விளையாட்டு செய்திகள்
பேசல், மார்ச் 13- ஸ்விஸ் கிராண்ட் ப்ரீ கோல்டு பாட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியா வீராங் கனை சிந்து வெற்றி பெற்றார். ஆடவர் பிரிவில் காஷ்யப் மற் றும் ஆனந்த் பவார் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
ஸ்விட்சர்லாந்தின் பேசல் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு இப்போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் நடை பெற்றன.
மகளிருக்கான முதல் சுற்றில் தரவரிசையில் 9ஆவது இடத்தில் உள்ள சிந்துவும், மலேசியாவின் சனட்டஸா சனிருவும் மோதி னர். 32 நிமிட போராட்டத் துக்குப் பின் 21 - 18, 21 - 15 என்ற நேர் செட்டில் அய்தாரா பாதைச் சேர்ந்த சிந்து வெற்றி பெற்றார்.
ஆடவருக்கான ஒற்றை யர் பிரிவின் முதல் சுற்றில் காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற காஷ் யப் 21 - 17, 21 - 15 என்ற செட் கணக்கில் நெதர்லாந் தின் எரிக் மெய்ஜிஸை தோற் கடித்தார். மலேசியாவின் கோக்பாங் லோக்குக்கு எதி ரான ஆட்டத்தில் 21-17, 21-10 என்ற செட் கணக்கில் இந்தி யாவின் ஆனந்த் பவார் வெற்றி பெற்றார்.
ஆனால் ஆடவர் பிரிவில் சிறீகாந்தும், மகளிர் பிரிவில் சைலி ரானேயும் முதல் சுற்றில் வெற்றியைப் பறி கொடுத்து வெளியேறினர்.
கேண்டிடேட்ஸ் செஸ்: முதல் சுற்றில் ஆனந்த்- ஆரோனியன் மோதல் கான்ட்டி
மாஸிஸ்க், மார்ச் 13- கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் முதல் சுற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வ நாதன் ஆனந்த், தரவரிசை யில் அதிக புள்ளிகளுடன் முன்னணியில் உள்ள லே வன் ஆரோனியனை சந்திக் கிறார்.
ரஷியாவின் கான்ட்டி மாஸிஸ்க் நகரில் வியாழக் கிழமை இப்போட்டியின் முதல் சுற்று நடைபெற்றது.
வரும் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் கார்ல்ஸனை எதிர்த்து ஆடுபவரைத் தேர்வு செய்வதற்கான இப் போட்டியில் முன்னணி வீரர்கள் எட்டு பேர் பங் கேற்கின்றனர்.
கடந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் நார்வே யின் கார்ல்ஸனிடம் வெற்றி யைப் பறிகொடுத்த இந்தியா வின் ஆனந்த் தன் முதல் சுற்றில் ஆர்மேனியாவின் ஆரோனியனை எதிர் கொள் கிறார்.
கிளாசிக்கல் முறையில் நடைபெறும் இப்போட்டி யில் சாதித்தால் மட்டுமே ஆனந்த் உலக செஸ் சாம்பி யன்ஷிப் போட்டியில் பங் கேற்க முடியும். சென்னையில் நடை பெற்ற உலக செஸ் போட் டிக்குப் பின் ஜுரிச் செஸ் மற்றும் லண்டன் கிளாசிக் செஸ் போட்டிகளில் ஆனந்த் பெரிதாக சாதிக்க வில்லை என்பதால் இம்முறை எழுச்சி பெற வேண்டிய கட்டாயத் தில் உள்ளார்.
முதல் சுற்றின் மற்ற ஆட்டங்களில் ரஷ்யாவின் டிமிட்ரி ஆண்ட்ரிகீனும், விளாடிமிர் கிராம்னிக்கும் மோதவுள்ளனர். ரஷ்யாவின் செர்ஜே கர்ஜகின் தன் முதல் ஆட்டத் தில் சக நாட்டு வீரர் பீட்டர் ஸ்விட்லரை சந்திக்கிறார்.
இண்டியன் வெல்ஸ் காலிறுதியில் லீ நா- சிபுல்கோவா மோதல்
இண்டியன் வெல்ஸ், மார்ச் 13- இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டி யின் காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் லீ நா மற்றும் ஸ்லோ வேகியாவின் சிபுல்கோவா மோதவுள் ளனர்.
அமெரிக்காவின் இண்டி யன் வெல்ஸ் நகரில் நடை பெற்று வரும் டபிள்யூடிஏ பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றை யர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டம் புதன்கிழமை நடை பெற்றது.
இதில் சீனாவின் லீ நாவும், கனடாவின் அலெக் ஸாண்ட்ரா வோஸ்னியாக் கும் மோதினர். அரை மணி நேர ஆட்டத்தில் 6-1, 6-4 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்றார் போட்டித் தரவரி சையில் முதலிடத்தில் உள்ள லீ நா.
மற்றொரு ஆட்டத்தில் சிபுல்கோவா, செக் குடியர சின் பெட்ரோ குவிட்டோ வாவை 6-3, 6-2 என்ற செட்டில் வீழ்த்தியிருந்தார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றின் மற்ற ஆட்டங்களில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபனஸ், செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச், போலந்தின் அக்னீஸ்கா ரத் வன்ஸ்கா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஆடவர் பிரிவின் 3ஆவது சுற்றில் செர்பியாவின் ஜோ கோவிச், அமெரிக்காவின் ஜான் அய்ஸ்னர், ஸ்பெயினின் ராபர்டோ அகட், ஃபெலி சியானோ லோபஸ் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற் றுக்கு முன்னேறினர்.