19 ஜூன், 2011


21 வயது ஐரோப்பியக்  கிண்ணத்தை சுவீகரிக்கும் ஆற்றல் சுவிஸ் அணிக்குக் காணப்படுகின்றது – பெர்னாட் சலான்டிஸ்

21 வயதுக்கு உட்பட்ட யூபா கால்பந்தாட்டக் கிண்ணப் போட்டித் தொடரில் வெற்றியீட்டக் கூடிய ஆற்றல் சுவிட்சர்லாந்து அணிக்குக் காணப்படுவதாக முன்னாள் பயிற்றுவிப்பாளர் பெர்னாட் சலான்டிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் புதனன்று அரையிறுதியில் செக் குடியரசு அணியுடன் மோதி வெல்லும் பட்சத்தில் இறுதியாட்டத்தில் ஸ்பெயின் அல்லது பைலோரஷ்யவுடன் மோதும் 
ஸ்பெய்ன் அணியுடன் இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து மோதக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறியுள்ளார்.
2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையில் சுவிட்சர்லாந்து 21 வயதுக்கு உட்பட்ட கால்பந்தாட்ட அணியை பெர்னாட் பயிற்றுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறைப் போட்டித் தொடரில் இலகுவில் அரையிறுதிக்கு முன்னேறக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியிலும் இலகு வெற்றியீட்டக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக முன்னாள் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்களுக்கு முன்னர் நைஜீரியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று உலக்க கிண்ணத்தை கைப்பற்றியது . அப்போது அந்த அணியில் இடம்பெற்ற வீர்களும் இந்த 21   வயது அணியில் விளையாடுகிறார்கள் 

கருத்துகள் இல்லை: