12 நவ., 2012


நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகின்றது.

முடிவடைந்த நான்கு ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதையடுத்து தொடரை தனதாக்கிக் கொண்டது. இதில் முதல் போட்டில் மழையால் கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவௌ மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.

இப்போட்டியின் ஆரம்பமே மழை குறுக்கிட்டமையால் போட்டி தாமதமாக ஆரம்பமானதோடு 32 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

அந்தவகையில் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன நியூசிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சிகளின் போது டில்ஷனுக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டதையடுத்து, இப்போட்டியில் டில்ஷன் பங்குபற்றவில்லை.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 32 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பிரண்டன் மெக்கலம் (30), வில்லியம்சன் (21), பிரேங்கிளின் (21) ஓட்டங்களை அதிகூடுலாக பெற ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் ஜீவன் மெண்டிஸ் 3, குலசேகர 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து இலங்கை அணி வெற்றி பெற 32 ஓவர்களில் 131 ஓட்டங்களை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 26.2 பந்துகளில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 131 ஓட்டங்களை பெற்று 34 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுகளால் வெற்ற பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய தரங்கவும் சந்திமாலும் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணி 36 ஓட்டங்களை பெற்றிருந்த போது 7.3 ஓவரில் தரங்க 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன்பின் வந்த சங்கக்கார சந்திமாலுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்போது இருவரும் இணைப்பாட்டமாக 87 ஓட்டங்களை பெற்றிருந்த போது சந்திமால் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்த வந்த திரிமனே எவ்வித ஓட்டமும் பெறாது வந்த வேகத்தில் அரங்கு திரும்பினார்.

தொடர்ந்து களத்திலிருந்த சங்கக்கார ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் மெத்தியூஸ் ஆட்டமிழக்காது 2 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் போல்ட், சவுத்தி, ஹெலிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஜீவன் மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டார்.

1 நவ., 2012

டாக்டர். ராமதாஸ்,ஸ்டாலின்-

பிரித்தானிய தமிழர் பேரவையின் ஈழத்தமிழர் மாநாட்டில் தமிழக கட்சிகள்.


பிரித்தானியாவில் வரும் 6ம் திகதி முதல் 9ம் திகதிவரை நடைபெறவுள்ள ஈழத் தமிழர் மாநாடு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பிரித்தானியப் பாராளுமன்றினுள் நடைபெறும் இம் மாநாட்டிற்கு தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எல்லாக் கட்சி உறுப்பினர்களும், தலைவர்களும் வருவார்களா ? என்ற கேள்வி எழுந்துள்ளது

மகளிர் ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது.
 முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 63 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது.
 சீனாவில் புதன்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
FULL SCORE CARD-இங்கிலாந்து அணியின் கேப்டன் அலெஸ்டர் குக் சதமடித்தார். அவர் 112 ரன்களுடன் களத்தில் உள்ளார்
இந்திய "ஏ' அணியுடனான பயிற்சி ஆட்டத்தின் 2ஆம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணிக்கு, இந்திய ஏ அணியின் ஸ்கோரை எட்ட இன்னும் 83 ரன்கள் தேவைப்படுகின்றன.மும்பையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி முதல் நாள் முடிவில் 9