பெரம்பலூர் அருகே பங்காரு அடிகளார் பக்தர்களுடன் கைகலப்பு; பஸ்கள் சேதம்
First Published : 13 Aug 2011 11:57:01 AM IST
பெரம்பலூர், ஆக.13: பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடியில் இன்று காலை பங்காரு அடிகளாரின் பக்தர்களுடன் சுங்கச்சாவடியில் இருந்தவர்களுக்கு மோதல் ஏற்பட்டது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
மதுரையில் நடைபெறும் ஆன்மிக மாநாட்டுக்காக பங்காரு அடிகளார் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். உடன் சில வாகனங்களில் பக்தர்களும் சென்றனர். இன்று காலை திருமாந்துறை சுங்கச்சாவடி வழியே சென்றபோது, வழக்கம்போல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்துள்ளனர். அதில், சில வாகனங்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்திவிட்டு, சில வாகனங்களை விடுமாறு பக்தர்கள் கோரியுள்ளனர். இதில் அவர்களுக்கும் சுங்கச்சாவடியில் இருந்தவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. இதனால் கோபமுற்ற சிலர், சுங்கச்சாவடியில் உள்ள அறைக் கண்ணாடியை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதை அடுத்து, சுங்கச்சாவடியில் இருந்தவர்கள், அடிகளாரின் பக்தர்கள் வந்த பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி வாகனங்களைச் சேதப்படுத்தினராம். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக