26 பிப்., 2014

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு; முதலிடத்தில் ரஷ்யா.சுவிஸ்  குழுவுக்கு சூரிச் விமான நிலையத்தில் அமோக வரவேற்ற்பு 
ரஷ்யாவின் சோச்சி நகரில் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகிய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன.


சுமார் 50 பில்லியன் யூரோக்கள் செலவில் வெகு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து 16 நாட்கள் நடைபெற்றது.

2900 வீரர்-வீராங்கனைகள் போட்டியிட்ட  இந்த போட்டியில் ரஷ்யா அதிக பதக்கங்களை வென்று பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

அதன்படி 13 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களை ரஷ்ய வீரர்- வீராங்கனைகள் கைப்பற்றியுள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய அமெரிக்க விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பெரிதாக சோபிக்க முடியாமல் நோர்வே மற்றும் கனடாவுக்கு அடுத்த மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

11 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என 26 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தை நோர்வே தக்கவைத்து கொண்டது.

மேலும் 10 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம் என 25 பதக்கங்களை பெற்ற கனடா மூன்றாவது இடத்தை பெற,   நான்காவது இடத்தை 9 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் என 28 பதக்கங்களை வென்ற அமெரிக்கா பிடித்துள்ளது.

இதற்கு அடுத்த நிலைகளில் 8 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம் என 24 பதக்கங்களை பெற்ற நெதர்லாந்தும், 8 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்ற ஜேர்மனியும், 6 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 11 பதக்கங்களை கைப்பற்றிய சுவிட்சர்லாந்தும் உள்ளன.

நிறைவு விழாவையொட்டி நடத்தப்பட்ட வண்ணமயமான வாணவேடிக்கைகளும், கண்கவரும் கலைநிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
 

கருத்துகள் இல்லை: