7.உதைபந்தாட்டத்தின் கால எல்லைவிளையாட்டின் ஆரம்பத்தில் மத்தியஸ்த்தருடன் இரு குழுக்களும் வேறு விதமாக உடன்பாடு செய்து கொள்ளாத வரையில் ஒரு விளையாட்டு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் 45 நிமிடங்கள் கால எல்லையாக இருக்கும்.இரண்டு அரைப் பகுதிகளுக்கும் இடையில் 15 நிமிடங்கள் இடைவேளை இருத்தல் வேண்டும்.வெளிச்சக் குறைவு,பனி அல்லது வேறு தகுந்த காரணங்களுக்காக விளையாட்டின் கால எல்லையும் இடைவேளையின் கால எல்லையும் குறைக்கப்படலாம்.-விளையாட்டு வீரர்களின் மாற்றங்கள்-விளையாட்டு வீரருக்கு ஏற்படும் காயங்கள்-மற்றும் அவரை வெளியே காவிச் செல்லுதல்-திட்டமிட்ட கால வீணடிப்பு-மற்றும் தகுந்த காரணங்களுக்காக விளையாட்டின் கால எல்லை மத்தியஸ்த்தரால் நீடிக்கப்படலாம்.விளையாட்டின் இறுதிக் கணத்தில் கொடுக்கப்படும் தண்டனை உதை அந்த விளையாட்டுப் பகுதியிலேயே உதைக்கப்படும்.தண்டனை உதை சரியான முறையில் முன்னோக்கி உதைக்கப்பட்ட பின்னர் கோல் சென்றாலொ அல்லது கோல்க் காப்பாளர் தடுத்து நிறுத்தினாலோ அத்துடன் கால எல்லை முடிவடைகின்றது. கட்டாயமாக ஒரு குழு வெற்றி அடைய வேண்டிய விளையாட்டுக்களில் 90 நிமிடங்களில் ஒரு குழு வெற்றி அடையாவிட்டால் மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்படும்.மேலதிகமான 30 நிமிடங்களும் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு விளையாடப்படும்.மேலதிகமான காலத்தில் இடைவேளை இருக்காது.மேலதிகமான விளையாட்டு நேரத்திலும் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படாவிட்டால் தொடர்ந்து பனால்ட்டி உதையின் மூலம் வெற்றியாளர்கள் தீர்மனிக்கப்படுவர்.பனால்ட்டி உதை வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும் வரை தொடர்ந்து செல்லும்.16 வயதிற்குட்பட்டோரின் விளையாட்டின் கால எல்லையும் இடைவேளையின் கால எல்லையும் வயதிற்கேற்ப வித்தியாசப்படும்.8. விளையாட்டின் ஆரம்பம்உதைபந்தாட்டம் ஆரம்பிக்க முன்னர் மத்தியஸ்த்தரால் நாணயம் எறியப்பட்டு எந்தக் குழு மைதானத்தின் எந்தப் பக்கத்திலிருந்து விளையாடுவது என்று தீர்மானிக்கப்படும்.நாணயம் எறிதலில் வெற்றி பெற்ற குழு விளயாட்டை ஆரம்பிக்க முடியாது.விளையாட்டு ஆரம்ப உதையுடன் தொடங்கும்.ஆரம்ப உதையின் போது பந்து அசையாமல் மத்திய புள்ளியில் இருக்கும் போது முன்னோக்கி உதைக்கப்படும்.முதலில் உதைத்தவர் தொடர்ச்சியாக இருமுறை பந்தை உதைக்கக்கூடாது.ஆரம்ப உதையின் போது நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற்றுக்கொள்ளலாம்.-விளையாட்டின் ஆரம்பத்திலும்-ஏதாவது ஒரு அணி கோல்களை உதைத்தாலும்-இரண்டாவது விளையாட்டுப் பகுதி ஆரம்பிக்கும் போதும்-மேலதிகமான காலத்தின் ஆரம்பத்தின் போதும், பக்கம் மாறும் போதும்ஆரம்ப உதை வழங்கப்படும்.ஆரம்ப உதையின் போது உதைத்தவர் தொடர்ச்சியாக இருமுறை பந்தை உதைத்தால் எதிரணியினருக்கு நேரடியற்ற இலவச உதை வழங்கப்படும்.வேறு எந்த விதமான விதிமுறை மீறல்கள் நடைபெற்றாலும் ஆரம்ப உதை மீண்டும் நடைபெறும்.(பந்தைப் பின்னோக்கி உதைத்தல்,மத்தியஸ்த்தரின் சைகைக்குக் காத்திராமல் ஆரம்பித்தல்,ஒரு வீரர் எதிரணியின் எல்லைக்குள் நிற்றல் போன்றவை.)மத்தியஸ்த்தர் பந்து.விளையாட்டு வீரர்கள் விதிமுறைகளை மீறாமல் எதாவது தகுந்த காரணங்களுக்காக மத்தியஸ்த்தர் விளையாட்டை இடை நிறுத்தினால் மத்தியஸ்த்தர் பந்துடன் விளையாட்டு மீண்டும் தொடரப்படும்.மத்தியஸ்த்தர் இரு அணிகளையும் சேர்ந்த வீரர்களுக்கும் அருகாமையில் வைத்துப் பந்தை தன் கைகளினால் இடுப்பளவு உயரத்திலிருந்து மைதானத்தை நோக்கிப் போடுவார்.பந்து நிலத்தை முட்டும் வரை யாரும் உதைக்கக் கூடாது. அப்படி உதைத்தால் மீண்டும் மத்தியஸ்த்தர் பந்து வழங்கப்படும்.மத்தியஸ்த்தர் பந்து மைதானத்தில் விழுந்து எந்த வீரர்களாலும் உதைக்கப்படாமல் மைதானத்தை விட்டு வெளியே சென்றாலும் மீண்டும் மத்தியஸ்த்தர் பந்து வழங்கப்படும்.9. பந்து விளையாட்டில் இருப்பதும் இல்லாமல் விடுவதும்மத்தியஸ்த்தரால் எந்த ஒரு காரணத்தினாலும் விளையாட்டு இடை நிறுத்தப்படும் வரை பந்து விளையாட்டில் இருக்கின்றது.பந்து கோல்க் கம்பத்திலோ மூலைக் கம்பத்திலோ பட்டு மைதானத்திற்குள் திரும்பி வரும் போதும்மத்தியஸ்த்தரில் (பக்கக் கோடுகளில் நிற்கும் போது) அல்லது உதவி மத்தியஸ்த்தர்களில் பட்டுத் திரும்பி வரும் போதும் தொடர்ந்து விளையாடப்பட வேண்டும்.மத்தியஸ்த்தரால் ஏதாவது காரணத்திற்காக விளையாட்டு இடை நிறுத்தப் பட்டால் மைதானத்தின் வெளி எல்லைக் கோடுகளை பந்தின் முழு உருவமும் தாண்டினால்பந்து விளையாட்டில் இல்லை என்று கருத வேண்டும்
10. ஒரு கோல் எப்போது அங்கீகரிக்கப் படுகின்றது.ஒரு விளையாட்டு வீரர் பந்து விளையட்டில் இருக்கும் போது ஒரு கோலை உதைத்தால்அந்தப் பந்து தனது முழு உருவத்தாலும் கோல்க் கோடுகளை இரு கோல்க் கம்பங்களுக்கும் இடையாகத் தாண்டியிருக்க வேண்டும்.அவர் உதைக்கு முன் மைதானத்தில் அவரோ அல்லது அவருடைய குழுவைச் சேர்ந்தவர்கள் எவரும் விதிமுறைகளை மீறியிருக்கக் கூடாது.பந்து முழு உருவத்தாலும் கோல்க்கம்பங்களுக்கிடையால் கோல்க்கோட்டினைத் தாண்டியதா இல்லையா என்று மத்தியஸ்த்தரால் முழுமையாக அறிய முடியாவிட்டால் உதவி மத்தியஸ்த்தர்களின் உதவிய நாட வேண்டும்.மத்தியஸ்த்தர் தனி ஒருவராக இருந்தால் மேலே கூறிய குழப்ப நிலையில் தொடர்ந்து விளையாடுவதற்கான சைகையை விளையாட்டு வீரர்களுக்குத் தெளிவாகக் காட்ட வேண்டும்.ஒரு கோலை அங்கீகரிப்பதற்காக மத்தியஸ்த்தர் எப்போதும் தனது கருவியால் சைகை செய்ய வேண்டியதில்லை.குழப்பமான நிலையிலும் மத்தியஸ்த்தரால் அது கோல் என்று அறியப்பட்டால் அவ்ர் தனது விசிலால் சத்தமிட்டுத் தெளிவாக அந்தக் கோலை அங்கீகரிக்க வேண்டும்.கோல் உதைக்கும் போது மைதானத்தில் மேலதிகமாக ஒருவர் இருந்தால்....என்பதற்கு மேலே 3.விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையில் பதில் இருக்கின்றது.
ஒருவர் ஒதுங்கி நிற்பதற்காக மத்தியஸ்த்தர் விளையாட்டை இடை நிறுத்தினால் எதிரணிக்கு நேரடியற்ற இலவச உதை கொடுக்கப்படும்.ஒதுங்கி நிற்பதற்காக எச்சரித்து மஞ்சள் அட்டை காட்டக் கூடாது.
12.தடை செய்யப்பட்ட விளையாட்டும் முறை தவறிய விளையாட்டும்உதைபந்தாட்டத்தில் விளையாட்டு வீரர்களால் விடப்படும் தவறுகளும் முறையற்ற விளையாட்டுக்களும் மத்தியஸ்த்தரால் தண்டிக்கப்படுகின்றன.நேரடி இலவச உதை.உதைபந்து விளையாட்டில் இருக்கும் போது ஒரு வீரர் விளையாட்டுமைதானத்தில் வைத்து.....எதிரணி வீரரை1.உதைத்தால்,2.கால்களைக் குறூக்கே வைத்தால்,3.அவரின் மேல் பாய்ந்தால்,4.தோழோடு பலமாக முட்டினால், 5.மோதினால்,6.தள்ளினால்,7.பிடித்து இழுத்தால்,8.கைகளால் பந்தைப் பிடித்தால்,(16 மீ எல்லைக்குள் கோல்க் காப்பாளர் விதிவிலக்கு)9.அடித்தால்,அடிக்க முயற்சித்தால்,10.துப்பினால்,எதிரணியினருக்கு நேரடியான இலவச உதை வழங்கப்படும்.தண்டனை உதை.மேலே குறிப்பிட்ட 10 முறைகேடுகளும் உதைபந்து விளையாட்டில் இருக்கும் போது(உதைபந்து மைதானத்தின் எந்த ஒரு மூலையில் விளையாடப்பட்டுக்கொண்டிருந்தாலும்) ஒரு வீரரால் அவருக்குரிய 16 மீ எல்லைக்குள் வைத்து எதிரணி வீரர்களின் மேல் செய்யப்பட்டால் எதிரணிக்குத் தண்டனை உதை வழங்கப்படும்.நேரடியற்ற இலவச உதை.கோல்க் காப்பாளருக்கு எதிராக அவர்- 6 நொடிகளுக்கு மேல் உதைபந்தைக் கைகளில் பிடித்து வைத்திருந்தால்-கைகளால் பிடித்த உதைபந்தை மைதானத்தில் இட்டு விட்டு வேறு வீரர்கள் அதைத் தொடமுன் மீண்டும் ஒருமுறை பிடித்தால்- தனது அணியின் வீரர் ஒருவர் திட்டமிட்டுத் தன்னை நோக்கி உதைக்கும் பந்தை கைகளால் தொட்டால் -தனது அணியின் வீரர் ஒருவர் திட்டமிட்டுத் தன்னை நோக்கி வெளிக்கோட்டில் இருந்து கைகளால் எறியும் பந்தை கைகளால் தொட்டால்நேரடியற்ற இலவச உதை வழங்கப்படும்.ஒரு விளையாட்டு வீரருக்கு எதிராக அவர்-ஆபத்தாக விளையாடினால்-ஒரு விளையாட்டு வீரர் ஓடுவதைத் தடுத்தால்-கோல்க் காப்பாளர் உதைபந்தை கைகளில் இருந்து விடும் போது தடுத்தால்-மேலே கூறப்படாத ஏதாவது ஒரு காரணத்திற்காக விளையாட்டை நிறுத்திய மத்தியஸ்த்தரிடமிருந்து மஞ்சள் அல்லது சிவப்பு அட்டையைப் பெற்றுக் கொண்டால்நேரடியற்ற உதை வழங்கப்படும்.
முன்பு பந்து காப்பாளர்( கோல்கீப்பர்) தான் பிடித்த பந்தை கனநேரம் கையில் வைத்திருக்க மாட்டார். அம மாதிரியான சந்தர்ப்பங்களில் தரையில் பந்தை தட்டித் தட்டி தான் விரும்பிய இடத்துக்கு பந்தை உதைப்பார், இப்போதெல்லாம் பந்தை கன நேரம் கையிலே வைத்திருக்கிறார்கள் முன்பு கோல்க் காப்பாளர் எத்தனை தரமும் பந்தை மைதானத்தில்ப் போட்டுவிட்டு மீண்டும் திரும்பக் கைகளால் பிடிக்கலாம் என்ற விதிமுறை இருந்தது.முன்னிலையில் நிற்கும் அணியினர் இந்த விதிமுறையினால் தங்களுக்குச் சாதகமாக நேரத்தைக் கடத்தியதால் விதிமுறை மாற்றப்பட்டதுபந்தைக் கைகளில் வைத்துக் கொண்டு ஒரு சில காலடிகளுக்கு மேல் எடுத்து வைக்கக்கூடாது என்றும் விதிமுறை இருந்தது.இதையும் மத்திய்ஸ்த்தர்களுக்கு இலகுவான முறையில் 6 நொடிகளுக்கு மேல் காப்பாளார் பந்தைக் கைகளில் வைத்திருக்கக் கூடாது என்று மாற்றி விட்டார்கள்.இந்த 6 நொடிகளுக்கிடையில் காப்பாளர் எத்தனை காலடிகளையும் எடுத்து வைக்கலாம்.
Quote
பனியன் கிழிபடும் அளவு இழுத்து தள்ளுப் படுகினம், இதையும் நடுவர் அதிகம் கண்டு கொள்வதில்லை!விதிமுறைகளைக் கடுமையாகக் கடைப் பிடிக்கும் மத்தியஸ்த்தர்கள் இதை கவனிப்பார்கள்.அதே வேளையில் விளையாட்டின் தரத்தையும் கருத்தில் கொள்ளும் மத்தியஸ்த்தர்களும் உண்டு.விதிமுறைகளை மென்மையாகக் கடைப் பிடிப்பவர்களும் உண்டு.
Quote
முன்பு பந்து காப்பாளர் பெரிய சதுரக் கோட்டைத் தாண்டி வர மாட்டார். இப்போது முழு மைதானத்துக்கும் போய் வருகிறார். இது சரியா?எனக்குத் தெரிந்தவரைக்கும் கோல்க் காப்பாளர்கள் எப்போதும் எந்த நேரத்திலும் மைதானத்தின் எந்த இடத்திற்கும் சென்று வரலாம்.
விளையாட்டு வீரர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள்1.எச்சரிக்கை அட்டை (மஞ்சள்)2.இரண்டாவது எச்சரிக்கை அட்டை( மஞ்சளையடுத்து சிவப்பு)2.மைதானத்தை விட்டு வெளியேற்றும் அட்டை (சிவப்பு)மேற்கூறப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் விளையாட்டு வீரர்கள்,மாற்று விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு எதிராக மட்டும் எடுக்கப்படும்.-எச்சரிக்கை (மஞ்சள்) அட்டைஉதைபந்து விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது பந்தினைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடும் ஒரு வீரர் எதிரணி வீரரை அல்லது எதிரணி வீரரின் மேல்1.உதைத்தால்2.கால்களைக் குறுக்கே வைத்தால்3.தோழோடு பலமாக முட்டி மோதினால்4.தள்ளினால்5.பிடித்து இழுத்தால் 6.மேலே பாய்ந்தால்7.மோதினால்அல்லது8.மத்தியஸ்த்தரின் முடிவுகளை எதிர்த்தால்9.மீண்டும் மீண்டும் விதிமுறைகளை மீறினால்10.விளையாட்டின் இடை நிறுத்ததின் பின்னர் மீண்டும் தொடரும் போது நேரத்தை வீணடித்தால்11.ஒரு உதையின் போது மத்தியஸ்த்தரால் கணிக்கப்படும் பந்திற்கும் பாதுகாப்புத் தடைக்கும் இடையிலான தூரத்தை குறைக்க முயன்றால்12.மத்தியஸ்த்தரின் அனுமதியின்றி மைதானத்தில் உட்புகுந்தால்13.மத்தியஸ்த்தரின் அனுமதியின்றி மைதானத்தை விட்டு வெளியேறினால்14.கைகளினால் அடித்து ஒரு கோலைப் பெற்றால் அல்லது அவ்வாறு முயற்சித்தால் அந்த வீரருக்கு எச்சரிக்கையாக மஞ்சள் அட்டை காட்டப்படும்.(இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே
மைதானத்தை விட்டு வெளியேற்றப்படும் (சிவப்பு) அட்டைஒரு விளையாட்டு வீரர்,1. அதிகூடிய வலுவுடன் வன்மையாக எதிரணி வீரரை எதிர்த்து விளையாடினால்2.எதிரணி வீரருக்குக் காயத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாடினால்3.ஒருவரை அடித்தால் (மத்தியஸ்த்தர் உட்பட)4.ஒருவர் மீது எச்சில் துப்பினால் (மத்தியஸ்த்தர் உட்பட)5. எதிரணி வீரர் உதைக்கும் ஒரு கோலை அல்லது கோல் செல்லும் முழுமையான சந்தர்ப்பத்தைக் கைகளினால் தடுத்தால்(கோல்க் காப்பாளரைத் தவிர)6.விதிமுறைகளை மீறி அல்லது தவறான விளையாட்டுக்களால் கோல் உதைக்கச் செல்லும் வீரரைத் தடுத்தால் (எதிரணியினரது கோல்க் கம்பங்களுக்கு அண்மையாக)7.ஒருவரை இழிவாகப் பேசினால் ( மத்தியஸ்த்தர் உட்பட )8.இரண்டாவது முறையாக எச்சரிக்கை அட்டையைப் பெற்றுக் கொண்டால்சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவார்.மைதானத்தை விட்டு வெளியேற்றப்படும் வீரர் மைதானத்தின் உட்புறத்தில் இருந்தும் வெளியேற்றப்பட வேண்டும்.
உதைபந்தாட்டத்தின் போது ஒரு வீரர் இன்னொருவர் மீது ஏதாவது பொருளால் (பந்து உட்பட) எறிந்தால்...1.எதுவித எதிர் விழைவுகளும் இல்லாமல் எறிந்தால் மஞ்சள் அட்டை காட்டப்படும்2.எதிர் விழைவுகள் ஏற்படக் கூடிய வகையில் வன்மையாக அல்லது அதிகூடிய வலுவுடன் எறிந்தால் சிவப்பு அட்டை காட்டப்பட வேண்டும்.ஒரு வீரர் 16 மீ எல்லைக்குள் நிற்கும் ஒருவர் 16 மீ எல்லைக்கு வெளியே நிற்கும் ஒருவர் மீது ஒரு பொருளால் எறிந்தால் தாக்காப் பட்ட இட்த்தில் வைத்து நேரடியான உதை வழங்கப்படும். (16 மீ எல்லைக்கு வெளியே)ஒரு வீரர் 16 மீ எல்லைக்கு வெளியே இருந்து எறிந்து உள்ளே நிற்பவரைத் தாக்கினால் தண்டனை உதை வழங்கப்படும்.ஒரு வீரர் மைதானத்தின் உள்ளே நின்று மைதானத்திற்கு வெளியே நிற்கும் ஒருவர் மீது ஒரு பொருளால் எறிந்து தாக்கினால் எதிரணியிற்கு நேரடியற்ற உதை வழங்கப்பட வேண்டும்.கடைசியாகப் பந்து விளையாட்டில் இருந்த இடத்தில் இருந்து நேரடியற்ற உதை வழங்கப்படும்.ஒரு வீரர் மைதானத்திற்கு வெளியே நின்று மைதானத்தில் நிற்கும் ஒரு எதிரணி வீரர் மீது ஒரு பொருளால் எறிந்து தாக்கினால் தாக்கப்பட்ட இடத்தில் வைத்து நேரடியான உதை எதிரணிக்கு வழங்கப்படும். 16 மீ எல்லைக்குள் தாக்கப்பட்டால் தண்டனை உதை வழங்கப்பட வேண்டும்.மாற்று வீரர் ஒருவர் மைதானத்தின் வெளியே இருந்து மைதானத்தின் உள்ளே நிற்கும் ஒரு வீரர் மீது ஒரு பொருளால் எறிந்து தாக்கினால் எதிரணியினருக்கு, கடைசியாகப் பந்து
13.இலவச உதைகள்1) நேரடி இலவச உதைநேரடி உதையின் போது பந்தை நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற்றுக் கொள்ளலாம்.நேரடி இலவச உதையின் போது உதைப்பவர் பந்தை நேரடியாக தனது அணியினது கோல்க் கம்பங்களினூடாக உதைத்தால் அது எதிரணிக்கான கோலாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.அதற்காக எதிரணியினருக்கு மூலை உதை வழங்கப்படும்2) நேரடியற்ற இலவச உதைநேரடியற்ற இலவச உதையின் போது நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற முடியாது.அவ்வாறு கோல்க்கம்பங்களுக்கு இடையால் பந்து சென்றால் எதிரணியிற்கு வெளி உதை வ்ழங்கப்படும். நேரடியற்ற இலவச உதையின் போது உதைப்பவர் பந்தை நேரடியாக தனது அணியினது கோல்க் கம்பங்களினூடாக உதைத்தால் அது எதிரணிக்கான கோலாக எற்றுக்கொள்ளப்பட மாட்டாது.அதற்காக எதிரணியினருக்கு மூலை உதை வழங்கப்படும்.இலவச உதையின் போது பந்து மைதானத்தில் அசையா நிலையில் இருக்க வேண்டும்.முதலில் உதைத்தவர் மீண்டும் உதைப்பதற்கு முதலில் வேறு ஒரு வீரரால் பந்து உதைக்கப்பட்டிருக்க வேண்டும்.*ஒரு அணியினருக்கு அவர்களது 16 மீ பிரதேசத்திற்குள் இலவச உதை வழங்கப்பட்டால்...சகல எதிரணி வீரர்களும் 9 மீ தூரத்திலும்16 மீ பிரதேசத்திற்கு வெளியேயும் நிற்க வேண்டும்.16 மீ பிரதேசத்தை விட்டுப் பந்து வெளியேறிய பின்னரே மற்றவர்கள் அதை உதைக்கலாம்.5 மீ பிரதேசத்தில் பந்தை அதன் எந்தப் புள்ளியில் வைத்தும் உதைக்கலாம்.*ஒரு அணியினருக்கு எதிராக அவர்களது 16 மீ பிரதேசத்திற்குள் நேரடியற்ற இலவச உதை வழங்கப்பட்டால்...எதிரணியினர் 9 மீ தூரத்தில் நிற்க வேண்டும்5 மீ பிரதேசத்தில் கோல்க் கோடுகளுக்குச் சமாந்தரமான அதன் கோட்டில் (விதிமுறை மீறல் இடம்பெற்ற இடத்திற்கு அண்மையாக்) வைத்து உதைக்கப்படும்.இலவச உதையின் போது எதிரணியினர் 9 மீ தூரத்தக் கடைப்பிடிக்காமல் முனோக்கி நகர்ந்திருந்தால் இலவச உதை மீண்டும் உதைக்கப்படும்.(எச்சரிக்கை அட்டையும்)16 மீ க்குள் இருந்து இலவச உதை நடாத்தப்பட்டு பந்து 16 மீ ப்ரதேசத்தை விட்டு வெளியேறாவிட்டால் (வெள்ளம்,காற்று,பனிக்கட்டி)அந்த உதை மீண்டும் உதைக்கப்படும்.இலவச உதையின் போது உதைத்த வீரர், வேறு வீரர்கள் உதைக்க முன்னர் மீண்டும் உதைத்தால் எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்இலவச உதையின் போது உதைத்த வீரர், வேறு வீரர்கள் இதைக்க முன்னர் பந்தைக் கைகளால் பிடித்தால் எதிரணியினருக்கு நேரடி உதை வழங்கப்படும்16 மீ பிரதேசத்தில் அவ்வாறு கைகளால் பிடித்தால்(கோல்க் காப்பாளர் தவிர) எதிரணியினருக்கு தண்டனை உதை வழங்கப்படும்.கோல்க் காப்பாளர் 16 மீ பிரதேசத்தில் அவ்வாறு உதைத்தாலோ கைகளால் பிடித்தாலோ எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்.கோல்க் காப்பாளர் 16 மீ பிரதேசத்திற்கு வெளியே அவ்வாறு கைகளால் பிடித்தால் எதிரணியினருக்கு நேரடி உதை வழங்கப்படும்
14. தண்டனை உதை (பனால்டி)ஒரு அணியினருக்கு எதிராக தண்டனை உதை அளிப்பதற்கு முதல் மத்திய்ஸ்த்தர் அவதானிக்க வேண்டியவை:1.உதைபந்தட்டாத்தில் பந்து விளையாட்டில் இருக்க வேண்டும்2.விதிமுறை மீறல் 16 மீ எல்லைக்குள் நடைபெற்றிருக்க வேண்டும்3.ஒரு விளையாட்டு வீரர் எதிரணி வீரருக்கு எதிராக விதிமுறைகளை மீறியிருக்க வேண்டும்.கீழ்வரும் 10 காரணங்களுக்காக தண்டனை உதை வழங்கப்படும்1.உதைத்தால்,2.கால்களைக் குறூக்கே வைத்தால்,3.அவரின் மேல் பாய்ந்தால்,4.தோழோடு பலமாக முட்டினால், 5.மோதினால்,6.தள்ளினால்,7.பிடித்து இழுத்தால்,8.கைகளால் பந்தைப் பிடித்தால்,(16 மீ எல்லைக்குள் கோல்க் காப்பாளர் விதிவிலக்கு)9.அடித்தால்,அடிக்க முயற்சித்தால்,10.துப்பினால்தண்டனை உதையின் போது நேரடியாகவோ நேரடியற்றோ விதிமுறைகளுக்கு அமைவாகப் பந்தை உதைத்து ஒரு கோலைப் பெற்றுக்க் கொள்ளலாம்.தண்டனை உதையின் போது.....1)பந்து முன்னோக்கி உதைக்கப்பட வேண்டும்2)உதைப்பவர் தனது ஓட்டத்தை அல்லது நடையை இடை நிறுத்தாமல் ஒரே நகர்வில் உதைக்க வேண்டும் 3)உதைப்பவர் மத்தியஸ்த்தருக்கும் கோல்க் காப்பாளருக்கும் தன்னை விளக்கமாக அடையாளப்படுத்த வேண்டும்4)கோல்க் காப்பாளர் உதைப்பவரை நோக்கியபடி(அவர் உதைக்கும் வரை)கோல்க் கோடுகளில் எதாவது ஒரு புள்ளியைல் தனது காலை வைத்திருக்க வேண்டும். (கோல்க் கோடுகளுக்கிடையில் அசையலாம்)5)மற்றய வீரர்கள் மைதானத்தில்,16 மீ பிரதேசத்திற்கு வெளியே,தண்டனை உதைப் புள்ளிக்குப் பின்பாக,குறைந்தது 9 மீ தூரத்தில் நிற்க வேண்டும்6)உதைப்பதற்கு மத்தியஸ்த்தரின் அனுமதியைப் பெற வேண்டும்7)உதைப்பவர் இரன்டு முறை தொடர்ந்து உதைக்க முடியாது8)மத்தியஸ்த்தர் விதிமுறைகளைக் கவனித்து விளையாட்டைத் தொடர வேண்டும்.மத்தியஸ்த்தர் அனுமதி வழங்கிய பின்னர் தண்டனை உதை நடைமுறைக்குள் வரும் முன்னர் விதிமுறைகளை மீறினால்....1)உதைப்பவரோ அவரின் சக விளையாட்டு வீரர்களோ விதிமுறைகளை மீறி உதைத்த பந்து கோலிற்குள் சென்றால் அது செல்லுபடியாகாது. தண்டனை உதை மீண்டும் உதைக்கப்பட வேண்டும்.பந்து கோலிற்குள் செல்லாமல் விட்டால் விதிகளை மீறியதற்காக எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்2)கோல்க்காப்பாளரோ அல்லது அவரின் சக விளையாட்டு வீரர்களோ விதிமுறைகளை மீறிப் பந்து கோலிற்குள் சென்றால் அது கோல் என் அங்கீகரிக்கப்படும்.கோலிற்குள் செல்லாவிட்டால் தண்டனை உதை மீண்டும் உதைக்கப்படும்.3)இரு அணியினரும் ஒரே நேரத்தில் விதிமுறைகளை மீறினால் தண்டனை உதை மீண்டும் உதைக்கப்படும் .தண்டனை உதையை உதைப்பவர் தொடர்ந்து இருமுறை உதைத்தால்(வேறு வீரர்கள் உதைக்கும் முன்னர்) எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்.தண்டனை உதையை வெளி நபர்கள் தடுத்தால் மீண்டும் உதைக்கப்படும்.தண்டனை உதையின் போது உதைப்பதற்குத் தன்னை அடையாளப்படுத்திய வீரரைத் தவிர்த்து வேறு வீரர் அடிக்க முற்பட்டால் அது உடனடியாக மத்தியஸ்த்தரால் நிறுத்தப் பட்டு அவருக்கு எச்சரிக்கை அட்டை காட்டப்படும்.
15. கைகளினால் எறிதல்உதைபந்தாட்டத்தின் போது பந்து பக்கமாக இருக்கும் வெளிக்கோடுகளைத் தாண்டி மைதானத்தை விட்டு வெளியேறினால், பந்தைக் கைகளினால் மைதானத்தினுள் எறிந்து விளையாட்டுத் தொடரப்படும்.பந்து பெளியேறு முன்னர் எந்த அணி வீரர் கடைசியாகப் பந்தை விளையாடினாரோ அவரின் எதிரணி வீரர்களால் விளையாட்டுத் தொடரப்படும்.-பந்தை கைகளால் நேரடியாக கோல்க்கம்பங்களுக்குள் எறிந்து ஒரு கோலைப் பெற்றுக் கொள்ள முடியாது.-தனது கோல்க்கம்பங்களுக்குள் எறிந்தால் எதிரணிக்கு மூலை உதை வழங்கப்படும்-எதிரணியின் கோல்க்கம்பங்களுக்குள் எறிந்தால் எதிரணிக்கு வெளி உதை வழங்கப்படும்-கைகளால் எறியும் போது எதிரணி வீரர்கள் 2 மீ தூரத்தில் நிற்க வேண்டும்-ஒரு விளையாட்டு வீரர் தானே பந்தைக் கைகளால் எறிந்து விட்டு உடனடியாக தானே உதைக்க முடியாது. -அப்படி உதைத்தால் எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்-ஒரு வீரர் பந்தைக் கைகளால் எறியும் போது அவருடைய அணியைச் சேர்ந்த கோல்க் காப்பாளர் அந்தப் பந்தைக் கைகளால் பிடிக்கக் கூடாது.-மீறினால் எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்16. வெளி உதைவிளையாட்டின் போது ஒரு வீரர் பந்தை உதைத்து எதிரணியின் கோல்க் கோடுகளைத் தாண்டி மைதானத்தை விட்டு வெளியேற்றினால்(கோல் விதி விலக்கு) அந்தக் கோல்க் கோடுகளுக்கு உரிய அணியினருக்கு வெளி உதை வழங்கப்படும்-வெளி உதையின் போது உதைத்த பந்து 16 மீ பிரதேசத்தை விட்டு வெள்யேறிய பின்னரே மற்ற வீரர்கள் உதைக்கலாம்.-எதாவது காரணத்திற்காக அப்படி வெளியேறா விட்டால் வெளி உதை மீண்டும் நடாத்தப்படும்-வெளி உதையை நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற்றுக்கொள்ளலாம்(உதைப்பவரின் அணிக்குச் சார்பாக மட்டும்)17. மூலை உதைஒரு அணியினர் தனது கோல்க் கோடுகளுக்கூடாக உதைத்துப் பந்தை மைதானத்தை விட்டு வெளியேற்றினால் எதிரணிக்கு மூலை உதை வழங்கப் படும்.(கோல் விதிவிலக்கு)-முலை உதையின் போது நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற்றுக் கொள்ளலாம் (உதைப்பவரின் அணிக்குச் சார்பாக மாத்திரம்)-உதைக்கும் போது எற்கனவே இருக்கும் மூலைகம்பம் அகற்றப்படக் கூடாது-மூலை உதைக்குரிய கால் வட்டத்தின் எந்த ஒரு இடத்தில் வைத்தும் பந்து உதைக்கப்படலாம்-உதித்தவர் மீண்டும் வேறு வீரரின் உடலில் பந்து படுமுன்னர் உதைக்க கூடாது.
வெற்றியீட்டும் அணியைத் தீர்மானிக்கும் முறைஉதைபந்தாட்டத்தின் சாதரணமான 90 நிமிட நேரத்தில், விளையாடும் இரு அணியினரும் கோல்களை உதைக்காமல் விட்டாலோ அல்லது சமனான அளவில் கோல்களை உதைத்திருந்தாலோ,வெற்றியாளர் தீர்மானிக்கப்பட வேண்டியிருந்தால் விளையாட்டின் நேரம் நீடிக்கப்படும்.நீடிக்கப்படும் நேரம் அதி கூடியதாக 30 நிமிடங்கள் இருக்கும்.முதல் 15 நிமிடங்களின் பின்னர் அணியினர் மைதானத்தில் தங்கள் பகுதியை மாற்றிக் கொள்வார்கள்.நீடிக்கப்பட்ட நேரத்திலும் வெற்றியாளரைத் தீர்மானிக்க முடியாவிட்டால் 11 மீ உதை வழங்கப்படும்.-உதைக்கப்படும் பகுதியை (கோல்க்கம்பங்களை) மத்தியஸ்த்தரே தீர்மானிப்பார்.- மத்தியஸ்த்தரால் நாணயம் எறிந்து முதலில் யார் 11 மீ உதையை ஆரம்பிப்பது என்று முடிவு செய்யப்படும்-கடைசி வரை மைதானத்தில் இருந்த விளையாட்டு வீரர்களே 11 மீ உதையில் பங்கு பற்றலாம்.-விளையாட்டின் நேர நீடிப்பின் முடிவில் ஒரு அணியில் வீரர்கள் குறைக்கப்பட்டு இருந்தால் 11 மீ உதையில் அதே எண்ணிக்கையிலான வீரர்களே எதிரணியிலும் பங்கு பற்றலாம்.** உதாரணம்: 120 நிமிட விளையாட்டில் ஒரு அணியில் இருவருக்கு சிவப்பு அட்டையும் எதிரணியில் ஒருவருக்கு சிவப்பு அட்டையும் காட்டப்பட்டிருந்தால் ஒவ்வொரு அணியிலும் சமனான எண்ணிக்கையில் தலா 9 வீரர்களே (கோல்க் காப்பாளர் உட்பட )11 மீ உதையில் பங்கு பற்றாலாம் **-முதலில் ஒவ்வொரு அணிக்கும் தலா 5 உதைகள் வழங்கப்படும்.-அப்படியும் வெற்றியாளர் தீர்மானிக்கப்படா விட்டால் ஒர் அணி வெற்றி பெறும் வரை 11 மீ உதை தொடர்ந்து வழங்கப்படும்.- 11 மீ உதையின் போது கோல்க் காப்பளர் மட்டும் அவருக்கு ஏற்படும் காயங்கள் காரணமாகத் தொடர்ந்து விளையாட முடியாவிட்டால் மாற்றப்படலாம்.(அதுவரை அந்த அணியினர் தங்கள் மாற்றும் எண்ணிக்கையை மீறாவிட்டால் மட்டும்)- 11 மீ உதையின் போது கோல்க்காப்பாளர் எந்த நேரத்திலும் மைதானத்தில் இருக்கும் தன் அணி வீரர்களுடன் தன்னை மாற்றிக் கொள்ளலாம்.-தன் அணியில் மைதானத்தில் இருக்கும் சகல வீரர்களும் பங்கு பற்றிய பின்னரே ஒரு வீரர் இரண்டாவது முறையாக 11 மீ உதையில் பங்கு பற்றலாம்11 மீ உதையின் போது ஒரு அணியின் வீரர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பதற்காக மற்றைய அணியிலிருந்து ஒரு வீரர் குறைக்கப்பட வேண்டியதில்லை.(11 மீ உதையின் ஆரம்பத்தில் மட்டுமே வீரர்கள் சமனாக்கப்படுவார்கள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக