ஆசிய கிண்ணப் போட்டிகளில் முன்னணி வீரர்கள் பலரும் விளையாடவில்லை.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில்(ஏ.சி.சி) சார்பில் 12வது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் இன்று முதல் மார்ச் 8ம் திகதி வரை நடக்கிறது.
இதில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகளுடன் முதன்முறையாக ஆப்கானிஸ்தான் பங்கேற்கிறது.
இத்தொடரில் முன்னணி வீரர்கள் பலரும் விளையாடவில்லை.
இந்திய அணியின் அணித்தலைவர் டோனி காயம் காரணமாக பங்கேற்கவில்லை.
இலங்கை அணி- தில்சன், குலசேகரா பாகிஸ்தான் அணி- முகமது இர்பான் வங்கதேசம்- தமிம் இக்பால் காயத்தால் விலகியுள்ளனர்.
மேலும் வங்கதேச அணியின் சகீப்-அல்-ஹசன் தடை காரணமாக இரண்டு போட்டிகளில் பங்கேற்கமாட்டார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக