'பிபா' தலைவர் செப் பிளேட்டர் கூறியுள்ளார்.
 வருகிற 2022ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பலத்த போட்டிக்கிடையே கத்தார் பெற்றது. ஆனால் மிகச் சிறிய நாடான கத்தாரில் உலகின் மிகப் பெரிய விளையாட்டி திருவிழாவை பிரமாண்டமாக நடத்தும் அளவுக்கு பிரமாண்ட ஸ்டேடியங்களோ நகரங்களோ கிடையாது.இதனை கருத்தில் கொண்டு பக்கத்து நாடுகளுடன் இணைந்து உலக கோப்பை போட்டியை நடத்த கத்தார் முன்வர வேண்டும் என்று 'பிபா'தலைவர் செப் பிளேட்டர் கூறியுள்ளார்.
 மேலும் ''கத்தாரில் உலக கோப்பை நடக்கவிருப்பது வளைகுடா நடுகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.கத்தார் அருகில் உள்ள ஐக்கிய குடியரசு,சவுதி அரேபியா,ஓமன் போன்ற நாடுகளிலும் சில போட்டிகளை நடத்த முன் வர வேண்டும்.அப்படி போட்டி நடைபெறுவது வளைகுடா நாடுகளுக்கு பெருமைக்குரிய விஷயம்'' என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: