12 நவ., 2013

மாநில கபடிப் போட்டி:
மணிமுத்தாறு சிறப்பு காவல்படைக்கு கோப்பை
மணிமுத்தாறில் நடைபெற்ற மாநில அளவிலான சிறப்பு காவல் படை அணிகளுக்கு இடையி லான கபடிப் போட்டியில் மணி முத்தாறு 12 சிறப்பு காவல்படை அணி முதலிடமும், உளுந்தூர் பேட்டை அணி 2ஆவது இடமும் பெற்றது.
தமிழகத்தில் உள்ள சிறப்பு காவல்படை அணிகளுக்கு இடை யிலான மாநில கபடிப் போட்டி மணிமுத்தாறில் நடைபெற்றது. இப்போட்டியில் டில்லி, சென்னை, திருச்சி, ஆவடி, வீராபுரம், மதுரை, கோச்சம்பள்ளி, பழனி, மணிமுத்தாறு உள்ளிட்ட சிறப்பு காவல்படை அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
புதன்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் மணிமுத் தாறு 12 ஆவது சிறப்பு காவல் படை அணியும், உளுந்தூர் பேட்டை அணியும் விளையா டின. இதில் மணிமுத்தாறு 12 ஆவது சிறப்பு காவல்படை அணி முதலிடமும், உளுந்தூர்பேட்டை 10ஆவது சிறப்பு காவல்படை அணி 2ஆவது இடமும், சென்னை வீராபுரம் முதலாவது சிறப்பு காவல்படை அணி, திருச்சி 13ஆவது சிறப்பு காவல்படை அணிகள் 3 ஆவது இடமும் பெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மணிமுத்தாறு கவாத்து மைதானத்தில் புதன் கிழமை மாலை நடைபெற்ற விழாவில் வெற்றி பெற்ற அணி களுக்கு மணிமுத்தாறு 9 மற்றும் 12ஆவது சிறப்புகாவல்படை தலைவர் சின்னசாமி கோப்பை வழங்கி பாராட்டினார்.


டென்னிஸ்: பயஸ் இணை தோல்வி
லண்டன், நவ. 7- ஏ.டி.பி., "வேர்ல்டு டூர் பைனல்ஸ்' டென் னிஸ் தொடரின் லீக் போட்டி யில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக்குடியரசின் ரதக் ஸ்டெபானக் இணை தோல்வி அடைந்தது.
லண்டனில், ஏ.டி.பி., "வேர்ல்டு டூர் பைனல்ஸ்' டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் ஏ.டி.பி., ரேங்கிங்கில் (தரவரிசை) ஒற்றையர் மற்றும் இரட்டை யரில் "டாப்-8' வரிசையில் உள்ள வீரர்கள் விளையாடுகின்றன.
இரட்டையருக்கான "பி' பிரிவில் முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக்குடி யரசின் ரதக் ஸ்டெபானக் இணை, நேற்று முதல் நாள் நடந்த 2ஆவது போட்டியில், ஸ்பெயினின் டேவிட் மாரிரோ, பெர்ணான்டோ வெர்டஸ்கோ இணையை எதிர்கொண்டது.
முதல் செட்டை 4-6 என இழந்த பயஸ் இணை, "டை பிரேக்கர்' வரை சென்ற இரண் டாவது செட்டை 6-7 எனக் கோட்டைவிட்டது. முடிவில் பயஸ்-ஸ்டெபானக் இணை 4-6, 6-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது.



கால்பந்து: புனே அணி வெற்றி
புனே, நவ. 7- பெங்களூரு அணிக்கு எதிரான அய்-லீக் போட்டியின் 9ஆவது சுற்றில் புனே அணி வெற்றி பெற்றது.
இந்தியாவில் அய்-லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் 9ஆவது சுற்றில் புனே, பெங்களூரு அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்க வில்லை. விறுவிறுப்பான இரண்டாவது பாதியில் (71ஆவது நிமிடம்) புனே அணியின் ஜேம்ஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு எதிரணியால் பதிலடி தர முடியவில்லை. முடிவில், புனே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா
புதுடில்லி, நவ. 6- ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன் ஷிப் ஹாக்கி போட்டி யில் இந்திய ஆடவர் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்திய அணி நேற்று தனது 3ஆவது லீக் ஆட் டத்தில் ஓமன் அணியை எதிர்கொண்டது.
துவக் கம் முதலே இந்திய வீரர் கள் பந்தை தங்கள் கட் டுப்பாட்டிற்குள் வைத் திருந்தனர்.
19ஆவது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்து இந்திய அணி யின் கோல் கணக்கை துவக்கினார். அதன்பின் னர் 30ஆவது நிமிடத்தில் தல்வீந்தர் சிங்கும், 62-வது நிமிடத்தில் அமித் ரோகிதாசும் தலா ஒரு கோல்கள் அடித்தனர்.
கடைசி வரை கடு மையாப் போராடிய ஓமன் வீரர்களின் கோல் முயற்சி வீணானது. இதனால் இறுதியில் 3-0 என்ற கோல்கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்து தனது வியாழக் கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட உள்ளது. இந் தியா தனது முதல் 2 லீக் போட்டிகளிலும் சீனா மற்றும் ஜப்பானிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

உலக டூர் டென்னிஸ்:
பெயஸ் இணை வெற்றி
லண்டன், நவ. 6- ஒற்றையர் தரவரிசையில் டாப்-8 இடங்கள் வகிக் கும் வீரர்களும், இரட் டையரில் முன்னிலை 8 இணைகளும் பங்கேற் றுள்ள ஏ.டி.பி. உலக டூர் இறுதிச் சுற்று டென் னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
இதில் ஒற்றையர் பிரி வில் 'ஏ' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் டேவிட் பெர்ரரை பந்தாடினார். இன்னும் ஒரு வெற்றி பெற்றால் ஆண்டின் இறுதிக்கான நம்பர் ஒன் இன் இடத்தை நடால் உறுதி செய்து விடுவார்.
இரட்டையர் சுற்றில் 'பி' பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், செக்குடியரசின் ராடக் ஸ்டெபனக் இணை தங் களது முதல் ஆட்டத் தில் 6-3, 5-7, 10-8 என்ற செட் கணக்கில் அலெக் சாண்டர் பெயா (பிரே சில்)-புருனே சோரஸ் (ஆஸ்திரியா) இணையை வீழ்த்தியது.

தடகள வீரர் விருது: இறுதிப் பட்டியலில் ஃபரா
இந்த ஆண்டுக்கான சிறந்த தடகள வீரர் விரு துக்கான இறுதிப் பட் டியலில் இடம் பிடித்த மூவரில், பிரிட்டனின் மோ ஃபராவும் ஒருவரா வர். இது தொடர்பான இறுதிப் பட்டியலை சர்வதேச தடகள சம் மேளனம் அறிவித்துள் ளது. அதில், ஃபரா, ஜமைக் காவின் உசைன் போல்ட் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த உயரம் தாண்டு தல் வீரர் போடன் பாண் டரென்கோ ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பி யன்ஷிப் போட்டிகளில் 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் தூர ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற 2ஆவது வீரர் என்ற சாத னையை தன்வசமாக்கி னார் ஃபரா. இது தவிர, மொனாகாவில் நடை பெற்ற 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பிரிட்டன்-அய்ரோப்பிய அளவில் புதிய சாதனை யையும் ஃபரா படைத் துள்ளார். இதனால், "2013ஆம் ஆண்டுக்கான சிறந்த தடகள வீரர்' விருது அவருக்குய கிடைக்க வாய்ப்புள்ளது.
அதேபோல், உலக சாம்பியன்ஷிப் போட்டி யில் மட்டும் 8 தங்கம் வென்ற போல்டும், இளம் வயதிலேயே சாதனை படைத்த பாண்டரென் கோவும், சிறந்த வீரர் விருதுக்கான தேர்வில் முன்னணி வகிக்கின்ற னர். இறுதி வெற்றியாளர் யார் என்பது வரும் 16ஆம் தேதி அறிவிக்கப்படும்.
யாஸ் மரினா, நவ.4- அபுதாபியில் நடந்த "கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1' கார்பந்தயத்தில், "ரெட் புல் ரேசிங்-ரெனால்ட்' அணியின் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் பிடித்தார்.
நடப்பு ஆண்டின் 17வது "கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1' கார்பந்தயம், அபுதாபியில் உள்ள யாஸ் மரினா சர்கியூட்டில் நடந்தது. நேற்று நடந்த பைன லில், அபாரமாக செயல்பட்ட "ரெட் புல் ரேசிங்-ரெனால்ட்' அணியின் ஜெர்மனி வீரர் செபாஸ் டியன் வெட்டல், முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இது இந்த ஆண்டு வெட்டல் வென்ற 11ஆவது பட்டம். ஏற்கெனவே இவர், 2011இல் 11 முறை பட்டம் வென்றார். மீதமுள்ள இரண்டு போட்டி களில் (அமெரிக்கா, பிரேசில்) வெட்டல் முதலிடம் பிடிக்கும் பட்சத்தில், ஒரே ஆண்டில் அதிக பட்டம் வென்ற சூமாக்கர் (2004இல் 13 பட்டம்) சாதனையை சமன் செய்யலாம்.
தவிர இவர், தொடர்ச்சியாக ஏழு போட்டிகளில் (பெல்ஜியம்-அபுதாபி) முதல் இடத்தை கைப்பற்றி னார். இதன்மூலம் தொடர்ச்சியாக அதிக பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில், 2ஆவது இடத்தை ஜெர்மனியின் மைக்கேல் சூமாக்கருடன் (2004) பகிர்ந்து கொண்டார். மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெட்டல் வெற்றி பெறும் பட்சத் தில், தொடர்ச்சியாக 9 பட்டம் வென்ற இத்தாலி வீரர் ஆல்பர்டோ ஆஸ்காரி சாதனையை சமன் செய்யலாம்.
இப்போட்டியில் அசத்திய "ரெட் புல் ரேசிங்-ரெனால்ட்' அணியின் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வெப்பர், இரண்டாவது இடம் பிடித்தார். மூன் றாவது இடத்தை "மெர்சிடஸ்' அணியின் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பர்க் கைப்பற்றினார்.
போர்ஸ் இந்தியா-மெர்சிடஸ்' அணிக்காக விளையாடிய ஸ்காட்லாந்து வீரர் பால் டி ரெஸ்டா 6ஆவது இடத்தையும், ஜெர்மனி வீரர் அட்ரியன் சுடில் 10ஆவது இடத்தையும் பிடித்தனர். "பெராரி' அணியின் ஸ்பெயின் வீரர் பெர்ணான்டோ அலோன்சா 5ஆவது இடம் பிடித்தார்.

உலக கோப்பை ஹாக்கி: இந்தியா தகுதி

புதுடில்லி, நவ.4- அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை ஹாக்கி தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றது.
நெதர்லாந்தில், அடுத்த ஆண்டு மே 31ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை ஆண்களுக் கான 13ஆவது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கவுள்ளது. கடந்த ஜூன் மாதம் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் நடந்த உலக ஹாக்கி லீக் தொடருக்கான அரையிறுதியில் இந்திய அணி 5ஆவது இடம் பிடித்தது. கடந்த செப்டம்பர் மாதம் மலேசியாவில் நடந்த ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், பைனலில் தோல்வி அடைந்த இந்தியா, உலக கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற, இந்திய அணி, நியூசிலாந்தில் நடந்த ஓசியானா கோப்பை தொடரை எதிர்நோக்கி காத்திருந்தது. இதில் ஏற்கனவே உலக கோப்பை தொட ருக்கு தகுதி பெற்ற, ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால், இந்திய அணி யின் இடம் உறுதியாகிவிடும் என்ற நிலையில், ஓசியானா கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதனையடுத்து இந்திய அணியின் உலக கோப்பை இடம் உறுதியானது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.அய்.எச்.,) நேற்று வெளி யிட்டது.
இதுவரை நெதர்லாந்து, பெல் ஜியம், நியூசிலாந்து, ஸ்பெயின், இங்கிலாந்து, மலேசியா, அர்ஜென் டினா, ஜெர்மனி, தென் கொரியா, ஆஸ்திரேலியா, இந்தியா உள் ளிட்ட 11 அணிகள் தகுதி பெற் றுள்ளன.
சேலம், நவ. 3- 28-ஆவது தேசிய தேகுவாண்டோ போட்டிகள் கடந்த 25, 26, 27.10.2013 ஆகிய மூன்று நாட்கள் சேலம் நெய்க்காரப்பட்டி பொன்னா கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றன. இந்திய தேகுவாண்டோ அமைப்பின் தலைவர் மாஸ்டர் பி.வி.ரமணய்யா, பொதுச் செயலாளர் மாஸ்டர் டிவிவி. பிரசாத், தமிழகப் பொதுச்செயலாளர் மாஸ்டர் ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைந்து நடத் தினர். இந்திய முழுவதிலுமிருந்து 320 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு பிரிவுகளில் அதிக பதக்கங்களை வென்று தமிழக அணி ஒட்டு மொத்த சாம்பியன் கோப் பையைக் கைப்பற்றியது. தொடர்ந்து நான்காவது முறையாக தமிழக அணி ஒட்டுமொத்த கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
காஞ்சிபுரத்திலிருந்து மூத்த பயிற்சியாளரும், காஞ்சி மாவட்ட அமைப்பின் பொருளாளருமான வி.ஜி.ஜெயக்குமார், பொதுச்செயலாளரும், பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் காஞ்சி மாவட்டத் தலைவருமான காஞ்சி கதிரவன், பயிற்சியாளர் தெ.செந்தாமரைக் கண்ணன் ஆகியோருடன் 45 போட்டியாளர்கள் பங்கேற்று 16 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலப் பதங்ககங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர் களுக்குப் பாராட்டு விழா 31.10.2013 மாலை 7 மணியளவில் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட தேகுவாண்டோ அமைப்பின் தலைவர் சிவிஎம் அ.சேகர் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று மாணவர் களைப் பாராட்டினார். பாக்ஸ்கான் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் எச்.ஆர்.மேனேசர்  சகாயராஜ், நிதி மேலாளர் கிஷோர், வழக்குரைஞர் சிவிஎம்பி.எழிலரசன் ஆகியோர் மாணவர்களைப் பாராட்டி மேலும் பல சாதனைகளை படைக்க உற்சாகப்படுத்தினர்.
தேகுவாண்டோ அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் குட்டி (எ) ஜெயக்குமார், கவிதா மெடிக்கல்ஸ் ஜீவா, சுழற்சங்கம் ஹரிஹரன் பயிற்சியாளர்கள் சி.பிரகாஷ், ப.பரணிதரன், பெரியார் பிஞ்சு உ.க. அறிவரசி, க.சக்திகுமார், த.சத்தியராஜ், தமிழ்வாணன், ராஜா, தேவதாஸ் உள்ளிட்ட ஏராளமான மாண வர்களும், பெற்றோர்களும் பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.
தங்கம் வென்றோர்: யு.கே.அறிவரசி, எஸ்.ஜே. அர்ச்சனா பாரதி, எஸ்.ஜே.அருண் விஸ்வநாத், மு.சிபி, சி.கீர்த்தி வாசன், பி.சந்தோஷ், ஜே.நந்தகுமார், ஏ.நந்தினி, சி.பிரகாஷ், டி.ராம்குமார் (இரண்டு தங்கம்), டி.திருக்குமாரன் (இரண்டு தங்கம்).
வெள்ளி வென்றோர்: எஸ்.டி.தருண், ஜி.கபிலன், எச்.கார்த்திக் குமார், இ.சரஸ்வதி. எஸ்.கௌதம், வி.அபர்னா, ஆர்.சூரியக்குமார். ஜே.பரத்வாஜ், வி.பரத், யு.கே.அறிவரசி, எஸ்.மணிகண்டன் (இரண்டு வெள்ளி), எச்.கேசவ் ராஜ்.
வெண்கலம் வென்றோர்: எஸ்.ஜே.அருண் விஸ்வநாத், பி.அஜித்குமார், என்.ரிஷட்வர்மன், என்.பாலமுருகன், எம்.விஜயசாரதி, எச்.பிருத்திவிராஜ், இ.காயத்திரி, எஸ்.ராமகிருஷ்ணன், எச்.ரதியா.

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் கால் இறுதியில் நடால்

பாரிஸ், நவ.3- பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, நம்பர் 1 வீரர் ரபேல் நடால் தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் போலந்தின் ஜெர்சி ஜானோவிக்சுடன் மோதிய நடால் 7,5, 6,4 என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு 3ஆவது சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜான் அய்ஸ்னருடன் மோதிய 2ம் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6,7 (5,7) என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் அவர் 6,7 (5,7), 6,1, 6,2 என்ற செட் கணக்கில் வென்றார்.
கொல்கத்தா, நவ.2-  ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு தங்கம் உள்பட 3 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர்.
இந்த மூன்று பதக்கங்களும் காம் பவுன்ட் பிரிவிலான போட்டியில் கிடைத்ததாகும். இப் போட்டி சீன தைபேயில் நடைபெற்று வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவிலான போட்டியில் இந்தியாவின் அபி ஷேக் வர்மா மற்றும் லில்லி சானு பூனம் இணை ஈரான் இணையை வீழ்த்தி தங்கம் வென்றது.
3 பதக்கங்களை வென்றுள்ளதன் மூலம், பதக்கப் பட்டியலில் இந்தியா 2ஆம் இடத்தைப் பிடித்தது. 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் கொரியா முதலிடத்தில் உள்ளது.
இப்போட்டி சனிக்கிழமையுடன் முடிவடைய உள்ளது. கடைசி நாளில் ரிகர்வ் பிரிவிலான போட்டி நடைபெறுகிறது. இதில், இந்திய வீரர்கள் பதக்கம் வெல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் கோஷல் தோல்வி

மான்செஸ்டர், நவ.2-  உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி யின் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் செரவ் கோஷல் தோல்வியடைந்தார்.
இப்போட்டியின் காலிறுதிக்கு முன் னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாத னையைப் படைத்த கோஷல், மேற்கொண்டு அரையிறுதிக்கு முன்னேறாதது, ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கோஷல், சர்வதேசத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள எகிப்தின் ரமி ஏஷெரை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த ஏஷெரிடம் கோஷலின் ஆட்டம் எடுபட வில்லை. இதனால், 11-9, 11-5, 11-9 என்ற நேர் செட்களில் கோஷல் தோல்வி அடைந்தார்.

ஏடிபி சேலஞ்சர்ஸ்: அரையிறுதியில் யூகி பாம்ப்ரி

புதுடில்லி , நவ.2-  ஆஸ்திரேலியாவின் ட்ரரல்கன் நகரில் நடை பெற்று வரும் சேலஞ் சர்ஸ் டென்னிஸ் போட்டியின் அரை யிறுதிச் சுற்றை எட்டியுள் ளார் இந்தியாவின் யூகி பாம்ப்ரி.
இப்போட்டியின் காலிறுதிச்சுற்றில் ஜப்பான் வீரர் டட்சுமாவுடன் பாம்ப்ரி மோதினார். இதில், 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் பாம்ப்ரி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டத்தை 1 மணி நேரம் 46 நிமிடங்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வந்தார் பாம்ப்ரி. பாம்ப்ரி, தனது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்தி ரேலி யாவின் ஜேம்ஸ் டக்வொர்த்தை எதிர்கொள்கிறார்.
சோம்தேவ், சேகத் மைனெனி: அமெரிக்கா, விர்ஜினாவில் உள்ள சர்லாட்டிஸ்வில்லே சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மனும், சேகத் மைனெனியும் முன்னேறியுள்ளனர்.
போட்டித் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள சோம்தேவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் உக்ரைனின் டெனிஸ் மால்சனாவை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் மைனெனி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் பச்சனெனை தோற்கடித்தார்.

கருத்துகள் இல்லை: