28 மே, 2014


2014 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்துக்கான பந்து அறிமுகம்















அடுத்த வருடம் பிரேஸிலில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டத்துக்கான பந்து நேற்று அடிடாஸ் நிறுவனத்தில் வெளியிடப்பட்டது.

பிராஷுகா என அழைக்கப்படும் இந்த பந்து வெளியீட்டு நிகழ்வு பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ கோலாகலமாக நடைபெற்றது.

உலகக்கிண்ண கால்பந்தாட்ட வராலாற்றில் பயன்படுத்தப்படவுள்ள வண்ண மயமான பந்து இதுவாகும். இதனை அடிடாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பொலியுறதேன் மூலகத்தினால் உறை தயாரிக்கப்பட்டுள்ள ப்ராஷுக்கா பந்தில் 6 பொருத்துக்கள் உள்ளன. இப்பந்தினை நிறையை குறைக்க இதன் வடிவமைப்பாளர்கள் மிகவும் சிரத்தை எடுத்துள்ளனர். ஏனெனில் பொருத்துகள் குறையும்போது பந்து இறுக்கமானதாகிவிடும்.

பிரேஸில் அடுத்த வருடம் ஜுன் 12ஆம் திகதி முதல் ஜுலை 13 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள உலக்கிண்ண கால்பந்தாட்டத்தின் அனைத்து போட்டிகளிலும் இப்பந்தே பயன்படுத்தப்படவுள்ளன.

உலகக்கிண்ணத்துக்கு தெரிவாகியுள்ள அணிகள் அனைத்தும் விரைவில் ப்ராஷுக்கா பந்தில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளன.(M.N.)

 

கருத்துகள் இல்லை: