13 ஆக., 2011



மென்பந்தாட்ட செய்தி
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி
[ சனிக்கிழமை, 13 ஓகஸ்ட் 2011, 05:43.58 மு.ப GMT ]
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
கனடாவின் மான்ட்ரியல் நகரில் ஆண்களுக்கான ஏ.டி.பி ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரான்சின் ஜோ-வில்பிரிட் டோங்காவை சந்தித்தார்.
"டை-பிரேக்கர்" வரை நீடித்த முதல் செட்டை டோங்கா 7-6 என கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட பெடரர், இரண்டாவது செட்டை 6-4 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஏமாற்றிய பெடரர் 1-6 என மோசமாக கோட்டைவிட்டார். இறுதியில் பெடரர் 6-7, 6-4, 1-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
இதன் மூலம் பெடரர் தொடர்ந்து இரண்டாவது முறையாக டோங்காவிடம் தோல்வியை சந்தித்தார். முன்னதாக சமீபத்தில் நடந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் தோல்வி அடைந்தார்.

கருத்துகள் இல்லை: