30 நவ., 2013

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு மொத்தம் 117 பதக்கங்கள்
காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் மலேசியாவின் பெனாங் நகரில் நடைபெற்றது. இதில் இளையோர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. 


இப்போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்தவண்ணம் இருந்தனர். கடைசி நாளான மேலும் 6 பதக்கங்களை பெற்றனர். 
இதன்மூலம் மொத்தம் 57 தங்கம், 39 வெள்ளி, 21 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 117 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக இளையோர் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் 16 தங்கம், 8 வெள்ளி உள்ளிட்ட 24 பதக்கங்கள் பெற்றுத் தந்தனர்.

கருத்துகள் இல்லை: