ஆப்பிரிக்கன் சாம்பியன்ஸ் லீக்: துனிஷீய வீரர்களை விரட்டியடித்த எகிப்து ரசிகர்கள்
ஆப்பிரிக்கன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் எகிப்து ரசிகர்கள் துனிஷீய வீரர்களை விரட்டி தாக்கியதோடு நடுவர்களையும் அடித்தனர்.இதனால் போட்டி கைவிடப்பட்டது.
ஆப்பிரிக்கன் சாம்பியன்ஸ் லீக் முதல் ரவுண்டு ஆட்டத்தில் துனிஷீயாவின் தி ஆப்பிரிக்கன் அணி எகிப்தின் ஷமாக் அணியுடன் மோதியது.இந்த போட்டி கெய்ரோவில் நடந்தது.போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.போட்டியின் போது ஷமாக் 2-1 என்று முன்னிலையில் இருந்தது.முன்னிலையில் இருந்த ஷமாக் மீண்டும் ஒரு கோல் அடித்தது.ஆனால் இதனை ஆப்சைடு என்று கூறி நடுவர் கோல் அளிக்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஷமாக் ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து ஆப்பிரிக்கன் அணி வீரர்களை தாக்கத் தொடங்கினர். மேலும் நடுவர்,லைன்ஸ்மேன்களையும் விரட்டி விரட்டி அடித்தனர். வீரர்களும் நடுவர்களும் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடத் தொடங்கினர். போட்டியை நடத்த விடாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பல் கோல்கம்பத்தை உடைத்தது. ரசிகர்களின் வன்முறையை அடுத்து இந்த போட்டி கைவிடப்பட்டது.
மைதானத்தில் போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததே, இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.இந்த சம்பவத்திற்காக எகிப்து பிரதமர் துனீஷிய மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக