14 ஏப்., 2014

சென்னை, ஏப். 13- கே.எஸ். நாராயணன் நினைவு பெண் களுக்கான அய்.டி.எப். டென் னிஸ் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத் தில் நடந்தது. இதன் பெண் கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட் டியில் இந்திய வீராங்கனை கள் பிரார்த்தனா ஜி.தோம்ப ரேஈடீ மேத்தா ஆகியோர் மோதினார்கள்.
விறுவிறுப் பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஈடீ மேத்தாவும், 2ஆவது செட்டை பிரார்த்தனா வும் சொந்தமாக்கினார்கள். பரபரப்பான கடைசி செட்டில் ஈடீ மேத்தா 4-1 என்ற முன்னிலை பெற்றதால் அவர் தான் வெற்றியை ருசிப் பார் என்று எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், அதன் பின் னர் விறுவிறுப்பாக ஆடிய பிரார்த்தனா டைபிரேக்கர் வரை சென்ற அந்த செட்டை தன்வசப்படுத்தியதுடன், வாகையர் பட்டத்தை கைப் பற்றினார். 3 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் பிரார்த்தனா தோம் பரே 4-6, 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஈடீ மேத் தாவை வீழ்த்தி வாகையர் பட்டத்தை சொந்தமாக்கி னார்.
வாகையர் பட்டம் வென்ற பிரார்த்தனாவுக்கு 12 தர வரிசை புள்ளிகளுடன் ரூ. 93 ஆயிரமும், 2ஆவது இடம் பெற்ற ஈடீ மேத்தா வுக்கு 8 தர வரிசை புள்ளிக ளுடன் ரூ.59 ஆயிரமும் கிடைத்தன.

சிங்கப்பூர் ஓபன் போட்டி: அரையிறுதியில் சிறீகாந்த் தோல்வி
சிங்கப்பூர் ஓபன் பாட் மிண்டன் போட்டியின் அரை யிறுதியில் இந்தியாவின் சிறீகாந்த், மலேசியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் லீ சாங் வீயிடம் தோல்விய டைந்து வெளியேறினார்.
சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரின் முதல் சுற்றிலேயே இந்திய வீராங்கனை சாய்னா தோல் வியடைந்தார். ஆந்திரத்தைச் சேர்ந்த மற்றொரு வீராங் கனை பி.வி.சிந்து காலிறுதி யில் வெற்றியைப் பறிகொடுத் தார்.
ஆடவர் பிரிவில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த கிடாம்பி சிறீகாந்த், சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் தரவரிசை யில் முதலிடத்தில் உள்ள லீ சாங் வீயை சந்தித்தார். ஆரம்பத்தில் இருவரும் சவா லான ஆட்டத்தை வெளிப் படுத்தினர்.
முதல் செட்டில் 19-16 என முன்னணியில் இருந்த சிறீகாந்த் அதைத் தக்க வைக்கத் தவறினார். இதனால் 21-19 என லீ சாங் வீ முதல் செட்டைக் கைப்பற் றினார். 42 நிமிடங்கள் நடை பெற்ற இந்த ஆட்டத்தில் சிறீகாந்த் தோல்வியடைந்தார்.

துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்றார் மனவ்ஜித் சிங்
சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்ட மைப்பு (அய்எஸ்எஸ்எஃப்) நடத்திய ஷூட்கன் உலகக் கோப்பைப் போட்டியில், ஒலிம்பிக்கில் இரண்டு முறை வாகையர் பட்டம் வென்ற மைக்கேல் டைமண்டை வீழ்த்திய இந்திய வீரர் மனவ் ஜித் சிங் தங்கப் பதக்கத்தை வென்றார்.
அமெரிக்காவின் டஸ்கன் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதிச் சுற்றில், ராஜீவ் கேல் ரத்னா விருது வென்ற மனவ்ஜித் சிங்குக்கும், 1996 அட் லாண்டா ஒலிம்பிக் மற்றும் 2009 சிட்னி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஆஸ் திரேலியாவின் மைக்கேல் டைமண்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியில் 12-1 புள்ளிக ளுடன் மனவ்ஜித் சிங் முத லிடம் பிடித்து தங்கப் பதக் கத்தை வென்றார். இதன் மூலம், நான்கு ஆண்டு களுக்குப் பின் உலகக் கோப் பையில் மீண்டும் அவர் பதக்கம் வென்றுள்ளார்.
வெற்றி குறித்து மனவ் ஜித் சிங் கூறுகையில், மைக் கேல் டைமண்டுக்கு எதிராக வெற்றிபெறுவது என்பது மிகவும் சவால் அளிக்கும் விஷயம். இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி' என்றார்.

டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ்: அரையிறுதியில் தீபிகா பல்லிகல்
டெக்சாஸ் ஓபன் ஸ்கு வாஷ் போட்டியின் காலிறு தியில் கயானாவின் நிக்கோ லெட் ஃபெர்னாண்டஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன் னேறினார் சென்னையைச் சேர்ந்த தீபிகா பல்லிகல்.
அமெரிக்காவின் ஹூஸ் டன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் காலி றுதிச் சுற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் தரவரிசையில் 12ஆவது இடத் தில் உள்ள தீபிகா நீண்ட போராட்டத்துக்குப் பின் 11-4, 11-6, 10-12, 10-12, 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அரையிறுதியில் அவர், அயர் லாந்து வீராங்கனை மேட் லின் பெர்ரியை சந்திக்கிறார்.
வெற்றிக்குப் பின் தீபிகா கூறுகையில், இந்த சுற்று கொஞ்சம் கடினமாக இருந் தது. மூன்றாவது செட்டில் நிக்கோலெட் கடின போராட் டத்துக்குப் பின் அந்த செட் டைக் கைப்பற்றினார்.
இறு தியில் என் திட்டம் சரியாக நிறைவேறி வெற்றி பெற்ற தில் மகிழ்ச்சி. மேட்லினுக்கு எதிராக ஆடுவது எப்போதும் சவால் அளிக்கும். இதற்கு முன் அவரை வீழ்த்தியுள் ளேன் என்றாலும் அவர் சிறந்த ஃபார்மில் இருப்ப தால் அடுத்த ஆட்டம் கடின மானதாக இருக்கும் என்றார்.
அமெரிக்காவின் ஹூஸ் டன் நகரில் நடைபெற்ற டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதிச்சுற் றுக்கு இந்தியாவின் தீபிகா பல்லிகல் முன்னேறியுள்ளார்.
ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் தகுதிச்சுற்றின் மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறிய ஆஸ்திரேலி யாவின் உர்குஹர்டை 12-10, 11-8, 11-5 என்ற செட் கணக் கில் வீழ்த்தினார் தீபிகா.
இந்தச் சுற்றின் வெற்றி யைத் தொடர்ந்து அவர் காலிறுதிக்கு முன்னேறி னார். காலிறுதியில் சர்வ தேசத் தரவரிசையில் 19ஆவது இடத்தில் உள்ள கயானா வின் நிகோலெட் ஃபெர் னாண்டஸ தீபிகா எதிர்கொள் கிறார்.

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன்: அரையிறுதியில் சிறீகாந்த்
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சிறீகாந்த் முன்னேறியுள்ளார். அதே சமயம், இப்போட்டியின் மகளிர் பிரிவிலான காலிறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.
ஆடவர் பிரிவிலான காலி றுதி ஆட்டம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில், ஹாங்காங்கின் ஹு யுனை எதிர்கொண்டார் சிறீகாந்த். சவால் மிகுந்த இந்த ஆட்டத்தின் இறுதி யில் சிறீகாந்த் 17-21, 21-4, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு இந்திய வீர ரான சாய் பிரணீத் 15-21, 15-21 என்ற நேர் செட்களில் சீனா வின் டு பெஞ்சியூவிடம் பின்னடைவைச் சந்தித்தார்.
சர்வதேசத் தரவரிசை யில் முதல் இடத்தில் உள்ள சாங் வீ இந்த ஆட்டத்தில் 21-8, 21-14 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் டனோன்சகை வீழ்த்தினார். போட்டித் தரவரிசையில் 8ஆம் இடத்தில் உள்ள பி.வி. சிந்து 19-21, 15-21 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரி சையில் 2ஆம் இடத்தில் உள்ள சீனாவின் வாங் யிஹ னிடம் வீழ்ந்தார்.
பாட்மிண்டன் போட்டி யில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன வீராங்கனைகள், இந்த ஆட்டத்திலும் அதனை வெளிப்படுத்தினர். அரை யிறுதிக்கு முன்னேறிய 4 வீராங்கனைகளுள் 3 பேர் சீனாவைச் சேர்ந்தவர்களா வர். மற்றொரு வீராங்கனை கொரியாவைச் சேர்ந்தவர்.

துபை ஓபன் செஸ் தரவரிசை

துபையில் நடைபெற்று வரும் ஓபன் செஸ் போட்டி யில் இந்தியாவின் அபிஜீத் குப்தா முன்னிலையில் உள் ளார். 16ஆவது துபை சர்வ தேச செஸ் போட்டியின் வெள் ளிக்கிழமை நடைபெற்ற 4ஆம் சுற்று ஆட்டத்தில் அபி ஜீத் குப்தா, ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹதீம் ஹதரானியை தோற்கடித் தார்.
இதன்மூலம் அவர் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இதுவரை நடைபெற்ற 4 சுற்றிகளிலும் அவர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்களில் எம்.ஷியாம் சுந்தர், சால்வகோ, சாஹை குரோ வர், அஸ்வின் ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் உள்ளனர்.

சென்னையில் அய்.டி.எப். டென்னிஸ்: இறுதிப்போட்டியில் மேத்தா-பிரார்த்தனா
சென்னை, ஏப்.12- கே.எஸ். நாராயணன் நினைவு பெண் களுக்கான அய்.டி.எப். டென் னிஸ் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத் தில் நடந்து வருகிறது.
ரூ.6 லட்சம் பரிசுத்தொகைக் கொண்ட இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் நேற்று அரைஇறுதி ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பிரார்த் தனா ஜி.தோம்பரே 6-3, 7-5 என்ற நேர் செட்டில் சக நாட் டவர் நிதி சிலுமுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக் குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் ஈடீ மேத்தா (இந்தியா) 3-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சக வீராங்கனை நடாஷாவை தோற்கடித்து இறுதிப்போட் டிக்கு தகுதி பெற்றார். இன்று பகல் 1.15 மணிக்கு நடக்கும் இறுதி ஆட்டத்தில் மேத்தா-பிரார்த்தனா மோதுகிறார் கள்.
முன்னதாக இரட்டையர் இறுதிசுற்றில் ஷர்மதா-ரிஷிகா (இந்தியா) இணை 6-0, 7-6 (4) என்ற நேர் செட்டில் நடாஷா-பிரார்த்தனாவை சாய்த்து வாகையர் பட் டத்தை வென்றது. ஷர்மதா-ரிஷிகா இணைக்கு கோப் பையுடன் ரூ.18,800 பரிசுத் தொகையும், 12 தரவரிசை புள்ளிகளும் வழங்கப்பட் டன.
சிங்கப்பூர், ஏப்.11-  சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு இந்தி யாவைச் சேர்ந்த டீன் ஏஜ் வீராங்கனை பி.வி.சிந்து முன் னேறினார். ஆடவர் பிரிவில் கிடாம்பி சிறீகாந்த் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
சிங்கப்பூரில் நடை பெற்று வரும் இப்போட்டி யின் முதல் சுற்றிலேயே முன் னணி வீராங்கனையான சாய்னா நெவால் தோல்வி யடைந்து வெளியேறினார். வியாழக்கிழமை நடை பெற்ற காலிறுதிக்கு முந் தைய சுற்றில் சிந்துவும், ஜப்பானின் ஷிசுகா உசிதா வும் மோதினர்.
கடந்த ஆண்டு மக்காவ் மற்றும் மலேசிய ஓபனில் பட்டம் வென்ற சிந்து 21-17, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். உலக வாகையாளர் போட்டியில் வெண்கலம் வென்ற சிந்து காலிறுதியில் தரவரிசையில் 3-ஆவது இடத்திலுள்ள யிஹான் வங்கை எதிர்கொள்கிறார்.
ஆடவர் பிரிவில் ஆல் இங்கிலாந்து, ஸ்விஸ் ஓபன் மற்றும் இந்தியன் சூப்பர் சீரிஸ் போட்டிகளில் முதல் சுற்றுடன் வெளியேறிய சிறீ காந்த், தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள டீன் மின்ஹ் குயனை 18-21, 21-15, 21-8 என்ற செட் கணக்கில் தோற் கடித்து காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
வெள்ளிக்கிழமை நடை பெறவுள்ள காலிறுதியில் சிறீகாந்த், ஹாங்காங்கைச் சேர்ந்த யுன் ஹூவை சந்திக் கிறார்.
முன்னதாக புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் காஷ்யப் தோல்வியைத் தழுவினார்.
இரட்டையர் பிரிவில் அருண் விஷ்ணு - ஆல்வின் ஃபிரான்சிஸ் இணை, இந் தோனேஷியாவின் முகமது ஆசன் - ஹேந்திர செடியா வன் இணையிடம் வெற்றி யைப் பறிகொடுத்தது.

சீனியர் டிவிஷன் கால்பந்து: அய்சிஎஃப்- சென்னை மாநகர காவல்துறை சமன்
சென்னை, ஏப்.11-  சென்னை கால்பந்து கழகம் - செயின்ட் ஜோசப் இணைந்து நடத்தும் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் அய்சிஎஃப், சென்னை மாநகர காவல்துறை அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.
சென்னை நேரு மைதா னத்தில் வியாழக்கிழ மை இந்த ஆட்டம் நடைபெற் றது. ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் அய்சிஎஃப் அணி யின் வெங்கடேசன் ஒரு கோல் அடித்தார். இதற்கு சென்னை  மாநகர காவல் துறை அணி உடனடியாக பதிலடி கொடுக்கவில்லை.
இதனால் முதற்பாதியின் போது அய்சிஎஃப் அணி 1-0 என முன்னிலையில் இருந் தது. பிற்பாதி ஆட்டத்தில் சென்னை  மாநகர காவல் துறை அணிக்கு கவிபாரதி 59ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.
முன்னதாக நடைபெற்ற முதல் டிவிஷன் ஆட்டத்தில் மெட்ராஸ் யூத் ஃபெஸ்டிவல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் மத்திய கலால் அணி தோற்கடித்தது.
வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் நடைபெறவுள்ள சீனியர் டிவிஷன் லீக் ஆட்டத்தில் இந்தியன் வங்கி - ஹிந்துஸ் தான் ஈகிள்ஸ் அணிகள் மோத வுள்ளன.

கால்பந்து தரவரிசை: இந்தியா முன்னேற்றம்
புதுடில்லி, ஏப்.11-  சர்வதேச கால்பந்து கூட்ட மைப்பு (ஃபிஃபா) வெளி யிட்ட தரவரிசையில் இந்தியா 7 இடங்கள் முன்னேறி 145 ஆவது இடத்தைப் பிடித்துள் ளது.
சர்வதேச கால்பந்து உல கில் சிறந்து விளங்கும் அணி களின் பட்டியலை ஃபிஃபா வியாழக்கிழமை வெளியிட் டது. கடந்த ஒரு மாதமாக இந்திய அணி எந்த சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்க வில்லை.
எனினும் 144 புள்ளிகளைப் பெற்று 152 ஆவது இடத்தில் இருந்து 145ஆவது இடத்துக்கு முன் னேறியது. இந்தியா கடந்த ஆகஸ்ட் மாதம் 145ஆவது இடத்திலும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 143ஆவது இடத் திலும் இருந்தது குறிப்பிடத் தக்கது.
ஆசிய நாடுகளில் வியத் நாம் 9 இடங்கள் முன்னேறி 116-வது இடத்தைப் பிடித் துள்ளது. ஆஃப்கானிஸ்தான் முதன்முறையாக 122ஆவது இடத்துக்கு முன்னேறி யுள்ளது. ஆசிய நாடுகளில் ஈரான் மட்டுமே 47ஆவது இடத்தில் உள்ளது. ஸ்பெயின் முதலி டத்தில் நீடிக்கிறது.
சிங்கப்பூர், ஏப். 10- சிங் கப்பூர் சூப்பர் சீரிஸ் பேட் மிண்டன் போட்டி சிங்கப்பூ ரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் சுற்றில் ஜப்பானின் எரிக்கோ ஹிரோசுடன் மோதினார். 1 மணி 2 நிமிடங்கள் போராடிய சாய்னா 21-16, 15-21, 11-21 என்ற செட் கணக்கில் தோற்று வெளி யேறினார்.
சர்வதேச அரங்கில் தொடர்ந்து தடுமாறி வரும் 8ஆம் நிலை வீராங்கனை யான சாய்னா, தன்னை விட தரவரிசையில் பின்தங்கிய (15ஆவது இடம்) வீராங்க னையிடம் பணிந்து இருப் பது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் காஷ்யப் 21-16, 15-21, 20-22 என்ற செட் கணக்கில் கொரி யாவின் டோங்க் கியூன் லீயி டம் தோல்வியை தழுவினார். ஜூவாலா கட்டாஅஸ்வினி இணையும் முதல் தடையை கடக்கவில்லை.
அதே சமயம் மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தன்னை எதிர்த்த இந் தோனேஷியாவின் மிலிசென்ட் விரான்டோவை 21-9, 19-21, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். சிறீகாந்த், சாய் பிரனீத், பிரனாய், துளசி ஆகிய இந்தியர்களும் தங்க ளது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

இந்திய ஹாக்கி அணி நெதர்லாந்து பயணம்
உலகக் கோப்பைக்குத் தயாராகும் முயற்சியில் இறங் கியுள்ள இந்திய ஹாக்கி அணி உலகக் கோப்பை நடைபெறவுள்ள நெதர் லாந்துக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றது.
இந்திய ஹாக்கி அணி யின் பயிற்சியாளராக டெர்ரி வால்ஷ் நியமிக்கப்பட்ட பின், இந்திய அணிக்கு பல்வேறு விதங்களில் அவர் பயிற்சியளித்து வருகிறார். நெதர்லாந்தில் மே 31 முதல் ஜூன் 15 வரை உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது. இப் போதிருந்தே தயாரானால் தான் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என இந் திய அணி தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, போட்டி நடைபெறவுள்ள நெதர்லாந்திலேயே பயிற்சி மேற்கொள்வது என முடி வெடுக்கப்பட்டது. அய்ரோப் பிய ஆடுகளங்கள் மற்றும் அங்குள்ள சூழலை எளிதில் புரிந்துகொள்வது இந்திய அணிக்கு உலகக் கோப்பை யில் கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.
நடுகள வீரரான சர்தார் சிங் தலைமையில் 21 வீரர்க ளுடன் இந்திய அணி நெதர் லாந்து சென்றது. ஏப்ரல் 19ஆம் தேதி வரை நெதர் லாந்தில் தங்கி இருக்கும் இந்திய அணி 5 பயிற்சி ஆட் டங்களில் பங்கேற்கிறது.
இதில் இரண்டு ஆட்டங்கள் நெதர்லாந்துக்கு எதிரானவை. மற்ற இரண்டு ஆட்டங்க ளில் நெதர்லாந்து கிளப் அணிகளுடன் மோதவுள் ளன. தவிர, பெல்ஜியம் அணி யுடனும் பயிற்சி ஆட்டத் தில் பங்கேற்கின்றன.

துப்பாக்கிச் சுடுதல்: வீராங்கனை ஹீனா சாதனை
இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை 24 வயதான ஹீனா சித்து, கடந்த மாதம் நடந்த ஆசிய ஏர் கன் வாகை யர் பட்டப் போட்டியில் தங் கப்பதக்கத்தை வென்று அசத் தினார். அமெரிக்காவில் நடந்த உலக போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
தொடர்ச்சியான வெற்றி களை குவித்து வரும் பஞ் சாப்பை சேர்ந்த ஹீனா சித்து (1,699 புள்ளி), துப்பாக்கிச் சுடு தல் தரவரிசையில் பெண்களுக் கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.
இதன் மூலம் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் இந்திய பிஸ்டல் துப் பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற் றுள்ளார். உலக வாகையர் செர்பியாவின் ஜோரனா அரு னோவிச் 2ஆவது இடத்திலும், சீனாவின் வென்ஜூன் குவோ 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
சென்னை டென்னிஸ் காலிறுதியில் ரிஷிகா
சென்னையில் நடை பெற்று வரும் கே.எஸ்.நாரா யணன் நினைவு அய்டிஎஃப்  மகளிருக்கான டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு ரிஷிகா சுங்கரா முன்னேறினார்.
எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத் தில் புதன்கிழமை நடை பெற்ற இப்போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற் றில் போட்டித் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள ரிஷிகா, ஸ்வேதா சிறீயை எதிர் கொண்டார். இதில் ரிஷிகா வெற்றி பெற்று காலிறுக்குள் நுழைந்தார்.
ஹாக்கி என்றாலே நாங்கள் தான் கிங் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டனர் பஞ்சாபி கள். 4ஆவது தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி வாகையர் பட்டம் போட்டியில் ஒடிசாவை வீழ்த்தி 3ஆவது முறையாக வாகையர் பட்டத்தைக் கைப் பற்றியது பஞ்சாப்.
சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஞாயிற்றுக் கிழமை பஞ்சாப் அணிக்கும் ஒடிசா அணிக்கும் இடையே இறுதிச்சுற்று நடைபெற்றது. திடகாத்திரமான உடல்வாகு டன் கூடிய பஞ்சாப் வீரர்கள், ஒடிசலான உடல்வாகுடன் கூடிய ஒடிசாவை எளிதில் தோற்கடிப்பர் என எதிர் பார்க்கப்பட்டது.
அதுபோலவே பஞ்சாப் 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால், தமிழகம், டில்லி அணிகளைப் போல் அல்லாமல் வீழ்வதற்கு முன் ஒடிசா கடும் போராட் டத்தை வெளிப்படுத்தியது.
முதல் பத்து நிமிடங்கள் ஆட்டத்துக்குள் தங்களை முழுவதுமாக ஒடிசா வீரர்கள் ஈடுபடுத்துவதற்குள் பஞ் சாப் வீரர்கள் சுறுசுறுப்பாக 2 கோல்களை அடித்தனர். ஆட்டத்தின் முதல் நிமிடத் திலேயே பஞ்சாப் அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற் றினார் ஹர்ஜீத் சிங். அடுத்த சிம்ரன் ஜித் சிங் ஒரு ஃபீல்டு கோல் அடித்தார்.
முதல் 15 நிமிடங்களுக்குள் ஒடிசா அணிக்கு இரண்டு பெனால்டி கார்னர் மற்றும் பெனால்டி ஸ்டோக் வாய்ப்பு கிடைத்தன. ஆனால், இதை ஒடிசா வீரர்கள் கோலாக மாற்றத் தவறியதன் விளைவு அந்த அணி கோப் பையை இழந்து நின்றது.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஒடிசா அணிக்கு சுனில் எக்கா ஒரு கோல் அடித் தார். முற்பாதி ஆட்டத்தில் பஞ்சாப் 2-1 என முன்னிலை யில் இருந்தது.
பிற்பாதி ஆட்டத்திலும் ஒடிசா வீரர்களே பந்தை தங் கள் கட்டுப்பாட்டில் வைத் திருந்தனர். ஆனால், கடைசி 20 நிமிடத்தில் பஞ்சாப் அணி அடுத்தடுத்து இரண்டு கோல் களை அடித்தது. அதுவரை துடிப்பாக இருந்த ஒடிசா வீரர்களின் கால்கள் சோர் வைத் தழுவிக் கொண்டன. விளைவு பஞ்சாப் தன் ஆதிக் கத்தை நிலைநாட்டி 6-2 என வெற்றி வாகை சூடி நடப்பு வாகையர் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
முன்னதாக நடைபெற்ற 3 வது இடத்துக்கான ஆட்டத் தில் ஹரியாணா அணி 7-3 என்ற கோல் கணக்கில் சாய் (இந்திய விளையாட்டு ஆணை யம்) அணியை வீழ்த்தியது.

இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டி
புதுடில்லி, ஏப். 7- இந்திய ஓபன் பாட்மின்டன் ஒற்றை யர் பிரிவில், மலேசிய வீரர் சோங் வெய் லீ வாகையர் பட்டம் வென்றார். பெண்கள் ஒற்றையரில் சீனாவின் ஷிஜி யன் வாங் வாகையர் பட் டத்தை கைப்பற்றினார்.
டில்லியில், இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில், மலேசியா வின் சோங் வெய் லீ, சீனா வின் லாங் சென் மோதினர். அபாரமாக ஆடிய சோங் வெய் லீ, 55 நிமிடங்கள் வரை நீடித்தஇறுதிசுற்றின் முடிவில் 21-13, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று வாகையர் பட்டத்தை கைப் பற்றினார்.
பெண்கள் ஒற்றையர் இறுதிச் சுற்றில், சீனாவின் ஷிஜியன் வாங், ஜியுருய் லீ மோதினர். 47 நிமிடங்கள் வரை சென்ற இறுதிசுற்றின் முடிவில், அசத்தலாக ஆடிய ஷிஜியன் வாங் 22-20, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று வாகையர் பட்டம் வென்றார்.
இத்தொட ரில் இந்தியா சார்பில் பங் கேற்ற செய்னா நேவல், காஷ் யப் காலிறுதி வரை முன்னே றினர். மற்றொரு இந்திய வீராங்கனை சிந்து, முதல் சுற்றோடு வெளியேறினார்.

டேவிஸ் கோப்பை: உலக ப்ளே ஆஃப் சுற்றுக்கு இந்தியா தகுதி
டேவிஸ் கோப்பை போட்டியின் ஆசியா-ஓசினியா பிரிவின் 2ஆம் சுற்று ஆட்டத்தில் தென் கொரிய அணியை வீழ்த்தி உலகப் பிரிவு ப்ளே ஆஃப் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது.
தென் கொரியாவின் புசன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதல் 2 நாள் ஆட்டதின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஒற்றையர் பிரிவில் சோம்தேவ் தேவ்வர்மன் 6-4, 5-7, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் யாங் கியூ லிம்மை வீழ்த்தினார். இந்திய அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றதால், அடுத்த ஒற்றையர் பிரிவு ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
ப்ளே ஆஃப் சுற்று: உலகப் பிரிவு ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகளுள் இந்திய அணியும் ஒன்றாகும். இந்த அணிகள், உலகப் பிரிவு பிரதான முதல் சுற்றில் தோல்வியைத் தழுவிய 8 அணிகளுடன் மோதும்.
இந்த ஆட்டம் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ளது.
இந்த ப்ளே ஆஃப் சுற்றில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில், 2015ஆம் ஆண்டுக்கான உலகப் பிரிவு பிரதான முதல் சுற்றுக்கு இந்தியா தகுதி பெறும்.


Read more: http://www.viduthalai.in/home/sports.html#ixzz2yo3ylFAr