26 பிப்., 2014

அன்னிய மண்ணில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அணித்தலைவர் டோனி, பயிற்சியாளர் பிளட்சரிடம் பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் விசாரிக்க உள்ளனர்.
கடந்த 2011ல் இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆனார் ஜிம்பாப்வேயின் டங்கன் பிளட்சர். அன்று முதல் இன்று வரை அன்னிய மண்ணில் தொடர்ந்து அடி தான் கிடைத்து வருகிறது. அதாவது இங்கிலாந்துடன் 0–4, அவுஸ்திரேலியாவுடன் 0–4 என,
டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தென் ஆப்ரிக்கா (0–1) மற்றும் பலம் குறைந்த நியூசிலாந்திலும் (0–1) கோட்டை விட்டு திரும்பியது.
இதனால், டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து டோனி, பயிற்சியாளர் பிளட்சர் என்று இருவரையம் நீக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் அன்னிய மண்ணில் இந்திய அணி சந்தித்த தொடர் தோல்விகள் குறித்து இருவரிடமும் விசாரிக்கவுள்ளதாக தெரிகிறது. தவிர, வரும் 28ம் திகதி புவனேஸ்வரில் நடக்க உள்ள பி.சி.சி.ஐ., செயற்குழு கூட்டத்திலும இப்பிரச்னை பற்றி விவாதிக்கப்பட உளளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ.,) நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், அணியின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில், எங்கு தவறு நடக்கிறது என்பதை அறிந்து, இதைச் சரிசெய்ய என்ன தேவை என்று முடிவு செய்ய வேண்டும் என்றார்.
பயிற்சியாளர் மாற்றம்கடந்த 2011 முதல் இந்திய அணிக்கு பயிற்சியாளராக உள்ள பிளட்சரின் பதவிக் காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிகிறது. அடுத்த ஆண்டு உலகக் கிண்ணத் தொடர் நடக்கவுள்ள நிலையில், ஏப்ரல் 1ம் திகதி முதல் இவரது பதவி நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையே, சமீபத்தில் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்ட பயிற்சியாளர் ஆன்டி பிளவரை, பி.சி.சி.ஐ., சார்பில், தொடர்பு கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதை மறுத்த பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் ”ஆன்டி பிளவருடன் பேசியதாக வெளிவந்த செய்திகள் முட்டாள்தனமானது. அப்படி எதுவும் நடக்கவில்லை’’ என்றார்.

கருத்துகள் இல்லை: