மாட்ரிட் ஓபன்: காலிறுதியில் லீ நா, செரீனா
அர்ஜூனா விருதுக்கு 4 ஆக்கி வீரர்கள் பெயர் பரிந்துரை
லா லிகா கால்பந்து போட்டி
Read more: http://www.viduthalai.in/home/sports.html#ixzz31DuW2n9a
மாட்ரிட் ஓபன் டென் னிஸ் போட்டியின் மகளிர் பிரிவு காலிறுதிச்சுற்றுக்கு சீனாவின் லீ நா, அமெரிக் காவின் செரீனா வில்லி யம்ஸ், செக் குடியரசின் பெட்ரோ குவிட்டோவா ஆகிய வீராங்கனைகள் முன் னேறியுள்ளனர்.
மாட்ரிட் நகரில் வியா ழக்கிழமை நடைபெற்ற 3ஆம் சுற்று ஆட்டத்தில் லீ நா 2-6, 6-3, 6-2 என்ற செட்களில் அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபான்ஸ வீழ்த்தினார்.
பெட்ரா குவிட்டோவா 6-4, 6-3 என்ற நேர் செட்களில் சக நாட்டைச் சேர்ந்த லூசியா சஃபரோவாவை தோற்க டித்து அடுத்த சுற்றுக்கு முன் னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செரீனா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் சவு ரஸ் நவரோவாவை தோற் கடித்து காலிறுதிக்கு முன் னேறினார். இப்போட்டி யின் காலிறுதிக்கு தொடர்ந்து 3ஆவது ஆண்டாக செரீனா முன்னேறியுள்ளது குறிப் பிடத்தக்கது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவு 3ஆம் சுற்றில் ஃபின்லாந்தின் ஜார்கோ நிமெய்னனை 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் நடால் தோற் கடித்தார். சமீபத்தில் நடை பெற்ற 2 டென்னிஸ் தொடர் களில் தொடக்க சுற்று களிலேயே தோல்வியைத் தழுவிய நடாலுக்கு இந்த வெற்றி புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கும்.
மற்ற ஆட்டங்களில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே 3-6, 2-6 என்ற நேர் செட்களில் கொலம் பியாவின் சான்டியாகோ ஜிரல்டோவிடம் தோற்று போட்டியிலிருந்து வெளி யேறினார். ஜப்பான் வீரர் நிஷிகோரி 7-6, 7-6 என்ற நேர் செட்களில் கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை தோற்கடித்தார்.
மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் இணை 7-5, 1-6, 8-10 என்ற செட் கணக்கில் சீன தைபே இணையிடம் தோல்வியடைந்தது.
அர்ஜூனா விருதுக்கு 4 ஆக்கி வீரர்கள் பெயர் பரிந்துரை
புதுடில்லி, மே 9- இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு இந்திய ஆக்கி வீரர்கள் ரகுநாத், தரம் விர்சிங், துஷர் கண்டேகர், முன்னாள் கேப்டன் பரத் சேத்ரி ஆகியோரின் பெயர் களை ஆக்கி இந்தியா அமைப்பு பரிந்துரை செய் துள்ளது.
பயிற்சியாளர்க ளுக்கு அளிக்கப்படும் துரோ ணாச்சார்யா விருதுக்கு, இந் திய ஜூனியர் பெண்கள் அணி யின் பயிற்சியாளர் ரோமேஷ் பதானியாவின் பெயர் பரிந் துரைக்கப்பட்டுள்ளது.
லா லிகா கால்பந்து போட்டி
லா லிகா கால்பந்து போட் டியில் வல்லடோலிட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் சமன் செய்தது.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ரியல் மாட்ரிட் 1 கோல் அடித்து முன்னிலை யில் இருந்தது. இந்த கோலை 35ஆவது நிமிடத்தில் செர் ஜியோ ரமோஸ் அடித்தார்.
அதன் பிறகு இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத் தினர். ஆட்டம் முடிவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு வல்லடோலிட் அணியின் ஹம்பர்டோ ஒசாரியோ கோல் அடித்தார். இதனால், ஆட்டம் 1-1 என்று சமனில் முடிந்தது.
இந்த ஆட்டத்தை சமன் செய்ததன்மூலம், லா லிகா பட்டத்தை ரியல் மாட்ரிட் கைப்பற்றுவது கடினமாகி யுள்ளது.
தற்போதைய நிலையில் அட்லெடிகோ மாட்ரிட் 88 புள்ளிகளுடன் முதல் இடத் திலும், பார்சிலோனா அணி 85 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் உள்ளன. ரியல் மாட்ரிட் 84 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்த மூன்று அணிகளுக் கும் இன்னும் 2 ஆட்டங்கள் மட்டுமே மீதம் உள்ளன.
எதிர்வரும் ஆட்டங்க ளில் அட்லெடிகோ மாட் ரிட்டும், பார்சிலோனாவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் என்பதால், ரியல் மாட்ரிட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Read more: http://www.viduthalai.in/home/sports.html#ixzz31DuW2n9a