உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி
எதிர்வரும் ஆனி மாதம் 12 ம் திகதி பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க உள்ளது.
இறுதி ஆட்டம் 13 ம் திகதி ஆடி மாதம் ரியோ டெ ஜெனீரோ நகரில் நடைபெறும். பிரேசில் நாட்டின் 12 நகரங்களில் விளையாட்டுக்கள் நடைபெற உள்ளன.
பிரேசில் உதைபந்தாட்டச் சம்மேளனம் தனது நூற்றாண்டு விழாவைக் காணூம் நிலையில் இரண்டாவது முறையாக பிரேசிலில் நடைபெறும் உலகக் கிணத்திற்கான போட்டிகளுக்கு சகல நாடுகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தன.
தென் அமெரிக்காவில் இது ஐந்தாவது முறையாக நடைபெறுகின்றது.
1978 ஆம் ஆண்டில் ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்றது.
இம்முறை நடைபெறும் போட்டிகளில் ஒரு முக்கியத்துவம் உள்ளது.
நடைபெறும் விளையாட்டுக்கள் அனைத்திலும் கோல் கம்பக் கோடுகளை
அவதானிப்பதற்கான புதிய தொழில் நுட்பத்தை நடைமுறைப் படுத்துகின்றனர்.
இந்தத் தொழில் நுட்பத்தினால் மத்தியஸ்த்தர்களால் களவாடப்படும் கோல்களுக்கு இனி இடம் இருக்காது. கோல்க்கம்பக் கோடுகளை முற்றாகப் பந்து தாண்டிவிட்டால் கோல்க் கம்பத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஏழு கமெராக்களும் உடன்செயற்பட்டு ஒரு நிமிடத்தில் மத்தியஸ்த்தர் கைகளில் கட்டியிருக்கும் கருவிக்குத் தகவலை அனுப்பிவிடும்.
உலகக்கிண்ணத்திற்காக 32 நாடுகள் முதற்சுற்றில் குழு நிலையில் போட்டியிடுகின்றன.
இரண்டாவது சுற்றில் குழுநிலையில் முதல் இரண்டு இடங்களையும் பெறும்16 நாடுகள் தொடர்ந்து விளையாடும் தகுதியினைப் பெறுகின்றன.
இரண்டாவது சுற்றில் வெற்றிபெறும் 8 அணிகள் காலிறுதியிலும் தொடர்ந்து 4 அணிகள் அரையிறுதி 2 அணிகள் இறுதி ஆட்டம் எனத் தொடர்ந்து முன்னேறலாம்.
முதற்சுற்றுக்குத் தெரிவான அணிகள்
ஐரோப்பா 13 அணிகள்
பெல்ஜியம் கிரேக்கம் ரஸ்யா,பொஸ்னியாவும் ஹெர்செகோவினா,
இத்தாலி,சுவிஸ்,ஜேர்மனி,குரோசியா,ஸ்பெயின்,இங்கிலாந்து,
ஒல்லாந்து, பிரான்ஸ், போத்துக்கல்
தென் அமேரிக்கா 6 அணிகள்
பிரேசில்,ஆர்ஜென்ரீனா,சிலி,எக்குவடோர், கொலம்பியா,உருகுவே
ஆபிரிக்கா 5 அணிகள்
அல்ஜீரியா, நைஜீரியா, கானா, கமேரூன், ஐவரி கோஸ்ற்
ஆசியா 4 அணிகள்
அவுஸ்திரேலியா ஜப்பான்,ஈரான்,தென் கொரியா
வட அமேரிக்கா 4 அணிகள்
கோஸ்ரா றிக்கா , ஹொண்டூராஸ், மெக்சிக்கோ,அமேரிக்கா
குழு நிலை விபரம்
குழு ஏ
பிரேசில்,குராசியா,மெக்சிக்கோ,கமேரூன்,
குழு பி
ஸ்பெயின்,ஒல்லாந்து,சிலி,அவுஸ்திரேலியா
குழு சி
கொலம்பியா,கிரேக்கம்,ஐவரி கோஸ்ற் ,ஜப்பான்
குழு டி
உருகுவே, கோஸ்ரா றிக்கா , இங்கிலாந்து, இத்தாலி
குழு ஈ
சுவிஸ், எக்குவாடோர்,பிரான்ஸ்,ஹொண்டூராஸ்
குழு எவ்
ஆர்ஜென்ரீனா, பொஸ்னியாவும் ஹீர்செகோவினாவும்,ஈரான், நைஜீரியா
குழு ஜி
ஜேர்மனி,போத்துக்கல்,கானா,அமேரிக்கா
குழு எச்
பெல்ஜியம் ,அல்ஜீரியா, ரஸ்யா,தென் கொரியா
முதற்சுற்று
1)பிரேசில் - குராசியா
2)மெக்சிகோ - கமேரூன்
3)ஸ்பெயின் - ஒல்லாந்து
4)சிலி - அவுஸ்திரேலியா
5)கொலம்பியா - கிரேக்கம்
6)ஐவரி கோஸ்ற் - ஜப்பான்
7)உருகுவே - கோஸ்ரா றிக்கா
8)இங்கிலாந்து - இத்தாலி
9)சுவிஸ் - எக்குவாடோர்
10)பிரான்ஸ் - ஹொண்டூராஸ்
11)ஆர்ஜென்ரீனா - போஸ்னியா ஹெர்செகோவினா
12)ஈரான் - நைஜீரியா
13)ஜேர்மனி - போத்துக்கல்
14)கானா - அமேரிக்கா
15)பெல்ஜியம் - அல்ஜீரியா
16)ரஸ்யா - தென் கொரியா
17)பிரேசில் - மெக்சிக்கோ
18)கமெரூன் - குராசியா
19)ஸ்பெயின் - சிலி
20)அவுஸ்திரேலியா - ஒல்லாந்து
21)கொலம்பியா - ஐவரி கோஸ்ற்
22)ஜப்பான் - கிரேக்கம்
23)உருகுவே - இங்கிலாந்து
24)இத்தாலி - கோஸ்ரா றிக்கா
25)சுவிஸ் - பிரான்ஸ்
26)ஹொண்டூராஸ் - எக்குவாடோர்
27)ஆர்ஜென்ரீனா - ஈரான்
28)நைஜீரியா - பொஸ்னியா ஹெர்செகோவினா
29)ஜேர்மனி - கானா
30)அமேரிக்கா - போத்துக்கல்
31)பெல்ஜியம் - ரஸ்யா
32)தென் கொரியா - அல்ஜீரியா
33)கமெரூன் - பிரேசில்
34)குராசியா - மெக்சிக்கோ
35)அவுஸ்திரேலியா - ஸ்பெயின்
36)ஒல்லாந்து - சிலி
37)ஜப்பான் - கொலம்பியா
38)கிரேக்கம் - ஐவரி கோஸ்ற்
39)இத்தாலி - உருகுவே
40)கோஸ்ரா றிக்கா - இங்கிலாந்து
41)ஹொண்டூராஸ் - சுவிஸ்
42)எக்குவாடோர் - பிரான்ஸ்
43)நைஜீரியா - ஆர்ஜென்ரீனா
44)பொஸ்னியா ஹெர்செகோவினா - ஈரான்
45)அமேரிக்கா - ஜேர்மனி
46)போத்துக்கல் - கானா
47)தென் கொரியா - பெல்ஜியம்
48)அல்ஜீரியா - ரஸ்யா
இரண்டாவது சுற்று
49)வெற்றியாளர் குழு ஏ - இரண்டாமிடம் குழு பி
50)வெற்றியாளர் குழு சி - இரண்டாமிடம் -கு ழு டி
53)வெற்றியாளர் குழு ஈ - இரண்டாமிடம் குழு எவ்
54)வெற்றியாளர் குழு ஜி -இரண்டாமிடம் குழு எச்
51)வெற்றியாளர் குழு பி -இரண்டாமிடம் குழு ஏ
52)வெற்றியாளர் குழு டி - இரண்டாமிடம் குழு சி
55)வெற்றியாளர் குழு எவ் - இரண்டாமிடம் குழு ஈ
56)வெற்றியாளர் குழு எச் - இரண்டாமிடம் குழு ஜி
கால் இறுதி ஆட்டம்
57)வெற்றியாளர் 53 - வெற்றியாளர் 54
58)வெற்றியாளர் 49 - வெற்றியாளர் 50
59)வெற்றியாளர் 55 - வெற்றியாளர் 56
60)வெற்றியாளர் 51 - வெற்றியாளர் 52
அரை இறுதி ஆட்டம்
61)வெற்றியாளர் 57 - வெற்றியாளர் 58
62)வெற்றியாளர் 59 - வெற்றியாளர் 60
மூன்றாவது இடத்துக்கான ஆட்டம்
63)தோல்வியடைந்தவர் 61 - தோல்வியடைந்தவர் 62
இறுதி ஆட்டம்
64)வெற்றியாளர் 61 - வெற்றியாளர் 62