13 மார்., 2014


விளையாட்டு செய்திகள்

பேசல், மார்ச் 13-   ஸ்விஸ் கிராண்ட் ப்ரீ கோல்டு பாட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியா வீராங் கனை சிந்து வெற்றி பெற்றார். ஆடவர் பிரிவில் காஷ்யப் மற் றும் ஆனந்த் பவார் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
ஸ்விட்சர்லாந்தின் பேசல் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு இப்போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் நடை பெற்றன.
மகளிருக்கான முதல் சுற்றில் தரவரிசையில் 9ஆவது இடத்தில் உள்ள சிந்துவும், மலேசியாவின் சனட்டஸா சனிருவும் மோதி னர். 32 நிமிட போராட்டத் துக்குப் பின் 21 - 18,  21 - 15 என்ற நேர் செட்டில் அய்தாரா பாதைச் சேர்ந்த சிந்து வெற்றி பெற்றார்.
ஆடவருக்கான ஒற்றை யர் பிரிவின் முதல் சுற்றில் காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற காஷ் யப் 21 - 17, 21 - 15 என்ற செட் கணக்கில் நெதர்லாந் தின் எரிக் மெய்ஜிஸை தோற் கடித்தார். மலேசியாவின் கோக்பாங் லோக்குக்கு எதி ரான ஆட்டத்தில் 21-17, 21-10 என்ற செட் கணக்கில் இந்தி யாவின் ஆனந்த் பவார் வெற்றி பெற்றார்.
ஆனால் ஆடவர் பிரிவில் சிறீகாந்தும், மகளிர் பிரிவில் சைலி ரானேயும் முதல் சுற்றில் வெற்றியைப் பறி கொடுத்து வெளியேறினர்.

கேண்டிடேட்ஸ் செஸ்: முதல் சுற்றில் ஆனந்த்- ஆரோனியன் மோதல் கான்ட்டி
மாஸிஸ்க், மார்ச் 13-   கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் முதல் சுற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வ நாதன் ஆனந்த், தரவரிசை யில் அதிக புள்ளிகளுடன் முன்னணியில் உள்ள லே வன் ஆரோனியனை சந்திக் கிறார்.
ரஷியாவின் கான்ட்டி மாஸிஸ்க் நகரில் வியாழக் கிழமை இப்போட்டியின் முதல் சுற்று நடைபெற்றது.
வரும் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் கார்ல்ஸனை எதிர்த்து ஆடுபவரைத் தேர்வு செய்வதற்கான இப் போட்டியில் முன்னணி வீரர்கள் எட்டு பேர் பங் கேற்கின்றனர்.
கடந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் நார்வே யின் கார்ல்ஸனிடம் வெற்றி யைப் பறிகொடுத்த இந்தியா வின் ஆனந்த் தன் முதல் சுற்றில் ஆர்மேனியாவின் ஆரோனியனை எதிர் கொள் கிறார்.
கிளாசிக்கல் முறையில் நடைபெறும் இப்போட்டி யில் சாதித்தால் மட்டுமே ஆனந்த் உலக செஸ் சாம்பி யன்ஷிப் போட்டியில் பங் கேற்க முடியும். சென்னையில் நடை பெற்ற உலக செஸ் போட் டிக்குப் பின் ஜுரிச் செஸ் மற்றும் லண்டன் கிளாசிக் செஸ் போட்டிகளில் ஆனந்த் பெரிதாக சாதிக்க வில்லை என்பதால் இம்முறை எழுச்சி பெற வேண்டிய கட்டாயத் தில் உள்ளார்.
முதல் சுற்றின் மற்ற ஆட்டங்களில் ரஷ்யாவின் டிமிட்ரி ஆண்ட்ரிகீனும், விளாடிமிர் கிராம்னிக்கும் மோதவுள்ளனர். ரஷ்யாவின் செர்ஜே கர்ஜகின் தன் முதல் ஆட்டத் தில் சக நாட்டு வீரர் பீட்டர் ஸ்விட்லரை  சந்திக்கிறார்.

இண்டியன் வெல்ஸ் காலிறுதியில் லீ நா- சிபுல்கோவா மோதல்
இண்டியன் வெல்ஸ், மார்ச் 13-   இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டி யின் காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் லீ நா மற்றும் ஸ்லோ வேகியாவின் சிபுல்கோவா மோதவுள் ளனர்.
அமெரிக்காவின் இண்டி யன் வெல்ஸ் நகரில் நடை பெற்று வரும் டபிள்யூடிஏ பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றை யர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டம் புதன்கிழமை நடை பெற்றது.
இதில் சீனாவின் லீ நாவும், கனடாவின் அலெக் ஸாண்ட்ரா வோஸ்னியாக் கும் மோதினர். அரை மணி நேர ஆட்டத்தில் 6-1, 6-4 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்றார் போட்டித் தரவரி சையில் முதலிடத்தில் உள்ள லீ நா.
மற்றொரு ஆட்டத்தில் சிபுல்கோவா, செக் குடியர சின் பெட்ரோ குவிட்டோ வாவை  6-3, 6-2  என்ற செட்டில் வீழ்த்தியிருந்தார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றின் மற்ற ஆட்டங்களில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபனஸ், செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச், போலந்தின் அக்னீஸ்கா ரத் வன்ஸ்கா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஆடவர் பிரிவின் 3ஆவது சுற்றில் செர்பியாவின் ஜோ கோவிச், அமெரிக்காவின் ஜான் அய்ஸ்னர், ஸ்பெயினின் ராபர்டோ அகட், ஃபெலி சியானோ லோபஸ் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற் றுக்கு முன்னேறினர்.
சென்னையில் நடை பெற்ற மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையே யான விளையாட்டுப் போட் டியில் ஒட்டு மொத்த வாகை யர் பட்டத்தை செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரி வென்றது.
சென்னையில் செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரியில் ஆட வர் மற்றும் மகளிர் பிரிவிலான போட்டி திங்கள் கிழமை நிறைவடைந்தது.
ஜெட்ஸ்-2014 என்ற பெய ரில் இந்த விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
ஆடவர் பிரிவில் நடை பெற்ற போட்டிகளில் டேபிள் டென்னிஸ், செஸ், வாலிபால், பாட்மிண்டன் ஆகிய 4 போட் டிகளில் செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரி வென் றது.
கபடி போட்டியில் பிஎஸ் என் கல்லூரி அணியும், கால் பந்து போட்டியில் எம்சிசி கல்லூரி அணியும், பாட்மிண் டன் போட்டியில் எஸ்எஸ் என் கல்லூரி அணியும், கூடைப்பந்து போட்டியில் ஹிந்துஸ்தான் கலைக் கல்லூரி அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.
ஆடவர் பிரிவில் ஒட்டு மொத்த வாகையர் பட் டத்தை வென்ற செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல் லூரி, 12ஆவது ஆண்டாகத் தொடர்ந்து ஒட்டு மொத்த வாகையர் கோப்பையையும் வென்றது.
மாநில அளவிலான கல் லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில் ஒட்டு மொத்த வாகையர் பட்டம் வென்ற செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரி அணியினர்.

பளுதூக்குதல்: இந்தியாவுக்கு மேலும் 5 பதக்கம்
தாய்லாந்தின் பங்சயின் நகரில் ஆசிய ஜூனியர் பளு தூக்குதல் வாகையர் போட்டி நடைபெற்று வருகிறது.
திங்கள் கிழமை நடை பெற்ற ஆடவருக்கான 77 கிலோ எடைப் பிரிவில் கோஜம் தபா "கிளீன்' மற்றும் "ஜெர்க்' ஆகிய இரண்டு பிரி விலும் தலா ஒரு வெண்கலப் பதக்கம் வென்றார்.
மகளிருக்கான 63 கிலோ எடைப் பிரிவில் பூணம் இரண்டு வெண்கலப் பதக்க மும், ஹர்ஷ்தீப் கவுர் ஒரு பதக்கமும் வென்றனர்.
முன்னதாக ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற போட் டியில் இந்திய வீராங்கனை கள் மூன்று வெள்ளிப் பதக் கங்களைக் கைப்பற்றியிருந் தனர்.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: ஹீனா சித்து, பூஜா கட்கருக்கு தங்கம்
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஹீனா சித்து மற்றும் பூஜா கட்கர் தங்கப் பதக்கம் வென்றனர்.
குவைத் சிட்டியில் 7ஆவது ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. திங்கள் கிழமை நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ரைஃபிள்/பிஸ்டல் பிரிவில் ஹீனா சித்து தங்கப் பதக்கத்தை வென்றார். இவர், இறுதிச் சுற்று முடிவில் மொத்தம் 181.1 புள்ளிகளைப் பெற்றிருந்தார்.
ஹீனாவுக்கு கடும் சவால் அளித்த சீனா வைச் சேர்ந்த சியா யிங் வு 180.7 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தைக் கைப் பற்றினார். முன்னதாக ஞாயிற் றுக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான ஏர் ரைஃபிள் பிரிவில் பூஜா கட்கர் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக் குப் பெருமை சேர்த்திருந்தார்.
இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனை ஸ்வேதா செத்ரி 5ஆவது இடம் பிடித்து ஆறுதல் அளித்தார். இப்போட் டியின் ஆடவர் பிரிவில் சீனா வைச் சேர்ந்த வீரர்களே ஆதிக் கம் செலுத்தினர்.

சென்னை அய்டிஎஃப் டென்னிஸ்
சென்னை அய்டிஎஃப் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் போட்டித் தர வரிசையில் 2ஆவது இடத் தில் உள்ள ஜீவன் நெடுஞ் செழியன் மற்றும் விஜயந்த் மாலிக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) மய்தானத்தில் திங்கள்கிழமை தொடங்கிய இப்போட்டியின் முதல் சுற்றில் சகநாட்டு வீரர் ஜடின் தஹியாவை 6-1, 6-0 என்ற நேர் செட்டில் எளிதில் தோற்கடித் தார் நெடுஞ்செழியன். ஸ்விட்சர்லாந்தின் ஜானிஸ் லினிகெருக்கு எதிரான ஆட் டத்தில் இந்திய வீரர் விஜ யந்த் மாலிக் 5-7, 6-3, 6-3 என்ற செட்டில் வெற்றி பெற்றார்.
மற்ற ஆட்டங்களில் சாய் சரண், அஸ்வின் விஜயராக வன், போர்ச்சுகலின் ஆண்ட்ரூ கேஸ்பர் முர்டா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இரட்டையர் பிரிவில் சிறீ ராம் பலாஜி - ரஞ்சித் இணை, இந்தியாவின் ராகுல் ராபின் சன்- ரஸ்வந்த் இணையை 6-3, 6-2 என எளிதில் வீழ்த்தியது. அதேபோல மற்ற ஆட் டங்களில் ஜீவன் நெடுஞ் செழியன் - விஷ்ணு வர்தன் இணையும், உஸ்பெகிஸ் தானின் சர்வார் இக்ரமோவ் - செர்ஜி ஷிப்லோவ் இணை யும் வெற்றி பெற்றன.
அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரஃபெல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மற்றும் வாவ் ரிங்கா ஆகியோர் 3ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
இப்போட்டியின் ஆட வர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டங்கள் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றன. இதில், ஸ்பெயினின் நடால் செக்குடியரசின் ரடெக் ஸ்டீபானெக்கை சந்தித்தார். சமீபத்தில் முடிந்த ரியோ ஓபனில் பட்டம் வென்ற நடால் முதல் செட்டை 2-6 என கோட்டை விட்டார். பின், அடுத்தடுத்த செட்களில் எழுச்சி பெற்ற நடால் 6-4, 7-5 என அந்த செட்களை தனதாக் கினார். இந்த ஆட்டம் இரண் டரை மணி நேரம் நடைபெற் றது.
நான்கு முறை இண்டி யன் வெல்ஸ் ஓபன் பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரர் மற்றும் தரவரிசையில் 3 ஆவது இடத்தில் உள்ள வாவ் ரிங்கா ஆகியோர் சுலபமாக 3ஆவது சுற்றுக்கு முன்னேறி னர். விம்பிள்டன் சாம்பியன் ஆன்டி முர்ரே நீண்ட போராட் டத்துக்குப் பின்னரே செக் குடியரசின் லூகாஸ் ரஸாலை வீழ்த்தினார்.
மகளிர் ஒற்றையர் பிரி வில், ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்ற சீனாவின் லீ நா, சக நாட்டு வீராங்கனை ஜகோபலோவாவை எளிதில் தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 4ஆவது இடத்திலுள்ள ரஷியாவின் மரியா ஷரபோவா, ஜெர்மனி வீராங்கனை ஜூலியா ஜார் ஜசை சுலபமாக வீழ்த்தி 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
டபிள்யூடிஏ பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி யின் மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசை யில் 5ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் இணை, அமெரிக்காவின் ராகேல் கோப்ஸ் - அபிகெய்ல் ஸ்பியர்ஸ் இணையை எதிர் கொண்டது.
ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா இணை 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

சந்தோஷ் டிராபி கால்பந்து: மிசோரம் அணி சாம்பியன்
சந்தோஷ் டிராபி கால் பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மிசோரம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரயில்வே அணியை வீழ்த்தி யது. இதன் மூலம் மிசோரம் அணி முதன்முறையாக சந் தோஷ் டிராபியைக் கைப்பற் றியுள்ளது.
68ஆவது சந்தோஷ் டிராபி போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டம் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் உள்ள கஞ்சன் ஜங்கா மைதானத்தில் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது.
இதில் இத்தொடர் முழு வதும் தொடர் வெற்றிகளின் மூலம் அசத்தலான ஆட் டத்தை வெளிப்படுத்தி வரும் மிசோரம் அணியும், ரயில்வே அணியும் மோதின. 3-0 என்ற கோல் கணக்கில் மிசோரம் அணி வெற்றி பெற்றது.
முதன்முறையாக கோப்பை வென்ற மிசோரம் அணிக்கு ரூ.5 லட்சமும், 2ஆவது இடம் பிடித்த ரயில்வே அணிக்கு ரூ. 3 லட் சமும் பரிச ளிக்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் இந்திய கால்பந்து கூட்ட மைப்பின் மூத்த துணைத் தலைவர் சுப்ரதா தத்தா உள் ளிட்ட கால்பந்து கூட்ட மைப்பு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

பளுதூக்குதல் இந்திய வீராங்கனைக்கு 3 வெள்ளிப்பதக்கம்
புதுடில்லி, மார்ச் 10- ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் வாகையர் போட்டி தாய் லாந்து நாட்டில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் இந் திய வீராங்கனை சாய்கோம் மிராபாய் ஸ்னாட்ச் முறை யில் 75 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 93 கிலோவும், ஆக மொத்தம் 168 கிலோ தூக்கி மூன்று வெள்ளிப்பதக்கங்கள் வென்றார்.

அய்.டி.எப்.டென்னிஸ் இந்திய வீரர் மைனெனி வெற்றி
பிமாவரம், மார்ச் 10- அய். டி.எப். டென்னிஸ் போட்டி ஆந்திராவில் உள்ள பிமாவ ரத்தில் நடந்தது. இதன் ஆண் கள் ஒற்றையர் பிரிவு இறு திப்போட்டியில் இந்திய வீரர் சகெத் மைனெனி, சக வீரர் சனம் சிங்கை சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சகெத் மைனெனி 46, 63, 61 என்ற செட் கணக் கில் சனம் சிங்கை தோல்வி யுறச் செய்து வாகையர் பட் டத்தை வென்றார். இரட் டையர் பிரிவில் சகெத் மைனெனி-சனம் சிங் இணை, வாகையர் பட்டத்தை கைப் பற்றி இருந்தது குறிப்பிடத் தக்கது.
கோவை, மார்ச் 9- கோவை யில் நடைபெற்ற அகில இந் திய மின் வாரியங்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் அஸ்ஸாம் அணி வாகையர் பட்டத்தைக் கைப்பற்றியது.
கோவையில் கடந்த புதன்கிழமை துவங்கிய இப் போட்டியில் 15 மாநிலங் களைச் சேர்ந்த மின் வாரிய அணிகள் பங்கேற்றன. கடந்த ஆண்டு அரையிறுதிக்குத் தகுதி பெற்ற மேற்கு வங்கம், அஸ்ஸாம், டில்லி, கேரள அணிகள் இந்த ஆண்டு நேர டியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றன.
சனிக்கிழமை காலையில் நடைபெற்ற முதல் அரை யிறுதி ஆட்டத்தில் அஸ்ஸாம் அணி 2-0 என்ற கோல் கணக் கில் மேற்கு வங்க அணியை வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. இரண்டா வது அரையிறுதியில் கேரள அணி 2-1 என்ற கோல் கணக் கில் டில்லி அணியை வீழ்த் தியது.
கோவை நேரு விளை யாட்டு அரங்கில் சனிக் கிழமை மாலையில் நடை பெற்ற இறுதி ஆட்டத்தில் அஸ்ஸாம், கேரள அணிகள் மோதின. இரு அணிகளிலும் சந்தோஷ் கோப்பையில் விளையாடும், விளையாடிய வீரர்கள் இடம் பெற்றிருந் தனர்.
ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் இரு அணிகளுக் கும் கோல் அடிக்கும் வாய்ப் புகள் கிடைத்தன. ஆனால், இரு அணிகளும் அவற்றை வீணடித்தன. இதனால் வழக் கமான ஆட்ட நேரத்தில் இரு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை.
இதனால், பெனால்டி கார்னர் மூலம் ஆட்டத்தின் முடிவு நிர்ணயிக்கப்பட்டது. இதில் தங்களுக்குக் கிடைத்த 5 வாய்ப்புகளையும் அஸ் ஸாம் வீரர்கள் கோலாக மாற்றினர். ஆனால் கேரள அணிக்குக் கிடைத்த இரண் டாவது வாய்ப்பை அஸ்ஸாம் கோல் கீப்பர் தடுத்துவிட் டார். இறுதியில் 5-3 என்ற கோல் கணக்கில் அஸ்ஸாம் அணி வென்றது.
அஸ்ஸாம் அணி கடந்த ஆண்டு நடந்த போட்டியில் கேரள அணியிடம் தோல்வி யடைந்து 3ஆவது இடத்தை இழந்தது. இந்த ஆண்டு கேர ளத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
சுமார் 25 ஆண்டுகளுக் குப் பின் அஸ்ஸாம் அணி மீண்டும் பட்டம் வென்றுள் ளது குறிப்பிடத்தக்கது.

காலிறுதியில் சானியா இணை
கலிபோர்னியா, மார்ச் 9- பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந் தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் இணை முன்னேறியது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு இரண் டாவது சுற்றில் இந்தியாவின் சானியா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் இணை, அமெ ரிக்காவின் ராகியுல், அபிகய்ல் இணையை சந்தித்தது.
இதன் முதல் செட்டை 63 என கைப்பற்றிய சானியா, இரண்டாவது செட்டையும் 64 என தன்வசப்படுத்தியது. முடிவில், சானியா, காரா பிளாக் இணை 63, 64 என வெற்றி பெற்று காலிறுதிக் குள் நுழைந்தது.

அகில இங்கிலாந்து பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா தோல்வி
இங்கிலாந்து பாட்மிண் டன் வாகையர்பட்ட தொட ரின் காலிறுதிச் சுற்றில் இந்தி யாவின் சாய்னா நெவால் தோல்வியடைந்து வெளியே றினார்.
பர்மிங்ஹாமில் வெள் ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 7ஆவது இடத் தில் உள்ள சாய்னா, தரவரி சையில் 3ஆவது இடத்தில் உள்ள ஷிஸியான் வங்கை எதிர்கொண்டார். லீக் ஆட்டங்களில் சிறப் பான ஆட்டத்தை வெளிப் படுத்தி வந்த சாய்னா இம் முறை சீன வீராங்கனையி டம் வெற்றியைப் பறிகொடுத் தார்.
43 நிமிட போராட்டத் துக்குப் பின் ஷிஸியான் வங் 17-21, 10-21 என்ற செட் கணக் கில் சாய்னாவை வீழ்த்தினார். ஷிஸியான் அரையிறுதி ஆட் டத்தில் யிகான் வங்கை எதிர் கொள்கிறார்.
இத்தொடரில் 3ஆவது முறையாக காலிறுதி ஆட்டத் தில் சாய்னா தோல்வியடைந் துள்ளார். 2010 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் சாய்னா, அரை யிறுதிச் சுற்று வரை முன்னே றியிருந்தது குறிப்பிடத்தக் கது.
இதற்கு முன் பிரகாஷ் படுகோன் மற்றும் கோபி சந்த் (சாய்னாவின் பயிற்சி யாளர்) ஆகியோர் மட்டுமே இப்போட்டியில் இந்தியா சார்பில் பட்டம் வென்று உள்ளனர்.
பிர்மிங்ஹாம், மார்ச் 7-  டென்னிஸில் விம்பிள்டன் போட்டியைப் போல கரு தப்படும் ஆல் இங்கி லாந்து வாகையர் பட்ட பாட்மிண் டன் போட்டியில் இந்தியா வின் சாய்னா நெவால் 2ஆவது சுற்றுக்கு முன்னே றினார்.
மற்றொரு வீராங்கனை யான பி.வி.சிந்து 16-21, 15-21 என்ற நேர் செட்களில் சீனா வின் யு சன்னிடம் தோற்று போட்டியிலிருந்து வெளி யேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரி வில் பங்கேற்ற பருபள்ளி காஷ்யப் மற்றும் கே.சிறீ காந்த் ஆகியோரும் முதல் சுற்றுகளிலே பின்னடை வைச் சந்தித்தனர்.
தற்போதைய நிலையில், இப்போட்டியின் 2ஆவது சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்களில் சாய்னா நெவால் மட்டும் களத்தில் உள்ளார். அவரே இந்தியா வின் கடைசி நம்பிக்கை யாகவும் திகழ்கிறார்.
எளிய வெற்றி: பிர்மிங் ஹாம் நகரில் உள்ள தேசிய உள்விளையாட்டு அரங்கில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. சாய்னா, தனது முதல் சுற்றில் ஸ்காட்லாந் தின் கிறிஸ்டி கில்மெளரை எதிர்கொண்டார்.
இதில் முதல் சுற்றில் சிறிது ஆதிக் கம் செலுத்திய கில்மௌர், 2ஆவது சுற்றில் தனது ஆற் றல் முழுவதையும் இழந் தார். அவருக்கான வாய்ப்பு களை சாய்னா ஏற்படுத்தித் தரவில்லை. அதனால், 21-15, 21-6 என்ற நேர் செட்களில் சாய்னா வென்றார்.


டென்னிஸ் தொடர்: அரையிறுதியில் சனம் சிங்

பீமாவரம், மார்ச் 7- அய்.டி.எப்., டென்னிஸ் ஒற் றையர் பிரிவு அரை யிறுதிக்கு இந்தியாவின் சனம் சிங், சிறீராம் பாலாஜி, விஷ்ணு வர்தன், சாகேத் மை னேனி முன்னேறினர்.
ஆந்திர மாநிலம் பீமா வரம் நகரில், ஆண்களுக் கான அய்.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் சனம் சிங் 61, 61 என்ற நேர் செட் கணக்கில் சகவீரர் சசிகுமார் முகுந்தை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறி னார்.
மற்றொரு காலிறுதி யில், இந்தியாவின் விஷ்ணு வர்தன் 76, 64 என்ற நேர் செட் கணக்கில், சகநாட்டை சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழி யனை தோற்கடித்து, அரை யிறுதிக்கு தகுதி பெற்றார்.
இந்தியாவின் சிறீராம் பாலாஜி 61, 64 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் கோ சுசூகியை வீழ்த்தி அரை யிறுதிக்குள் நுழைந்தார். இந்தியாவின் சாகேத் மை னேனி 62, 63 என்ற நேர் செட் கணக்கில், சகவீரர் சந்திரில் சோத்தை தோற்கடித்து அரை யிறுதிக்கு முன்னேறினார்.
இந்திய இணை அபாரம்: இரட்டையர் பிரிவு அரை யிறுதியில், இந்தியாவின் சிறீராம் பாலாஜி, ரஞ்சித் விராலி முருகேசன் இணை 64, 63 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் ராம் குமார் ராமநாதன், ஸ்பெயி னின் கேப்ரியல் ட்ரூஜில் லோசோலர் இணையை வீழ்த்தி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதி யில், இந்தியா வின் சனம் சிங், சாகேத் மை னேனி இணை 67, 62, 107 என்ற செட் கணக்கில், சகநாட்டை சேர்ந்த ஜீவன் நெடுஞ் செழியன், விஷ்ணு வர்தன் இணையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

பளு தூக்குதல்: வெங்கட் ராகுல் தங்கம்

புதுடில்லி, மார்ச் 7-  ஆசிய யூத் பளுதூக்குதல் வாகையர் பட்ட 77 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் வெங்கட் ராகுல் இரண்டு தங்கம் உட்பட மூன்று பதக்கம் வென்றார்.
தாய்லாந்தில், 16ஆவது ஆசிய யூத் பளுதூக்குதல் வாகையர் பட்ட போட்டிகள் நடக்கின்றன. ஆண்களுக் கான 77 கி.கி., எடைப்பிரிவு ஸ்னாட்ச் பிரிவில் (133 கி.கி.,) வௌளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் வெங்கட் ராகுல், கிளீன் அன்டு ஜெர்க் பிரிவில் (163 கி.கி.,) தங்கம் வென்றார்.
ஒட்டுமொத்த மாக 296 கி.கி., பளுதூக்கிய ராகுல், முத லிடம் பி

கருத்துகள் இல்லை: