26 பிப்., 2014


சர்வதேச பாடசாலைகளின் மெய்வல்லுனர் போட்டி


இலங்கை சர்வதேச பாடசாலை விளையாட்டு சங்கம் நாடளாவிய ரீதியாக ஏற்பாடு செய்யும் 14 வது மெய்வல்லுனர் சம்பியன் கிண்ணப் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம்
23ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு (2013) நட்சத்திரங்களாக தெரிவான செல்வன் உதந்தா பண்டார மற்றும் சானிக்கா பிரனாந்து ஆகி யோர்களினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப் பட்ட 25 பாடசாலைகளைச் சார்ந்த 8 வயதிற்கு கீழ்மட்ட சுமார் 3000 போட் டியாளர்கள் இதில் பங்கு கொண்டனர். 30 போட்டிகள் நடைபெற்றன.
ஓட்டப் பந்தயம், ஈட்டி எறிதல், உயரம் பாய்தல், குறிபார்த்து சுடுதல், தூரம் பாய்தல் உட்பட பல முக்கிய போட்டிகள் காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது. இதன்போது இடம்பெறும் சகல போட்டிகளும் இலங்கை மெய் வல்லுனர் விளையாட்டு சங்கத்தின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாக நடைபெற்றது.
இதற்கான அனுசரணையினை ASIA PEARSON'S QUALIFICATIONAS INTERNATIONAL இலங்கை டெலிகொம், இலங்கை டெலிகொம் மொபிடெல் மற்றும் ரிஸ்பரி நிறுவனம் வழங்கியது.

கருத்துகள் இல்லை: