13 ஆக., 2011



துடுப்பாட்ட செய்தி
முதல் இடத்தை இழக்கப் போகும் இந்திய அணி
[ சனிக்கிழமை, 13 ஓகஸ்ட் 2011, 05:39.04 மு.ப GMT ]
உலகளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது முதலிடத்திலிருக்கும் இந்திய அணி அந்தத் தகுதியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கெதிராக எட்ஜ்பாஸ்டனில் இடம்பெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி அதிலும் தோல்வியைத் தழுவினால் முதலிடம் பறிபோகும்.
நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட்களிலும் இந்தியா ஏற்கனவே படுதோல்வியடைந்த நிலையில் உள்ளது. நடைபெற்று வரும் இந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இனிங்ஸில் 224 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
முன்னணி ஆட்டக்காரர்கள் யாரும் பெரிதாக ஓட்டங்களை பெறாத நிலையில், அணித் தலைவர் தோனி மட்டுமே உறுதியாக ஆடினார். அடுத்து ஆடி வரும் இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே உறுதியாக ஓட்டங்களைக் குவித்து 2 ஆம் நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 456 ஓட்டங்களைக் குவித்து இப்போட்டியிலும் வெற்றி பெறும் நிலையிலுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பல வீரர்கள் தொடர்ந்து காயங்கள் மற்றும் முழுமையான உடல் தகுதி இல்லாத நிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: