13 ஆக., 2011


ஆசிய கோப்பை ஹொக்கி: முதல் போட்டியில் இந்தியா - சீனா மோதல்
[ வெள்ளிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2011, 05:26.08 மு.ப GMT ]
ஆசிய கோப்பை ஹொக்கியில் இந்தியா தனது முதல் போட்டியில் சீனாவை சந்திக்கிறது.
இப்போட்டி சீனாவின் ஓர்டாஸில் செப்டம்பர் 3 முதல் 11ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
இதேபோல மகளிருக்கான ஆசிய ஹொக்கி சாம்பியன் போட்டி இரண்டாவது ஆண்டாக இப்போது நடைபெறவுள்ளது.
கடந்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி செப்டம்பர் 4-ல் தனது முதல் போட்டியில் கொரியாவை எதிர்கொள்கிறது.
மகளிர் பிரிவில் இந்தியா, கொரியா, ஜப்பான், சீனா ஆகிய நான்கு அணிகள் விளையாடுகின்றன.

கருத்துகள் இல்லை: