10 மார்., 2014

கோவை, மார்ச் 9- கோவை யில் நடைபெற்ற அகில இந் திய மின் வாரியங்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் அஸ்ஸாம் அணி வாகையர் பட்டத்தைக் கைப்பற்றியது.
கோவையில் கடந்த புதன்கிழமை துவங்கிய இப் போட்டியில் 15 மாநிலங் களைச் சேர்ந்த மின் வாரிய அணிகள் பங்கேற்றன. கடந்த ஆண்டு அரையிறுதிக்குத் தகுதி பெற்ற மேற்கு வங்கம், அஸ்ஸாம், டில்லி, கேரள அணிகள் இந்த ஆண்டு நேர டியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றன.
சனிக்கிழமை காலையில் நடைபெற்ற முதல் அரை யிறுதி ஆட்டத்தில் அஸ்ஸாம் அணி 2-0 என்ற கோல் கணக் கில் மேற்கு வங்க அணியை வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. இரண்டா வது அரையிறுதியில் கேரள அணி 2-1 என்ற கோல் கணக் கில் டில்லி அணியை வீழ்த் தியது.
கோவை நேரு விளை யாட்டு அரங்கில் சனிக் கிழமை மாலையில் நடை பெற்ற இறுதி ஆட்டத்தில் அஸ்ஸாம், கேரள அணிகள் மோதின. இரு அணிகளிலும் சந்தோஷ் கோப்பையில் விளையாடும், விளையாடிய வீரர்கள் இடம் பெற்றிருந் தனர்.
ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் இரு அணிகளுக் கும் கோல் அடிக்கும் வாய்ப் புகள் கிடைத்தன. ஆனால், இரு அணிகளும் அவற்றை வீணடித்தன. இதனால் வழக் கமான ஆட்ட நேரத்தில் இரு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை.
இதனால், பெனால்டி கார்னர் மூலம் ஆட்டத்தின் முடிவு நிர்ணயிக்கப்பட்டது. இதில் தங்களுக்குக் கிடைத்த 5 வாய்ப்புகளையும் அஸ் ஸாம் வீரர்கள் கோலாக மாற்றினர். ஆனால் கேரள அணிக்குக் கிடைத்த இரண் டாவது வாய்ப்பை அஸ்ஸாம் கோல் கீப்பர் தடுத்துவிட் டார். இறுதியில் 5-3 என்ற கோல் கணக்கில் அஸ்ஸாம் அணி வென்றது.
அஸ்ஸாம் அணி கடந்த ஆண்டு நடந்த போட்டியில் கேரள அணியிடம் தோல்வி யடைந்து 3ஆவது இடத்தை இழந்தது. இந்த ஆண்டு கேர ளத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
சுமார் 25 ஆண்டுகளுக் குப் பின் அஸ்ஸாம் அணி மீண்டும் பட்டம் வென்றுள் ளது குறிப்பிடத்தக்கது.

காலிறுதியில் சானியா இணை
கலிபோர்னியா, மார்ச் 9- பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந் தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் இணை முன்னேறியது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு இரண் டாவது சுற்றில் இந்தியாவின் சானியா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் இணை, அமெ ரிக்காவின் ராகியுல், அபிகய்ல் இணையை சந்தித்தது.
இதன் முதல் செட்டை 63 என கைப்பற்றிய சானியா, இரண்டாவது செட்டையும் 64 என தன்வசப்படுத்தியது. முடிவில், சானியா, காரா பிளாக் இணை 63, 64 என வெற்றி பெற்று காலிறுதிக் குள் நுழைந்தது.

அகில இங்கிலாந்து பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா தோல்வி
இங்கிலாந்து பாட்மிண் டன் வாகையர்பட்ட தொட ரின் காலிறுதிச் சுற்றில் இந்தி யாவின் சாய்னா நெவால் தோல்வியடைந்து வெளியே றினார்.
பர்மிங்ஹாமில் வெள் ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 7ஆவது இடத் தில் உள்ள சாய்னா, தரவரி சையில் 3ஆவது இடத்தில் உள்ள ஷிஸியான் வங்கை எதிர்கொண்டார். லீக் ஆட்டங்களில் சிறப் பான ஆட்டத்தை வெளிப் படுத்தி வந்த சாய்னா இம் முறை சீன வீராங்கனையி டம் வெற்றியைப் பறிகொடுத் தார்.
43 நிமிட போராட்டத் துக்குப் பின் ஷிஸியான் வங் 17-21, 10-21 என்ற செட் கணக் கில் சாய்னாவை வீழ்த்தினார். ஷிஸியான் அரையிறுதி ஆட் டத்தில் யிகான் வங்கை எதிர் கொள்கிறார்.
இத்தொடரில் 3ஆவது முறையாக காலிறுதி ஆட்டத் தில் சாய்னா தோல்வியடைந் துள்ளார். 2010 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் சாய்னா, அரை யிறுதிச் சுற்று வரை முன்னே றியிருந்தது குறிப்பிடத்தக் கது.
இதற்கு முன் பிரகாஷ் படுகோன் மற்றும் கோபி சந்த் (சாய்னாவின் பயிற்சி யாளர்) ஆகியோர் மட்டுமே இப்போட்டியில் இந்தியா சார்பில் பட்டம் வென்று உள்ளனர்.
பிர்மிங்ஹாம், மார்ச் 7-  டென்னிஸில் விம்பிள்டன் போட்டியைப் போல கரு தப்படும் ஆல் இங்கி லாந்து வாகையர் பட்ட பாட்மிண் டன் போட்டியில் இந்தியா வின் சாய்னா நெவால் 2ஆவது சுற்றுக்கு முன்னே றினார்.
மற்றொரு வீராங்கனை யான பி.வி.சிந்து 16-21, 15-21 என்ற நேர் செட்களில் சீனா வின் யு சன்னிடம் தோற்று போட்டியிலிருந்து வெளி யேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரி வில் பங்கேற்ற பருபள்ளி காஷ்யப் மற்றும் கே.சிறீ காந்த் ஆகியோரும் முதல் சுற்றுகளிலே பின்னடை வைச் சந்தித்தனர்.
தற்போதைய நிலையில், இப்போட்டியின் 2ஆவது சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்களில் சாய்னா நெவால் மட்டும் களத்தில் உள்ளார். அவரே இந்தியா வின் கடைசி நம்பிக்கை யாகவும் திகழ்கிறார்.
எளிய வெற்றி: பிர்மிங் ஹாம் நகரில் உள்ள தேசிய உள்விளையாட்டு அரங்கில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. சாய்னா, தனது முதல் சுற்றில் ஸ்காட்லாந் தின் கிறிஸ்டி கில்மெளரை எதிர்கொண்டார்.
இதில் முதல் சுற்றில் சிறிது ஆதிக் கம் செலுத்திய கில்மௌர், 2ஆவது சுற்றில் தனது ஆற் றல் முழுவதையும் இழந் தார். அவருக்கான வாய்ப்பு களை சாய்னா ஏற்படுத்தித் தரவில்லை. அதனால், 21-15, 21-6 என்ற நேர் செட்களில் சாய்னா வென்றார்.


டென்னிஸ் தொடர்: அரையிறுதியில் சனம் சிங்

பீமாவரம், மார்ச் 7- அய்.டி.எப்., டென்னிஸ் ஒற் றையர் பிரிவு அரை யிறுதிக்கு இந்தியாவின் சனம் சிங், சிறீராம் பாலாஜி, விஷ்ணு வர்தன், சாகேத் மை னேனி முன்னேறினர்.
ஆந்திர மாநிலம் பீமா வரம் நகரில், ஆண்களுக் கான அய்.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் சனம் சிங் 61, 61 என்ற நேர் செட் கணக்கில் சகவீரர் சசிகுமார் முகுந்தை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறி னார்.
மற்றொரு காலிறுதி யில், இந்தியாவின் விஷ்ணு வர்தன் 76, 64 என்ற நேர் செட் கணக்கில், சகநாட்டை சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழி யனை தோற்கடித்து, அரை யிறுதிக்கு தகுதி பெற்றார்.
இந்தியாவின் சிறீராம் பாலாஜி 61, 64 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் கோ சுசூகியை வீழ்த்தி அரை யிறுதிக்குள் நுழைந்தார். இந்தியாவின் சாகேத் மை னேனி 62, 63 என்ற நேர் செட் கணக்கில், சகவீரர் சந்திரில் சோத்தை தோற்கடித்து அரை யிறுதிக்கு முன்னேறினார்.
இந்திய இணை அபாரம்: இரட்டையர் பிரிவு அரை யிறுதியில், இந்தியாவின் சிறீராம் பாலாஜி, ரஞ்சித் விராலி முருகேசன் இணை 64, 63 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் ராம் குமார் ராமநாதன், ஸ்பெயி னின் கேப்ரியல் ட்ரூஜில் லோசோலர் இணையை வீழ்த்தி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதி யில், இந்தியா வின் சனம் சிங், சாகேத் மை னேனி இணை 67, 62, 107 என்ற செட் கணக்கில், சகநாட்டை சேர்ந்த ஜீவன் நெடுஞ் செழியன், விஷ்ணு வர்தன் இணையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

பளு தூக்குதல்: வெங்கட் ராகுல் தங்கம்

புதுடில்லி, மார்ச் 7-  ஆசிய யூத் பளுதூக்குதல் வாகையர் பட்ட 77 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் வெங்கட் ராகுல் இரண்டு தங்கம் உட்பட மூன்று பதக்கம் வென்றார்.
தாய்லாந்தில், 16ஆவது ஆசிய யூத் பளுதூக்குதல் வாகையர் பட்ட போட்டிகள் நடக்கின்றன. ஆண்களுக் கான 77 கி.கி., எடைப்பிரிவு ஸ்னாட்ச் பிரிவில் (133 கி.கி.,) வௌளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் வெங்கட் ராகுல், கிளீன் அன்டு ஜெர்க் பிரிவில் (163 கி.கி.,) தங்கம் வென்றார்.
ஒட்டுமொத்த மாக 296 கி.கி., பளுதூக்கிய ராகுல், முத லிடம் பிடித்து தங்கம் வென் றார். இதன் மூலம் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி உட்பட 3 பதக்கம் வென்றார்.
இங்கிலாந்து வாகையர் பட்ட போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா வின் ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா இணை தோல்வியடைந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆனந்த் பவார் பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
பிர்மிங்ஹாமில் நடை பெற்று வரும் இப்போட்டி யில் சாய்னா, சிந்து, காஷ்யப், சிறீகாந்த் உள்ளிட்ட பல இந்திய வீரர்கள் பங்கேற்றுள் ளனர்.
புதன்கிழமை நடை பெற்ற மகளிருக்கான இரட் டையர் தகுதிச் சுற்றில் அஸ் வினி- ஜுவாலா இணை சீனாவின் ஜின் மா - யுவான்டிங் யங் இணையை எதிர்த்து ஆடியது. 54 நிமிட போராட்டத்துக்குப் பின் அஸ்வினி - ஜுவாலா  இணை 21-14, 15-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி யடைந்தது.
ஆடவர் பிரிவில் ஆனந்த் பவார் 68 நிமிட போராட்டத் துக்குப் பின் இந்தோனேஷி யாவின் ஆண்ட்ரூ குர்னி யாவன் டெட்ஜோனாவிடம் 21-18, 13-21, 19-21 என்ற செட் கணக்கில் வெற்றியைப் பறிகொடுத்தார்.

தேசிய கூடைப்பந்து: தமிழகம் வாகை சூடியது
64ஆவது தேசிய கூடைப் பந்து வாகையர் பட்ட போட் டியின் ஆடவர் பிரிவில் வாகை யர் பட்டம் வென்று வர லாற்றுப் பக்கத்தில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டது தமிழக அணி.
டில்லியில் தியாகராஜ் உள்விளையாட்டரங்கில் இப்போட்டி நடைபெற்று வந்தது. பல முன்னணி அணி களை லீக் மற்றும் அடுத்த டுத்த சுற்றுகளில் வீழ்த்தி இறு திச்சுற்றுக்கு முன்னேறிய தமிழக அணி புதன்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத் தில் பஞ்சாபை எதிர்கொண் டது.
மற்ற ஆட்டங்களில் எதிர் கொண்ட சவால்களை விட இறுதி ஆட்டத்தில் தமி ழக அணிக்கு நெருக்கடி குறை வாகவே இருந்தது. இதனால், ஒவ்வொரு சுற்றி லும் தமிழக அணி முன்னிலை பெற்றி ருந்தது.
ஆட்டத்தின் இடை வேளையில் தமிழகம் 37-30 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்த 2 சுற்றுக ளிலும் தமிழக வீரர்கள் கவனத்தை இழக்காததால் இறுதியில் 74-57 என்ற புள் ளிக் கணக்கில் வாகையர் பட் டத்தை வென்றனர்.
இந்திய ரயில்வே மகளிர் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணி 81-77 என்ற புள்ளிக் கணக்கில் வென்று வாகையர் பட்டத் தைக் கைப்பற்றியது.
ஆடவர் பிரிவில் 3ஆம் இடத்தை சர்வீசஸ் அணியும் 4ஆம் இடத்தை உத்தரகண்ட் அணியும் பிடித்தன. மகளிர் பிரிவில் 3ஆவது இடத்தை டில்லியும், 4ஆவது இடத்தை மகாராஷ்டிரமும் பிடித்தன.
இருபாலர் பிரிவிலும் முதல் இடம் பிடித்த அணிக்கு பரிசுத் தொகையாக ரூ. 1 லட்சம் ரொக்கம் வழங்கப் பட்டது. 2 மற்றும் 3ஆவது இடங்களைப் பிடித்த அணி களுக்கு பரிசுத் தொகையாக முறையே ரூ. 75 ஆயிரம் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டன.

கால்பந்து: தமிழக அணி வெற்றி
கோவையில் புதன் கிழமை தொடங்கிய அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில், தமிழக அணி  3-0 என்ற கோல் கணக்கில் சத் தீஸ்கர் அணியை வென்றது.
அகில இந்திய மின்வாரி யங்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி புதன் கிழமை முதல் வரும் 8-ஆம் தேதி வரை கோவையில் நடைபெற உள்ளது. இப் போட்டியில் 15 மாநிலங் களைச் சேர்ந்த மின்வாரிய அணிகள் பங்கேற்றுள்ளன.
கடந்த ஆண்டு அரையிறு திக்குத் தகுதி பெற்ற மேற்கு வங்கம், அசாம், கேரளம் மற்றும் டில்லி அணிகள் நேர டியாக இந்த ஆண்டு காலிறு திக்குத் தகுதி பெற்றுள்ளன.
சி-பிரிவில் இடம்பெற்ற தமிழகம் புதன்கிழமை நடை பெற்ற ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணியை எதிர்கொண்டது. இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்றது.
லீக் ஆட்டத்தில் ஒவ் வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் 4 அணிகள் காலிறு திக்குத் தகுதி பெறும்.

இறகு பந்து போட்டி
மாநில அளவிலான இறகு பந்து போட்டியில் தரவரி சையில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்த திண்டுக்கல் மாணவி அருள் பிரசித்தி.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்று வரும்  மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையிலான கூடைப்பந்து போட்டியில் திருச்சி, கோவை,சென்னை கல்லூரிகள் வெற்றி பெற்றன.
பிஷப் சாலமன் துரை சாமி நினைவு கோப்பைக் கான 5ஆம் ஆண்டு கூடைப் பந்து போட்டிகள் பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங் கியது. 8 கல்லூரிகள் பங் கேற்று விளையாடி வருகின் றன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத் தப்படுகின்றன.
லீக் போட்டிகளில் ஏ பிரிவில்  திருச்சி தூய வளனார் கல்லூரியை 39-22 என்ற புள்ளிக்கணக்கில் பிஷப் ஹீபர் கல்லூரி வீழ்த்தியது. இதே பிரிவில் நடைபெற்ற போட்டியிலும் தூய வளனார் கல்லூரியை 75-44 என்ற புள் ளிக்கணக்கில் வீழ்த்தியது கோவை பி.ஜி. கலை அறிவி யல் கல்லூரி.
பி பிரிவில் நடைபெற்ற போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியை 67-43 என்ற புள்ளிக்கணக்கில் கோவை ஜி.ஆர்.டி. கல்லூரி வென்றது. மற்றொரு போட் டியில் ஜமால் முகமது கல்லூ ரியை 67-55 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது சென்னை  லயோலா கல்லூரி. முன்ன தாக போட்டிகளை பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் பால் தயாபரன் தொடக்கி வைத் தார். 6ஆம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது.

மாநில கால்பந்துப் போட்டி: சேலம் அணி வெற்றி

மாநில அளவிலான பைக்கா கால்பந்து இறுதிப் போட்டியில் சேலம் அணி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் பைக்கா (கிராம இளைஞர் மேம்பாட்டு விளையாட்டுத் திட்டம்) திட்டத்தின் கீழ் மாநில அள விலான 16 வயதுக்கு உள் பட்ட பெண் கள் கால் பந்து போட்டி மார்ச் 2-ஆம் தேதி துவங்கியது. இப்போட்டியில் 29 மாவட்டங்களைச் சேர்ந்த அணியினர் கலந்து கொண் டனர்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிப் போட் டியினை மாநில இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத் துறை அமைச்சர் ஆர்பி. உதயக்குமார் துவக்கி வைத்தார். இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணி யும், சேலம் மாவட்ட அணி யும் மோதின. ஆட்டத்தின் இறுதி வரை 2 அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முடிவு டை பிரேக்கர் மூலம் முடிவு செய்யப்பட்டது.
இதில் இரு அணியைச் சேர்ந்த வீராங் கனைகள் 3-3 கோல் அடித்து சமநிலையில் இருந்தனர். இதைத் தொடர்ந்து சடன்டெத் முறையில் முடிவு தீர்மானிக்கப்பட்டது. இதில் சேலம் அணியின் வீராங்கனை ஒரு கோல் அடித்தார். திண்டுக்கல் அணி கோல் ஏதும் அடிக்காததால் 4-3 என்ற கோல் கணக்கில் சேலம் அணி வெற்றி பெற் றது.

லீபார்ன் ஜேம்ஸ் சாதனை
அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து வீரர் லீபார்ன் ஜேம்ஸ் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இவர், மியாமி ஹீட் கிளப் அணிக்கும் விளையாடி வருகிறார்.
அமெரிக்கா, ஃப்ளோரிடாவின் மியாமி உள்விளையாட்டரங்கில் கிளப் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சார்லோட்டி அணிக்கு எதிராக துல்லியமாக பந்தை "பேஸ்கட்' செய்து 61 புள்ளிகளை ஈன்று ஜேம்ஸ் சாதனை புரிந்தார்.

பஞ்சாப் இளைஞர் விழாவையொட்டி லாகூரில் நடந்த மகளிர் கபடி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 38-15 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி.
டில்லி, மார்ச் 4- தேசிய கூடைப்பந்து வாகையர் பட்ட போட்டியின் காலி றுதி ஆட்டத்தில் தமிழக ஆடவர் அணி வெற்றி பெற்றது. அதேசமயம் தமி ழக மகளிர் அணி தோல்வி யடைந்தது.
டில்லியில் திங்கள் கிழமை நடைபெற்ற ஆட வர் காலிறுதி ஆட்டத்தில் தமிழக அணி கருநாடகத்தை சந்தித்தது. இதில், தமிழகம் 87-54 என்ற புள்ளிக் கணக் கில் கருநாடகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி யது. தமிழகத்தின் சார்பில் வினீத் 18 புள்ளிகளும், பிர தம் சிங் 16 புள்ளிகளும், ரிகின் பெதானி 15 புள்ளிகளும் பெற்றுத் தந்தனர்.
மற்றொரு காலிறுதி ஆட் டத்தில் நடப்பு வாகைய ரான உத்தரகாண்ட் அணி 93-74 என்ற புள்ளிகளில் கேரளத்தை வீழ்த்தி அரை யிறுதிக்கு முன்னேறியது. சர்வீசஸ்- ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்வீ சஸ் அணி வெற்றி பெற்றது.
மகளிருக்கான காலிறுதி ஆட்டத்தில் தமிழகமும், ரயில்வே அணியும் மோதின. இதில் 90-50 என்ற புள்ளிக் கணக்கில் ரயில்வே அணி வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் டில்லி அணி 111- 58 என்ற புள்ளிக் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன்: கடினமான சுற்றில் சாய்னா, சிந்து
இங்கிலாந்து, மார்ச் 4-இங்கிலாந்து ஓபன் பாட் மிண்டன் வாகையர் பட்ட தொடரில் இந்திய வீராங் கனைகளான சாய்னாவும், சிந்துவும் கடினமான சுற்றில் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்தில் செவ் வாய்க்கிழமை 104ஆவது இங்கிலாந்து ஓபன் வாகை யர் பட்ட போட்டி தொடங் குகிறது. இதன் மகளிர் ஒற் றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 7ஆவது இடத் தில் உள்ள சாய்னாவும், ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மரும் மோதவுள்ளனர்.
2ஆவது சுற்றுக்கு சாய்னா முன்னேறினால், தன் பழைய எதிரியான ஜெர் மனியைச் சேர்ந்த ஜூலியன் செங்கை சந்திப்பார். 2013-இல் நடைபெற்ற இந்தோ னேஷிய ஓபனில் சாய்னா இவரிடம் தோல்வியடைந் தது குறிப்பிடத்தக்கது.
உலக வாகையர் பட்ட போட்டி யில் வெண்கலம் வென்ற ஆந்திரத்தைச் சேர்ந்த பி.வி. சிந்து தன் முதல் சுற்றில் தர வரிசையில் 33ஆவது இடத் தில் உள்ள சன் யூவை எதிர் கொள்கிறார்.
18 வயதாகும் சிந்து, முதல் சுற்றில் சீன வீராங்கனையை தோற்கடிக் கும் பட்சத்தில் 2ஆவது சுற் றில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள யிஹான் வங்குடன் மோத நேரிடும்.
கடந்த ஆண்டு உலக வாகை யர் போட்டியில் யிஹான் வங்கை சிந்து வீழ்த்தியிருந் தார் என்பதால் இம்முறை அவர் சிந்துவுக்கு கடும் சவால் அளிப்பார் எனத் தெரிகிறது.
ஆடவர் பிரிவில் சிறீ காந்த் முதல் சுற்றில் தரவரி சையில் 5ஆவது இடத்தில் உள்ள கெனிசி டாகோவை எதிர்கொள்கிறார்.

வாகை சூடினார் அரவிந்த் பட்
வெஸ்ட்பாலியா, மார்ச் 4- ஜெர்மனி ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அரவிந்த் பட் வாகையர் பட்டம் வென்றார்.
ஜெர்மனியில் உள்ள முல்கிம்ஆன்டெர்ரூரில் சர்வதேச ஜெர்மனி ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் உலகின் 87ஆவதுநிலை வீரரான இந்தியாவின் அரவிந்த் பட் (34 வயது), 25ஆவது இடத்தில் உள்ள டென்மார்க்கின் டேன் ஹேன்ஸ் கிறிஸ்டியனை (28 வயது) சந்தித்தார்.
போட்டியின் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய அரவிந்த் பட், முதல் செட்டை 24-22 என போராடி தன்வசப்படுத்தினார். பின் இரண்டாவது செட்டை 19-21 என இழந்தார்.
வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி பெற்ற அரவிந்த், தொடர்ச்சியாக 11 புள்ளிகளை பெற்று 21-11 என பதிலடி கொடுத்தார். முடிவில், அரவிந்த் பட் 24-22, 19-21, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றினார்.
இறுதிச் சுற்றில் டென்மார்க் வீரர் ஹேன்ஸ் கிறிஸ்டியனை வீழ்த்திய அரவிந்த் பட், ஜெர்மனி ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் வாகையர் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், இத்தொடரில் சையது மோதி (1981), கோபிசந்த் (1999) ஆகியோர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
கர்நாடகாவின் மடிகேரியை சேர்ந்த் அரவிந்த் பட், சர்வதேச பாட்மின்டன் அரங்கில் வெல்லும் 7ஆவது வாகையர் பட்டம் இது.


Read more: http://www.viduthalai.in/home/sports.html#ixzz2vVhAtgxl

கருத்துகள் இல்லை: