05th Mar 2011
எல்லாம் அர்ஜென்டினாவில்தான்; ஒரே போட்டியில் 36 'சிவப்பு அட்டை'
சாம்பியன்ஸ் லீக் அரைஇறுதி முதல் லெக் ஆட்டத்தில் பார்சிலோனா 2-0 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட்டை தோற்கடித்தது.இந்த ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் ரியல்மாட்ரிட் வீரர் பெப் சிவப்பு அட்டைக் காட்டி வெளியேற்றப்பட்டார்.தொடர்ந்து ரியல்மாட்ரிட் பயிற்சியாளரும் களத்தை விட்டு வெளியேற்றப்£ட்டார். இந்த போட்டி முடிந்ததும் ரியல் பயிற்சியாளர் ஜோஸ் மோரின்ஹோ ஆவேசத்துடன் பேட்டியளித்தார். ''ஒரு நடுவர் இரு அணியையும் சமமாக நடத்த வேண்டும்,ஆனால் ஒவ்வொரு முக்கிய ஆட்டங்களிலும் பார்சிலோனாவுக்கு சாதகமாகவே நடுவர்கள் செயல்படுகின்றனர். 'யூபா'வும் பார்சிலோனாவுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. இதற்கு காரணம் 'யுனிசெப்' அமைப்புடன் பார்சிலோனா இணைந்திருப்பதே.பார்சிலோனாவை சமூகத்துக்கு உதவும் ஒரு கால்பந்து கிளப்பாக பார்க்கின்றனர்.இதனால் அனைவருக்கும் பார்சிலோனா மேல் ஒரு கருணை பார்வை உள்ளது.'' ''போர்ட்டோ, இன்டர்மிலான் அணிகளுடன் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை நான் வென்றேன். ஆனால் பார்சிலோனா பயிற்சியாளர் கார்டியாலா நடுவர்கள் உதவியுடன்தான் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றார். கடந்த 2008ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் அரைஇறுதி ஆட்டத்தில் செல்சியை நடுவர்களுடன் உதவியுடன்தான் பார்சிலோனா வென்றது. அதே போலவே இப்போது ரியல்மாட்ரிட்டை வீழ்த்தியுள்ளது என்றார்.'' ஜோஸ் மோரின்ஹோவின் இந்த குற்றச்சாட்டுக்கு பார்சிலோனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.தனது வீரர்கள்,ரசிகர்கள்,பயிற்சியாளர் உள்பட அனைவரையும் ஜோஸ் மோரின்ஹோ அவமானப்படுத்தியுள்ளதாக பார்சிலோனா கருதுகிறது.எனவே மோரின்ஹோ மீது 'யூபா'வில் புகார் அளிக்க பார்சிலோன முடிவு செய்துள்ளது | |
உலக கால்பந்து சம்மேளனமான 'பிபா'வில் தொடர்ந்து 3 முறை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜோசப் பிளேட்டர் தலைவராக உள்ளார்.அதாவது 13 ஆண்டுகாலம் 216 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட உலகின் மிகப் பெரிய அமைப்பான 'பிபா'வின் தலைவராக ஜோசப் பிளேட்டர் கோலோச்சுகிறார்.அவரது பதவி காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க ஜுன் 1ந் தேதி 'பிபா' காங்கிரஸ் கூடுகிறது.தொடர்ந்து இந்த முறையும் 4வது தடவையாக ஜோசப் பிளேட்டர் தேர்தலில் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து ஆசிய கால்பந்து சம்மேளனத் தலைவர் முகமது பின் ஹமாம் போட்டியிட முடிவு செய்துள்ளார்.தற்போது 61 வயது நிரம்பிய முகமது பின் ஹமாம் கத்தார் நாட்டை சேர்ந்தவர். வருகிற 2022ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகத்தாரில் நடக்க உள்ளது.இந்த வாய்ப்பை கத்தார் பெறுவதற்கு முகமது பின் ஹமாம்தான் முக்கிய காரணம். ஜோசப் பிளேட்டர் எதிர்த்து முகமது பின் ஹமாம் களம் இறங்கும்பட்சத்தில் போட்டி கடுமையாக இருக்கம் எனத் தெரிகிறது. இதனால் பிளேட்டர் போட்டியை தவிர்க்க முயன்று வருகிறார்.தற்போது ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜோசப் பிளேட்டர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. குட்டி நாடான கிழக்கு தைமூருக்கு சென்ற பிளேட்டர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்த பிளேட்டர், மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் ஆனால் இதுதான் கடைசி முறை என்றும் கூறினார். தொடர்ந்து மலேசியா சென்ற அவர் அங்கு வைத்து முகமது பின் ஹமாமை சந்திக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.ஆனால் பல்வேறு காரணங்களால் அவரை சந்திக்கும் வாய்ப்பு கைகூடவில்லை. இதற்கிடையே கடந்த வெள்ளியன்று தோகாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முகமது பின் ஹமாம் 'பிபா' தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று தெரிவித்தார். | ||
Teams | Mat | Won | Lost | Tied | N/R | Pts | Net RR | For | Against |
---|---|---|---|---|---|---|---|---|---|
Chennai Super Kings | 12 | 8 | 4 | 0 | 0 | 16 | +0.544 | 1838/225.1 | 1708/224.1 |
Mumbai Indians | 11 | 8 | 3 | 0 | 0 | 16 | +0.314 | 1562/215.2 | 1507/217.1 |
Royal Challengers Bangalore | 11 | 7 | 3 | 0 | 1 | 15 | +0.863 | 1607/186.3 | 1539/198.3 |
Kolkata Knight Riders | 11 | 7 | 4 | 0 | 0 | 14 | +0.464 | 1493/199.4 | 1460/208.1 |
Rajasthan Royals | 12 | 5 | 6 | 0 | 1 | 11 | -0.587 | 1456/209.1 | 1570/208.0 |
Kings XI Punjab | 11 | 5 | 6 | 0 | 0 | 10 | -0.338 | 1706/215.4 | 1713/207.4 |
Kochi Tuskers Kerala | 12 | 5 | 7 | 0 | 0 | 10 | -0.628 | 1662/229.0 | 1740/220.4 |
Pune Warriors | 11 | 4 | 7 | 0 | 0 | 8 | -0.003 | 1521/207.3 | 1601/218.2 |
Delhi Daredevils | 12 | 4 | 8 | 0 | 0 | 8 | -0.363 | 1890/238.2 | 1906/229.5 |
Deccan Chargers | 11 | 3 | 8 | 0 | 0 | 6 | -0.177 |