வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் அனைத்து வயதுப் பிரிவிலும் உடுப்பிட்டி அமெரிக்க மிசன்கல்லூரி சம்பியனாகியது.
இந்தப் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன. முதலில் இடம்பெற்ற 19 வயதுப் பிரிவினருக்கான போட்டியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியும், கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியும் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் 2:0 என்ற நேர் செற்கணக்கில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி இந்த வருடச் சம்பியனாகியது. இந்தப் பிரிவில் மூன்றாமிடத்துக்காக இடம்பெற்ற ஆட்டத்தில் தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயமும், நெல்லியடி மத்திய கல்லூரி அணியும் மோதின.
இதில் தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் 2:0 என்ற அடிப்படையில் வென்று வெற்றியைத் தமதாக்கியது. தொடர்ந்து இடம்பெற்ற 15 வயதுப் பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயமும், உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியும் மோதின.
இதில் உடுப்பிட்டி அமெரிக்கன்மிசன் கல்லூரி 2:0 என்ற நேர் செற்களில் வென்று இந்த வருட சம்பியனாகியது. இதில் இரண்டாமிடத்தை தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயமும் மூன்றாமிடத்தை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியும் பெற்றுக் கொண்டன.
அடுத்து இடம்பெற்ற 17 வயது ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன்மிசன் கல்லூரியும், தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயமும் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் உடுப்பிட்டி அ.மி. கல்லூரி அணி 25:17, 25:19 என்ற புள்ளிகள் அடிப்படை யில் 2:0 என்ற நேர் செற்களில் வென்று சம்பியனாகியது.
இந்தப் பிரிவில் மூன்றாமிடத்தைப் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி பெற்றுக் கொண்டது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக