எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி காட்டாருக்கு
மாத்திரமானதல்ல. அது மொத்த அரபு உலகுக்கும் மத்திய கிழக்கிற்குமானது. அந்த உலகக் கிண்ணத்தின் வெற்றி ஆசியாவுக்குமான வெற்றி என்று கட்டார் கால்பந்து சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்து கூட்டுச் சம்மேளனத்தின் உப தலைவர் சவூத் அல் மொஹன்னதி குறிப்பிட்டார்.
கட்டாரில் நடைபெறவிருக்கும் 2022 உலகக் கிண்ணம் அரபு நாடுகளில்முதன்மையானதும் ஆசியாவின் இரண்டாவதுமாகும் என்று குறிப்பிட்ட அவர், உலகக்கிண்ணத்திற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே அனைத்து மைதானங்களும்தயாராகிவிடும் என்று உறுதி அளித்தார். முந்தைய உலகக் கிண்ணப் போட்டிகளில்போட்டிகள் ஆரம்பமான பின்னரும் மைதானங்களின் கடைசிக் கட்ட வேலைகள்பூர்த்தியாகாதது போல் கட்டாரில் நடைபெறாது என்று அவர் உறுதி அளித்தார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய கால்பந்தாட்டகூட்டுச் சம்மேளன பொதுச் சபைக் கூட்டத்தின்போது உப தலைவர் பதவியைத்தக்கவைத்துக்கொண்ட சவூத் அல் மொஹன்னதி, பீஃபா பேரவை உறுப்பினராகவும்தெரிவானார்.
உலகக் கிண்ணத்திற்கான மைதானமான அல் வக்ராஹ் அரங்கில் நடைபெற்ற அமீர்கிண்ண இறுதிப் போட்டிக்கு தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, கட்டார் கால்பந்துசம்மேளனத்தால் அழைக்கப்பட்டார்.
டோஹா, அல் பதா நகரில் நடைபெற்ற 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்போட்டியின்போது சவூத் அல் மொஹன்னதி கருத்து வெளியிட்டிருந்தார்,
கேள்வி – சவூதி அரேபியா மற்றும் ஜப்பான் போன்ற வலுவான எதிரணிகளைதோற்கடித்து 2019 ஆசிய கிண்ணத்தில் கட்டார் சம்பியன் பட்டம் வென்றது. கட்டார்பிஃபா உலகக் கிண்ணத்தை நடத்தவுள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகள் எவ்வாறுஉள்ளன?
பதில் – சரிதான், ஆசிய சம்பியனாக 2022 பிஃபா உலகக் கிண்ணத்தை கட்டார்நடத்தவுள்ளது. 2022 நவம்பர் 20 ஆம் திகதி லுசைலா அரங்கில் எமது தேசிய அணிகளமிறங்கும்போது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமையாக அமையும்.
உலகக் கிண்ணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சரியான வழியில், மதிப்பீட்டுசெலவினங்களுக்கு அமைவாக சென்றுகொண்டிருக்கின்றன. பிரேஸில், ரஷ்யா ஆகியநாடுகள் கடந்த இரண்டு உலகக் கிண்ண அத்தியாயங்களை வெற்றிகரமாக நடத்தியநிலையில், அடுத்த வரவேற்பு நாடு என்ற வகையில் எமது கலாசார விழுமியங்களுக்குஅமைய சிறப்பாக நடத்துவோம். உலகக் கிண்ணப் போட்டிக்கான அரங்குகளில்ஒன்றான கலிபா விளையாட்டரங்கு 2017 மே மாதம் திறக்கப்பட்டு அமீர் கிண்ணஇறுதிப் போட்டியும் நடத்தப்பட்டுவிட்டது. இந்த அரங்கு 40,000 ஆசன வசதிகளைக்கொண்டது.
இரண்டு புதிய விளையாட்டரங்குகள் திறக்கப்படவுள்ளதால் இவ்வருடம் மிக முக்கியவருடமாக எமக்கு அமையவுள்ளது. கட்டாரின் தென்புற நகரான அல் வக்ராவில்புதிதாக நிர்மாணிக்கப்படும் 40,000 ஆசனங்களைக் கொண்ட அல் வக்ராவிளையாட்டரங்கு இம் மாதம் திறக்கப்படும். அல் கோர் சிட்டியில் நிர்மாணிக்கப்படும்60,000 ஆசனங்களைக் கொண்ட அல் பெட் விளையாட்டரங்கு இவ்வருட இறுதியில்திறக்கப்படும்.
எட்டு அரங்குகளுடன் 32 அணிகளுக்கான பயிற்சி அரங்குகளும் அடுத்த வருடத்துக்குள்பூர்த்தி செய்யப்பட்டுவிடும். இதற்காக இலங்கையர்களுக்கும் நாங்கள் நன்றி கூறவேண்டும். உலகக் கிண்ணத்துடனான திட்டங்களில் ஆயிரக்கணக்கானஇலங்கையர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். கட்டாரின்கனவை நனவாக்கி அதி சிறந்த உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதற்கான எமதுமுயற்சியில் அவர்களது பங்களிப்பு இருப்பதையும் இங்கு நினைவுகூரவிரும்புகின்றேன்.
எமது கால்பந்தாட்டத் திட்டத்தின் பங்காளிகளான தேசிய திட்டத்தில்ஈடுபடுபவர்களும் உரிய இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றனர். புதியமெட்ரோ சேவை இவ் வருடம் ஆரம்பமாகும். ஒரு அரங்கிலிருந்து இன்னுமொருஅரங்குக்கு பயணிப்பதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு குறைவான நேரமேதேவைப்படும். எனவே இரசிகர்கள் ஒரே நாளில் இரண்டு போட்டிகளைக்கண்டுகளிக்கக்கூடியதாக இருக்கும். ஒன்றுடன் ஒன்று பிணையப்பட்ட வீதிகட்டமைப்புகளும் பூர்த்தி அடையும் தறுவாயை நெருங்கிக்கொண்டிருக்கின்றன.
அதேபோன்று, விமான நிலைய விஸ்தரிப்புப் பணிகள் தொடர்வதுடன் 2022இல் வருகைதரவுள்ள பத்து இலட்சம் இரசிகர்களைத் தங்க வைப்பதற்கான ஹோட்டல்களும்திறக்கப்பட்ட வண்ணம் உள்ளன. அடுத்த வருடத்துக்குள் அனைத்து திட்டங்களும்பூர்த்தி செய்யப்படுவதுடன் தேசிய மட்டத்திலான பரீட்சார்த்த நிகழ்ச்சிகளையும்அரங்கேற்றுவோம்.
கேள்வி – 2022 உலகக் கிண்ணத்தில் தற்போதைய 32 அணிகளுக்கு பதில் 48 அணிகளாக அதிகரிக்கப்பட்டு வேறு நாடுகளும் கூட்டாக போட்டியைநடத்தவிருப்பதாக ஊகங்களில் கருத்துகள் எழுந்துள்ளன. கட்டார் சொந்தமாக 48 அணிகளையும் வரவேற்க தயாராக உள்ளதா?
பதில் – 2022 உலகக் கிண்ணத்தில் 48 அணிகளாக விரிவுபடுத்துவதன் சாத்தியம்குறித்து மொஸ்கோ தொடக்கம் கிகாலியில் பல்வேறு பிஃபா கூட்டங்களிலும்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
எமது பிராந்தியத்துக்கும் அதன் மக்களுக்கும் அனுகூலம் தரக்கூடிய பிஃபா உலகக்கிண்ணப் போட்டியை நடத்துவதை குறிக்கோளாகக் கொண்டு அர்ப்பணிப்புடன்செயற்பட்டு வருகின்றோம். இந்த உலகக் கிண்ணம் முழு அரபு உலகுக்கும் மத்தியகிழக்குக்கும் உரியதாக இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதே எமதுஇலட்சியமாகும்.
அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தைஎதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள பிஃபா பொதுச் சபைக் கூட்டத்தில்எதிர்பார்க்கலாம். அதுவரை கட்டாரில் 32 அணிகளுக்கான உலகக் கிண்ணப்பணிகளில் ஈடுபடுவதுடன் அதி உயரிய உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவோம்என்ற உறுதியையும் வழங்குகின்றோம்.
கேள்வி – ரஷ்யாவில் நடைபெற்ற 2018 பிஃபா உலகக் கிண்ணம் இதுவரைநடைபெற்றதில் சிறந்த உலகக் கிண்ணம் என்று பிஃபா அறிவித்துள்ளது. எனவே, 2022 இல் அதனை விடவும் சிறந்த போட்டியை நடத்தும் பாரிய சவால் கட்டாருக்கு உள்ளது. அதனை எவ்வாறு நீங்கள் விளக்குவீர்கள்?
பதில் – 2018 பிஃபா உலகக் கிண்ணப் போட்டியின்போது பிஃபா மற்றும் போட்டியைநடத்து நாடு பற்றி அறிந்து கொள்வதற்கு 200 கண்காணிப்பாளர்களை ரஷ்யாவுக்குகட்டார் அனுப்பியது. 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை நடத்தும் உரிமை எமக்குகிடைத்தது தொடக்கம் இதனையே நாம் பின்பற்றி வருகிறோம்.
எது சரி, எது தவறு என்பதை இனங்கண்டு, 2022 உலகக் கிண்ணம் மிகச் சிறந்ததாகஅமைய என்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் ஆராய்ந்து 2010 முதல் பிரதானபோட்டிகளில் பணியாளர்களை அமர்த்தி பரீட்சித்து வருகின்றோம். ஒலிம்பிக் விழா, சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி, யூரோ சம்பியன்ஷிப், 21 வயதின் கீழ் உலகக்கிண்ணப் போட்டி அனைத்துக்கும் எமது அதிகாரிகளை கண்காணிப்பாளர்களாகஅனுப்பி சிறந்த அனுபவங்களைப் பெற்றுக்கொண்டுள்ளோம்.
ரஷ்யாவில் உலகக் கிண்ணப் போட்டி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டதை நான் நேரில்கண்ணுற்றேன். போட்டிகளை நடத்தும் நகரங்களின் ஏற்பாட்டாளர்கள் மற்றும்தன்னார்வலர்கள் ரசிகர்களுடன் இணைந்து செயற்பட்டதை நான் பார்த்தேன். மைதானத்தின் அபாரமான செயற்பாடுகள் ரஷ்யாவில் சிறப்பாக இருந்தது. மைதானம்பரபரப்பாக இருந்ததோடு எஞ்சியது ரசிகர்களுடையாதாக இருந்தது.
எவ்வாறாயினும், போட்டியை நடத்தும் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான போட்டிஎதிர்பார்ப்புகளும் இருப்பதோடு ரசிகர்களும் எந்நேரமும் வித்தியாசமானதொடர்களை எதிர்பார்க்கின்றனர்.
உதாரணத்திற்கு உலகின் மிகப்பெரிய நாடானா ரஷ்யாவில் சில அரங்குகள் 3,000 கிலோ மீற்றர் தொலைவிலேயே இருந்தன. ஆனால் கட்டாரில் அரங்குகளுக்குஇடையில் 70 கிலோ மீற்றர் தூரமே உள்ளன. ஓர் அரங்கிலிருந்து மற்றைய அரங்குக்குஒரு மணித்தியாலத்துக்குள் பயணித்துவிடலாம். எனவே, இரசிகர்களுக்கும்அணிகளுக்கும் போதிய ஓய்வு எடுக்கக்கூடியதாக இருக்கும்.
உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில்நடைபெறுவதால், கடற்கரை பொழுதுபோக்கு, பாலைவனச் சுற்றுப் பயணம், நீர்நிலைவிளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள் அனைத்திலும் ஈடுபடக்கூடிய சூழல் நிலவும். ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வருகைதந்து கால்பந்தாட்டத்துடன் களியாட்டங்களிலும் கலந்து மகிழக்கூடியதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் அரபு உலகின் விருந்தோம்பல்களை அனுபவிக்கும் அதேவேளைகட்டாரின் சுவையான உணவுகளையும் உண்ணக்கூடியதாக இருக்கும்.
ஒட்டுமொத்தத்தில் என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கக்கூடிய வகையிலும் அரபுஉலகுக்கு பெருமைதரும் வகையிலும் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப்போட்டிகளை கட்டார் நடத்தும் என நான் 100 வீதம் நம்புகின்றேன்.
கேள்வி – 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண காலத்தில் அதிக வெப்பநிலை மற்றும்ஈரப்பதமான நிலை பற்றி ஐரோப்பிய நாடுகள் முறையிட்டது உங்களுக்குத்தெரிந்திருக்கும். எவ்வாறாயினும் கலிபா அரங்கு குளிரூட்டப்பட்டிருப்பதுஅற்புதமானதாகும்.
பதில் – உலகக் கால்பந்து அமைப்புகளுடன் (லீக், ரசிகர் குழுக்கள் மற்றும்கூட்டமைப்புகள் இதர தரப்புகள்) ஆலோசித்த பின் 2015 ஆம் ஆண்டு ஜூன்/ஜூலைஇலிருந்து நவம்பர்/டிசம்பருக்கு தொடரை மாற்ற பிஃபா தீர்மானித்தது.
2022இன் சூடான மற்றும் ஈரலிப்புத் தன்மை கொண்ட நிலை குறித்து ரசிகர்கள், அணிமற்றும் அதிகாரிகள் கவலைப்படத் தேவையில்லை. சராசரி தட்பவெப்பநிலை 24 பாகையாக இருக்கும் நவம்பர் மற்றும் டிசம்பரிலேயே போட்டி நடைபெறுகிறது. அதுவீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு கச்சிதமானதாகும்.
தொடரின் நேரம் மாற்றப்பட்டதால் எமது குளிரூட்டல் அமைப்பை அதிகம்பயன்படுத்தத் தேவை இருக்காது. எமது மைதானங்களில் இதனை நிறுவுவதற்கு நாம்தொடர்ந்து முதலீடு செய்வோம். எனவே, 2022 தொடர் முடிவுற்ற பின்னர் ஆண்டுமுழுவதும் அதனை பயன்படுத்த முடியுமாக இருக்கும்.
2017 மே மாதம் கலிபா அரங்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டபோது வெளியே 40 பாகை வெப்பநிலை இருந்ததோடு 20 பாகை குறைக்கப்பட்டு மைதானத்தில் 18 பாகைஇருந்தது. இது சிறப்பான தொழில்நுட்பம். இது கட்டாருக்கு மாத்திரம் சாதகமானதல்லஇதுபோன்ற காலநிலை இருக்கும் நாடுகளில் ஆண்டு முழுவதிலும் தமதுமைதானத்தை பயன்படுத்த இந்த தொழில்நுட்பம் உதவும்.
கேள்வி – புதிய அரங்குகளுக்காக நீங்கள் எதிர்பார்க்கும் மொத்த செலவு எவ்வளவு. 2022இற்காக எத்தனை அரங்குகள் அமைக்கப்படுகின்றன?
பதில் – தொடருக்கான செலவுகளாக சுமார் 23 பில்லியன் கட்டார் ரியால், சுமார் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிடப்பட்டுள்ளது. எமக்கு இன்னும் மூன்றுஆண்டுகள் உள்ளன. எனவே, இறுதிச் செலவு பற்றி எம்மால் உறுதியாகக் கூற முடியாது.
நான் ஏற்கனவே கூறியதுபோன்று எட்டு விளையாட்டு அரங்குகள் நிர்மாணிக்கப்படும். கலிபா விளையாட்டரங்கு ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது. அல் வக்ரா, அல் பேட்என்பன இவ் வருடம் திறக்கப்படும்.
அல் ரயான், அல் துமாமா, ராஸ் அபு அபூத், எட்யூகேஷன் சிட்டி, லுசெய்ல் என்பனமற்றைய ஆறு அரங்குகளாகும். எட்டு அரங்குகளில் ஆறு அரங்குகள் 40,000 ஆசனங்களைக் கொண்டவை. அல் பேட் அரங்கில் 60,000 ஆசனங்கள் உள்ளன. லுசெய்ல் அரங்குதான் பெரியது. இங்குதான் ஆரம்பப் போட்டியும் இறுதிப் போட்டியும்நடைபெறும். இந்த அரங்கு 80,000 ஆசனங்களைக் கொண்டது. உலகக் கிண்ணவரலாற்றிலேயே மிகவும் வித்தியாசமான வகையில் ராஸ் அபு விளையாட்டரங்குநிர்மாணிக்கப்படுகின்றது. கப்பல் கொள்கலன்கள், அப்புறப்படுத்தக்கூடியஆசனங்கள், அலகுகளான கட்டுமான தொகுதிகள் மற்றும் 40,000 ஆசனங்களுடன்அமைக்கப்படும் இந்த அரங்கு, உலகக் கிண்ணம் முடிவடைந்ததும் முற்றிலும்அகற்றப்பட்டுவிடும்.
அதன் பகுதிகள், விளையாட்டுத்துறை அல்லது விளையாட்டுத்துறை அல்லாததிட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். நிலைத்திருப்பதற்கான புதிய கண்டு பிடிப்பாகஇதனை கட்டார் அறிமுகப்படுத்துகின்றது.
எமது விளையாட்டரங்குகள் அனைத்தும் அராபிய விழுமியங்களைப் பிரதிபலிக்கும்வடிவமைப்புகளைக் கொண்டனவாக இருக்கும். இவை முழு உலகையும் கவரும்என்பது உறுதி.
கேள்வி – ஆசியாவில் இருந்து பிஃபா கௌன்ஸில் உறுப்பினருக்கான AFC தேர்தல்காலத்தில் அந்த தேர்தல் பதற்றம் உங்களுக்கு எப்படி இருந்தது. 2019 ஏப்ரலில் பெரும்வெற்றியை பெற்றதன் மூலோபாயம் என்ன?
பதில் – தேர்தல் நேரம் என்பது எப்போதும் பதற்றமாக இருந்தபோதும் நல்லவேடிக்கையாகவும் இருந்தது. எனது பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பாகவும்அதனை நான் அனுபவித்ததோடு ஆசிய கால்பந்தில் என்னால் என்ன செய்ய முடியும்மற்றும் எப்படி நாம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது என்பது பற்றிஆலோசித்தோம்.
நம்பிக்கையுடன் எப்போதும் நாம் தேர்தலுக்கு செல்வோம். எம்மிடம் உள்ள தலைமைபண்பு மற்றும் நாம் செய்யும் வேலைகளின் தன்னம்பிக்கையில் இருந்து அது வருகிறது.
அரசு மற்றும் அனைத்து விளையாட்டு அமைப்புகளிலும் விவேகமான தலைமையைபெற்றிருப்பது கட்டாரின் அதிஷ்டமாகும். குறிப்பாக கட்டார் கால்பந்துசம்மேளனத்தின் தலைவர் எச்.ஈ. ஷெய்க் ஹமத் பின் கலிபா பின் அஹமது அல் தானிஆதரவு கிடைத்தது எனக்கு பெரும் அதிர்ஷ்டமாகும். அவர் எப்போதும் என்னுடன்இருந்தார்.
ஆசிய கால்பந்தை அபிவிருத்தி செய்வது குறித்து எமது அயல் நாடுகளுடன்பொதுவான நோக்கை பெற்றிருப்பது எமக்குத் தெரியும். அதில் வெற்றி பெறுவதுஎம்மால் முடியும். கடைசியாக நடைபெற்ற AFC தேர்தலில் வெளிப்படையாக கட்டார்மிக வலுவான நிலையை பெற்றது. பிஃபாவின் ஆட்சிக் குழு, பிஃபா கௌன்சிலில் நான்எனது இடத்தை தக்கவைத்துக் கொண்டதோடு, AFC துணைத் தலைவர் பதவியையும்தக்கவைத்துக் கொண்டேன்.
இந்த வெற்றியால் ஆசியா மற்றும் உலகக் கால்பந்தில் கட்டார் சிறப்பான நிலையைஎட்டியதோடு கடந்த ஆண்டுகளில் காட்டார் கால்பந்து சம்மேளனம் உயர்நிலைவெளிப்பாட்டை காட்டியுள்ளது.
2022 உலகக் கிண்ண கால்பந்து தயார்படுத்தல் குறித்து பிஃபாவுடன் நாளாந்தஅடிப்படையில் நாம் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். கடந்த இரண்டு தசாப்தங்களில்கட்டார் எவ்வாறு ஒரு கால்பந்து தேசமாக உருவெடுத்தது என்பதை காட்டுவதாக பிஃபாகௌன்சில் வாக்கெடுப்பு உள்ளது.
எனது வெற்றி தனிப்பட்ட ஒன்று அல்ல நாடாகவும் ஓர் குழுவாகவும்செயற்பட்டதாலேயே நாம் இங்கு இருக்கிறோம். மத்திய கிழக்கில் முதல் பிஃபா உலகக்கிண்ணத்தை நடத்துவது போன்று அடுத்த சில ஆண்டுகளில் ஆசியா எங்கும்கால்பந்தை அபிவிருத்தி செய்வதில் நான் தொடர்ந்து அவதானம் செலுத்துவேன்.
கேள்வி – AFC தலைவர் ஷெய்க் சல்மான் போட்டி இன்றி வெற்றி பெற்றார். கட்டாரில்இருந்து நீங்கள் இதனை எப்படிப் பார்க்கிறீர்கள் மற்றும் உங்களது சொந்தபகுப்பாய்வில் அவரது தலைமை ஆசிய கால்பந்தை வேகமாக வளர்ச்சிபெறச் செய்யஎவ்வாறு உதவும்?
பதில் – எனது சகோதரர் ஷெய்க் சல்மான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை இட்டுபெரும் மகிழ்ச்சி அடைகிறேன். 2013 ஆம் ஆண்டு அந்தப் பதவியை பெற்றதுதொடக்கம் சிறந்த பணியை ஆற்றி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக ஆசிய கால்பந்து அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்துஆசிய வட்டாரத்திலும் சீனா மற்றும் இந்தியா வலுவான கால்பந்தாக தற்போதுவளர்ச்சி கண்டிருப்பதோடு ஜப்பான், கொரியாவில் ஆசிய லீக் மற்றும் வளைகுடாஎங்கும் வலுப்பெற்றுள்ளது.
இந்த பங்களிப்பின் அம்சமாக விளையாட்டு, சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, அதேபோன்று போட்டிக்கான அதிக முதலீடு மற்றும் அடிமட்ட வளர்ச்சிக்குத்தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுக்காக AFC முக்கிய நிலை வகிக்கிறது.
ஆசிய கால்பந்தின் ஒரு பொட்காலத்தின் சாட்சியமாகவும் ஷெய்க் சல்மானஇருப்பதாக நான் கருதுகிறேன். உலகின் சில மிகப்பெரிய லீக் போட்டிகளை நீங்கள்பார்த்தால் ஆசிய வீரர்கள் தற்போது மிகப்பெரிய ஐரோப்பிய லீக்குகளுக்கு சென்றுபெரும் தாக்கம் செலுத்துகின்றனர்.
இன்றிருக்கும் ஆசிய கிண்ணத்தை வளர்ச்சி பெறச் செய்வதற்கும் ஷெய்க் சல்மான்உதவி புரிந்துள்ளார். சாதனை எண்ணிக்கையான 24 அணிகளுடன் எப்போதும்இல்லாத மிகப்பெரிய ஆசிய கிண்ணத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நாம்அண்மையில் நிறைவு செய்தோம். ஒரு தொடராக கட்டார் தெளிவாகவே சிறந்தமுறையில் செயற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக