மாநில கபடிப் போட்டி:
மணிமுத்தாறு சிறப்பு காவல்படைக்கு கோப்பை
மணிமுத்தாறு சிறப்பு காவல்படைக்கு கோப்பை
மணிமுத்தாறில் நடைபெற்ற மாநில அளவிலான சிறப்பு காவல் படை அணிகளுக்கு இடையி லான கபடிப் போட்டியில் மணி முத்தாறு 12 சிறப்பு காவல்படை அணி முதலிடமும், உளுந்தூர் பேட்டை அணி 2ஆவது இடமும் பெற்றது.
தமிழகத்தில் உள்ள சிறப்பு காவல்படை அணிகளுக்கு இடை யிலான மாநில கபடிப் போட்டி மணிமுத்தாறில் நடைபெற்றது. இப்போட்டியில் டில்லி, சென்னை, திருச்சி, ஆவடி, வீராபுரம், மதுரை, கோச்சம்பள்ளி, பழனி, மணிமுத்தாறு உள்ளிட்ட சிறப்பு காவல்படை அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
புதன்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் மணிமுத் தாறு 12 ஆவது சிறப்பு காவல் படை அணியும், உளுந்தூர் பேட்டை அணியும் விளையா டின. இதில் மணிமுத்தாறு 12 ஆவது சிறப்பு காவல்படை அணி முதலிடமும், உளுந்தூர்பேட்டை 10ஆவது சிறப்பு காவல்படை அணி 2ஆவது இடமும், சென்னை வீராபுரம் முதலாவது சிறப்பு காவல்படை அணி, திருச்சி 13ஆவது சிறப்பு காவல்படை அணிகள் 3 ஆவது இடமும் பெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மணிமுத்தாறு கவாத்து மைதானத்தில் புதன் கிழமை மாலை நடைபெற்ற விழாவில் வெற்றி பெற்ற அணி களுக்கு மணிமுத்தாறு 9 மற்றும் 12ஆவது சிறப்புகாவல்படை தலைவர் சின்னசாமி கோப்பை வழங்கி பாராட்டினார்.
டென்னிஸ்: பயஸ் இணை தோல்வி
லண்டன், நவ. 7- ஏ.டி.பி., "வேர்ல்டு டூர் பைனல்ஸ்' டென் னிஸ் தொடரின் லீக் போட்டி யில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக்குடியரசின் ரதக் ஸ்டெபானக் இணை தோல்வி அடைந்தது.
லண்டனில், ஏ.டி.பி., "வேர்ல்டு டூர் பைனல்ஸ்' டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் ஏ.டி.பி., ரேங்கிங்கில் (தரவரிசை) ஒற்றையர் மற்றும் இரட்டை யரில் "டாப்-8' வரிசையில் உள்ள வீரர்கள் விளையாடுகின்றன.
இரட்டையருக்கான "பி' பிரிவில் முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக்குடி யரசின் ரதக் ஸ்டெபானக் இணை, நேற்று முதல் நாள் நடந்த 2ஆவது போட்டியில், ஸ்பெயினின் டேவிட் மாரிரோ, பெர்ணான்டோ வெர்டஸ்கோ இணையை எதிர்கொண்டது.
முதல் செட்டை 4-6 என இழந்த பயஸ் இணை, "டை பிரேக்கர்' வரை சென்ற இரண் டாவது செட்டை 6-7 எனக் கோட்டைவிட்டது. முடிவில் பயஸ்-ஸ்டெபானக் இணை 4-6, 6-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
கால்பந்து: புனே அணி வெற்றி
புனே, நவ. 7- பெங்களூரு அணிக்கு எதிரான அய்-லீக் போட்டியின் 9ஆவது சுற்றில் புனே அணி வெற்றி பெற்றது.
இந்தியாவில் அய்-லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் 9ஆவது சுற்றில் புனே, பெங்களூரு அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்க வில்லை. விறுவிறுப்பான இரண்டாவது பாதியில் (71ஆவது நிமிடம்) புனே அணியின் ஜேம்ஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு எதிரணியால் பதிலடி தர முடியவில்லை. முடிவில், புனே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Add new comment