சென்னை, ஏப். 13- கே.எஸ். நாராயணன் நினைவு பெண் களுக்கான அய்.டி.எப். டென் னிஸ் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத் தில் நடந்தது. இதன் பெண் கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட் டியில் இந்திய வீராங்கனை கள் பிரார்த்தனா ஜி.தோம்ப ரேஈடீ மேத்தா ஆகியோர் மோதினார்கள்.
விறுவிறுப் பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஈடீ மேத்தாவும், 2ஆவது செட்டை பிரார்த்தனா வும் சொந்தமாக்கினார்கள். பரபரப்பான கடைசி செட்டில் ஈடீ மேத்தா 4-1 என்ற முன்னிலை பெற்றதால் அவர் தான் வெற்றியை ருசிப் பார் என்று எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், அதன் பின் னர் விறுவிறுப்பாக ஆடிய பிரார்த்தனா டைபிரேக்கர் வரை சென்ற அந்த செட்டை தன்வசப்படுத்தியதுடன், வாகையர் பட்டத்தை கைப் பற்றினார். 3 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் பிரார்த்தனா தோம் பரே 4-6, 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஈடீ மேத் தாவை வீழ்த்தி வாகையர் பட்டத்தை சொந்தமாக்கி னார்.
வாகையர் பட்டம் வென்ற பிரார்த்தனாவுக்கு 12 தர வரிசை புள்ளிகளுடன் ரூ. 93 ஆயிரமும், 2ஆவது இடம் பெற்ற ஈடீ மேத்தா வுக்கு 8 தர வரிசை புள்ளிக ளுடன் ரூ.59 ஆயிரமும் கிடைத்தன.
சிங்கப்பூர் ஓபன் போட்டி: அரையிறுதியில் சிறீகாந்த் தோல்வி
சிங்கப்பூர் ஓபன் பாட் மிண்டன் போட்டியின் அரை யிறுதியில் இந்தியாவின் சிறீகாந்த், மலேசியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் லீ சாங் வீயிடம் தோல்விய டைந்து வெளியேறினார்.
சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரின் முதல் சுற்றிலேயே இந்திய வீராங்கனை சாய்னா தோல் வியடைந்தார். ஆந்திரத்தைச் சேர்ந்த மற்றொரு வீராங் கனை பி.வி.சிந்து காலிறுதி யில் வெற்றியைப் பறிகொடுத் தார்.
ஆடவர் பிரிவில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த கிடாம்பி சிறீகாந்த், சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் தரவரிசை யில் முதலிடத்தில் உள்ள லீ சாங் வீயை சந்தித்தார். ஆரம்பத்தில் இருவரும் சவா லான ஆட்டத்தை வெளிப் படுத்தினர்.
முதல் செட்டில் 19-16 என முன்னணியில் இருந்த சிறீகாந்த் அதைத் தக்க வைக்கத் தவறினார். இதனால் 21-19 என லீ சாங் வீ முதல் செட்டைக் கைப்பற் றினார். 42 நிமிடங்கள் நடை பெற்ற இந்த ஆட்டத்தில் சிறீகாந்த் தோல்வியடைந்தார்.
துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்றார் மனவ்ஜித் சிங்
சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்ட மைப்பு (அய்எஸ்எஸ்எஃப்) நடத்திய ஷூட்கன் உலகக் கோப்பைப் போட்டியில், ஒலிம்பிக்கில் இரண்டு முறை வாகையர் பட்டம் வென்ற மைக்கேல் டைமண்டை வீழ்த்திய இந்திய வீரர் மனவ் ஜித் சிங் தங்கப் பதக்கத்தை வென்றார்.
அமெரிக்காவின் டஸ்கன் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதிச் சுற்றில், ராஜீவ் கேல் ரத்னா விருது வென்ற மனவ்ஜித் சிங்குக்கும், 1996 அட் லாண்டா ஒலிம்பிக் மற்றும் 2009 சிட்னி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஆஸ் திரேலியாவின் மைக்கேல் டைமண்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியில் 12-1 புள்ளிக ளுடன் மனவ்ஜித் சிங் முத லிடம் பிடித்து தங்கப் பதக் கத்தை வென்றார். இதன் மூலம், நான்கு ஆண்டு களுக்குப் பின் உலகக் கோப் பையில் மீண்டும் அவர் பதக்கம் வென்றுள்ளார்.
வெற்றி குறித்து மனவ் ஜித் சிங் கூறுகையில், மைக் கேல் டைமண்டுக்கு எதிராக வெற்றிபெறுவது என்பது மிகவும் சவால் அளிக்கும் விஷயம். இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி' என்றார்.
டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ்: அரையிறுதியில் தீபிகா பல்லிகல்
டெக்சாஸ் ஓபன் ஸ்கு வாஷ் போட்டியின் காலிறு தியில் கயானாவின் நிக்கோ லெட் ஃபெர்னாண்டஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன் னேறினார் சென்னையைச் சேர்ந்த தீபிகா பல்லிகல்.
அமெரிக்காவின் ஹூஸ் டன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் காலி றுதிச் சுற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் தரவரிசையில் 12ஆவது இடத் தில் உள்ள தீபிகா நீண்ட போராட்டத்துக்குப் பின் 11-4, 11-6, 10-12, 10-12, 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அரையிறுதியில் அவர், அயர் லாந்து வீராங்கனை மேட் லின் பெர்ரியை சந்திக்கிறார்.
வெற்றிக்குப் பின் தீபிகா கூறுகையில், இந்த சுற்று கொஞ்சம் கடினமாக இருந் தது. மூன்றாவது செட்டில் நிக்கோலெட் கடின போராட் டத்துக்குப் பின் அந்த செட் டைக் கைப்பற்றினார்.
இறு தியில் என் திட்டம் சரியாக நிறைவேறி வெற்றி பெற்ற தில் மகிழ்ச்சி. மேட்லினுக்கு எதிராக ஆடுவது எப்போதும் சவால் அளிக்கும். இதற்கு முன் அவரை வீழ்த்தியுள் ளேன் என்றாலும் அவர் சிறந்த ஃபார்மில் இருப்ப தால் அடுத்த ஆட்டம் கடின மானதாக இருக்கும் என்றார்.
Read more: http://www.viduthalai.in/home/sports.html#ixzz2yo3ylFAr