எல்லாம் அர்ஜென்டினாவில்தான்; ஒரே போட்டியில் 36 'சிவப்பு அட்டை'
அர்ஜென்டினாவில் நடந்த உள்ளுர் போட்டி ஒன்றில் பங்கேற்ற வீரர்கள், மாற்று வீரர்கள் உள்பட 36 பேருக்கு சிவப்பு அட்டைக் காட்டி ஒரு நடுவர் சாதனை படைத்தார்.
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடந்த உள்ளுர் ஆட்டம் ஒன்றில் விக்டோரியானா ஏரானாஸ் மற்றும் கிளேபோலே அணிகள் மோதின.இந்த போட்டிக்கு நடுவராக டொமியன் ரூபியானோ என்பவர் பணியாற்றினார்.போட்டி துவங்கியது முதலே இரு அணி வீரர்களுக்கும் அடிக்கடி தகராறும் மோதலும் ஏற்பட்டு கொண்டே இருந்தது. ஒவ்வொரு பந்தையும் எடுக்கும் போது எதிர் அணி வீரர்களை அடித்து வீழ்த்துவதிலேயே குறியாக இருந்தனர்.
இது போதாது என்று கரையில் இருந்த மாற்று ஆட்டக்காரர்களும் உதவி நடுவருடன் சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர்.இதையடுத்து போட்டியை நிறுத்திய நடுவர் ரூபியான் இரு அணியின் 11 வீரர்களுக்கும் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றினார். மேலும் கரையில் இருந்த 14 மாற்று ஆட்டக்காரர்களுக்கும் கூட சிவப்பு அட்டை கிடைத்தது.
போட்டி நிறுத்தப்பட்டதும் டிரெஸ்சிங் அறையிலும் இரு அணி வீரர்களுக்கும் இடையே சண்டை தொடர்ந்தது.அப்போது போலீசார் தலையிட்டு மோதலை தடுத்தனர்.இரு அணி வீரர்களுக்கும் நேரடி சிவப்பு அட்டைக் காட்டப்பட்டதால் தொடர்ந்து 3 போட்டிகளுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன் கடந்த 1993ம் ஆண்டு பாரகுவேயில் நடந்த ஆட்டம் ஒன்றில் 20 சிவப்பு அட்டை காட்டப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக