28 மே, 2014

2006


உலகக்கிண்ணம் 2006.......தகவல் துளிகள்!




சிற்பியின் ஆசை நிறைவேறியது...
18 காரட் தங்கத்தினால் வடிவமைக்கப்பட்டது தற்போதைய உலக கிண்ணம். 36.8 செ.மீ.உயரமும், 6 கிலோ 175 கிராம் எடையுள்ள இக் கிண்ணம் 1974 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தை இத்தாலி வென்று வர வேண்டும் என்று தான் பெரிதும் ஆசைப்படுவதாக கிண்ணத்தை வடிவமைத்த சிற்பி சில்வியோ கஸ்ஸானிகா ( வயது 75) கூறினார். அவரது ஆசையை இத்தாலியவீரர்கள் நிறைவேற்றினர்.

அட்டைகள்
மஞ்சள் அட்டை மொத்தம் 327 (உண்மையில் 2வது மஞ்சள் அட்டையுடன் வெளியேற்றப்பட்டவர்கள் 19 பேரின் கணக்கு இதில் சேர்க்கப்படவில்லை. அதனையும் சேர்த்தால் மொத்தம் 346 ஆகிறது)
சிகப்பு அட்டைகள் மொத்தம் 28
♣அதிகமாக மஞ்சள் அட்டை பெற்ற நாடு போர்த்துக்கல் 24
♣ குறைந்த மஞ்சள் அட்டை அமெரிக்கா 5 சவுதிஅரேபியா 5
♣ அதிகமாக மஞ்சள் அட்டை பெற்றவர் கோஸ்ரின்ஹா (போலந்து) 4 அசமாவோ (கானா) 4
♣அதிகமாக சிகப்பு அட்டை
இத்தாலி 2 நெதர்லாந்து 2 குரேசியா 2 செக் 2 போர்த்துக்கல் 2 அமெரிக்கா 2 சேர்பியா 2
♣அதிகமான அட்டைகள் வழங்கப்பட்ட கறுப்பு ஆட்டம் ... போர்த்துக்கல்(9மஞ்சள் 2 சிகப்பு) எதிர் நெதர்லாந்து (7மஞ்சள் 2 சிகப்பு) வழங்கிய நடுவர் வலன்ரைன் (ருஷ்யா)

♦இம்முறை அதிகவயது வீரர் பி.அலி 40 டுனீசியா(உ. கி. போட்டியில் கமரூன் ஜோஜர் மில்லா1994இல் 42.வயதில் விளையாடினார். இவரே அதிகவயதினர்)

♦மிகக்குறைந்தவயது வீரர் வல்கோற் 17 இங்கிலாந்து (பீலே வும் 17வயதிலேயே முதல் உ.கி. போட்டியில் பங்குகொண்டார்)
♦இளவயது வீரர்கள்(1.1.1985க்குப்அதன் பிறகு பிறந்தவர்கள்) 40 பேர் பங்கு கொண்டனர். அவர்களில் இளவயது நாயகனாகத் தெரிவானவர் பொடொல்ஸ்கி(ஜேர்மனி)

♥அதிக நேரம் விளையாடிய வீரர் லாம் 690 , கனவாரோ 690 நிமிடங்கள்
♥குறைந்த நேரம் விளையாடிய வீரர் அஸோபைபா 1 நிமிடம் (பிறெட் பிரேசில் 3 நிமி)

♠அதிகநேர விளயாடிய கோல்காபாளர் BUFFON இத்தாலி 690 நிமி
♠ குறைந்த நேரம் விளையாடிய கோல்காப்பாளர் வில்லர் (பரகுவே) 7 நிமிடம் மட்டும்

கோல் கணக்கு
♣ அதிக கோலடித்த நாடு ஜேர்மனி 13
♣கோலடிக்காத நாடு டிறினிடாட் 0
♣ 2006 உ.கி.போட்டியின் முதல் கோலை அடித்தவர் ஜேர்மனிவீரர் லாம் .
முதல் விரைவுக்கோல் 1நி8 செக்கனில். அடித்தவர் அசமாஓ கானா(செக்குடியரசுக்கு)
♣2006 உ.கி.போட்டியின் கடைசிக் கோலை அடித்தவர் இத்தாலி வீரர் மற்றறாஸி♣ஒரு போட்டியில் அதிக(6) கோல் (1) ஆர்ஜன்ரீனா 6:0 சேர்பியா (2) ஜேர்மனி 4:2 கோஸ்ரறிகா
♣அதிக பந்துகளை தடுத்த காப்பாளர் இத்தாலி புப்பன் 27 போர்த்துக்கல் றிகார்டோ 25.
♣ 3 உலகக் கிண்ணத்தில் கோல் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் டேவிட் பெக்காம்.
♣உலகக் கிண்ணத்தில் அதிக கோல் (15வது ) அடித்த சாதனைவீரர் ரொனால்டோ ( முன்னைய சாதனை ஜேர்மனி வீரர் ஜெர்ட் முல்லர் 14 கோல்)♣இப்போட்டியில் அடிக்கப்பட்டவை மொத்தம் 147 கோல்கள் (வரலாற்றில் அதிக கோல் அடிக்கப்பட்டது 1998ல் 171)♣1930 முதல் 2006 வரை உலகக் கிண்ண கால்பந்து தொடர்களில் 2063 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.
தன் பக்கத்துக்கு அடிக்கப்பட்ட Own Goals கோல்கள் மொத்தம் 4
சராசரி கோல் 2.3 (64போட்டிகளில் 147 கோல்கள்)
தண்டணை உதைமூலம் முடிவான போட்டிகள் 4
நீடிக்கப்பட்ட 30 நிமிட நேரத்தில் கோல்களால் முடிவான போட்டிகள் 2
64போட்டிகள் இவ்வாறு முடிந்தன.............!
(1)கோலின் அடிப்படையில் தெளிவாக முடிவானவை 48 போட்டிகள்
(2)வெற்றி தோல்வியின்றி சமமான நிலை 10 போட்டிகள்
(3)நீடிக்கப்பட்ட நேரத்தில் முடிவானவை 2 போட்டிகள்
(4)தண்டனை உதை Penalty Shoot Out மூலம் முடிவானவை 4 போட்டிகள்

♦வெற்றி எதுவும் பெறா நாடுகள் கோஸ்ரறீகா , சேர்பியா, டோகோ (புள்ளி 0)
♦முதல் சுற்றில் முழுமையான வெற்றி பெற்ற நாடுகள் ஜேர்மனி, பிரேசில், போர்த்துக்கல், ஸ்பானியா

♥அதிக குறுங்கடவுகள் (Short passes) போர்த்துக்கல் 2,547,ஜேர்மனி 2,392.
♥அதிக நெடுங்கடவுகள் (Long passes) ஜேர்மனி 821 இத்தாலி 711

♠சிறந்த மனமகிழ்வான ஆட்டத்துக்கு தேர்வான நாடு போர்த்துக்கல்.
♠ஒழுங்கீனத்தில் முதலிடம் பராகுவே.

♣ உலகக் கிண்ணப் போட்டியில் இத்தாலி - ஜேர்மனி அணிகள் 5 முறை மோதியுள்ளன. இத்தாலி 3ல் வெற்றி 2 சமநிலை. ஜேர்மனி 3ம் முறை இப்போது தோற்றுள்ளது.


♣நடுவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு போட்டிக்கும் 40ஆயிரம் டொலர் ஊதியமாக வழங்கப்பட்டது. இதுவே உ.கி. வரலாற்றில் உயர்வானது.
♣உலகெங்குமிருந்து சிறப்பான 21 நடுவர்கள் இவ்வுலககிண்ணப்போட்டியின் 64 ஆட்டங்களுக்கு பணியாற்றினார்கள். அதிகமாக Benito Archundia (Mexico), Horacio Elizondo (Argentina)ஆகியோர் தலா 5 போட்டிகளில் பணியாற்றினார்கள்

பயிற்றுநர் விலகல்
ஒவ்வொரு உலககிண்ணப்போட்டி முடிவிலும் பல பயிற்றுநர்கள் விலகுவதும் விலக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டது. இம்முறை விலகுபவர்கள் இதுவரை 14பேர். இவர்கள்...
லிப்பி (இத்தாலி),கிளின்ஸ்மென் (ஜேர்மனி), எரிக்சன் (இங்கிலாந்து), பெகர்மேன் (ஆர்ஜென்ரீனா), ஹிட்டின்க் (அவுஸ்திரேலியா), அட்வோகாட் (தென் கொரியா), கிமாரேஸ் (கோஸ்டாரிக்கா), மிக்செல் (ஐவரி கோஸ்ட்), இவான்கோவிக் (ஈரான்), ஸிகோ (ஜப்பான்), லா வோல்பே (மெக்ஸிகோ), ஜனாஸ் (போலந்து), பெட்கோவிக் (சேர்பியா), பீன்ஹாக்கர் (ரினிடாட்).

பார்வையாளர்கள்
64 போட்டிகளையும் காண விளையாட்டரங்கில் கூடியோர் எண்ணிக்கை 3.35 மில்லியன் (3,353,655 ) ஆகும்.
உலககிண்ணப்போட்டியில் இத்தாலிக்கு எதிராக ஜேர்மனி விளையாடிய அரை இறுதிப் போட்டியை யேர்மனியில் அதிகம் பேர் பார்த்தார்கள். வீடுகளில் 31.31 மில்லியன் பேரும் பொது இடங்களில் அமைக்கப்ப்ட்டிருந்த இராட்சத தொலைகாட்சிகளில் 16 மில்லியன் பேரும் கண்டுகளித்தார்கள் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.


விருதுகள்
♥தங்கப்பந்து ..... சிடான் பிரான்சு
♥வெள்ளிப்பந்து ..... கனவாரோ இத்தாலி
♥வெண்கலப்பந்து பிர்லொ இத்தாலி

♠தங்ககாலணி ..... குளோஸ ஜேர்மனி
♠வெள்ளிக்காலணி..... கிறேஸ்போ ஆர்ஜன்ரீனா
♠வெண்கலக்காலணி.....றொனால்டோ பிரேசில்

♥சிறந்த இளவயது வீரன்....... பொடொல்ஸ்கி ஜேர்மனி
♥சிறந்த கோல்காப்பாளர் புப்பன் இத்தாலி
♥மனம்மகிழ்வாட்டம்...... போர்த்துக்கல் 
வளரும்
....!

கருத்துகள் இல்லை: