4 ஜூன், 2019

கால்பந்து விதிகளில் பல மாற்றங்கள் அறிமுகம்

கால்பந்து விளையாட்டின் சட்ட விதிகளை தீர்மானிக்கின்ற சர்வதேச கால்பந்து சம்மேளன சபை (IFAB)
கால்பந்தின் சில விதிகளில் மாற்றம் கொண்டுவந்துள்ளது.
ஸ்கொட்லாந்தின் அபெர்தீனில் கடந்த மார்ச் 2 ஆம் திகதி நடைபெற்ற  IFAB இன் 133 ஆவது பொதுக் குழு கூட்டத்தின்போதே கால்பந்து விதிகளில் புதிய திருத்தங்கள் கொண்டுவர இணக்கம் எட்டப்பட்டிருந்தது.
இதில் உலகெங்கும் கடந்த 2 ஆண்டுகளாக சோதனை முயற்சியாக பயன்படுத்தப்பட்ட மூன்று மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அணி அதிகாரிகள் தவறான நடத்தைக்கும் சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.  
இதன்படி வீரர்களுக்கு காண்பிக்கப்படுவது போன்று கட்டுப்படுத்த முடியாத நடத்தையை வெளிப்படுத்தும் பயிற்சியாளர்களையும் வெளியேற்ற புதிய விதிகளில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்டிருக்கும் மற்றொரு முக்கிய மாற்றமாக மாற்று வீரர் ஒருவரை பரிந்துரைக்கும்போது மைதானத்திற்குள் இருக்கும் வீரர் குறித்த இடத்தினாலேயே மைதானத்தை விட்டு வெளியேற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி அந்த வீரர் தமக்கு அருகில் இருக்கும் touchline அல்லது goal line இடங்களால் மைதனத்தில் இருந்து வெளியேற வேண்டும். வீரர்களை பரிந்துரைக்கும்போது ஏற்படுகின்ற கால விரயத்தை குறைத்துக் கொள்வதற்காகவே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தவிர இரண்டு ஆண்டுகள் பரிசோதனைக்கு பின் அமுலுக்கு வந்திருக்கும் மூன்றாவது விதியானது, அணி ஒன்றுக்கு தமது பெனால்டி பகுதியில் ப்ரீ கிக் வாய்ப்பு ஒன்று கிடைக்கும்போது அந்த ப்ரீ கிக் பெற்ற சந்தர்ப்பத்திலேயே பந்தை ஆடியதாக கருதப்படுவதோடு அதன்படி பந்தை ஆடியதாக கருதுவதற்காக பெனால்டி பகுதியில் இருந்து வெளியே வருவது தேவையற்றதாகும்.
மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மாற்றங்களுக்கு அமைய அணி ஒன்றுக்கு ப்ரீ கிக் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தால் அதன்போது எதிரணி வீரர்கள் மூவர் அல்லது அதற்கு அதிக எண்ணிக்கையானவர்களைக் கொண்ட சுவர் (wall) ஒன்று அமைப்பதாயின் அந்த சந்தர்ப்பத்தில் எதிரணி அதாவது ப்ரீ கிக் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொண்ட அணியின் வீரர்களுக்கு ‘wall’ இல் இருந்து 1 மீற்றர் வரை தூரத்தில் நிற்பதற்கு முடியாது.  
இந்த விதியை மீறும்போது அடுத்த அணிக்கு நேரடி அல்லாத ப்ரீ கிக் வாய்ப்பு ஒன்று வழங்கப்படும்.
இந்த முக்கிய விதி மாற்றங்களின்படி அணியின் வீரர் ஒருவர் உதைக்கின்ற பந்து அதே அணியின் வேறொரு வீரர் ஒருவரின் கையில் தற்செயலாகப் பட்டு வலைக்குள் சென்றால் அது கோலாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
மேலும் வீரர் ஒருவரின் கைகளில் தற்செயலாகப் பட்டு அதன் மூலம் அவர்களுக்கு சாதகமான சூழல் ஒன்று ஏற்பட்டு அவர் கோல் ஒன்றைப் பெற்றால் அவ்வாறான சந்தர்ப்பங்களில் அது கோலாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இதன்படி அவ்வாறான சந்தர்ப்பங்களில் எதிரணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு ஒன்று வழங்கப்படும். கால்பந்து விளையாட்டில் பந்து தற்செயலாக கையில் படும் சந்தர்ப்பங்கள் தொடர்பிலான விதிகளை கருத்தில் கொண்டு இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதோடு அதன்படி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பந்து கையில் பட்டு வலைக்குள் சென்றால் அது கோலாக ஏற்கப்படாததும், வீரரின் கையில் தற்செயலாக பட்ட பின் அதன் மூலம் அவர்களுக்கு சாதகமான நிலை ஏற்பட்டு கோல் ஒன்று பெறப்பட்டால் அல்லது கோல் ஒன்றை பெறுவதற்கு சந்தர்ப்பம் ஒன்றை உருவாக்கிக் கொண்டால் அவ்வாறான சந்தர்ப்பத்தில் எதிரணிக்கு ப்ரீ கிக் வழங்கப்படுவது போன்ற இருக்கின்ற விதிகள் இந்த மாற்றத்திற்கு காரணமாகியுள்ளது.
இதில் பெனால்டி சந்தர்ப்பத்தில் கோல்காப்பாளருக்கு ஒரு காலை ‘goal line‘ இற்கு முன்னால் வைப்பதற்கு புதிய மாற்றத்தில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் கோல்காப்பாளருக்கு அசைவதற்கு அல்லது ‘goal line’ இற்கு பின்னால் இருப்பதற்கு அல்லது இரு கால்கள் மற்றும் மேல் கோல் கம்பம் அல்லது வலையை பிடித்துக் கொண்டிருக்க முடியாது.
இந்த புதிய மாற்றங்கள் எதிர்வரும் ஜுன் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்

கருத்துகள் இல்லை: