Posted 10 May 2010 - 10:02 PM
1. உதைபந்தாட்ட மைதானம்.மைதானம் சதுரமாக இருப்பது முக்கியம். அதன் எல்லைகள் கோடுகளால் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.மைதானத்தின் நீளம் 90மீ(100யார்) முதல் 120 மீ (130 யார்)வரையும்மைதானத்தின் அகலம்45 மீ(50 யார்) முதல் 90 மீ (100 யார்) வரையும் இருக்க வேண்டும்.நாடுகளுக்கிடையில் நடைபெறும் விளையாட்டுக்களில்நீளம் 100மீ(110 யார்) முதல் 110மீ (120யார்) வரையும்அகலம் 64மீ(70யார்) முதல் 75 மீ(80 யார்) வரையும் இருக்கும்.இரு அகலக் கோடுகளை கோல் கோடுகள் என்றும் (கோல் கம்பங்களுடன் சேர்ந்து செல்வதால்)மற்றவையை பக்கக்கோடுகள் என்றும் அழைக்கலாம். பக்கக் கோடுகள் எப்போதும் அகலக் கோடுகளை விட நீளமாக இருக்க வேண்டும்.மைதானத்தின் உள்ளே சில இடங்கள் குறிப்பிட்ட பிரதேசமாக வரையறுக்கப்பட வேண்டும்மைதானம் மத்திய எல்லைக் கோட்டினால் இரு பிரதேசங்களாகவும் மற்றும்5 மீ பிரதேசம் (கோல் பிரதேசம்)16 மி பிரதேசம் (பனால்டி பிரதேசம்) எனவும் அடையாளப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.எல்லைக் கோடுகளின் அகலம் சரியாக 12 செ.மீ ஆக இருக்க வேண்டும்.கோல் கம்பங்கள் கோல் கோடுகளின் மத்தியில் நாட்டப் பட்டிருக்க வேண்டும்.அதன் உயரம் 2,44 மீஆகவும்இரு கம்பங்களுக்கும் இடையிலான அகலம் 7,32 மீ ஆகவும் இருத்தல் கட்டாயம் அவசியம்.கோல் கம்பங்களின் அகலமும் 12 செ. மீ ஆக இருக்க வேண்டும்.கம்பங்களில் வலை பொருத்தியிருக்க வேண்டும்.இல்லா விட்டால் பந்து கம்பங்களுக்கிடையால் சென்றதா இல்லையா என்று அறிவது கடினம்.2.பந்து.நிறை 410 - 450 கிரம்சுற்றளவு 68 - 70 செ.மீஅமுக்கம் 0,6 - 1,1 ஆக இருக்க வேண்டும்.16 வயதிற்குட்பட்டவர்களுக்குநிறை 350 - 390 கிரம்சுற்றளவு 63,5 - 68 செ.மீ(அளவு 4)விளையாட்டு நடை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பந்து சேதமடைந்தால் அதே இடத்தில் வைத்து மாற்றுப் பந்து மத்தியஸ்த்தரால் ஆட்டத்திற்கு விடப்படும்.விளையாட்டின் ஆரம்பம், கைகளால் எறிதல்,மூலை உதை,பனால்டி,வெளி உதை போன்ற நேரங்களில் அந்த நிகழ்வுகள் நடைபெற முன் பந்து சேதமடைந்தால் மீண்டும் அதே நிலையில் இருந்து விளையாட்டுத் தொடரும். உதாரணமாக பனால்டி உதையின் போது கோல் கம்பங்களைத் தாண்டிய பின் பந்து சேதமடைந்தால் அது கோல் ஆக அங்கீகரிக்கப்படும்.பனால்டி உதையின் போது பந்தை உதைத்த பின்னர் ஆனால் காப்பாளரைத் தாண்டி கோல் கம்பங்களுக்கிடயால் செல்லு முன் சேதமடைந்தால் மத்தியஸ்த்தரால் மாற்றுப் பந்து ஆட்டத்திற்கு விடப்படும். இன் நிகழ்வு 5 மீ பிரதேசத்தில் இடம்பெற்றால் மத்தியஸ்த்தரால் 5 மீ எல்லைக் கோட்டில் வைத்து ஆட்டத்திற்கு விடப்படும்.அவ்வாறு அவர் தேர்ந்தெடுக்கும் இடம் பந்து சேதமாகிய இடத்திற்கு மிக அண்மையாக இருக்க வேண்டும். 16 மீ ப்ரதேசத்தின் வேறு பகுதிகளில் பந்து சேதமடைந்தால் அதே இடத்தில் வைத்து மத்தியஸ்த்தரால்
வழங்கப்படும்
3. விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கைஉதைபந்தாட்டம் இரு குழுக்களிற்கிடையில் நடைபெறும்.ஒவ்வொரு குழுவிலும் அதிக பட்சம் 11 வீரர்கள் பங்கு பற்றுவர்.அந்தப் பதினொரு வீரர்களில் ஒருவர் கட்டாயம் கோல் காப்பாளராக இருக்க வேண்டும்.விளையாட்டு ஆரம்பிக்கும் போது குறைந்த பட்சம் 6 களவீரர்களும் ஒரு கோல் காப்பாளரும் ஒவ்வொரு அணியிலும் இருக்க வேண்டும்.மொத்தமாக ஒவ்வொரு அணியிலும் கோல்காப்பாளருடன் சேர்த்து 7 வீரர்கள் இல்லாவிட்டால் விளையாட்டு ஆரம்பிக்கப்படக் கூடாது.நட்பு விளையாட்டுக்களில் ஒழுங்கமைப்பாளர்கள் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவர்.மாற்று விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக 3 ஆக இருக்க வேண்டும்(16 வயதிற்குட்பட்டவர்களைத் தவிர)வேறு விளையாட்டுக்களில் அமைப்பாளர்களோ அல்லது இரு குழுவினருமோ தீர்மானித்து மத்தியஸ்த்தருக்கு கட்டாயம் அறிவிக்க வேண்டும்.சகல விளையாட்டு வீரர்களின் பெயர்களும் விளையாட்டு ஆரம்பிக்க முன்னர் மத்தியஸ்த்தரிடம் படிவத்தில் எழுதப்பட்டு கையளிக்கப்பட்டிருக்க வேண்டும்.அதில் பெயர் குறிப்பிடப்படாதவர்கள் விளையாட்டில் பங்கேற்க முடியாது.வீரர்களின் மாற்றம்.விளையாட்டு வீரர்களை மாற்றும் போது மைதானத்தின் உள்ளே புதிதாகச் செல்பவர் வெளியேறுபவர் மைதானத்தை விட்டு வெளியே வரும் வரை காத்திருக்க வேண்டும்.மைதானத்தின் நடுக்கோட்டிற்கு அண்மையாக உள்ளே செல்ல வேண்டும்.வெளியேறுபவர் கட்டாயம் நடுக்கோட்டிற்கு அண்மையாக வெளியேற வேண்டியதில்லை.முக்கியமாக மத்தியஸ்த்தரின் அனுமதி பெற வேண்டும்.அந்த நேரத்தில் இருந்து வெளியேறியவர் மாற்றப்பட்ட வீரராகின்றார்.மாற்றப்பட்டவர் விளையாட்டில் மீண்டும் பங்கு கொள்ள முடியாது.மத்தியஸ்த்தர் ஏதாவது தகுந்த காரணங்களுக்காக மாற்றப்படும் வீரருக்கு அனுமதியை மறுக்கலாம்.மாற்றப்பட்டு உள்ளே வரும் வீரர் மத்தியஸ்த்தரின் அனுமதியைப் பெறவில்லையென்றால் அவரை எச்சரித்து மஞசள் அட்டை காட்டப்படும்.களத்தில் இருக்கும் வீரர்களில் எவரும் தன் அணியில் உள்ள கோல் காப்பாளருடன் தன்னை மாற்றம் செய்து கொள்ளலாம்.இது ஒரு விளையாட்டின் இடை நிறுத்தத்தின் போது, முக்கியமாக மத்தியஸ்த்தரின் அனுமதியுடன், நடைபெற வேண்டும்.இல்லாவிட்டால் இருவருக்கும் எச்சரிக்கையாக மஞ்சள் அட்டை வழங்கப்படும்.வேறு நபர்கள் மைதானத்தில் உட்புகுந்தால்..
-----வீரர்களின் மாற்றம்.விளையாட்டு வீரர்களை மாற்றும் போது மைதானத்தின் உள்ளே புதிதாகச் செல்பவர் வெளியேறுபவர் மைதானத்தை விட்டு வெளியே வரும் வரை காத்திருக்க வேண்டும்.மைதானத்தின் நடுக்கோட்டிற்கு அண்மையாக உள்ளே செல்ல வேண்டும்.வெளியேறுபவர் கட்டாயம் நடுக்கோட்டிற்கு அண்மையாக வெளியேற வேண்டியதில்லை.அந்த நேரத்தில் இருந்து வெளியேறியவர் மாற்றப்பட்ட வீரராகின்றார்.மாற்றப்பட்டவர் விளையாட்டில் மீண்டும் பங்கு கொள்ள முடியாது.மத்தியஸ்த்தர் ஏதாவது தகுந்த காரணங்களுக்காக மாற்றப்படும் வீரருக்கு அனுமதியை மறுக்கலாம்.-------வேறு நபர்கள் மைதானத்தில்உட்புகுந்தால்..இடையூறு செய்தலோ அல்லது விளையாட்டில் ஈடுபட்டாலோ மத்தியஸ்த்தரால் விளையாட்டு உடனடியாக இடை நிறுத்தப்படும்.மேலதிகமாக உட்புகுந்தவர் எதுவித செயற்பாட்டிலும் ஈடுபடாமல் மைதானத்தின் ஒரு பகுதியில் நின்றால் விளையாட்டை உடனடியாக இடை நிறுத்துதல் அவசியம் இல்லை.அடுத்த சாதாரண இடை நிறுத்தத்தின் போது அவர் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்.அ)உட்புந்தவர் ஒரு மாற்று அல்லது மாற்றப்பட்ட விளையாட்டு வீரரானால்எச்சரிக்கையாக மஞ்சள் அட்டையும்எதிரணிக்கு நேரடியற்ற உதையும் வழங்கப்படும்இவர் அனுமதியின்றி உட்புகுந்ததைத் தவிர மேலதிகமாக இன்னும் ஒரு தண்டனைக்குரிய செயலில் ஈடுபட்டால் விளையாட்டு உடனடியாக இடை நிறுத்தப்பட்டு 1.எதிரணி வீரரை அடித்தால் சிவப்பு அட்டை காட்டப்படல் அவசியம்.2.பந்துடன் செல்லும் எதிரணி வீரரை அவரின் ஆடையில் பிடித்து மறித்தால் இரண்டு முறை எச்சரிக்கையாக மஞ்சள் உடன் சிவப்பு அட்டை காட்டப்பட்டும்.சிவப்பு / மஞ்சள்-மஞ்சள்-சிவப்பு அட்டை காட்டப்பட்டவர் மைதானத்தை விட்டும் அதன் அண்மையை விட்டும் அகற்றப்படுவார்.ஆ)உட்புகுந்தவர் மூன்றாவது நபரானால்(உதாரணம்: மத்தியஸ்த்தரால் அட்டை காட்டி வெளியேற்றப்பட்டவர்,பார்வையாளர்கள்,வளர்ப்புப் பிராணிகள் ) உடனடியாகவோ அல்லது அடுத்த இடை நிறுத்ததின் போதோ அவர்கள்(அது) வெளியேற்றப்பட வேண்டும்.உடனடியாக இடை நிறுத்தினால் மத்தியஸ்த்தர் பந்துடன் விளையாட்டுத் தொடரும்.இ) உட்புகுந்தவர் விளையாட்டுக்குழுவின் பயிற்சியாளர் அணியில் இருப்பவரானால்மேலே (ஆ)உள்ளது போல் வெளியேற்றப்படுவார்.வாய் மூல எச்சரிக்கையும் கொடுக்கப்படும்.வெளியேற மறுத்தால் ஒழுங்கமைப்பாளர்களைக் கொண்டு மைதானத்தைவிட்டு மட்டுமல்லாமல் அதன் அண்மையையும் விட்டு அகற்றப்படுவார்.அத்துடன் பயிற்சியாளர் அணியில் இருக்கும் தகுதியையும் இழக்கின்றார்.மத்தியஸ்த்தரால் உடனடியாக விளையாட்டு இடை நிறுத்தப்பட்டால் மத்தியஸ்த்தர் பந்துடன் விளையாட்டுத் தொடரும்.விளையாட்டு வீரர்களைத் தவிர வேறு யாருக்கும் சிவப்பு அல்லது மஞ்சள் அட்டை காட்டப்படக்கூடாது.மேலதிகமாக உட்புகுந்தவர் ஒரு கோலை மறித்தால்....தொடரும்...
- 09:27 PM
உடைபந்தாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மேலதிகமாக ஒருவர் மைதானத்தில் உட்புகுந்து கிடைக்க வேண்டிய ஒரு கோலைத் தடுத்தால் ....-உட்புகுந்தவர் மாற்று அல்லது மாற்றப்பட்ட விளையாட்டு வீரர்கால்களினால் உதைத்தால் மஞ்சள் அட்டை மட்டுமேகைகளினால் தடுத்தால் -- மஞ்சள்/மஞ்சள் - சிவப்பு அட்டைநேரடியற்ற உதையுடன் பந்து தடுக்கப் பட்ட இடத்திலிருந்து விளையாட்டுத் தொடரும்.-மத்தியஸ்த்தரின் அனுமதியுடன்(காயங்களுக்காக) மைதானத்தை விட்டு வெளியறிய விளையாட்டு வீரர் மீண்டும் அனுமதி பெறாமல் உட்புகுந்து 16 மீ பிரதேசத்தின் உள்ளே கைகளினால் ஒரு கோலைத் தடுத்தால் அவருக்கு சிவப்பு அட்டையும் எதிரணிக்கு தண்டனை உதையும் வழங்கப்படும்.-வேறு எவரும் மைதானத்தில் உட்புகுந்து கிடைக்கவிருந்த கோலைத் தடுத்தால் அவர் மைதானத்தை விட்டு அகற்றப்பட்டு மத்தியஸ்த்தர் பந்துடன் எந்த இடத்தில் தடுக்கப்பட்டதொ அந்த இடத்திலிருந்து(5 மீ பிரதேசத்தைத் தவிர்த்து) விளையாட்டுத் தொடரும்.ஒரு கோல் கிடைக்கும் போது மேலதிகமாக ஒரு நபர் மைதானத்தில் நின்றால்.......-அவர் மூன்றாவது நபராக இருந்து, விளையாட்டில் பங்கேற்றால்,இடைஞ்சல் செய்தால் அல்லது-அவர் கோல் அடித்தவரின் குழுவைச் சேர்ந்த வீரராக,மாற்று வீரராக,மாற்றப்பட்ட வீரராக அல்லது பயிற்சியாளராக இருந்தால் அடிக்கப்பட்ட கோல் அங்கீகரிக்கப்பட மாட்டாது. -அவர் மூன்றாவது நபராக இருந்து, விளையாட்டில் பங்கேற்காவிட்டால்,இடைஞ்சல் செய்யாவிட்டால்அல்லது-அவர் கோல் அடித்தவரின் எதிர் அணியைச் சேர்ந்த வீரராக,மாற்று வீரராக, மாற்றப்பட்ட வீரராக அல்லது பயிற்சியாளராக இருந்தால்அடிக்கப்பட்ட கோல் அங்கீகரிக்கப்படும்தொடரும்வாத்தியார்..................
0
4) உதைபந்தாட்ட வீரர்களின் ஆடை அணிகலன்கள்விளையாட்டில் ஈடுபடும் போது:-மேல்சட்டை-கால்சட்டை-காலணி-கீழ்காலின் பாதுகாப்புக் கவசம்ஆகியவற்றை அணிந்திருத்தல் கட்டாயம்.விளையாட்டு வீரர்களுக்கு ஆபத்தை அல்லது காயத்தை ஏற்படுத்தும் வேறு எந்தப் பொருட்களையும் அணிந்திருக்கக் கூடாது.( உதாரணம்: தோடு,கைவளையம்,மோதிரம்)* இரு அணியினரது களவீரர்கள் தங்கள் ஆடைகளை வேறுவேறு நிறங்களில் கோண்டிருக்க வேண்டும்* நீளமான உள்ளங்கிகள் விளையாட்டு ஆடையின் நிறத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்.* இருதரப்புக் கோல்க் காப்பாளர்களும் நீளமான கீழங்கியை அணிந்திருக்கலாம்.* கோல்க் காப்பாளர்களின் ஆடையின் நிறம் அவரின் அணியினது ஆடை நிறத்தை விட வித்தியாசமாக இருக்க வேண்டும்.* இரு கோல்க் காப்பாளர்களும் ஒரே நிறத்தில் ஆடைகளைக் கொண்டிருக்கலாம்.மத்தியஸ்த்தர் விளையாட்டின் ஆரம்பத்தின் முன்னர் இவற்றைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டு சரி செய்யப்பட வேண்டும்.விளையாட்டின்போது வீரர்களின் ஆடை அணிகளில் குறைபாடுகள் காணப்பட்டால் அடுத்த இடை நிறுத்ததின் போது அந்த வீரர் அவற்றைச் சரி செய்வதற்காக மைதானத்தை விட்டு வெளியெற்றப்படுவார்.குறைகளைச் சரி செய்த பின்னர் மத்திய
5) மத்தியஸ்த்தர்உதைபந்தாட்ட விளையாட்டுச் சம்மேளத்தினால் உருவாக்கப்பட்ட சட்டங்களையும் ஒழுங்குகளையும் கருத்திற் கொண்டும் அதனை முன்னிறுத்தியும் நடைபெறும் விளையாட்டில் யாருக்கும் பங்கம் ஏற்படாமல் அந்த விளையாட்டில் பக்கச் சார்பில்லாமலும் மத்தியஸ்த்தர் நடந்து கொள்ள வேண்டும்.- சட்டத்தையும், ஒழுங்குமுறையையும் நடைமுறைப்படுத்துதல்- பந்து மற்றும் வீரர்களின் ஆடை அணிகலன்களைச் சரி பார்த்தல்- நேரத்தைக் கண்காணித்தல்- விளையாட்டை ஏதாவ்து தகுந்த காரணங்களுக்காக இடை நிறுத்தல்(உதாரணம்: விதிமுறை மீறல்,விளையாட்டு வீரருக்கு ஏற்படும் காயம்,குருதி வழிதல்,மற்றும் வெளி நபர்கள் உட்புகுதல், அடிமழை,பனி,காற்று)- மீண்டும் தொடரல்- விதிமுறைகளை மீறுபவர்களுக்குத் தண்டனை வழங்குதல்-விளையாட்டுக் குழுக்களுக்கு விதிமுறைகளுக்கு அமையக் கிடைக்கும் கோல்களை அங்கீகரித்தல்- விதிமுறைகளை மீறி அடிக்கப்படும் கோல்களை அங்கீகரிக்காமல் விடுதல்போன்றவை மத்தியஸ்த்தரின் உரிமையும் கடமையும் ஆகும்முடிவு எப்படி இருந்தாலும் மத்தியஸ்த்தரின் முடிவே இறுதி முடிவாகும்.தனது முடிவு தவறு என்று மத்தியஸ்த்தர் உணர்ந்தால், மீண்டும் விளையாட்டுத் தொடர்வதற்கு முன்னர் அந்த முடிவை அவர் மீழப்பெறலாம்.-விளையாட்டுத் தொடரப்பட்டாலோ அல்லது விளையாட்டு முடிவடைந்தாலோ எந்த முடிவையும் மத்தியஸ்த்தர் மாற்றக் கூடாது.ஆனால் தனது தவறான முடிவை மேலதிகாரிகளுக்கோ ஒழுங்கமைப்பாளர்களுக்கொ எழுத்து மூலம் தெரிவிக்கலாம்.தொடரும்..வாத்தியார்
0
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக