22 ஜூன், 2010

உதைபந்தாட்டம் -விதிகள்-பாகம் இரண்டு


7.உதைபந்தாட்டத்தின் கால எல்லைவிளையாட்டின் ஆரம்பத்தில் மத்தியஸ்த்தருடன் இரு குழுக்களும் வேறு விதமாக உடன்பாடு செய்து கொள்ளாத வரையில் ஒரு விளையாட்டு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் 45 நிமிடங்கள் கால எல்லையாக இருக்கும்.இரண்டு அரைப் பகுதிகளுக்கும் இடையில் 15 நிமிடங்கள் இடைவேளை இருத்தல் வேண்டும்.வெளிச்சக் குறைவு,பனி அல்லது வேறு தகுந்த காரணங்களுக்காக விளையாட்டின் கால எல்லையும் இடைவேளையின் கால எல்லையும் குறைக்கப்படலாம்.-விளையாட்டு வீரர்களின் மாற்றங்கள்-விளையாட்டு வீரருக்கு ஏற்படும் காயங்கள்-மற்றும் அவரை வெளியே காவிச் செல்லுதல்-திட்டமிட்ட கால வீணடிப்பு-மற்றும் தகுந்த காரணங்களுக்காக விளையாட்டின் கால எல்லை மத்தியஸ்த்தரால் நீடிக்கப்படலாம்.விளையாட்டின் இறுதிக் கணத்தில் கொடுக்கப்படும் தண்டனை உதை அந்த விளையாட்டுப் பகுதியிலேயே உதைக்கப்படும்.தண்டனை உதை சரியான முறையில் முன்னோக்கி உதைக்கப்பட்ட பின்னர் கோல் சென்றாலொ அல்லது கோல்க் காப்பாளர் தடுத்து நிறுத்தினாலோ அத்துடன் கால எல்லை முடிவடைகின்றது. கட்டாயமாக ஒரு குழு வெற்றி அடைய வேண்டிய விளையாட்டுக்களில் 90 நிமிடங்களில் ஒரு குழு வெற்றி அடையாவிட்டால் மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்படும்.மேலதிகமான 30 நிமிடங்களும் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு விளையாடப்படும்.மேலதிகமான காலத்தில் இடைவேளை இருக்காது.மேலதிகமான விளையாட்டு நேரத்திலும் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படாவிட்டால் தொடர்ந்து பனால்ட்டி உதையின் மூலம் வெற்றியாளர்கள் தீர்மனிக்கப்படுவர்.பனால்ட்டி உதை வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும் வரை தொடர்ந்து செல்லும்.16 வயதிற்குட்பட்டோரின் விளையாட்டின் கால எல்லையும் இடைவேளையின் கால எல்லையும் வயதிற்கேற்ப வித்தியாசப்படும்.8. விளையாட்டின் ஆரம்பம்உதைபந்தாட்டம் ஆரம்பிக்க முன்னர் மத்தியஸ்த்தரால் நாணயம் எறியப்பட்டு எந்தக் குழு மைதானத்தின் எந்தப் பக்கத்திலிருந்து விளையாடுவது என்று தீர்மானிக்கப்படும்.நாணயம் எறிதலில் வெற்றி பெற்ற குழு விளயாட்டை ஆரம்பிக்க முடியாது.விளையாட்டு ஆரம்ப உதையுடன் தொடங்கும்.ஆரம்ப உதையின் போது பந்து அசையாமல் மத்திய புள்ளியில் இருக்கும் போது முன்னோக்கி உதைக்கப்படும்.முதலில் உதைத்தவர் தொடர்ச்சியாக இருமுறை பந்தை உதைக்கக்கூடாது.ஆரம்ப உதையின் போது நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற்றுக்கொள்ளலாம்.-விளையாட்டின் ஆரம்பத்திலும்-ஏதாவது ஒரு அணி கோல்களை உதைத்தாலும்-இரண்டாவது விளையாட்டுப் பகுதி ஆரம்பிக்கும் போதும்-மேலதிகமான காலத்தின் ஆரம்பத்தின் போதும், பக்கம் மாறும் போதும்ஆரம்ப உதை வழங்கப்படும்.ஆரம்ப உதையின் போது உதைத்தவர் தொடர்ச்சியாக இருமுறை பந்தை உதைத்தால் எதிரணியினருக்கு நேரடியற்ற இலவச உதை வழங்கப்படும்.வேறு எந்த விதமான விதிமுறை மீறல்கள் நடைபெற்றாலும் ஆரம்ப உதை மீண்டும் நடைபெறும்.(பந்தைப் பின்னோக்கி உதைத்தல்,மத்தியஸ்த்தரின் சைகைக்குக் காத்திராமல் ஆரம்பித்தல்,ஒரு வீரர் எதிரணியின் எல்லைக்குள் நிற்றல் போன்றவை.)மத்தியஸ்த்தர் பந்து.விளையாட்டு வீரர்கள் விதிமுறைகளை மீறாமல் எதாவது தகுந்த காரணங்களுக்காக மத்தியஸ்த்தர் விளையாட்டை இடை நிறுத்தினால் மத்தியஸ்த்தர் பந்துடன் விளையாட்டு மீண்டும் தொடரப்படும்.மத்தியஸ்த்தர் இரு அணிகளையும் சேர்ந்த வீரர்களுக்கும் அருகாமையில் வைத்துப் பந்தை தன் கைகளினால் இடுப்பளவு உயரத்திலிருந்து மைதானத்தை நோக்கிப் போடுவார்.பந்து நிலத்தை முட்டும் வரை யாரும் உதைக்கக் கூடாது. அப்படி உதைத்தால் மீண்டும் மத்தியஸ்த்தர் பந்து வழங்கப்படும்.மத்தியஸ்த்தர் பந்து மைதானத்தில் விழுந்து எந்த வீரர்களாலும் உதைக்கப்படாமல் மைதானத்தை விட்டு வெளியே சென்றாலும் மீண்டும் மத்தியஸ்த்தர் பந்து வழங்கப்படும்.9. பந்து விளையாட்டில் இருப்பதும் இல்லாமல் விடுவதும்மத்தியஸ்த்தரால் எந்த ஒரு காரணத்தினாலும் விளையாட்டு இடை நிறுத்தப்படும் வரை பந்து விளையாட்டில் இருக்கின்றது.பந்து கோல்க் கம்பத்திலோ மூலைக் கம்பத்திலோ பட்டு மைதானத்திற்குள் திரும்பி வரும் போதும்மத்தியஸ்த்தரில் (பக்கக் கோடுகளில் நிற்கும் போது) அல்லது உதவி மத்தியஸ்த்தர்களில் பட்டுத் திரும்பி வரும் போதும் தொடர்ந்து விளையாடப்பட வேண்டும்.மத்தியஸ்த்தரால் ஏதாவது காரணத்திற்காக விளையாட்டு இடை நிறுத்தப் பட்டால் மைதானத்தின் வெளி எல்லைக் கோடுகளை பந்தின் முழு உருவமும் தாண்டினால்பந்து விளையாட்டில் இல்லை என்று கருத வேண்டும்
10. ஒரு கோல் எப்போது அங்கீகரிக்கப் படுகின்றது.ஒரு விளையாட்டு வீரர் பந்து விளையட்டில் இருக்கும் போது ஒரு கோலை உதைத்தால்அந்தப் பந்து தனது முழு உருவத்தாலும் கோல்க் கோடுகளை இரு கோல்க் கம்பங்களுக்கும் இடையாகத் தாண்டியிருக்க வேண்டும்.அவர் உதைக்கு முன் மைதானத்தில் அவரோ அல்லது அவருடைய குழுவைச் சேர்ந்தவர்கள் எவரும் விதிமுறைகளை மீறியிருக்கக் கூடாது.பந்து முழு உருவத்தாலும் கோல்க்கம்பங்களுக்கிடையால் கோல்க்கோட்டினைத் தாண்டியதா இல்லையா என்று மத்தியஸ்த்தரால் முழுமையாக அறிய முடியாவிட்டால் உதவி மத்தியஸ்த்தர்களின் உதவிய நாட வேண்டும்.மத்தியஸ்த்தர் தனி ஒருவராக இருந்தால் மேலே கூறிய குழப்ப நிலையில் தொடர்ந்து விளையாடுவதற்கான சைகையை விளையாட்டு வீரர்களுக்குத் தெளிவாகக் காட்ட வேண்டும்.ஒரு கோலை அங்கீகரிப்பதற்காக மத்தியஸ்த்தர் எப்போதும் தனது கருவியால் சைகை செய்ய வேண்டியதில்லை.குழப்பமான நிலையிலும் மத்தியஸ்த்தரால் அது கோல் என்று அறியப்பட்டால் அவ்ர் தனது விசிலால் சத்தமிட்டுத் தெளிவாக அந்தக் கோலை அங்கீகரிக்க வேண்டும்.கோல் உதைக்கும் போது மைதானத்தில் மேலதிகமாக ஒருவர் இருந்தால்....என்பதற்கு மேலே 3.விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையில் பதில் இருக்கின்றது.

ஒருவர் ஒதுங்கி நிற்பதற்காக மத்தியஸ்த்தர் விளையாட்டை இடை நிறுத்தினால் எதிரணிக்கு நேரடியற்ற இலவச உதை கொடுக்கப்படும்.ஒதுங்கி நிற்பதற்காக எச்சரித்து மஞ்சள் அட்டை காட்டக் கூடாது.
12.தடை செய்யப்பட்ட விளையாட்டும் முறை தவறிய விளையாட்டும்உதைபந்தாட்டத்தில் விளையாட்டு வீரர்களால் விடப்படும் தவறுகளும் முறையற்ற விளையாட்டுக்களும் மத்தியஸ்த்தரால் தண்டிக்கப்படுகின்றன.நேரடி இலவச உதை.உதைபந்து விளையாட்டில் இருக்கும் போது ஒரு வீரர் விளையாட்டுமைதானத்தில் வைத்து.....எதிரணி வீரரை1.உதைத்தால்,2.கால்களைக் குறூக்கே வைத்தால்,3.அவரின் மேல் பாய்ந்தால்,4.தோழோடு பலமாக முட்டினால், 5.மோதினால்,6.தள்ளினால்,7.பிடித்து இழுத்தால்,8.கைகளால் பந்தைப் பிடித்தால்,(16 மீ எல்லைக்குள் கோல்க் காப்பாளர் விதிவிலக்கு)9.அடித்தால்,அடிக்க முயற்சித்தால்,10.துப்பினால்,எதிரணியினருக்கு நேரடியான இலவச உதை வழங்கப்படும்.தண்டனை உதை.மேலே குறிப்பிட்ட 10 முறைகேடுகளும் உதைபந்து விளையாட்டில் இருக்கும் போது(உதைபந்து மைதானத்தின் எந்த ஒரு மூலையில் விளையாடப்பட்டுக்கொண்டிருந்தாலும்) ஒரு வீரரால் அவருக்குரிய 16 மீ எல்லைக்குள் வைத்து எதிரணி வீரர்களின் மேல் செய்யப்பட்டால் எதிரணிக்குத் தண்டனை உதை வழங்கப்படும்.நேரடியற்ற இலவச உதை.கோல்க் காப்பாளருக்கு எதிராக அவர்- 6 நொடிகளுக்கு மேல் உதைபந்தைக் கைகளில் பிடித்து வைத்திருந்தால்-கைகளால் பிடித்த உதைபந்தை மைதானத்தில் இட்டு விட்டு வேறு வீரர்கள் அதைத் தொடமுன் மீண்டும் ஒருமுறை பிடித்தால்- தனது அணியின் வீரர் ஒருவர் திட்டமிட்டுத் தன்னை நோக்கி உதைக்கும் பந்தை கைகளால் தொட்டால் -தனது அணியின் வீரர் ஒருவர் திட்டமிட்டுத் தன்னை நோக்கி வெளிக்கோட்டில் இருந்து கைகளால் எறியும் பந்தை கைகளால் தொட்டால்நேரடியற்ற இலவச உதை வழங்கப்படும்.ஒரு விளையாட்டு வீரருக்கு எதிராக அவர்-ஆபத்தாக விளையாடினால்-ஒரு விளையாட்டு வீரர் ஓடுவதைத் தடுத்தால்-கோல்க் காப்பாளர் உதைபந்தை கைகளில் இருந்து விடும் போது தடுத்தால்-மேலே கூறப்படாத ஏதாவது ஒரு காரணத்திற்காக விளையாட்டை நிறுத்திய மத்தியஸ்த்தரிடமிருந்து மஞ்சள் அல்லது சிவப்பு அட்டையைப் பெற்றுக் கொண்டால்நேரடியற்ற உதை வழங்கப்படும்.

முன்பு பந்து காப்பாளர்( கோல்கீப்பர்) தான் பிடித்த பந்தை கனநேரம் கையில் வைத்திருக்க மாட்டார். அம மாதிரியான சந்தர்ப்பங்களில் தரையில் பந்தை தட்டித் தட்டி தான் விரும்பிய இடத்துக்கு பந்தை உதைப்பார், இப்போதெல்லாம் பந்தை கன நேரம் கையிலே வைத்திருக்கிறார்கள் முன்பு கோல்க் காப்பாளர் எத்தனை தரமும் பந்தை மைதானத்தில்ப் போட்டுவிட்டு மீண்டும் திரும்பக் கைகளால் பிடிக்கலாம் என்ற விதிமுறை இருந்தது.முன்னிலையில் நிற்கும் அணியினர் இந்த விதிமுறையினால் தங்களுக்குச் சாதகமாக நேரத்தைக் கடத்தியதால் விதிமுறை மாற்றப்பட்டதுபந்தைக் கைகளில் வைத்துக் கொண்டு ஒரு சில காலடிகளுக்கு மேல் எடுத்து வைக்கக்கூடாது என்றும் விதிமுறை இருந்தது.இதையும் மத்திய்ஸ்த்தர்களுக்கு இலகுவான முறையில் 6 நொடிகளுக்கு மேல் காப்பாளார் பந்தைக் கைகளில் வைத்திருக்கக் கூடாது என்று மாற்றி விட்டார்கள்.இந்த 6 நொடிகளுக்கிடையில் காப்பாளர் எத்தனை காலடிகளையும் எடுத்து வைக்கலாம்.
Quote
பனியன் கிழிபடும் அளவு இழுத்து தள்ளுப் படுகினம், இதையும் நடுவர் அதிகம் கண்டு கொள்வதில்லை!விதிமுறைகளைக் கடுமையாகக் கடைப் பிடிக்கும் மத்தியஸ்த்தர்கள் இதை கவனிப்பார்கள்.அதே வேளையில் விளையாட்டின் தரத்தையும் கருத்தில் கொள்ளும் மத்தியஸ்த்தர்களும் உண்டு.விதிமுறைகளை மென்மையாகக் கடைப் பிடிப்பவர்களும் உண்டு.
Quote
முன்பு பந்து காப்பாளர் பெரிய சதுரக் கோட்டைத் தாண்டி வர மாட்டார். இப்போது முழு மைதானத்துக்கும் போய் வருகிறார். இது சரியா?எனக்குத் தெரிந்தவரைக்கும் கோல்க் காப்பாளர்கள் எப்போதும் எந்த நேரத்திலும் மைதானத்தின் எந்த இடத்திற்கும் சென்று வரலாம்.
விளையாட்டு வீரர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள்1.எச்சரிக்கை அட்டை (மஞ்சள்)2.இரண்டாவது எச்சரிக்கை அட்டை( மஞ்சளையடுத்து சிவப்பு)2.மைதானத்தை விட்டு வெளியேற்றும் அட்டை (சிவப்பு)மேற்கூறப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் விளையாட்டு வீரர்கள்,மாற்று விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு எதிராக மட்டும் எடுக்கப்படும்.-எச்சரிக்கை (மஞ்சள்) அட்டைஉதைபந்து விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது பந்தினைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடும் ஒரு வீரர் எதிரணி வீரரை அல்லது எதிரணி வீரரின் மேல்1.உதைத்தால்2.கால்களைக் குறுக்கே வைத்தால்3.தோழோடு பலமாக முட்டி மோதினால்4.தள்ளினால்5.பிடித்து இழுத்தால் 6.மேலே பாய்ந்தால்7.மோதினால்அல்லது8.மத்தியஸ்த்தரின் முடிவுகளை எதிர்த்தால்9.மீண்டும் மீண்டும் விதிமுறைகளை மீறினால்10.விளையாட்டின் இடை நிறுத்ததின் பின்னர் மீண்டும் தொடரும் போது நேரத்தை வீணடித்தால்11.ஒரு உதையின் போது மத்தியஸ்த்தரால் கணிக்கப்படும் பந்திற்கும் பாதுகாப்புத் தடைக்கும் இடையிலான தூரத்தை குறைக்க முயன்றால்12.மத்தியஸ்த்தரின் அனுமதியின்றி மைதானத்தில் உட்புகுந்தால்13.மத்தியஸ்த்தரின் அனுமதியின்றி மைதானத்தை விட்டு வெளியேறினால்14.கைகளினால் அடித்து ஒரு கோலைப் பெற்றால் அல்லது அவ்வாறு முயற்சித்தால் அந்த வீரருக்கு எச்சரிக்கையாக மஞ்சள் அட்டை காட்டப்படும்.(இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே
மைதானத்தை விட்டு வெளியேற்றப்படும் (சிவப்பு) அட்டைஒரு விளையாட்டு வீரர்,1. அதிகூடிய வலுவுடன் வன்மையாக எதிரணி வீரரை எதிர்த்து விளையாடினால்2.எதிரணி வீரருக்குக் காயத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாடினால்3.ஒருவரை அடித்தால் (மத்தியஸ்த்தர் உட்பட)4.ஒருவர் மீது எச்சில் துப்பினால் (மத்தியஸ்த்தர் உட்பட)5. எதிரணி வீரர் உதைக்கும் ஒரு கோலை அல்லது கோல் செல்லும் முழுமையான சந்தர்ப்பத்தைக் கைகளினால் தடுத்தால்(கோல்க் காப்பாளரைத் தவிர)6.விதிமுறைகளை மீறி அல்லது தவறான விளையாட்டுக்களால் கோல் உதைக்கச் செல்லும் வீரரைத் தடுத்தால் (எதிரணியினரது கோல்க் கம்பங்களுக்கு அண்மையாக)7.ஒருவரை இழிவாகப் பேசினால் ( மத்தியஸ்த்தர் உட்பட )8.இரண்டாவது முறையாக எச்சரிக்கை அட்டையைப் பெற்றுக் கொண்டால்சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவார்.மைதானத்தை விட்டு வெளியேற்றப்படும் வீரர் மைதானத்தின் உட்புறத்தில் இருந்தும் வெளியேற்றப்பட வேண்டும்.
உதைபந்தாட்டத்தின் போது ஒரு வீரர் இன்னொருவர் மீது ஏதாவது பொருளால் (பந்து உட்பட) எறிந்தால்...1.எதுவித எதிர் விழைவுகளும் இல்லாமல் எறிந்தால் மஞ்சள் அட்டை காட்டப்படும்2.எதிர் விழைவுகள் ஏற்படக் கூடிய வகையில் வன்மையாக அல்லது அதிகூடிய வலுவுடன் எறிந்தால் சிவப்பு அட்டை காட்டப்பட வேண்டும்.ஒரு வீரர் 16 மீ எல்லைக்குள் நிற்கும் ஒருவர் 16 மீ எல்லைக்கு வெளியே நிற்கும் ஒருவர் மீது ஒரு பொருளால் எறிந்தால் தாக்காப் பட்ட இட்த்தில் வைத்து நேரடியான உதை வழங்கப்படும். (16 மீ எல்லைக்கு வெளியே)ஒரு வீரர் 16 மீ எல்லைக்கு வெளியே இருந்து எறிந்து உள்ளே நிற்பவரைத் தாக்கினால் தண்டனை உதை வழங்கப்படும்.ஒரு வீரர் மைதானத்தின் உள்ளே நின்று மைதானத்திற்கு வெளியே நிற்கும் ஒருவர் மீது ஒரு பொருளால் எறிந்து தாக்கினால் எதிரணியிற்கு நேரடியற்ற உதை வழங்கப்பட வேண்டும்.கடைசியாகப் பந்து விளையாட்டில் இருந்த இடத்தில் இருந்து நேரடியற்ற உதை வழங்கப்படும்.ஒரு வீரர் மைதானத்திற்கு வெளியே நின்று மைதானத்தில் நிற்கும் ஒரு எதிரணி வீரர் மீது ஒரு பொருளால் எறிந்து தாக்கினால் தாக்கப்பட்ட இடத்தில் வைத்து நேரடியான உதை எதிரணிக்கு வழங்கப்படும். 16 மீ எல்லைக்குள் தாக்கப்பட்டால் தண்டனை உதை வழங்கப்பட வேண்டும்.மாற்று வீரர் ஒருவர் மைதானத்தின் வெளியே இருந்து மைதானத்தின் உள்ளே நிற்கும் ஒரு வீரர் மீது ஒரு பொருளால் எறிந்து தாக்கினால் எதிரணியினருக்கு, கடைசியாகப் பந்து
13.இலவச உதைகள்1) நேரடி இலவச உதைநேரடி உதையின் போது பந்தை நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற்றுக் கொள்ளலாம்.நேரடி இலவச உதையின் போது உதைப்பவர் பந்தை நேரடியாக தனது அணியினது கோல்க் கம்பங்களினூடாக உதைத்தால் அது எதிரணிக்கான கோலாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.அதற்காக எதிரணியினருக்கு மூலை உதை வழங்கப்படும்2) நேரடியற்ற இலவச உதைநேரடியற்ற இலவச உதையின் போது நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற முடியாது.அவ்வாறு கோல்க்கம்பங்களுக்கு இடையால் பந்து சென்றால் எதிரணியிற்கு வெளி உதை வ்ழங்கப்படும். நேரடியற்ற இலவச உதையின் போது உதைப்பவர் பந்தை நேரடியாக தனது அணியினது கோல்க் கம்பங்களினூடாக உதைத்தால் அது எதிரணிக்கான கோலாக எற்றுக்கொள்ளப்பட மாட்டாது.அதற்காக எதிரணியினருக்கு மூலை உதை வழங்கப்படும்.இலவச உதையின் போது பந்து மைதானத்தில் அசையா நிலையில் இருக்க வேண்டும்.முதலில் உதைத்தவர் மீண்டும் உதைப்பதற்கு முதலில் வேறு ஒரு வீரரால் பந்து உதைக்கப்பட்டிருக்க வேண்டும்.*ஒரு அணியினருக்கு அவர்களது 16 மீ பிரதேசத்திற்குள் இலவச உதை வழங்கப்பட்டால்...சகல எதிரணி வீரர்களும் 9 மீ தூரத்திலும்16 மீ பிரதேசத்திற்கு வெளியேயும் நிற்க வேண்டும்.16 மீ பிரதேசத்தை விட்டுப் பந்து வெளியேறிய பின்னரே மற்றவர்கள் அதை உதைக்கலாம்.5 மீ பிரதேசத்தில் பந்தை அதன் எந்தப் புள்ளியில் வைத்தும் உதைக்கலாம்.*ஒரு அணியினருக்கு எதிராக அவர்களது 16 மீ பிரதேசத்திற்குள் நேரடியற்ற இலவச உதை வழங்கப்பட்டால்...எதிரணியினர் 9 மீ தூரத்தில் நிற்க வேண்டும்5 மீ பிரதேசத்தில் கோல்க் கோடுகளுக்குச் சமாந்தரமான அதன் கோட்டில் (விதிமுறை மீறல் இடம்பெற்ற இடத்திற்கு அண்மையாக்) வைத்து உதைக்கப்படும்.இலவச உதையின் போது எதிரணியினர் 9 மீ தூரத்தக் கடைப்பிடிக்காமல் முனோக்கி நகர்ந்திருந்தால் இலவச உதை மீண்டும் உதைக்கப்படும்.(எச்சரிக்கை அட்டையும்)16 மீ க்குள் இருந்து இலவச உதை நடாத்தப்பட்டு பந்து 16 மீ ப்ரதேசத்தை விட்டு வெளியேறாவிட்டால் (வெள்ளம்,காற்று,பனிக்கட்டி)அந்த உதை மீண்டும் உதைக்கப்படும்.இலவச உதையின் போது உதைத்த வீரர், வேறு வீரர்கள் உதைக்க முன்னர் மீண்டும் உதைத்தால் எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்இலவச உதையின் போது உதைத்த வீரர், வேறு வீரர்கள் இதைக்க முன்னர் பந்தைக் கைகளால் பிடித்தால் எதிரணியினருக்கு நேரடி உதை வழங்கப்படும்16 மீ பிரதேசத்தில் அவ்வாறு கைகளால் பிடித்தால்(கோல்க் காப்பாளர் தவிர) எதிரணியினருக்கு தண்டனை உதை வழங்கப்படும்.கோல்க் காப்பாளர் 16 மீ பிரதேசத்தில் அவ்வாறு உதைத்தாலோ கைகளால் பிடித்தாலோ எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்.கோல்க் காப்பாளர் 16 மீ பிரதேசத்திற்கு வெளியே அவ்வாறு கைகளால் பிடித்தால் எதிரணியினருக்கு நேரடி உதை வழங்கப்படும்

14. தண்டனை உதை (பனால்டி)ஒரு அணியினருக்கு எதிராக தண்டனை உதை அளிப்பதற்கு முதல் மத்திய்ஸ்த்தர் அவதானிக்க வேண்டியவை:1.உதைபந்தட்டாத்தில் பந்து விளையாட்டில் இருக்க வேண்டும்2.விதிமுறை மீறல் 16 மீ எல்லைக்குள் நடைபெற்றிருக்க வேண்டும்3.ஒரு விளையாட்டு வீரர் எதிரணி வீரருக்கு எதிராக விதிமுறைகளை மீறியிருக்க வேண்டும்.கீழ்வரும் 10 காரணங்களுக்காக தண்டனை உதை வழங்கப்படும்1.உதைத்தால்,2.கால்களைக் குறூக்கே வைத்தால்,3.அவரின் மேல் பாய்ந்தால்,4.தோழோடு பலமாக முட்டினால், 5.மோதினால்,6.தள்ளினால்,7.பிடித்து இழுத்தால்,8.கைகளால் பந்தைப் பிடித்தால்,(16 மீ எல்லைக்குள் கோல்க் காப்பாளர் விதிவிலக்கு)9.அடித்தால்,அடிக்க முயற்சித்தால்,10.துப்பினால்தண்டனை உதையின் போது நேரடியாகவோ நேரடியற்றோ விதிமுறைகளுக்கு அமைவாகப் பந்தை உதைத்து ஒரு கோலைப் பெற்றுக்க் கொள்ளலாம்.தண்டனை உதையின் போது.....1)பந்து முன்னோக்கி உதைக்கப்பட வேண்டும்2)உதைப்பவர் தனது ஓட்டத்தை அல்லது நடையை இடை நிறுத்தாமல் ஒரே நகர்வில் உதைக்க வேண்டும் 3)உதைப்பவர் மத்தியஸ்த்தருக்கும் கோல்க் காப்பாளருக்கும் தன்னை விளக்கமாக அடையாளப்படுத்த வேண்டும்4)கோல்க் காப்பாளர் உதைப்பவரை நோக்கியபடி(அவர் உதைக்கும் வரை)கோல்க் கோடுகளில் எதாவது ஒரு புள்ளியைல் தனது காலை வைத்திருக்க வேண்டும். (கோல்க் கோடுகளுக்கிடையில் அசையலாம்)5)மற்றய வீரர்கள் மைதானத்தில்,16 மீ பிரதேசத்திற்கு வெளியே,தண்டனை உதைப் புள்ளிக்குப் பின்பாக,குறைந்தது 9 மீ தூரத்தில் நிற்க வேண்டும்6)உதைப்பதற்கு மத்தியஸ்த்தரின் அனுமதியைப் பெற வேண்டும்7)உதைப்பவர் இரன்டு முறை தொடர்ந்து உதைக்க முடியாது8)மத்தியஸ்த்தர் விதிமுறைகளைக் கவனித்து விளையாட்டைத் தொடர வேண்டும்.மத்தியஸ்த்தர் அனுமதி வழங்கிய பின்னர் தண்டனை உதை நடைமுறைக்குள் வரும் முன்னர் விதிமுறைகளை மீறினால்....1)உதைப்பவரோ அவரின் சக விளையாட்டு வீரர்களோ விதிமுறைகளை மீறி உதைத்த பந்து கோலிற்குள் சென்றால் அது செல்லுபடியாகாது. தண்டனை உதை மீண்டும் உதைக்கப்பட வேண்டும்.பந்து கோலிற்குள் செல்லாமல் விட்டால் விதிகளை மீறியதற்காக எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்2)கோல்க்காப்பாளரோ அல்லது அவரின் சக விளையாட்டு வீரர்களோ விதிமுறைகளை மீறிப் பந்து கோலிற்குள் சென்றால் அது கோல் என் அங்கீகரிக்கப்படும்.கோலிற்குள் செல்லாவிட்டால் தண்டனை உதை மீண்டும் உதைக்கப்படும்.3)இரு அணியினரும் ஒரே நேரத்தில் விதிமுறைகளை மீறினால் தண்டனை உதை மீண்டும் உதைக்கப்படும் .தண்டனை உதையை உதைப்பவர் தொடர்ந்து இருமுறை உதைத்தால்(வேறு வீரர்கள் உதைக்கும் முன்னர்) எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்.தண்டனை உதையை வெளி நபர்கள் தடுத்தால் மீண்டும் உதைக்கப்படும்.தண்டனை உதையின் போது உதைப்பதற்குத் தன்னை அடையாளப்படுத்திய வீரரைத் தவிர்த்து வேறு வீரர் அடிக்க முற்பட்டால் அது உடனடியாக மத்தியஸ்த்தரால் நிறுத்தப் பட்டு அவருக்கு எச்சரிக்கை அட்டை காட்டப்படும்.

15. கைகளினால் எறிதல்உதைபந்தாட்டத்தின் போது பந்து பக்கமாக இருக்கும் வெளிக்கோடுகளைத் தாண்டி மைதானத்தை விட்டு வெளியேறினால், பந்தைக் கைகளினால் மைதானத்தினுள் எறிந்து விளையாட்டுத் தொடரப்படும்.பந்து பெளியேறு முன்னர் எந்த அணி வீரர் கடைசியாகப் பந்தை விளையாடினாரோ அவரின் எதிரணி வீரர்களால் விளையாட்டுத் தொடரப்படும்.-பந்தை கைகளால் நேரடியாக கோல்க்கம்பங்களுக்குள் எறிந்து ஒரு கோலைப் பெற்றுக் கொள்ள முடியாது.-தனது கோல்க்கம்பங்களுக்குள் எறிந்தால் எதிரணிக்கு மூலை உதை வழங்கப்படும்-எதிரணியின் கோல்க்கம்பங்களுக்குள் எறிந்தால் எதிரணிக்கு வெளி உதை வழங்கப்படும்-கைகளால் எறியும் போது எதிரணி வீரர்கள் 2 மீ தூரத்தில் நிற்க வேண்டும்-ஒரு விளையாட்டு வீரர் தானே பந்தைக் கைகளால் எறிந்து விட்டு உடனடியாக தானே உதைக்க முடியாது. -அப்படி உதைத்தால் எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்-ஒரு வீரர் பந்தைக் கைகளால் எறியும் போது அவருடைய அணியைச் சேர்ந்த கோல்க் காப்பாளர் அந்தப் பந்தைக் கைகளால் பிடிக்கக் கூடாது.-மீறினால் எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்16. வெளி உதைவிளையாட்டின் போது ஒரு வீரர் பந்தை உதைத்து எதிரணியின் கோல்க் கோடுகளைத் தாண்டி மைதானத்தை விட்டு வெளியேற்றினால்(கோல் விதி விலக்கு) அந்தக் கோல்க் கோடுகளுக்கு உரிய அணியினருக்கு வெளி உதை வழங்கப்படும்-வெளி உதையின் போது உதைத்த பந்து 16 மீ பிரதேசத்தை விட்டு வெள்யேறிய பின்னரே மற்ற வீரர்கள் உதைக்கலாம்.-எதாவது காரணத்திற்காக அப்படி வெளியேறா விட்டால் வெளி உதை மீண்டும் நடாத்தப்படும்-வெளி உதையை நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற்றுக்கொள்ளலாம்(உதைப்பவரின் அணிக்குச் சார்பாக மட்டும்)17. மூலை உதைஒரு அணியினர் தனது கோல்க் கோடுகளுக்கூடாக உதைத்துப் பந்தை மைதானத்தை விட்டு வெளியேற்றினால் எதிரணிக்கு மூலை உதை வழங்கப் படும்.(கோல் விதிவிலக்கு)-முலை உதையின் போது நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற்றுக் கொள்ளலாம் (உதைப்பவரின் அணிக்குச் சார்பாக மாத்திரம்)-உதைக்கும் போது எற்கனவே இருக்கும் மூலைகம்பம் அகற்றப்படக் கூடாது-மூலை உதைக்குரிய கால் வட்டத்தின் எந்த ஒரு இடத்தில் வைத்தும் பந்து உதைக்கப்படலாம்-உதித்தவர் மீண்டும் வேறு வீரரின் உடலில் பந்து படுமுன்னர் உதைக்க கூடாது.

வெற்றியீட்டும் அணியைத் தீர்மானிக்கும் முறைஉதைபந்தாட்டத்தின் சாதரணமான 90 நிமிட நேரத்தில், விளையாடும் இரு அணியினரும் கோல்களை உதைக்காமல் விட்டாலோ அல்லது சமனான அளவில் கோல்களை உதைத்திருந்தாலோ,வெற்றியாளர் தீர்மானிக்கப்பட வேண்டியிருந்தால் விளையாட்டின் நேரம் நீடிக்கப்படும்.நீடிக்கப்படும் நேரம் அதி கூடியதாக 30 நிமிடங்கள் இருக்கும்.முதல் 15 நிமிடங்களின் பின்னர் அணியினர் மைதானத்தில் தங்கள் பகுதியை மாற்றிக் கொள்வார்கள்.நீடிக்கப்பட்ட நேரத்திலும் வெற்றியாளரைத் தீர்மானிக்க முடியாவிட்டால் 11 மீ உதை வழங்கப்படும்.-உதைக்கப்படும் பகுதியை (கோல்க்கம்பங்களை) மத்தியஸ்த்தரே தீர்மானிப்பார்.- மத்தியஸ்த்தரால் நாணயம் எறிந்து முதலில் யார் 11 மீ உதையை ஆரம்பிப்பது என்று முடிவு செய்யப்படும்-கடைசி வரை மைதானத்தில் இருந்த விளையாட்டு வீரர்களே 11 மீ உதையில் பங்கு பற்றலாம்.-விளையாட்டின் நேர நீடிப்பின் முடிவில் ஒரு அணியில் வீரர்கள் குறைக்கப்பட்டு இருந்தால் 11 மீ உதையில் அதே எண்ணிக்கையிலான வீரர்களே எதிரணியிலும் பங்கு பற்றலாம்.** உதாரணம்: 120 நிமிட விளையாட்டில் ஒரு அணியில் இருவருக்கு சிவப்பு அட்டையும் எதிரணியில் ஒருவருக்கு சிவப்பு அட்டையும் காட்டப்பட்டிருந்தால் ஒவ்வொரு அணியிலும் சமனான எண்ணிக்கையில் தலா 9 வீரர்களே (கோல்க் காப்பாளர் உட்பட )11 மீ உதையில் பங்கு பற்றாலாம் **-முதலில் ஒவ்வொரு அணிக்கும் தலா 5 உதைகள் வழங்கப்படும்.-அப்படியும் வெற்றியாளர் தீர்மானிக்கப்படா விட்டால் ஒர் அணி வெற்றி பெறும் வரை 11 மீ உதை தொடர்ந்து வழங்கப்படும்.- 11 மீ உதையின் போது கோல்க் காப்பளர் மட்டும் அவருக்கு ஏற்படும் காயங்கள் காரணமாகத் தொடர்ந்து விளையாட முடியாவிட்டால் மாற்றப்படலாம்.(அதுவரை அந்த அணியினர் தங்கள் மாற்றும் எண்ணிக்கையை மீறாவிட்டால் மட்டும்)- 11 மீ உதையின் போது கோல்க்காப்பாளர் எந்த நேரத்திலும் மைதானத்தில் இருக்கும் தன் அணி வீரர்களுடன் தன்னை மாற்றிக் கொள்ளலாம்.-தன் அணியில் மைதானத்தில் இருக்கும் சகல வீரர்களும் பங்கு பற்றிய பின்னரே ஒரு வீரர் இரண்டாவது முறையாக 11 மீ உதையில் பங்கு பற்றலாம்11 மீ உதையின் போது ஒரு அணியின் வீரர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பதற்காக மற்றைய அணியிலிருந்து ஒரு வீரர் குறைக்கப்பட வேண்டியதில்லை.(11 மீ உதையின் ஆரம்பத்தில் மட்டுமே வீரர்கள் சமனாக்கப்படுவார்கள்)

17 ஜூன், 2010

http://www.blick.ch/sport/wm2010/benaglio-verlasse-mich-auf-mein-gefuehl-௧௪௯௧௨௬
சுவிட்சர்லாந்தின் உலக தர கோலி பெனாலியோ தரும் பேட்டி
சுவிற்சர்லாந்து ஐரோப்பிய சம்பியன் ஸ்பெயினை வீழ்த்தி அதிர்ச்சியை கொடுத்தது. உலக தர வரிசையில் இரண்டாம் இடத்தில உள்ள ஐரோப்பிய சாம்பியனை ஓரு கோல் அடித்து வெட்டி பெட்ட்றது உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.கறுப்பின வீரரான கேல்சன் பெர்னாண்டஸ் ஐம்பத்து ஐந்தாம் நிமிடத்தில் சிறப்பான கோல் ஒன்றை போட்டார் .முப்பத்தாறு போட்டிகளில் எந்த அணியாலுமே வெள்ளப் பட முடியாத நாடாக இருந்து வந்த இச்பெயினை கடந்த கொண்பிடரேச கிண்ண போட்டியில் அமெரிக்க வீழ்த்தியதை தொடர்ந்து தற்ற்போது சுவிற்சர்லாந்து வெற்றி பெற்றுள்ளது.

16 ஜூன், 2010

கிரிக்கெட் ஐ.பீ.எல் போட்டிகளை இங்கே நேரடி ஒளிபரப்பில் கண்டு களிக்கலாம்

www.youtube.com.user/IPL/
உலக கிண்ண போட்டிகளில் அதிர்ச்சி முடிவுகள்
http://www.valampurii.com/online/view.php?mode=9&section=sportsnews
http://www.lankasri.eu/ta/link.php?33y6C232JS
பலமான அணிகளின் சறுக்கல்
--------------------------------------
உலககிண்ண போட்டிகளில் பலமான அணிகளாக எதிர் பார்க்கப்பட்ட ஆர்ஜெந்தீன ,பிரேசில் ,போன்றவை மயிரிழையில் சாதாரண அணிகள்ஐக் கூட வெட்டி பெற்றமை ,மற்றும் இங்கிலாந்த் ,போர்த்துக்கல் ,கமரூன் .போன்றவை வெல்லல முடியாமல் திணறி சமநிலையை எடுத்தமை ,ஆசிய அணிகளான தென்கொரியாவும் ஜப்பானும் வேறரியை பெற்றுள்ளமை உதைபந்தாட்ட உலகை அதிர்சிக்குள்ளக்கி இருக்கிறது. பிரேசில் பலமற்ற அணியாக கருதப்பட்ட வ்டகொரியவையே வெல்லல சிரமப்பட்டது.முதற்பதி நேரத்தில் கோல் போடாமலே இருந்தஹத்து. இனி வரும் நாட்களை இந்தபலமான நாடுகள் அச்சத்துடனேயே எயர் பார்த்துள்ளன.ஜெர்மனி ,நெதர்லாந்து மட்டுமே தந்து பலத்தை நிரூபித்துள்ளன. இன்று ஸ்பெயின் என்ன்ன செய்ய போக்கித் நா போரிதிருந்து பார்ப்போம்

11 ஜூன், 2010

Posted 10 May 2010 - 10:02 PM
1. உதைபந்தாட்ட மைதானம்.மைதானம் சதுரமாக இருப்பது முக்கியம். அதன் எல்லைகள் கோடுகளால் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.மைதானத்தின் நீளம் 90மீ(100யார்) முதல் 120 மீ (130 யார்)வரையும்மைதானத்தின் அகலம்45 மீ(50 யார்) முதல் 90 மீ (100 யார்) வரையும் இருக்க வேண்டும்.நாடுகளுக்கிடையில் நடைபெறும் விளையாட்டுக்களில்நீளம் 100மீ(110 யார்) முதல் 110மீ (120யார்) வரையும்அகலம் 64மீ(70யார்) முதல் 75 மீ(80 யார்) வரையும் இருக்கும்.இரு அகலக் கோடுகளை கோல் கோடுகள் என்றும் (கோல் கம்பங்களுடன் சேர்ந்து செல்வதால்)மற்றவையை பக்கக்கோடுகள் என்றும் அழைக்கலாம். பக்கக் கோடுகள் எப்போதும் அகலக் கோடுகளை விட நீளமாக இருக்க வேண்டும்.மைதானத்தின் உள்ளே சில இடங்கள் குறிப்பிட்ட பிரதேசமாக வரையறுக்கப்பட வேண்டும்மைதானம் மத்திய எல்லைக் கோட்டினால் இரு பிரதேசங்களாகவும் மற்றும்5 மீ பிரதேசம் (கோல் பிரதேசம்)16 மி பிரதேசம் (பனால்டி பிரதேசம்) எனவும் அடையாளப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.எல்லைக் கோடுகளின் அகலம் சரியாக 12 செ.மீ ஆக இருக்க வேண்டும்.கோல் கம்பங்கள் கோல் கோடுகளின் மத்தியில் நாட்டப் பட்டிருக்க வேண்டும்.அதன் உயரம் 2,44 மீஆகவும்இரு கம்பங்களுக்கும் இடையிலான அகலம் 7,32 மீ ஆகவும் இருத்தல் கட்டாயம் அவசியம்.கோல் கம்பங்களின் அகலமும் 12 செ. மீ ஆக இருக்க வேண்டும்.கம்பங்களில் வலை பொருத்தியிருக்க வேண்டும்.இல்லா விட்டால் பந்து கம்பங்களுக்கிடையால் சென்றதா இல்லையா என்று அறிவது கடினம்.2.பந்து.நிறை 410 - 450 கிரம்சுற்றளவு 68 - 70 செ.மீஅமுக்கம் 0,6 - 1,1 ஆக இருக்க வேண்டும்.16 வயதிற்குட்பட்டவர்களுக்குநிறை 350 - 390 கிரம்சுற்றளவு 63,5 - 68 செ.மீ(அளவு 4)விளையாட்டு நடை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பந்து சேதமடைந்தால் அதே இடத்தில் வைத்து மாற்றுப் பந்து மத்தியஸ்த்தரால் ஆட்டத்திற்கு விடப்படும்.விளையாட்டின் ஆரம்பம், கைகளால் எறிதல்,மூலை உதை,பனால்டி,வெளி உதை போன்ற நேரங்களில் அந்த நிகழ்வுகள் நடைபெற முன் பந்து சேதமடைந்தால் மீண்டும் அதே நிலையில் இருந்து விளையாட்டுத் தொடரும். உதாரணமாக பனால்டி உதையின் போது கோல் கம்பங்களைத் தாண்டிய பின் பந்து சேதமடைந்தால் அது கோல் ஆக அங்கீகரிக்கப்படும்.பனால்டி உதையின் போது பந்தை உதைத்த பின்னர் ஆனால் காப்பாளரைத் தாண்டி கோல் கம்பங்களுக்கிடயால் செல்லு முன் சேதமடைந்தால் மத்தியஸ்த்தரால் மாற்றுப் பந்து ஆட்டத்திற்கு விடப்படும். இன் நிகழ்வு 5 மீ பிரதேசத்தில் இடம்பெற்றால் மத்தியஸ்த்தரால் 5 மீ எல்லைக் கோட்டில் வைத்து ஆட்டத்திற்கு விடப்படும்.அவ்வாறு அவர் தேர்ந்தெடுக்கும் இடம் பந்து சேதமாகிய இடத்திற்கு மிக அண்மையாக இருக்க வேண்டும். 16 மீ ப்ரதேசத்தின் வேறு பகுதிகளில் பந்து சேதமடைந்தால் அதே இடத்தில் வைத்து மத்தியஸ்த்தரால்
வழங்கப்படும்
3. விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கைஉதைபந்தாட்டம் இரு குழுக்களிற்கிடையில் நடைபெறும்.ஒவ்வொரு குழுவிலும் அதிக பட்சம் 11 வீரர்கள் பங்கு பற்றுவர்.அந்தப் பதினொரு வீரர்களில் ஒருவர் கட்டாயம் கோல் காப்பாளராக இருக்க வேண்டும்.விளையாட்டு ஆரம்பிக்கும் போது குறைந்த பட்சம் 6 களவீரர்களும் ஒரு கோல் காப்பாளரும் ஒவ்வொரு அணியிலும் இருக்க வேண்டும்.மொத்தமாக ஒவ்வொரு அணியிலும் கோல்காப்பாளருடன் சேர்த்து 7 வீரர்கள் இல்லாவிட்டால் விளையாட்டு ஆரம்பிக்கப்படக் கூடாது.நட்பு விளையாட்டுக்களில் ஒழுங்கமைப்பாளர்கள் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவர்.மாற்று விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக 3 ஆக இருக்க வேண்டும்(16 வயதிற்குட்பட்டவர்களைத் தவிர)வேறு விளையாட்டுக்களில் அமைப்பாளர்களோ அல்லது இரு குழுவினருமோ தீர்மானித்து மத்தியஸ்த்தருக்கு கட்டாயம் அறிவிக்க வேண்டும்.சகல விளையாட்டு வீரர்களின் பெயர்களும் விளையாட்டு ஆரம்பிக்க முன்னர் மத்தியஸ்த்தரிடம் படிவத்தில் எழுதப்பட்டு கையளிக்கப்பட்டிருக்க வேண்டும்.அதில் பெயர் குறிப்பிடப்படாதவர்கள் விளையாட்டில் பங்கேற்க முடியாது.வீரர்களின் மாற்றம்.விளையாட்டு வீரர்களை மாற்றும் போது மைதானத்தின் உள்ளே புதிதாகச் செல்பவர் வெளியேறுபவர் மைதானத்தை விட்டு வெளியே வரும் வரை காத்திருக்க வேண்டும்.மைதானத்தின் நடுக்கோட்டிற்கு அண்மையாக உள்ளே செல்ல வேண்டும்.வெளியேறுபவர் கட்டாயம் நடுக்கோட்டிற்கு அண்மையாக வெளியேற வேண்டியதில்லை.முக்கியமாக மத்தியஸ்த்தரின் அனுமதி பெற வேண்டும்.அந்த நேரத்தில் இருந்து வெளியேறியவர் மாற்றப்பட்ட வீரராகின்றார்.மாற்றப்பட்டவர் விளையாட்டில் மீண்டும் பங்கு கொள்ள முடியாது.மத்தியஸ்த்தர் ஏதாவது தகுந்த காரணங்களுக்காக மாற்றப்படும் வீரருக்கு அனுமதியை மறுக்கலாம்.மாற்றப்பட்டு உள்ளே வரும் வீரர் மத்தியஸ்த்தரின் அனுமதியைப் பெறவில்லையென்றால் அவரை எச்சரித்து மஞசள் அட்டை காட்டப்படும்.களத்தில் இருக்கும் வீரர்களில் எவரும் தன் அணியில் உள்ள கோல் காப்பாளருடன் தன்னை மாற்றம் செய்து கொள்ளலாம்.இது ஒரு விளையாட்டின் இடை நிறுத்தத்தின் போது, முக்கியமாக மத்தியஸ்த்தரின் அனுமதியுடன், நடைபெற வேண்டும்.இல்லாவிட்டால் இருவருக்கும் எச்சரிக்கையாக மஞ்சள் அட்டை வழங்கப்படும்.வேறு நபர்கள் மைதானத்தில் உட்புகுந்தால்..
-----வீரர்களின் மாற்றம்.விளையாட்டு வீரர்களை மாற்றும் போது மைதானத்தின் உள்ளே புதிதாகச் செல்பவர் வெளியேறுபவர் மைதானத்தை விட்டு வெளியே வரும் வரை காத்திருக்க வேண்டும்.மைதானத்தின் நடுக்கோட்டிற்கு அண்மையாக உள்ளே செல்ல வேண்டும்.வெளியேறுபவர் கட்டாயம் நடுக்கோட்டிற்கு அண்மையாக வெளியேற வேண்டியதில்லை.அந்த நேரத்தில் இருந்து வெளியேறியவர் மாற்றப்பட்ட வீரராகின்றார்.மாற்றப்பட்டவர் விளையாட்டில் மீண்டும் பங்கு கொள்ள முடியாது.மத்தியஸ்த்தர் ஏதாவது தகுந்த காரணங்களுக்காக மாற்றப்படும் வீரருக்கு அனுமதியை மறுக்கலாம்.-------வேறு நபர்கள் மைதானத்தில்உட்புகுந்தால்..இடையூறு செய்தலோ அல்லது விளையாட்டில் ஈடுபட்டாலோ மத்தியஸ்த்தரால் விளையாட்டு உடனடியாக இடை நிறுத்தப்படும்.மேலதிகமாக உட்புகுந்தவர் எதுவித செயற்பாட்டிலும் ஈடுபடாமல் மைதானத்தின் ஒரு பகுதியில் நின்றால் விளையாட்டை உடனடியாக இடை நிறுத்துதல் அவசியம் இல்லை.அடுத்த சாதாரண இடை நிறுத்தத்தின் போது அவர் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்.அ)உட்புந்தவர் ஒரு மாற்று அல்லது மாற்றப்பட்ட விளையாட்டு வீரரானால்எச்சரிக்கையாக மஞ்சள் அட்டையும்எதிரணிக்கு நேரடியற்ற உதையும் வழங்கப்படும்இவர் அனுமதியின்றி உட்புகுந்ததைத் தவிர மேலதிகமாக இன்னும் ஒரு தண்டனைக்குரிய செயலில் ஈடுபட்டால் விளையாட்டு உடனடியாக இடை நிறுத்தப்பட்டு 1.எதிரணி வீரரை அடித்தால் சிவப்பு அட்டை காட்டப்படல் அவசியம்.2.பந்துடன் செல்லும் எதிரணி வீரரை அவரின் ஆடையில் பிடித்து மறித்தால் இரண்டு முறை எச்சரிக்கையாக மஞ்சள் உடன் சிவப்பு அட்டை காட்டப்பட்டும்.சிவப்பு / மஞ்சள்-மஞ்சள்-சிவப்பு அட்டை காட்டப்பட்டவர் மைதானத்தை விட்டும் அதன் அண்மையை விட்டும் அகற்றப்படுவார்.ஆ)உட்புகுந்தவர் மூன்றாவது நபரானால்(உதாரணம்: மத்தியஸ்த்தரால் அட்டை காட்டி வெளியேற்றப்பட்டவர்,பார்வையாளர்கள்,வளர்ப்புப் பிராணிகள் ) உடனடியாகவோ அல்லது அடுத்த இடை நிறுத்ததின் போதோ அவர்கள்(அது) வெளியேற்றப்பட வேண்டும்.உடனடியாக இடை நிறுத்தினால் மத்தியஸ்த்தர் பந்துடன் விளையாட்டுத் தொடரும்.இ) உட்புகுந்தவர் விளையாட்டுக்குழுவின் பயிற்சியாளர் அணியில் இருப்பவரானால்மேலே (ஆ)உள்ளது போல் வெளியேற்றப்படுவார்.வாய் மூல எச்சரிக்கையும் கொடுக்கப்படும்.வெளியேற மறுத்தால் ஒழுங்கமைப்பாளர்களைக் கொண்டு மைதானத்தைவிட்டு மட்டுமல்லாமல் அதன் அண்மையையும் விட்டு அகற்றப்படுவார்.அத்துடன் பயிற்சியாளர் அணியில் இருக்கும் தகுதியையும் இழக்கின்றார்.மத்தியஸ்த்தரால் உடனடியாக விளையாட்டு இடை நிறுத்தப்பட்டால் மத்தியஸ்த்தர் பந்துடன் விளையாட்டுத் தொடரும்.விளையாட்டு வீரர்களைத் தவிர வேறு யாருக்கும் சிவப்பு அல்லது மஞ்சள் அட்டை காட்டப்படக்கூடாது.மேலதிகமாக உட்புகுந்தவர் ஒரு கோலை மறித்தால்....தொடரும்...
- 09:27 PM
உடைபந்தாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மேலதிகமாக ஒருவர் மைதானத்தில் உட்புகுந்து கிடைக்க வேண்டிய ஒரு கோலைத் தடுத்தால் ....-உட்புகுந்தவர் மாற்று அல்லது மாற்றப்பட்ட விளையாட்டு வீரர்கால்களினால் உதைத்தால் மஞ்சள் அட்டை மட்டுமேகைகளினால் தடுத்தால் -- மஞ்சள்/மஞ்சள் - சிவப்பு அட்டைநேரடியற்ற உதையுடன் பந்து தடுக்கப் பட்ட இடத்திலிருந்து விளையாட்டுத் தொடரும்.-மத்தியஸ்த்தரின் அனுமதியுடன்(காயங்களுக்காக) மைதானத்தை விட்டு வெளியறிய விளையாட்டு வீரர் மீண்டும் அனுமதி பெறாமல் உட்புகுந்து 16 மீ பிரதேசத்தின் உள்ளே கைகளினால் ஒரு கோலைத் தடுத்தால் அவருக்கு சிவப்பு அட்டையும் எதிரணிக்கு தண்டனை உதையும் வழங்கப்படும்.-வேறு எவரும் மைதானத்தில் உட்புகுந்து கிடைக்கவிருந்த கோலைத் தடுத்தால் அவர் மைதானத்தை விட்டு அகற்றப்பட்டு மத்தியஸ்த்தர் பந்துடன் எந்த இடத்தில் தடுக்கப்பட்டதொ அந்த இடத்திலிருந்து(5 மீ பிரதேசத்தைத் தவிர்த்து) விளையாட்டுத் தொடரும்.ஒரு கோல் கிடைக்கும் போது மேலதிகமாக ஒரு நபர் மைதானத்தில் நின்றால்.......-அவர் மூன்றாவது நபராக இருந்து, விளையாட்டில் பங்கேற்றால்,இடைஞ்சல் செய்தால் அல்லது-அவர் கோல் அடித்தவரின் குழுவைச் சேர்ந்த வீரராக,மாற்று வீரராக,மாற்றப்பட்ட வீரராக அல்லது பயிற்சியாளராக இருந்தால் அடிக்கப்பட்ட கோல் அங்கீகரிக்கப்பட மாட்டாது. -அவர் மூன்றாவது நபராக இருந்து, விளையாட்டில் பங்கேற்காவிட்டால்,இடைஞ்சல் செய்யாவிட்டால்அல்லது-அவர் கோல் அடித்தவரின் எதிர் அணியைச் சேர்ந்த வீரராக,மாற்று வீரராக, மாற்றப்பட்ட வீரராக அல்லது பயிற்சியாளராக இருந்தால்அடிக்கப்பட்ட கோல் அங்கீகரிக்கப்படும்தொடரும்வாத்தியார்..................
0
4) உதைபந்தாட்ட வீரர்களின் ஆடை அணிகலன்கள்விளையாட்டில் ஈடுபடும் போது:-மேல்சட்டை-கால்சட்டை-காலணி-கீழ்காலின் பாதுகாப்புக் கவசம்ஆகியவற்றை அணிந்திருத்தல் கட்டாயம்.விளையாட்டு வீரர்களுக்கு ஆபத்தை அல்லது காயத்தை ஏற்படுத்தும் வேறு எந்தப் பொருட்களையும் அணிந்திருக்கக் கூடாது.( உதாரணம்: தோடு,கைவளையம்,மோதிரம்)* இரு அணியினரது களவீரர்கள் தங்கள் ஆடைகளை வேறுவேறு நிறங்களில் கோண்டிருக்க வேண்டும்* நீளமான உள்ளங்கிகள் விளையாட்டு ஆடையின் நிறத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்.* இருதரப்புக் கோல்க் காப்பாளர்களும் நீளமான கீழங்கியை அணிந்திருக்கலாம்.* கோல்க் காப்பாளர்களின் ஆடையின் நிறம் அவரின் அணியினது ஆடை நிறத்தை விட வித்தியாசமாக இருக்க வேண்டும்.* இரு கோல்க் காப்பாளர்களும் ஒரே நிறத்தில் ஆடைகளைக் கொண்டிருக்கலாம்.மத்தியஸ்த்தர் விளையாட்டின் ஆரம்பத்தின் முன்னர் இவற்றைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டு சரி செய்யப்பட வேண்டும்.விளையாட்டின்போது வீரர்களின் ஆடை அணிகளில் குறைபாடுகள் காணப்பட்டால் அடுத்த இடை நிறுத்ததின் போது அந்த வீரர் அவற்றைச் சரி செய்வதற்காக மைதானத்தை விட்டு வெளியெற்றப்படுவார்.குறைகளைச் சரி செய்த பின்னர் மத்திய


5) மத்தியஸ்த்தர்உதைபந்தாட்ட விளையாட்டுச் சம்மேளத்தினால் உருவாக்கப்பட்ட சட்டங்களையும் ஒழுங்குகளையும் கருத்திற் கொண்டும் அதனை முன்னிறுத்தியும் நடைபெறும் விளையாட்டில் யாருக்கும் பங்கம் ஏற்படாமல் அந்த விளையாட்டில் பக்கச் சார்பில்லாமலும் மத்தியஸ்த்தர் நடந்து கொள்ள வேண்டும்.- சட்டத்தையும், ஒழுங்குமுறையையும் நடைமுறைப்படுத்துதல்- பந்து மற்றும் வீரர்களின் ஆடை அணிகலன்களைச் சரி பார்த்தல்- நேரத்தைக் கண்காணித்தல்- விளையாட்டை ஏதாவ்து தகுந்த காரணங்களுக்காக இடை நிறுத்தல்(உதாரணம்: விதிமுறை மீறல்,விளையாட்டு வீரருக்கு ஏற்படும் காயம்,குருதி வழிதல்,மற்றும் வெளி நபர்கள் உட்புகுதல், அடிமழை,பனி,காற்று)- மீண்டும் தொடரல்- விதிமுறைகளை மீறுபவர்களுக்குத் தண்டனை வழங்குதல்-விளையாட்டுக் குழுக்களுக்கு விதிமுறைகளுக்கு அமையக் கிடைக்கும் கோல்களை அங்கீகரித்தல்- விதிமுறைகளை மீறி அடிக்கப்படும் கோல்களை அங்கீகரிக்காமல் விடுதல்போன்றவை மத்தியஸ்த்தரின் உரிமையும் கடமையும் ஆகும்முடிவு எப்படி இருந்தாலும் மத்தியஸ்த்தரின் முடிவே இறுதி முடிவாகும்.தனது முடிவு தவறு என்று மத்தியஸ்த்தர் உணர்ந்தால், மீண்டும் விளையாட்டுத் தொடர்வதற்கு முன்னர் அந்த முடிவை அவர் மீழப்பெறலாம்.-விளையாட்டுத் தொடரப்பட்டாலோ அல்லது விளையாட்டு முடிவடைந்தாலோ எந்த முடிவையும் மத்தியஸ்த்தர் மாற்றக் கூடாது.ஆனால் தனது தவறான முடிவை மேலதிகாரிகளுக்கோ ஒழுங்கமைப்பாளர்களுக்கொ எழுத்து மூலம் தெரிவிக்கலாம்.தொடரும்..வாத்தியார்
0

10 ஜூன், 2010

யாழ்ப்பாண விளையாட்டுச் செய்திகள் http://www.uthayan.com/Welcome/sports/
தமிழீழம் விளையாட்டு செய்திகள் http://www.valampurii.com/online/view.php?mode=9&section=sportsnews

விளையாட்டு செய்திகள் http://www.maalaimalar.com/2010/06/10104358/world-cup-football-2010.html

உதைபந்தாட்ட விதிகள் http://www.yarl.com/forum3/index.php?showtopic=71726

8 ஜூன், 2010

உலகக்கிண்ண உதைப்பந்து : பயிற்சியின் போது பல வீரர்கள் காயம்
[ செவ்வாய்க்கிழமை, 08 யூன் 2010, 07:54.13 மு.ப ]
உலகக்கிண்ண உதைப்பந்தாட்டபோட்டிகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் பல முக்கிய வீரர்கள் காயங்களுக்கு இலக்காகி உள்ளனர். [மேலும்]
செவ்வாய்க்கிழமை, 08 யூன் 2010, 07:54.13 மு.ப ]
உலகக்கிண்ண உதைப்பந்தாட்டபோட்டிகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் பல முக்கிய வீரர்கள் காயங்களுக்கு இலக்காகி உள்ளனர். [மேலும்]









Ricky Ponting




















பிந்திய செய்திகள்
தென் ஆபிரிக்க கால் பந்தாட்ட மைதானமொன்றில் இடம்பெற்ற மோதலில் 16 பேர் காயம்
[ திங்கட்கிழமை, 07 யூன் 2010, 09:29.34 மு.ப ]
உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ள தென் ஆபிரிக்காவில், மைதானமொன்றில் இடம்பெற்ற மோதலில் 16 பேர் காயமடைந்துள்ளனர். [மேலும்]
சாம்பியன் பட்டம் வென்ற நடால் தரவரிசையில் முதலிடம்
[ திங்கட்கிழமை, 07 யூன் 2010, 09:24.03 மு.ப ] []
பிரான்ஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரர் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். [மேலும்]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீராங்கனை சாதனை
[ திங்கட்கிழமை, 07 யூன் 2010, 08:55.04 மு.ப ] []
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீராங்கனை சியாவோன், அவுஸ்திரேலிய வீராங்கனை சமந்தா ஸ்டோசரை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்து இத்தாலிக்கு பெருமை சேர்த்தார். [மேலும்]
உலகின் டாப் 11 கால்பந்து வீரர்கள் : அசத்தப் போவது யாரு?
[ ஞாயிற்றுக்கிழமை, 06 யூன் 2010, 07:57.54 மு.ப ]
32 அணிகள் உலகக் கோப்பைப் போட்டியில் மோதினாலும் கூட ஒவ்வொரு அணியிலும் ஏதாவது ஒரு நட்சத்திர வீரர்தான் இருப்பார். அந்த வகையில் பார்த்தால் தற்போதைய உலக கால்பந்து அணிகளை அலசிப் பார்க்கும்போது 11 பேர் மீதுதான் ரசிகர்களின் கவனம் முழுமையாக உள்ளது. [மேலும்]
இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
[ ஞாயிற்றுக்கிழமை, 06 யூன் 2010, 07:43.08 மு.ப ]
ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது. [மேலும்]
யூனுஸ் கான் மீதான தடை நீக்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 06 யூன் 2010, 07:32.12 மு.ப ]
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்னாள் கேப்டன் யூனுஸ் கான் மீது விதித்திருந்த காலவரையரையற்ற தடையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஓய்வு பெற்ற நீதிபதி இர்ஃபான் காதிர் நீக்கம் செய்தார். [மேலும்]
உலகக் கிண்ண கால்பந்து : நடப்பு சாம்பியன் இத்தாலி, மெக்சிகோ அணியிடம் தோல்வி
[ சனிக்கிழமை, 05 யூன் 2010, 11:18.00 மு.ப ]
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் உலக சாம்பியன்களான இத்தாலி அணி 1- 2 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணியிடம் தோல்வி தழுவியது. [மேலும்]
இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் ரியோ பெர்டினன்ட் உபாதையினால் பாதிப்பு
[ சனிக்கிழமை, 05 யூன் 2010, 11:05.29 மு.ப ]
இங்கிலாந்தின் முன்னணி கால்பந்தாட்ட வீரரும், அணித் தலைவருமான ரியோ பெர்டினன்ட் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் ஹூசெய்ன் போல்ட் உபாதையினால் பாதிப்பு
[ வெள்ளிக்கிழமை, 04 யூன் 2010, 09:15.51 மு.ப ]
நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் ஹூசெய்ன் போல்ட் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
எமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் உலக கிண்ணத்தை வெல்வோம் : லயோனல் மெஸ்சி
[ வெள்ளிக்கிழமை, 04 யூன் 2010, 09:09.13 மு.ப ]
தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் 11ஆம் தேதி துவங்கவுள்ள உலகக்கோப்பைக் கால்பந்து போட்டித் தொடரில் அர்ஜென்டீனா அணிக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கோப்பையை வெல்லலாம் என்று அந்த அணியின் 'சூப்பர் ஸ்டார்' லயோனல் மெஸ்சி கூறியுள்ளார். [மேலும்]

7 ஜூன், 2010

இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இந்திய அணியில் மூன்று மாற்றமாக விஜய், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக நமன் ஓஜா, அஷ்வின், பங்கஜ்சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். மூன்று பேருக்கும் இது தான் முதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டியாகும்.
டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் தில்ஷன், முதலில் இந்தியாவை துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார். இதன்படி ஆட்டத்தை தொடங்கிய இந்தியா 50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் சேர்த்தது.
பின்னர் ஆடிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் தில்ஷன் 21 ரன்னிலும், தரங்கா 27 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். என்றாலும் 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய விக்கெட் கீப்பர் தினேஷ் சன்டிமால் நிலைத்து நின்று, தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பினார்.
புதுமுக வீரரான அவர் அவ்வப்போது பந்தை சிக்சருக்கும் விரட்டினார். இறுதியில் தனது முதலாவது சதத்தையும் நிறைவு செய்தார். அவர் 111 ரன்கள் (118 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) குவித்த நிலையில், ஸ்டம்பிங் ஆனார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த கபுகேதரா 42 ரன்கள் எடுத்தார்.
இதை தொடர்ந்து ஜீவன் மென்டிஸ் (35 ரன்), சமரவீரா (28 ரன்) ஆகியோரும் சிறப்பாக விளையாட, இலங்கை அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை நடந்த 5 ஆட்டங்களிலும் 2-வது பேட் செய்த அணியே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி இறுதிவாய்ப்பை இழந்து போட்டியை விட்டு வெளியேறியது. இந்திய அணி 4 லீக் ஆட்டத்தில் விளையாடி அதில் ஒன்றில் வெற்றியும், 3-ல் தோல்வியும் தழுவியது. இதில் ஜிம்பாப்வேயுடன் அடுத்தடுத்து இரு ஆட்டத்தில் தோற்றதும் அடங்கும்.
தலா 2 வெற்றிகளுடன் உள்ள இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கின்றன. வருகிற 9-ந்தேதி இறுதிப்போட்டி நடக்கிறது. அதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் நாளை தங்களது கடைசி லீக்கில் மோத உள்ளன. இதன் முடிவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
முன்னணி வீரர்கள் இல்லாத சுரேஷ் ரெய்னா தலைமையிலான 2-ம் தர அணியான இந்தியா அடுத்து ஜிம்பாப்வேயுடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் (ஜுன் 12 மற்றும் 13-ந்தேதி) விளையாட உள்ளது.
உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பம்

தென்னாபிரிக்காவில் ஆரம்பமாக இருக்கும் 19ஆவது உலகக்கிண்ண கால்பந்துப் போட்டிகள் ஜூன் 11ஆம் திகதி முதல் ஜூலை 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
1930 ஆம் ஆண்டு முதன்முறையாக உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் நடந்தது. அன்று முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை 18 உலகக்கிண்ண போட்டிகள் இதுவரையில் நடைபெற்றுள்ளன. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946 ஆம் ஆண்டுகளில் இப்போட்டிகள் நடத்தப்படவில்லை.
போட்டிகளில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும். போட்டியை நடத்தும் நாடு தவிர மற்ற 31 அணிகள் தகுதிச் சுற்று ஆட்டங்கள் மூலம் உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டிகள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடைபெறும்.
4ஆவது ஆண்டு முடிவில் போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் உலகக்கிண்ண போட்டியில் விளையாடும். இதுவரை நடந்த 18 போட்டிகளில் 7 நாடுகள்தான் திரும்பத் திரும்ப பீபா கிண்ணத்தை வென்றுள்ளன. பிரேசில் அதிகபட்சமாக 5 முறை சம்பியனாகியுள்ளது.
நடப்புச் சாம்பியனான இத்தாலி 4 முறையை சம்பியனாகவும், அதற்கு அடுத்த இடத்தில் ஜேர்மனி 3 முறை சம்பியான் பட்டத்தையும் வென்றுள்ளது. உருகுவே, ஆர்ஜென்டினா அணிகள் தலா 2 முறையும், இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் தலா ஒரு முறையும் பீபா கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன. இதுவரை 76 நாடுகள் ஒவ்வொரு முறையேனும் உலகக் போட்டிகளில் பங்கேற்றுள்ளன.
2006 இல் ஜேர்மனியில் நடந்த உலகக்கிண்ண போட்டியை சுமார் 71.51 கோடி மக்கள் தொலைக்காட்சியிலும், நேரிலும் கண்டுகளித்துள்ளனர். 2010 க்கு அடுத்தபடியாக 2014இல் பிரேசிலில் போட்டி நடைபெறவுள்ளது.
உலகிலுள்ள விளையாட்டுக்களில் அதிகளவு மக்களால் பார்க்கப்படும் பட்டியலில் முதலாவது இடத்தில் பீபா உலகக்கிண்ண போட்டிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டரங்கம்

இனிய தமிழ் உள்ளங்களே .இது உலகு வாழ் தமிழ் மக்களுக்கான விளையாட்டு இணையத் தளமாகும் .நன்றி.இந்த தளம் பற்றிய அறிமுகத்தை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் அறிய தாருங்கள், நன்றி