19 மார்., 2014

சர்வதேச டென்னிஸ்:
நெடுஞ்செழியன், ராம்குமார் வெற்றி
திருச்சி, மார்ச் 19- திருச்சியில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர்கள் ஜீவன் நெடுஞ்செழியன், ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றனர்.
தமிழ்நாடு டென்னிஸ் சங் கம் மற்றும் திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்தும் வாசன் அய் கேர் ஆடவர் வாகையர் பட்ட டென்னிஸ் போட்டி திருச்சி யில் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகின்றன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் விஜய் கண் ணனை 6-3, 6-4 என்ற நேர் செட்கணக்கில் விஜயானந்த் மாலிக்கும், ஜத்தின் தஹி யாவை 6-1,6-1 என்ற நேர் செட்கணக்கில் தமிழக வீரர் ஜீவன் நெடுஞ்செழியனும் வீழ்த்தினர்.
மற்றொரு ஆட்டத்தில் சசிகுமார் முகுந்தை 6-3,7-5 என்ற செட் கணக்கில் வென் றார் ராம்குமார் ராமநாதன். ஸ்பெயின் வீரர் என்ரிக் லோபேஸிடம் வீழ்ந்தார் அஸ்வின் விஜயராகவன்.
நித்தின் கிரிட்டினேயை 6-2,7-5 என்ற செட்கணக்கில் காஜா விநாயக் சர்மாவும், உஸ்பெஸ்கிஸ்தானின் சர்வார் இக்ராம்வோவை 6-2,6-1 செட் கணக்கில் பிரான்ஸின் மத்தி யாஸ் போர்கியூவும் வென்ற னர்.
தமிழக வீரர்கள் ரஞ்சித் விராலி முருகேசன், சிறீராம் பாலாஜி இடையே நடை பெற்ற போட்டியில் பாலாஜி 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
ஸ்பெயினின் போல் டோல்டோ பாக்யூவுக்கு எதி ரான ஆட்டத்தில் ஸ்வீடனின் லூகாஸ் ரினார்டு 2-6,6-4,6-3 என்ற செட்கணக்கில் வென் றார். ஸ்விட்சர்லாந்தின் ஜானிஸ் லினிகரை தமிழகத்தின் விக் னேஷ் 4-6,6-2 7-6 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.
இரட்டையர் பிரிவில் உஸ்பெஸ்கிஸ்தானின் சர்வார் இக்ராம்வோவ், செர்கே ஸ்பில்வோ இணையை 6-0,6-1 என்ற செட்கணக்கில் தோற் கடித்தது மோகித் மயூர், ஆகாஸ் வாக் இணை.
மற்றொரு ஆட்டத்தில் ரோனாக் மகுஜா, அஸ்வின் விஜயராகவன் இணையை 6-4,7-6 என்ற நேர்செட்கணக் கில் வென்றனர் தமிழகத் தைச் சேர்ந்த அருண் பிரகாஷ் ராஜகோபாலன், ராம்குமார் ராமநாதன் இணை.
இதுபோல, போர்ச்சுகல் வீரர் ஆண்ட்ரே காஸ்பர் முத்ரா, பிரான்ஸின் மத்தி யாஸ் போர்க்கியூ இணை, சாகர் அகுஜா, சந்திரில்சூட் இணையிடம் 6-3,3-6,10-4 என்ற செட்கணக்கில் வீழ்ந்தது.




ஸ்குவாஷ்: ஜோஷ்னா தோல்வி
பெனாங், மார்ச் 19- உலக ஸ்குவாஷ் வாகையர்பட்ட போட்டி முதல் சுற்றில் இந் திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா தோல்வியடைந் தார். மலேசியாவில் பெண்க ளுக்கான உலக ஸ்குவாஷ் வாகையர்பட்ட போட்டி நடக் கிறது. இதன் முதல் சுற்றில் 19ஆவது இடத்திலுள்ள இந் தியாவின் ஜோஷ்னா சின் னப்பா, நம்பர்-4 வீராங்கனை இங்கிலாந்தின் அலிசன் வாட் டரை சந்தித்தார்.
இதில், ஜோஷ்னா சின் னப்பா போராடி வீழ்ந்தார். இன்று நடக்கும் மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந் தியாவின் நட்சத்திர வீராங் கனை 11ஆவது இடத்திலுள்ள தீபிகா பல்லீகல், தகுதிச்சுற் றில் இருந்து முன்னேறிய இங் கிலாந்தின் லிசாவை எதிர் கொள்கிறார்.



உலக சதுரங்க தகுதிச் சுற்று
கந்தி மான்சிஸ்க், மார்ச் 19- 2014ஆம் ஆண்டுக்கான உலக சதுரங்க (செஸ்) வாகையர் பட்ட போட்டியில் நடப்பு வாகையர்பட்ட நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதப்போகும் வீரரை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று போட்டி (கேன்டி டேட்ஸ் சதுரங்க தொடர்) ரஷ்யாவின் கந்தி மான்சிஸ்க் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் உலக வாகையர்பட்ட இந்தியா வின் விஸ்வநாதன் ஆனந்த், விளாடிமிர் கிராம்னிக் (ரஷ்யா) உள்பட 8 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ் வொரு வீரரும் மற்ற வீரர்க ளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 14 சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் கார்ல்செனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்.
இந்த நிலையில் நேற்று நடந்த 5ஆவது சுற்றில் ஆனந்த், ரஷ்ய வீரர் டிமிட்ரி ஆன்ட்ரீ கினை எதிர்கொண்டார். கறுப்பு நிற காயுடன் ஆட் டத்தை தொடங்கிய ஆனந்த் 43ஆவது நகர்த்தலில் டிரா செய்தார்.  5 சுற்று முடிவில் ஆனந்த் 2 வெற்றி, 3 டிரா என்று 3.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக் கிறார். ஸ்விட்லர், கிராம்னிக், ஆரோனியன் தலா 3 புள்ளி களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

ஆசியா விளையாட்டுப் போட்டி தென்கொரியாவின் இன்சி யான் நகரில் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடை பெற உள்ளது. இதற்கான இந்திய தூதர்களாக நியமிக்கப் பட்டுள்ள மல்யுத்த வீரர் சுஷில்குமார், வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஆகியோர் ஆசிய விளை யாட்டை பிரபலப்படுத்தும் வகையில் டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
வாகையர் பட்டம் வென்ற பென்ட்டாவுடன், ரோஜர் பெடரர், ரத்வான்கா
இந்தியன் வெல்ஸ், மார்ச் 18- பரிபாஸ் ஓபன் டென் னிஸ் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நேவக் ஜோகோவிச் வாகையர் பட்டம் வென்றார். இறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி னார். பெண்கள் ஒற்றைய ரில் இத்தாலியின் பிளவியா பெனிட்டா வாகையர் பட் டத்தை கைப்பற்றினார்.
அமெரிக்காவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில், பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், சுவிட்சர் லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மோதினர்.  ஜோகோவிச் 3-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக வாகை யர் பட்டத்தை கைப்பற்றி னார். முன்னதாக 2008, 2011 இல் நடந்த இத்தொடரில் கோப்பை வென்றார்.
பெனிட்டா வாகை சூடினார்:
பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில், இத்தாலியின் பிளவியா பெனிட்டா, போலந்தின் அக்னிஸ்கா ரத்வான்காவை எதிர்கொண்டார். அபார மாக ஆடிய பிளவியா பெனிட்டா 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக வாகையர் பட்டத்தை கைப்பற்றினார்.

லயோனல் மெஸ்சி சாதனை

பார்சிலோனா, மார்ச் 18- ஒசாசுனா அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து போட் டியில், ஹாட்ரிக் கோல் அடித்த அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி, பார்சி லோனா அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.
பார்சிலோனாவில் நடந்த லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில், பார்சிலோனா, ஒசாசுனா அணிகள் மோதின. அபார மாக ஆடிய பார்சிலோனா அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  பார்சிலோனா அணி, புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத் தில் உள்ளது. முதலிரண்டு இடங்களில் ரியல் மாட்ரிட் (70 புள்ளி), அத்லெட்டிக் மாட்ரிட் (67 புள்ளி) அணிகள் உள்ளன.
இப்போட்டியில் மெஸ்சி,  தனது இரண்டாவது கோல் அடித்த போது, லா லிகா, கோபா டெல் ரே, சர்வதேச மற்றும் நட்பு ரீதியிலான கிளப் அணிகள் மோதும் போட் டிகளில், பார்சிலோனா அணிக் காக ஒட்டுமொத்தமாக அதிக கோல் அடித்த வீரர்கள் பட் டியலில் முதலிடம் பிடித்தார். இதுவரை இவர், 371 கோல் அடித்துள்ளார்.
இதன்மூலம் மற்றொரு பார்சிலோனா வீரர் பிலிப்பைன்சின் பவு லினோ அல்கான்டராவின் (369 கோல்) சாதனையை முறியடித்தார். இப்பட்டியலின் 3, 4ஆவது இடத்தில் முறையே ஸ்பெயினின் ஜோசப் சமிடி யர் (333), சீசர் ரோட்ரி குயஸ் (301) உள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் ஈக்வஸ்டிரியன் போட்டியில், தடைகளை தாண்டும் பிரான்ஸ் வீரர் அலெக்சாண்ட்ரி பான்டாநெல்லே.
ஜெயங்கொண்டம் , மார்ச் 17- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் 15.3.2014 சனிக்கிழமை அன்று 8-ஆம் ஆண்டு விளை யாட்டு தினவிழா நடைபெற் றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. பெரியார் பள்ளியின் உடற் கல்வி இயக்குநர் இராஜேஷ் வரவேற்புரை வழங்கினார்.
பள்ளியின் முதல்வர் ஆ. ஜான்பிரிட்டோ தலைமை யேற்று தேசியக்கொடி, ஒலிம் பிக்கொடி, பள்ளி கொடி மூன்றையும் ஏற்றினார். கொடிஏற்றும் முன்பு கொடி களின் சிறப்பினையும், ஏற் றப்படுவதற்கான காரணத் தையும் எடுத்துக்கூறினார். பள்ளியின் துணை முதல்வர் பாக்யலெட்சுமி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுக்கும் நிகழ்ச் சியை தொடங்கி வைத்தார். காலை 9 மணி முதல் 2.30 மணி வரை 500-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்ட னர்.
வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பதக்கங்க ளும், சான்றிதழ்கழும் வழங் கப்பட்டன. பள்ளியின் மாநில மற்றும் தேசிய வீரர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட் டது. பின்பு மீண்டும் 3.30 மணி யளவில் விழா துவங்கியது.
விழாவிற்கு சிறப்பு விருந்தி னர்களாக அரியலூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண் காணிப்பாளர் கோவி.மனோ கரன், பெரியார் பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் பேரா. சுப்ரமணியன், அரியலூர் மாவட்ட நெட்பால் கழக செயலாளர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்ட னர். வரவேற்புரையை பள்ளி யின் முதல்வர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து 4 அணி வீரர்களின் அணிவகுப்பு நடை பெற்றது. பின்பு உடற்கல்வி இயக்குநரால் விளையாட்டு ஆண்டறிக்கை வாசிக்கப்பட் டது.
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கூட்டு உடற் பயிற்சி நடைபெற்றது. பின்பு மாணவிகளின் கோலாட்டம் மற்றும் மாணவர்களின் சிலம் பாட்டம், யோகா, பிரமிடு ஆகியவை பெற்றோர்களை யும் சிறப்பு விருந்தினர்களை யும், பார்வையாளர்களை யும் வெகுவாக கவர்ந்தன. சிறப்பு விருந்தினர் அவர் களின் தலைமை உரையில் பள்ளியின் கல்விச் சேவை யையும், பல்துறை வளர்ச்சி யையும் வெகுவாகப் பாராட்டினார்.
மாணவர்க ளுக்கு அரிய பல உண்மைச் சம்பவங்களை எடுத்துக்கூறி மாணவர்கள் பொதுமக்க ளுக்கும், காவல்துறைக்கும் பாலமாக விளங்க வேண்டும் என எடுத்துக் கூறினார். பிறகு விளையாட்டில் தனித்திறன் பெற்ற மாணவ - மாணவி களுக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
அணி வகுப்பில் முதல் இடத்தையும் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பையும் பெற்ற ஆரஞ்ச் நிறஅணியி னர்க்கு சுழற்கோப்பையும், சுழற்கேடயமும் சிறப்பு விருந்தினரால் வழங்கப்பட் டது. இந்நிகழ்வில் ஜெயங் கொண்டம் காவல்துறை ஆய்வாளரும், உதவி ஆய்வா ளரும் வருகை தந்து சிறப்பித் தனர்.
பள்ளியின் துணை முதல் வர் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவு பெற்றது. நிகழ்ச்சிகள் முழுவதையும் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் அறிவழகன் மற்றும் தாவர வியல் ஆசிரியை கவிதாவும் தொகுத்து வழங்கினர்.
கம்பம்,, மார்ச் 16- கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழக அளவில் 12ஆவது தடகள போட்டிகள், கம்பம் சிறீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல் லூரி விளையாட்டு மைதா னத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப் போட்டி பழனி யாண்டவர் கலைக் கல்லூரி, நிலக்கோட்டை அரசு கலைக் கல்லூரி, கொடைக் கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம், திண்டுக்கல் எம்.வி.எம். அரசு கலைக் கல்லூரி, தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கம்பம் சிறீஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி, திண்டுக்கல் செயின்ட் ஆன்டணி கல்லூரி, ஒட் டன்சத்திரம் சக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் செயலரும், சட்டப் பேரவை உறுப்பினருமான என். ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். போட்டிக்கு வந் திருந்த அனைத்து கல்லூரி மாணவிகளையும் கல்லூரி முதல்வர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கொ டைக்கானல் அன்னை தெரசா மகளிர் கல்லூரியின் வளர்ச்சிக் குழு தலைவர் வாசுகி கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்.
பல் கலைக் கழகத்தின் உடற் கல்வித் துறை இணை இயக்குநர் டாக்டர் ராஜம் நடுவர் பொறுப்பு வகித்தார். 100, 200, 400, 800 மற்றும் 1500 மீட்டர் ஓட்டம், தடை ஓட்டம், தொடரோட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல் போட்டிகள் நடைபெற்றன.
8 கல்லூரிகள் கலந்து கொண்ட போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கம்பம் சிறீஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி பெற்றது. தனிநபர் ஒட்ட மொத்த  வெற்றிக் கோப்பை யையும் இக்கல்லூரி மாணவி தேவி பெற்றார். பரிசு பெற்ற மாணவி களை கல்லூரியின் செயலர் என். ராமகிருஷ்ணன் எம்.எல். ஏ. கல்லூரி முதல்வர் சுதமதி ரவிச்சந்திரன் ஆகியோர் பாராட்டி, பரிசுகளை வழங் கினர்.

லீ நாவை வெளியேற்றினார் பெனட்டா; அரையிறுதியில் ஜோகோவிச்
இண்டியன்வெல்ஸ், மார்ச் 16-  அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் ஏடிபி மற்றும் டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டி நடை பெற்று வருகிறது. சனிக் கிழமை நடந்த மகளிர் ஒற் றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லீ நா, போட்டித் தரவரிசையில் 20ஆவது இடத்தில் உள்ள பெனட்டாவை சந்தித்தார். இதில், 7-6 (7/5), 6-3 என்ற செட் கணக்கில் பெனட்டா வெற்றி பெற்றார்.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இரண்டு மாத இடை வெளிக்குள் லீ நா தோல்வி யைத் தழுவியுள்ளார்.
ஆனால், இந்த தோல்வி தன்னை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என அவர் தெரிவித்தார். அதேபோல, ஆடவர் பிரிவிலும் ஆஸ்தி ரேலிய ஓபனில் வாகையர் பட்டம் வென்ற ஸ்விட்சர் லாந்தின் வாவ்ரிங்கா காலிறு தியில் தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத் தக்கது.
மகளிர் காலிறுதி மற் றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 2ஆவது இடத் தில் உள்ள போலந்தின் அக் னீஸ்கா ரத்வன்ஸ்கா, 6-3, 6-4 என்ற கணக்கில் ருமேனியா வின் ஹலேப்பை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி னார்.
ஆடவர் பிரிவு காலிறு தியில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஜோகோவிச் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜூலியன் பெ னட்டோவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் அமெ ரிக்காவின் ஜான் அய்ஸ்னர் வெற்றி பெற்றார்.

ஸ்விஸ் ஓபன் அரையிறுதியில் சிந்து; வெளியேறினார் சாய்னா
பேசல், மார்ச் 16- ஸ்விஸ் கிராண்ட்ப்ரி கோல்ட் பாட்மிண்டன் தொடரின் காலிறுதியில் சீனாவைச் சேர்ந்த முன்னணி வீராங் கனையை தோற்கடித்து அரை யிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை சிந்து. ஆனால், மற்றொரு  வீராங் கனையான சாய்னா நெவால் தோல்வியடைந்து வெளி யேறினார்.
ஸ்விட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் மகளிருக் கான காலிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடை பெற்றன. போட்டித் தர வரி சையில் 7ஆவது இடத்தில் உள்ள சிந்துவும், சமீபத்தில் ஆல் இங்கிலாந்து வாகையர் பட்ட போட்டியில் பட்டம் வென்ற சீனாவின் ஷிஜியான் வங்கும் மோதினர். அதே சமயத்தில் நேர்த்தியான ஆட் டத்தை வெளிப் படுத்திய சிந்து 45 நிமிடத்தில் 21-17, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மூன்றாவது முறை யாக சீன வீராங்கனையை சிந்து தோற்கடித்துள்ளார். மற் றொரு ஆட்டத்தில் இந்தியா வின் முன்னணி வீராங்கனை யான சாய்னா, தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள இஹான் வங்கை எதிர் கொண்டார்.
38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத் தில் 17-21, 2-21 என்ற செட் கணக்கில் வெற்றியைப் பறி கொடுத்தார் சாய்னா. ஆடவர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப், சீன தைபேயின் முன்னணி வீரரா ன டீன் சென்னை  தோற் கடித்தார். அரையிறுதியில் காஷ்யப், தரவரிசையில் 27ஆவது இடத்தில் உள்ள சீனாவின் ஹோவெய்டியா னை எதிர்கொள்கிறார்.
பாங்காக், மார்ச் 15- ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் வில்வித்தை வாகையர் பட்ட, காம்ப வுண்டு தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா இறுதி சுற்றுக்கு முன்னே றினார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், முதலாவது ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் வில்வித்தை வாகையர் பட்ட போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த காம்பவுண்டு தனிநபர் பிரிவு அரையிறுதி யில், இந்தியாவின் அபிஷேக் வர்மா, தாய்லாந்தின் டென் சாய் தெப்னாவை சந்தித்தார். அபாரமாக ஆடிய அபிஷேக் வெற்றி பெற்று இறுதி சுற் றுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதி யில், இந்தியாவின் சந்தீப் குமார், ஈரானின் எபாடி இஸ்மாயிலை சந்தித்தார். இதில் சந்தீப் குமார்  தோல்வி அடைந்தார். நாளை நடக்க வுள்ள இறுதிச் சுற்றில், இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஈரானின் எபாடி இஸ் மாயிலை எதிர்கொள்கிறார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், அரையிறுதி யில் தோல்வி கண்ட இந் தியாவின் சந்தீப் குமார், தாய்லாந்தின் டென்சாய் தெப்னா மோதுகின்றனர்.
பெண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவு அரையிறுதி யில், இந்தியாவின் பாம் பைலா தேவி, சீன தைபே யின் லின் சியாஎன் மோதினர். இதில் பாம்பைலா தேவி 4-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். நாளை நடக்க வுள்ள வெண்கலப் பதக்கத் துக்கான போட்டியில், இந் தியாவின் பாம்பைலா தேவி, ஜப்பானின் கயோரி கவா னகாவை சந்திக்கிறார்.

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ்: சானியா மிர்சா இணை இறுதிப்போட்டிக்கு தகுதி
இன்டியன்வெல்ஸ், மார்ச் 15- இன்டியன்வெல்ஸ் சர்வ தேச டென்னிஸ் போட்டி யில் சானியா மிர்சா இணை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
அமெரிக்காவின் கலி போர்னியா மாகாணத்தில் உள்ள இன்டியன்வெல்ஸ் நகரில் பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 8ஆம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 7-5, 6-1 என்ற நேர் செட்டில் கெவின் ஆண்டர்சனை (தென் ஆப் பிரிக்கா) வென்று அரை இறு திக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு காலிறுதியில், அலெக்சாண்டர் டோகோ போலாவ் (உக்ரைன்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் மிலோஸ் ராவ்னிக்கை (கனடா) சாய்த்து அரை இறுதிக்குள் அடி யெடுத்து வைத்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதியில் லீ நா (சீனா) 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெளியேற்றினார். இத்தாலி வீராங்கனை பிளாவியா பென்னட்டா 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் தன்னை எதிர்த்த ஸ்லோனே ஸ்டீபன்சை (அமெரிக்கா) வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த அரை இறுதி சுற்றில் சானியா மிர்சா (இந்தியா) காரா பிளாக் (ஜிம்பாப்வே) இணை 6-4, 3-6, 10-7 என்ற செட் கணக்கில் லூசி ஹிராடெக்கா (செக் குடியரசு) ஜெங் ஜி (சீனா) இணையை சாய்த்து இறுதிப் போட்டியை எட்டியது.

ஸ்விஸ் ஓபன்: காலிறுதியில் சாய்னா, காஷ்யப்
ஸ்விஸ் ஓபன் கிராண்ட் ப்ரீ பாட்மிண்டன் போட்டி யின் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை சாய்னா நெவால் மற்றும் காஷ்யப் முன்னேறினர்.
ஸ்விட்சர்லாந்தின் பேசல் நகரில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற இப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 8ஆவது இடத் தில் உள்ள சாய்னா, ஃபிரான் ஸின் சஷினா விஜ்னெஸ் வாரனை எதிர்கொண்டார். சாய்னா 21-7, 21-13 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். ரூ.76 லட்சம் ரூபாய் மதிப்பிலான இப்போட் டியின் காலிறுதியில் சீனா வின் யிஹான் வங்கை சந் திக்கிறார் சாய்னா.
தரவரிசை யில் 3ஆவது இடத்தில் உள்ள யிஹானுக்கு எதிராக 6 ஆட்டங்களில் சாய்னா தோல்வியடைந்துள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் யிஹான் காயம் காரணமாக வெளியேறியதாலேயே சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான காலிறு திக்கு முந்தைய சுற்றில் இந் திய வீரர் காஷ்யப், 57 நிமிட போராட்டத்துக்குப் பின் 21-13, 21-9, 21-14 என்ற செட் கணக்கில் மலேசியாவின் பெரினோ ஜியான் சேயை வீழ்த்தினார். காலிறுதியில் சீனா தைபேயின் டின் சென் சவுவை எதிர்கொள்கிறார்


Read more: http://www.viduthalai.in/home/sports.html#ixzz2wS5W9iAY

கருத்துகள் இல்லை: