பிரான்ஸ் மற்றும் பார்சிலோனா அணிகளின் வீரர் எரிக் அபிடால் (வயது 32)கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.அவருக்கு கடந்த ஆண்டு கல்லீரலில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
ஆனாலும் அபிடாலுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது நல்லது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.அவருக்கு தனது கல்லீரலின் ஒரு பகுதியை தர அபிடாலின் நெருங்கிய நண்பர் முன்வந்தார்.
இதையடுத்து அபிடாலுக்கு நேற்று பார்சிலோனாவில் உள்ள பர்னா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது.சுமார் 8 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றியில் முடிந்தது.தற்போது அபிடால் மயக்க நிலையில் இருந்து மீண்டு வருகிறார்.அடுத்து வரும் 48 மணி நேரத்துக்கு அவரது உடல்நிலையை மிக கவனமாக கண்காணித்து வர வேண்டும் என்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக