15 ஜூன், 2011


02nd Jun 2011
கோபா அமெரிக்கா:அர்ஜென்டினா அணியில் ஜேவியர் செனட்டி, கம்பியாசோ

 கோபா அமெரிக்க கால்பந்து போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜென்டினா அணியில் 35 வயது இன்டர் மிலான் கேப்டன் ஜேவியர் செனட்டி,கம்பியாசோ ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
 உலக கோப்பை போட்டிக்கு பிறகு அர்ஜென்டினா அணிக்கு செர்ஜியோ பாடிஸ்டா பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.வருகிற ஜுலை மாதம் தொடங்கவுள்ள  கோபா அமெரிக்கா கால்பந்து போட்டிக்கான 26 பேர் அடங்கிய அர்ஜென்டினா அணியை நேற்று அவர் அறிவித்தார்.இதில் 35 வயது இன்டர்மிலான் கேப்டன் ஜேவியர் செனட்டிக்கு இடம் கிடைத்துள்ளது.இவரது வயதை காரணம் காட்டி கடந்த உலக கோப்பை போட்டிக்கான அர்ஜென்டினா அணியில் சேர்க்க மரடோனா மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 மற்றொரு 35 வயது இன்டர்மிலான் மிட்பீல்டர் எஸ்டாபான் கம்பியாசோவுக்கும் கோபா அமெரிக்காவுக்கான அர்ஜென்டினா அணியில் இடம் கிடைத்துள்ளது.இவருக்கும் வாய்ப்பு வழங்க மரடோனா மறுத்தது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தவிர இளம் வீரர்கள் லயனல் மேசி, கார்லஸ் டாவஸ்,மிலிட்டோ,ஏஞ்சல் டி மரியா, ஜேவியர் மச்சரானோ, ஹீகுவான்,ஜேவியர் பஸ்டர்,பெர்னான்டோ காகோ ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
 வருகிற ஜுலை 1ந் தேதி 43வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அர்ஜென்டினாவில் தொடங்குகிறது. ஜுலை 24ந் தேதி வரை நடக்கவுள்ள இந்த போட்டியில் அர்ஜென்டினா, பிரேசில்,பொலிவியா, சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா,ஈகுவடார், மெக்சிகோ,பாரகுவே, பெரு,உருகுவே, வெனிசூலா ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன.அர்ஜென்டினாவில் உள்ள 8 நகரங்களில் போட்டி நடைபெறுகிறது.
அர்ஜென்டினா அணியின் 26 வீரர்கள்
------------------------------------------
கோல்கீப்பர்கள்-செர்ஜியோ ரமேரோ,ஜுவான் பப்லோ, மரியானோ அன்டுஜார்
தடுப்பாட்டம்-கேப்ரியல் மிலிட்டோ,இசக்கியேல் காரி,நிகோலஸ் பர்டிசோ,ஜேவியர் செனட்டி,நிகோலஸ் பார்ஜா,மார்கஸ் ரோஜா,பப்லோ சப்ளேட்டா,பேபியன் மான்சன்
நடுகளம்-ஜேவியர் மச்சரானோ,பிகிலியா,பானேகா,எஸ்டாபான் கம்பியாசோ,ஜேவியர் பஸ்டர்,டீகோ வாலேரி,பெர்னான்டோ காகோ, என்சோ பாரஸ்
முன்களம்& லயனல் மேசி,ஏஞ்சல் டி மரியா,கான்சாலோ ஹீகுவான்,இசக்கியேல் லாவேசி,கார்லஸ் டாவெஸ்,டீகோ மிலிட்டோ

கருத்துகள் இல்லை: