2 ஜூலை, 2011

கார் ஓட்டம் தொடங்கும் கோட்டிற்கு வந்தபின்னர் எரிபொருள் நிரப்புவது இந்த வருடத்திலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக காரின் குறைந்த நிறை 20 kg களினால் அதிகரிக்கப் பட்டுள்ளது. இது மேலதிகமாக எரிபொருளைக் கொண்டு செல்லவோ அல்லது KERS (Kinetic Energy Recovery System) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவோ உதவியாக இருக்கும். KERS என்பது கார் வேகமாக ஓடி திடீரென அதன் வேகத்தைக் குறைக்கும்போது வெளியிடப்படும் மேலதிக சக்தியைச் சேமித்து பின்னர் வேகத்தை திடீரென அதிகரிக்கும்போது சில வினாடிகளுக்கு 80 குதிரைவலு அளவிலான மேலதிக சக்தியைக் கொடுக்கும்.
Posted Image

குறைந்த எரிபொருளில் அதி உச்சமான வலுவைப் பாவிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இது எதிர்கால வாகன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவியாக இருக்குமெனக் கூறப்படுகிறது. கார்களில் பாவிக்கப்படும் எரிபொருளும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டபின்னரே பாவிக்கலாம். ஓட்டம் முடிந்த பின்னரும் காரில் எஞ்சியிருக்கும் எரிபொருளைச் சோதனையிட முடியும். இதில் கட்டாயமாக Bioethanol போன்ற மாசு விளைவிக்காத கலவை 5.75 வீதம் கலக்கப் பட்டிருக்க வேண்டும். வேறு எந்த விதமான இரசாயனப் பொருட்களும் கலப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டளவில் போர்முலா1 100 வீதம் மின்வலுலில் செலுத்த்க் கூடிய போட்டியும் நடத்தப் படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
போட்டியில் கலந்துகொள்ளும் கார் - நிறுவனம் - ஓட்டுனர் ஆகியவை ஏராளமான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். 


காரின் சகல உதிரிப் பாகங்களும் குறிப்பிட்ட நீள, அகல, உயர, நிறைகளுக்கு உட்பட்டதாக இருத்த்ல் வேண்டும்.

Posted Image

இயந்திரத்ததின் (Engine) முக்கிய விதிகளை எடுத்துக் கொண்டால் :

அ - 8 சிலிண்டர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் (V 90°)
ஆ - 2400 கன சென்ரிமீற்றர்களுக்கு (2400cc அல்லது 2.4 லீற்றர் ) உட்பட்டதாக இருத்தல் வேண்டும்
இ - நிமிடத்திற்கு 18000 தடவைகளுக்கு மேல் சுற்றுதல் கூடாது
ஈ - 95 kg ற்குக் குறைவான நிறையுடன் இருக்க வேண்டும்
உ - ஒரு ஓட்டுனர் 8 இயந்திரங்களை வைத்திருக்கலாம் (19 போட்டிகளிலும் ஓடுவதற்கு). பழுதுகள் வரும்போது மாற்றி ஓடலாம். அதற்குமேல் மாற்றினால் அடுத்த ஓட்டப் போட்டியின் தொடக்கத்தில் 7 இடங்கள் பின்தங்க வேண்டியிருக்கும்.
எ - .........

இந்த இயந்திரங்கள் சுமார் 700 குதிரை வலுக்கள் கொண்டவை. முன்பு 1000 குதிரை வலுக்களாக இருந்தது. இவற்றின் ஆயுட்காலம் 2000 கிலோமீற்றர்களுக்கும் குறைவானது. ஏறத்தாள 5000 உதிரிப் பாகங்களால் ஆக்கப்பட்டிருக்கும். 2013 ஆம் ஆண்டு இந்த இயந்திரங்களின் அளவு மேலும் குறைக்கப்பட உள்ளது. 

கருத்துகள் இல்லை: