25 மார்., 2014

அமெரிக்காவில் நடை பெற்று வரும் மியாமி மாஸ் டர்ஸ் டென்னிஸ் போட்டி யின் 4ஆவது சுற்றுக்கு இரண்டு முறை வாகையர் பட்டம் வென்ற ஃபெடரர், நடப்பு வாகையர் ஆன்டி முர்ரே ஆகியோர் முன்னேறி னர்.
திங்கள்கிழமை இப் போட்டியின் 3ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. தரவரிசையில் 5ஆவது இடத் தில் உள்ள ஃபெடரரும், நெதர்லாந்தின் தீமோ டி பக்கரும் மோதினர். ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆட்டத்தில் ஃபெடரர் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் ஃபெடரர், ஃபிரான் ஸின் ரிச்சர்டு கேஸ்கேவை எதிர்கொள்கிறார்.
ஸ்பெயினின் ஃபெலிசி யானோ லோபஸக்கு எதி ரான ஆட்டத்தில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். மற்ற ஆட்டங் களில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரர், ஜப்பானின் கீ நிஷி கோரி, ஃபிரான்ஸின் ரிச்சர்டு கேஸ்கே, சோங்கா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மகளிர் பிரிவு 3ஆவது சுற்றில் அமெ ரிக்காவின் மேடிசன் கீஸ நேர் செட் கணக்கில் வீழ்த்தினார் சீனாவின் லீ நா.

மலேசிய கிராண்ட் ப்ரீ பாட்மிண்டன்: இளம் வீரர்கள் பங்கேற்பு
மலேசியாவில் நடை பெறவுள்ள பாட்மிண்டன் கிராண்ட் ப்ரீ போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் பங்கேற்காததைத் தொடர்ந்து, இளம் வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு கூடி யுள்ளது.
அடுத்தடுத்த போட் டிகளில் பங்கேற்றதைத் தொடர்ந்து ஓய்வு தேவைப் படுவதால், முன்னணி வீர ரான காஷ்யப், வீராங்கனை கள் சாய்னா நெவால், பி.வி. சிந்து ஆகியோர் மலேசிய பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்கவில்லை.
அதனால் சவுரவ் வர்மா, எச்.எஸ். பிரணாய், சாய் பிரணீத், குரு சாய் தத் மற்றும் அருந்ததி பண்ட்வானா ஆகிய இளம் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இப்போட் டியின் தகுதிச் சுற்று செவ் வாய்க்கிழமை தொடங்கு கிறது.
சமீபத்தில் நடைபெற்ற டாடா ஓபன், ஆஸ்திரேலிய மற்றும் ஈரான் சர்வதேச போட்டிகளில் சவுரவ் வர்மா பட்டம் வென்றார்.
சிறந்த ஃபார்மில் உள்ள அவர், பிற நாடுகளைச் சேர்ந்த முன் னணி வீரர்களுக்கு மலேசி யாவில் அதிர்ச்சி அளிப்பார் என்று கருதப்படுகிறது.

திருச்சியில் அண்ணா பல்கலை. 20.3.2014 அன்று நடத்திய 2013-2014 ஆண்டு விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான வாகையர் பட்டம் சிவில் துறைக்கும், பெண்களுக்கான வாகையர் பட்டம் எலக்ட்ரிக்கல் எலக்டிரானிக்ஸ் இன்ஜினியரிங் துறைக்கும் கிடைத்தது.
ஒட்டுமொத்த ஆடவர் மற்றும் மகளிர் வாகையர் பட்டம் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறைக்கு கிடைத்தது. இந்நிகழ்வில் முக்கிய விருந்தினர் முகமது நிசாமுதின் பரிசுகளை வழங்கினார்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியில் நடை பெற்று வரும் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நடால், மகளிர் பிரிவில் செரீனா வில் லியம்ஸ் மற்றும் ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆகியோர் வெற்றிபெற்று அடுத்த சுற் றுக்கு முன்னேறினர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டி யின் ஆடவர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயி னைச் சேர்ந்த ரஃபேல் நடால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நம்பர் - 1 வீரர் ஹெவிட்டை எதிர்கொண் டார். 66 நிமிட போராட்டத் துக்குப் பின் நடால் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வெற் றிப் பெற்றார்.
ஆஸ்திரேலிய ஓபனில் வாகையர் பட்டம் வென்ற ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ் லஸ் வாவ்ரிங்கா, 6-0, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெ யினின் டேனியல் ஜிமினோ ட்ரேவரை வீழ்த்தினார்.
மற்ற ஆட்டங்களில் ஃபிரான்ஸின் ரோஜர் வேஸ லின், ஸ்பெயினின் ராபெர்டோ, ஜெர்மனியின் பெஞ்சமின் பெக்கர், இத்தாலியின் ஃபே பியோ ஃபோக்னி, அமெரிக் காவின் ஜான் அய்ஸ்னர் ஆகி யோர் 2ஆவது சுற்றில் வெற்றி பெற்றனர்.
செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச்சை எதிர்த்து 3ஆவது சுற்றில் ஆட இருந்த ஃபுளோரியன் மேயர் காயம் காரணமாக விலகியதால், ஜோகோவிச் நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மகளிர் பிரிவில் தரவரிசை யில் முதலிடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ் 45 நிமிட போராட்டத்துக்குப் பின் பிரான்ஸின் கரோலின் கார்ஸி யாவை வீழ்த்தினார். கடந்த முறை இறுதிச் சுற்றுக்கு முன் னேறிய மரியா ஷரபோவா, 3ஆவது சுற்றில் செக் குடிய ரசின் லூசி சஃபரோவாவை போராடி வீழ்த்தினார்.
மற்ற ஆட்டங்களில் ஜெர் மனியின் ஏஞ்சலிக் கெர்பர், செர்பியாவின் அனா இவா னோவிச், செக்குடியரசின் பெட்ரோ குவிட்டோவா வெற்றி பெற்றனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி, தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் இணை, ஆஸ்திரேலியாவின் அலெக் ஸாண்டர் பெயா, பிரேசிலின் ப்ருனோ சோரஸ எதிர் கொண்டது. இதில் பூபதி - ஆண்டர்சன் இணை தோல் வியடைந்தது.
இருப்பினும், இந்தியா வின் ரோஹன் போபண்ணா மற்றும் பாகிஸ்தானின் குரேஷி  இணை காலிறுதிக்கு முந் தைய சுற்றுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஹாக்கி போட்டிகள்
சீனியர் ஆடவர் தேசிய வாகையர் பட்டப் போட்டி யின் இறுதிச் சுற்றில் இந்திய கணக்குத் தணிக்கைத் துறை அணியை வீழ்த்தி வாகையர் பட்டத்தைத் தக்க வைத்தது ஏர் இந்தியா அணி.
உத்தரப் பிரதேசத்தின் லக்னவ் நகரில் உள்ள தயான் சந்த் மைதானத்தில் 4ஆவது தேசிய வாகையர் பட்டப் போட்டியின் (டிவிஷன் ஏ) இறுதி ஆட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் 4-1 என்ற கோல் கணக் கில் நடப்பு வாகையரான ஏர் இந்தியா வெற்றி பெற்றது. ஏர் இந்தியா அணியின் கன்ப்ரீட் சிங் (14, 29 மற்றும் 39ஆவது நிமிடம்) ஹாட்ரிக் கோல் அடித்தார்.
கடைசி நேரத்தில் ஏர் இந்தியா மீண்டும் ஒரு கோல் அடித்தது. கணக்குத் தணிக்கைத் துறை அணி 59ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது.
முன்னதாக நடைபெற்ற 3ஆவது இடத்துக்கான ஆட் டத்தில் உத்தரப் பிரதேச அணி ரயில்வே அணியை தோற் கடித்தது.
மகளிர் போட்டி
தேசிய மகளிர் ஹாக்கி வாகையர் பட்டப் போட்டி யின் இறுதிச் சுற்றில் நடப்பு வாகையர் ஹரியானாவை தோற்கடித்து வாகையர் பட் டம் வென்றது ரயில்வே அணி.
மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 25 மற்றும் 42ஆவது நிமிடங்களில் வந் தனா கதாரியா இரண்டு ஃபீல்டு கோல்கள் அடித்தார்.
அதேபோல 34ஆவது நிமிடத் தில் கேப்டன் சான்சன் ஒரு கோலும், பூனம் ராணி ஒரு ஃபீல்டு கோலும் அடித்து உதவினர். இதற்கு அரியானா வீராங்கனைகளால் கடைசி வரை பதிலடி கொடுக்க முடியவில்லை.

மியாமியில் என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில், சுவிஸ் நாட்டின் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், பேஸ்கட்பால் ரசிகர்களுடன் அமர்ந்து உரையாற்றினார்.
திருச்சி, மார்ச் 23- திருச்சி யில் நடைபெற்ற வாசன் அய் கேர் - அய்டிஎஃப் ஆடவர் வாகையர் பட்ட இறுதி ஆட்டத்தில் தமிழக வீரர் சிறீராம் பாலாஜியை 6-4, 6-4 என நேர் செட்டில் வீழ்த்தி வாகையர் பட்டத்தைக் கைப்பற்றினர் ஸ்பெயின் வீரர் என்ரிக் லோபஸ்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும், திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கமும் இணைந்து நடத்திய சர்வதேச டென்னிஸ் போட்டி திருச்சி யூனியன் கிளப் வளாகத்தில் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தன.
சனிக்கிழமை ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நடை பெற்றது. இதில், தமிழக வீரர் சிறீராம் பாலாஜியுடன் ஸ்பெ யினின் முன்னணி வீரர் என் ரிக் லோபேஸ் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் சிறப்பாக விளையாடினர். ஆனாலும் வாய்ப்புகளை லோபஸ் பயன்படுத்திக் கொண்டார்.
முதல் செட்டை 6-4 என வென்றார் என்ரிக் லோபஸ். 2ஆவது செட்டில் எழுச்சி சிறீராம் பாலாஜி எழுச்சி பெற முயற்சித்தும் பலனளிக் கவில்லை. இதனால், இரண் டாவது செட்டையும் 6-4 என லோபஸ் தனதாக்கினார்.
முதலிடம் பிடித்த என்ரிக் லோபேஸக்கு திருச்சி பெல் கூடுதல் பொது மேலாளர் முரளி வாகையர் பட்டத்தை வழங்கினார்.  சிறீராம் பாலா ஜிக்கு திருச்சி டிஸ்ட்லரீஸ் பொது மேலாளர் விஜயசேக ரன் 2ஆவது இடம் பெற்றதற் கான பட்டத்தை வழங் கினார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இந்திய ஆக்கி வீரருக்கு விசா மறுப்பு
புதுடில்லி, மார்ச் 23- 20ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோவில் வருகிற ஜூலை மாதம் 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு 3ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய ஆக்கி அணி வீரர்கள் பட்டியல் போட்டி அமைப்பு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்ததுடன், இங்கிலாந்து விசாவுக்கும் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள பஞ்சாபை சேர்ந்த பின்கள வீரர் ஹர்பிர்சிங் சந்துவுக்கு விசா வழங்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆக்கி இந்தியா பொதுச்செயலாளர் நரிந்தர் பத்ரா, இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்திய ஆக்கி வீரர் பிரச்சினையை இந்திய ஒலிம்பிக் சங்கம் உடனடியாக காமன்வெல்த் அமைப்பு குழுவினருக்கு எடுத்து செல்ல வேண்டும்.
நமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்திய ஆக்கி அணியை போட்டியில் இருந்து திரும்பப் பெறலாம். இந்த பிரச்சினை குறித்து வருகிற 29ஆம் தேதி நடைபெறும் ஆக்கி இந்தியா செயற்குழுவில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து நாட்டின் ஹீரென்வீன் நகரில் நடைபெற்று வரும் உலக அதிவேக ஸ்கேட்டிங் வாகையர் பட்டத் தொடரின் பெண்கள் 3000 மீட்டர் பிரிவில், வெற்றி இலக்கை நோக்கி முன்னேறும் நெதர்லாந்து வீராங்கனை அய்ரின் சோவ்டென்.
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ்: தடுமாற்றத்துடன் செரீனா முன்னேற்றம்
டென்னிஸ் தரவரிசை யில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் தடுமாற்றத்துடன் வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் இப் போட்டி நடைபெற்று வரு கிறது. இதன் முதல் சுற்று வியாழக்கிழமை நடை பெற்றது. இப்போட்டியில் சர்வ தேச அளவில் முன்னணயில் உள்ள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அத னால் முதல் சுற்றிலிருந்தே ஆட்டம் சூடுபிடிக்க ஆரம் பித்தது.
மியாமி மாஸ்டர்ஸ் டென் னிஸ் போட்டியில் 5 முறை வாகையர் பட்டம் வென் றுள்ளவர் செரீனா. இவர், கஜகஸ்தானின் யரோஸ்லவா ஷ்வதோவாவுடன் மோதி னார்.
இதனால் முதல் செட் 7-6 (9/7) என்ற கணக்கில் நீண்ட நேரம் நீடித்தது. இதில், ஒரு கட்டத்தில் 3-1 என்ற கணக் கில் வில்லியம்ஸ் பின்தங்கி யிருந்தார். ஆனால், அதைத் தொடர்ந்து நடைபெற்ற கேம்களை வென்ற அவர் 5-3 என்ற முன்னிலையைப் பெற்றார்.
2ஆவது செட்டில் சுதாரித் துக் கொண்ட செரீனா, அதனை 6-2 என்ற கணக்கில் எளிதாக வென்றார்.

போட்டித் தரவரிசையில் 4ஆம் இடத்தில் உள்ள ரஷ் யாவின் மரியா ஷரபோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கருமி நராவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சானியா மிர்சா - காரா பிளாக் இணை முன்னேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா-காரா பிளாக் இணை 2ஆம் சுற்றுக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் 5ஆம் தரநிலையில் உள்ள சானியா மிர்சா (இந்தியா) - காரா பிளாக் (ஜிம்பாப்வே) இணை, தரநிலையில் மிகவும் பின் தங்கியிருக்கும் சீன தைபே யின் சிங் சான்-யங்ஜன் சான் இணையை எதிர்கொண் டது. 6-3, 6-7(8), 10-8 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற சானியா இணை 2ஆம் சுற்றுக்கு முன்னேறி யது. 2ஆம் சுற்றில் இந்த இணை, ஜார்ஜியாவின் ஆக் சானா-ரஷ்யாவின் அலிசா இணையை எதிர்கொள் கிறது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண் டர் பயஸ் தனது செக் குடி யரசு பார்ட்னர் ஸ்டெபானிக் குடன் இணைந்து விளை யாடினார். 4ஆம் தரநிலை யில் உள்ள இந்த இணை, அமெரிக்காவின் எரிக் பூடோராக்-ரவேன் கிளாசன் இணையிடம் தோல்விய டைந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது.




டென்னிஸ்: தமிழக இணை வாகை சூடியது
திருச்சியில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் வாகையர் பட்டத்தை கைப்பற்றியது தமிழகத்தின் அருண் பிரகாஷ்-ராம்குமார் இணை. திருச்சி யூனியன் கிளப் வளாகத்தில் நடைபெற்றும் வரும் வாசன் அய் கேர் ஆடவர் வாகையர் பட்டக் கோப்பைக்கான டென்னிஸ் போட்டிகளில், இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், இத்தாலியின் கியோர்ஜியா போர்டலூரி, ஸ்வீடனின் லூகாஸ் ரெனார்டு இணையை எதிர்த்து ராம்குமார்-அருண் பிரகாஷ் இணை விளையாடியது. முதல் செட்டை 6-3 என்ற செட்கணக்கில் தமிழக வீரர்கள் வென்ற நிலையில், இரண்டாவது சுற்றில் போர்டலூரி இணை ஆதிக்கம் செலுத்தி 6-4 என்ற கணக்கில் வென்றது. இதனால், ஆட்டம் டை பிரேக்கருக்குச் சென்றது. டைபிரேக்கரில் 10-6 என்ற புள்ளிக் கணக்கில் வென்று வாகையர் பட்டத்தை கைப்பற்றியது ராம்குமார் இணை.
முன்னதாக நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ராம்குமார், ஸ்பெயினின் என்ரிக்யூ லூபேஜ் பெரிஜை எதிர்த்து விளையாடினர். இதில் 7-5, 5-7, 6-4 என்ற செட்கணக்கில் பெரிஜ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் ஜீவன் நெடுஞ்செழியனை 6-4, 3-6, 6-3 தமிழகத்தின் சிறீராம் பாலாஜி வென்றார்.
பாரிஸ், மார்ச் 21-  அய்ரோப்பிய கால்பந்து வாகையர் பட்ட போட்டியில் கிரேக்கத்தின் ஒலிம்பியாக்ஸ் அணிக்கு எதிராக பிரிட்டனின் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-0 என்ற கோல் கணக் கில் வென்றது.
இந்த ஆட்டம் இங்கி லாந்தின் மான்செஸ்டர் நகரின் ஓல்டு டிரட்ஃபோர் டில் புதன்கிழமை நடை பெற்றது. இப்போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஒவ்வொரு அணியும் மற் றோர் அணியுடன் இரு முறை மோதும். இரண்டு ஆட்டங் களின் முடிவைத் தொடர்ந்து, அதிக கோல் களை அடிக்கும் அணி காலி றுதிக்கு முன்னேறும்.
ஒலிம் பியாக்ஸ்-மான் செஸ்ட் யுனை டெட் அணிகளுக்கு இடை யே நடை பெற்ற முதல் பிரிவு ஆட்டத் தில் ஒலிம்பியாக்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் வென் றிருந்தது. இதனால், இரு அணி களுக்கும் இடையே யான 2ஆவது சுற்று ஆட்டத் தில் ஒலிம்பியாக்ஸ் ஆதிக்கம் செலுத்தி காலிறுதிக்கு முன் னேறும் என எதிர்பார்க்கப் பட்டது.
மாறாக, இந்த ஆட்டத்தில் வெகுண்டெழுந்த மான் செஸ்டர் யுனைடெட் வீரர்கள் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
இரண்டு ஆட்டங்களின் முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி முன்ன ணியில் இருந்ததால், அந்த அணி காலிறுதிக்கு முன் னேறியது.
இப்போட்டியின் மற்றொரு ஆட்டத்தில் ஜெர் மனியின் டார்மென்ட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவின் செயின்ட் பீட் டர்ஸ்பர்க் அணியிடம் தோற் றது. இருப்பினும், இரு அணி களுக்கும் இடையேயான முதல் ஆட்டத்தில் டார் மென்ட் அணி வெற்றி பெற் றிருந்தது. இரண்டு ஆட்டங் களின் முடிவில் அந்த அணி 5-4 என்ற கோல் கணக்கில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அணியை வீழ்த்தி காலிறு திக்கு முன்னேறியது.
காலிறுதி டிரா: காலி றுதிக்கு முன்னேறிய 8 அணி களும், மற்றோர் அணியுடன் தலா இரு முறை மோதும். இரண்டு ஆட்டங்களின் முடி வில் அதிக கோல்களை அடித் துள்ள அணிகள் அரையிறு திக்கு முன்னேறும்.
காலிறுதி யில் எதிர் அணியைத் தேர்வு செய்யும் டிரா முறை வெள் ளிக்கிழமை நடை பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து காலிறுதியின் முதல் சுற்று ஆட்டம் ஏப்ரல் 1 மற்றும் 2ஆம் தேதிகளிலும், 2ஆம் சுற்று ஆட்டம் ஏப்ரல் 8 மற்றும் 9ஆம் தேதிகளிலும் நடைபெற உள்ளன.

சர்வதேச டென்னிஸ்: அரையிறுதியில் நெடுஞ்செழியன், ராம்குமார்
திருச்சி, மார்ச் 21-  திருச்சியில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு தமிழகத்தின் ஜீவன் நெடுஞ்செழியன், ராம்குமார் ராமநாதன் ஆகியோர் தகுதி பெற்றனர்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கம் நடத்தும் வாசன் அய்கேர் ஆடவர் வாகையர் பட்ட சர்வதேச டென்னிஸ் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் திருச்சி யூனியன் கிளப் வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.
வியாழக்கிழ மை நடை பெற்ற ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இத்தா லியின் கியோர்ஜியோ போர்ட்டலூரியுடன் ராம் குமார் மோதினார். இதில் முதல் 2 செட்களை இரு வரும் கைப்பற்றினர். வெற்றி யைத் தீர்மானிக்கும் மூன்றா வது செட்டில் ராம்குமார் 4-2 என்ற செட் கணக்கில் முன் னிலையில் இருந்தபோது ஆட்டத்திலிருந்து போர்ட லூரி விலகினார்.
இதனால், ராம்குமார் அரையிறுதிக்கு முன்னேறினார். ஸ்வீடன் வீரர் ரெனார்டு லூகாஸக்கு எதிரான ஆட்டத்தில் 6-7,7-6, 6-1 என்ற செட் கணக்கில் தமிழ கத்தின் பாலாஜி என். சிறீராம் வெற்றி பெற்றார்.
மற்றொரு காலியிறுதியில் விஜயாந்த் மாலிக்கை 6-1, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த் தினார் ஜீவன் நெடுஞ் செழியன்.  இரட்டையர் பிரிவில் காஜா விநாயக் சர்மா, விக் னேஷ் இணையை 6-4, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக் குத் தகுதி பெற்றது ஏ.ராஜ கோபாலன்-ராம்குமார் இணை.
இரண்டாவது அரை யிறுதியில் கிரிட்டினே நிட் டின், முகுந்த் சசிகுமார் இணையை 3-7, 7-6, 10-5 என்ற செட்கணக்கில் வீழ்த்தி இறு திப் போட்டிக்குள் நுழைந் தது இத்தாலியின் போர்ட்லூரி கியோர்ஜியோ, ஸ்வீடனின் ரெனார்டு லூகாஸ் இணை.

உலக ஸ்குவாஷ் : தீபிகா பல்லிகல் தோல்வி
பினாங்கு (மலேசியா), மார்ச் 21-  மலேசியாவில் நடைபெற்று வரும் உலக ஸ்குவாஷ் வாகையர் பட்ட போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல் தோல்வியைத் தழுவினார்.
பினாங்கு  நகரில் வியாழக் கிழமை நடைபெற்ற ஆட் டத்தில் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள எகிப்தின் ரனீம் எல் வெலி லீயிடம் தரவரிசையில் 11ஆவது இடத்தில் உள்ள தீபிகா தோல்வியடைந்தார்.
இதனால், இப்போட்டி யில் இந்திய வீரர், வீராங் கனைகளின் ஆதிக்கம் முடி வுக்கு வந்தது.


கருத்துகள் இல்லை: