1 ஏப்., 2011



வென்கடே மைதானமும் இந்திய இலங்கை அணிகளும் (சிறப்புக் கண்ணோட்டம்)
வீரகேசரி இணையம் | Views(772)
Friday 1 April 2011, 6:26 pm
    
 உலக விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை கடந்த ஒன்றரை மாதங்களுக்கும்  மேலாக தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த உலகக் கிண்ணக் கிரிக்கெட்  போட்டிகளின் நிறைவு நாளும் நெருங்கிவிட்டது. ஆம்! 10 ஆவது உலகக் கிண்ணக்  கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மும்பை வென்;கடே மைதானத்தில் நாளை  நடைபெறவுள்ளது. இதில் அடுத்த 4 வருடங்களுக்கு தாங்களே  கிரிக்கெட்டின்  ராஜாக்கள் என மார்தட்டிக் கொள்வதற்காக இலங்கையும் இந்தியாவும்  பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

 36 வருட வரலாற்றைக் கொண்ட உலகக் கிண்ணக் கிரிக்கெட்டில் இரண்டு ஆசிய  அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கமைய  மேற்கத்தைய நாடுகளின் மகத்துவமிக்க விளையாட்டாகத் திகழ்ந்த கிரிக்கெட் ஆசியாவின் ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ளது என்றால் மிகையாகாது. கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய இங்கிலாந்துக்கும் அதனை ஆண்டாண்டு காலம் ஆண்டுவந்த அவுஸ்திரேலியாவுக்கும் இம்முறை அரை இறுதிப் போட்டிவரைகூட இடமில்லை என்பதுதான் இங்கு சுவாரஸ்யமான விடயம்.

1992ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஒரு வெளிநாட்டு அணியுடன் ஆசிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றமைதான் கடந்த உலக் கிண்ணத் தொடர் வரையான வரலாறாக இருந்தது. இம்முறை அந்த வரலாறு மாற்றியமைக்கப்பட்டு நான்கில் மூன்று ஆசிய அணிகளான இந்தியாஇ பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியன அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. அதிலிருந்து இந்தியாவும் இலங்கையும் தற்போது இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

இலங்கைக்கே வெற்றிக் கிண்ணம் என்பது இலங்கை ரசிகர்களின் நம்பிக்கையாகவும் இந்தியாவுக்கே வெற்றிக் கிண்ணம் என்பது இந்திய ரசிகர்களின் கருத்தாகவுமே தற்போதுள்ளது. எனினும். உண்மையில் எவ்வணி வெற்றிபெறும் என்பதுதான் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள ஒரே கேள்வியாகும்.

இந்திய மற்றும் இலங்கை அணிகள் 1979ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை 128 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் இந்தியா 67 வெற்றிகளையும்இ இலங்கை 50 வெற்றிகளையும் பெற்றுள்ளன. எஞ்சிய 11 போட்டிகளும் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளன.

இலங்கைக்கு எதிராக இந்தியா அதிக பட்சமாக 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 414 ஓட்டங்களை 2009ஆம் ஆண்டு ராஜ்கோட்டில் குவித்துள்ளது. இது இந்திய அணி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். இந்தப் போட்டியில் பதிலளித்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 411 ஓட்டங்களைப் பெற்றது. இதுவே இந்தியாவுக்கு எதிராக இலங்கை பெற்ற அதிகபட்ச ஓட்டங்களாகும்.

2000 ஆம் ஆண்டு சார்ஜாவில் வைத்து 26.3 ஓவர்களில் 54 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தமைதான் இலங்கைக்கு எதிராகப் பெற்ற குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கை. இலங்கை அணி ஆகக்குறைவாக 1984ஆம் ஆண்டு சார்ஜாவில் 41 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

1987ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 41 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்களைக் குவித்ததே மும்பை வென்;கடே மைதானத்தில் இந்தியா பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். இதுவரை இந்த மைதானத்தில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் பெற்றுள்ளது. அவற்றில் இலங்கையை இரண்டு தடவைகள் எதிர்கொண்டு அதில் ஒரு வெற்றியையும்இ ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது.

1987ஆம் ஆண்டு இந்தியா பெற்ற 299 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடி 40 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்களைப் பெற்றதே வென்;கடே மைதானத்தில் இலங்கை பெற்ற அதிகபட்ச ஓட்டங்களாகும். இது இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த மைதானத்தில் இந்தியாவைத் தவிர்த்து மேலும் 2 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அவற்றில் ஒரு வெற்றியையும்இ ஒரு தோல்வியையும் பெற்றுள்ளது.

இம்முறை உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் கனடாவுக்கு எதிராக கடந்த மார்ச் 13ஆம் திகதி நிய+ஸிலாந்து பெற்ற 358 ஓட்டங்களே மும்பை வென்;கடே மைதானத்தில் ஓர் அணி பெற்ற ஆகக்கூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். 1998ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக பங்களாதே~; அணி 36.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றதே இம்மைதானத்தின் குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

இந்த வரலாற்றையும் மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவையும் பொறுத்தமட்டில் இந்தியாவுக்கு 55 வீத வாய்ப்பும்இ இலங்கைக்கு 45 வீத வாய்ப்பும் உள்ளன. எனினும்இ இது வரலாற்றின் வெறும் கணிப்பே தவிர அண்மைக்கால போட்டிகளின் நிலையல்ல. அந்த வகையில் இரண்டு அணிகளும் இறுதி வரை வெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டி இருக்கும் என்பதோடு இலங்கை அணியின் ஆதிக்கம் மேலோங்கவும் அதிக வாய்ப்புள்ளது.

ஏனெனில்இ இறுதிப் போட்டிகளில் இந்திய வீரர்கள் அவ்வப்போது பிரகாசிக்கத் தவறுகின்றமை வரலாறாகும். அதுவும் இலங்கையுடனான வேறு பல இறுதிப் போட்டிகளில் இந்தியா கிண்ணத்தை கோட்டை விட்ட வரலாறும் இருக்கவே செய்கின்றது. ஆகவேஇ இறுதிப் போட்டியில் இந்தியாவுக்குத்தான் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது எனக் கூறுவதில் அர்த்தமில்லை.
இரண்டு அணிகளுக்குமே சம அளவான வாய்ப்புகள் இருக்கின்றன. போட்டியன்று யார் சிறப்;பாகவும் சரியான தருணத்தில் நூறு வீதம் சிறப்பாகவும் செயற்படுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் எனலாம். இதுவே முன்னாள் ஜாம்பவான்களான மேற்கிந்தியத் தீவுகளின் கிளைவ் லொய்ட்இ இந்தியாவின் கபில் தேவ்இ பாகிஸ்தானின் இம்ரான் கான்இ இலங்கையின் அர்ஜுன ரணதுங்கஇ அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் வோ ஆகியோர் ஒருமித்துக் கூறும் கருத்தாகும். இவர்கள் அனைவருமே தாங்கள் அணித்தலைவராக இருந்த காலப்பகுதியில் தமது அணிக்கு உலக சாம்பியன் மகுடத்தை ஈட்டிக்கொடுத்தவர்கள் என்பதுதான் சிறப்பம்சம்.

எவ்வாறாயினும்இ லீக் சுற்றில் தனது கடைசிப் போட்டியான நிய+ஸிலாந்துக்கு எதிரான சவாலை மும்பை வென்;கடே மைதானத்தில் எதிர்கொண்ட இலங்கை அதில் 112 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியானது நாளைய போட்டியில் இலங்கை அணி வீரர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை.

ஆர்.கே.எஸ். 
 

உலகக் கிண்ணத்தை வெல்வது யார்? (சிறப்புக் கட்டுரை)
வீரகேசரி இணையம் | Views(785)
Friday 1 April 2011, 8:22 pm
e
    
ஆசிய அணிகளான இலங்கை மற்றும் இந்தியா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நாளை 2ஆம் திகதி மும்பையில் பரஸ்பரம் எதிர்கொள்கின்றன. 36 ஆண்டு கால உலகக் கிண்ண வரலாற்றில் இறுதிப்போட்டியில் இரு ஆசிய அணிகள் விளையாட இருப்பது இதுவே முதல் முறையாகும். எனவே கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் பதற்றத்தையும், எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்துவதாக இது அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.


இலங்கை

1996 உலகக் கிண்ண போட்டிகள் ஆரம்பிக்கும் வரை இலங்கை கிரிக்கட் அணி ஒரு போட்டியை வென்றால் அது எதிரணியின் அதிர்ச்சித் தோல்வியாகவே கணிக்கப்பட்டது, 1996 உலகக் கிண்ண 'வெற்றிக்குப் பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை ஒரு போட்டியில் தோற்றால் அதை 'இலங்கை அதிர்ச்சித் தோல்வி" என்று சொல்லும் அளவிற்கு விஸ்வரூப வளர்ச்சியை இலங்கை அடைந்த காலப்பகுதி அது. அர்ஜுன, அரவிந்த, சனத், வாஸ், முரளி என்கின்ற பஞ்சபாண்டவர்களில் ஒருவர் இல்லையென்றாலும் இலங்கை கிரிக்கட் அணி தன்னை விஸ்வரூபப்படுத்திக் காட்டியிருக்க முடியுமா? என்றால் அதற்கு இல்லை என்பதே சரியான பதிலாக இருக்கும். 1996 உலகக் கிண்ண போட்டிகளின் நாயகர்களான அர்ஜுனவும், அரவிந்தவும் 1999 உலக கிண்ண போட்டிகளில் இலங்கையின் படுதோல்விக்குப் பின்னர் கறிவேப்பிலையைப் போல தூக்கி எறியப்பட்டது வரலாறு, இன்று அந்த வரலாற்றில் வாஸ{ம், சனத்தும் உள்ளடக்கம். எனினும் சூழ்நிலைக் காரணமாக சமிந்த வாஸ் இறுதிப் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தெரிவுக்குழுவினர் சனத்தை தெரிவு செய்யாததைக் கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால், சமிந்த வாஸை தேர்வு செய்யாதது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. நீண்ட நாட்களாக இலங்கை அணியில் இடம் கிடைக்காத வாஸ் இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் சிறப்பான சகலதுறை ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெளிநாட்டு வீரர்களில் சிறந்த வீரருக்கான விருதினை வென்று தன்னை வெளிக்காட்டியிருந்தார். தற்போது இலங்கை பிராந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளில் மிகவும் சிறப்பாக பந்துவீசி எல்லோர் கவனத்தையும் ஈர்த்திருந்தார், ஆனால் இந்தப் போட்டிகளுக்கு முன்னதாகவே இலங்கை அணி தேர்வு செய்யப்பட்டது வாசினதும் இலங்கை கிரிக்கட் அணியினதும் துரதிர்~;டம்.

நுவான் குலசேகர, லசித் மலிங்க இருவருக்கும் பதிலாக சமிந்த வாஸை தேர்வு செய்ய முடியாவிட்டாலும் டில்ஹார பெர்னாண்டோவுக்குப் பதிலாக கூடவா சமிந்த வாஸை தேர்வு செய்ய முடியாது? இலங்கை ஆடுகளங்களில் குறிப்பாக பிரேமதாச ஆடுகளத்தில் வாஸ் அளவிற்கு சிறப்பாக பந்துவீசக் கூடிய பந்து வீச்சாளர் யாருமே சர்வதேச அளவில் இல்லை என்பதுதான் உண்மை. அடுத்து அண்மைக்கால இலங்கையின் நம்பிக்கை சுழல் பந்து வீச்சாளரான சுராஜ் ரன்திப் நீக்கப்பட்டு ரங்கன கேரத் சேர்க்கப்பட்டது எந்த அடிப்படையில் என்பது இன்னமும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும். அதேபோல உலகக் கிண்ண முக்கியஸ்தராக அணியில் இணைந்துள்ள சாமர சில்வா கடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தை இறுதிப் போட்டியில் வெளிப்படுத்துவாரா என்பது சந்தேகமே. எனினும் சுராஜ் ரன்தீவ் இறுதிப் போட்டியில் விளையாட அழைக்கபட்டுள்ளார்.

இப்படி அணியின் தெரிவுக்குழுவின் தெரிவின் மீது திருப்தியில்லா விட்டாலும் இருக்கும் வீரர்களை வைத்து சிறப்பான சவாலைக் கொடுக்கக் கூடிய சிறந்த அணியாக இலங்கை உள்ளதையும் மறுக்க இயலாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடுகளம், பந்துவீச்சாளர் பேதமில்லாமல் ஓட்டங்களை வேகமாக குவித்து இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்கும் டில்~hன் இலங்கையின் துடுப்பாட்ட வரிசையின் மிகப்பெரும் பலம்.  அதே நேரம் டில்~hனுடன் களமிறங்கும் சக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான உப்புல் தரங்கவை ஆரம்பத்தில் வெளியேற்றா விட்டால் தரங்கவினது ஓட்டக்குவிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.

அடுத்து மூன்றாம் இலக்கத்தில் களமிறங்கும் குமார் சங்ககாரவை அவளவு இலகுவில் வெளியேற்ற முடியாது, அட்டைபோல ஆடுகளத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சங்ககார யாராவதொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரருடன் இணைப்பாட்டத்தை ஏற்ப்படுத்தினால் இந்திய அணியின் கதை அவ்வளவுதான். தனது விக்கட்டை இழக்காமல் ஓட்டங்களைக் குவிக்கும் திறமையுடைய சங்ககார ஒருபுறத்தில் விக்கட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தனித்து நின்று கணிசமான ஓட்டங்களைப் பெற்று போட்டியை பந்து வீச்சாளர்கள் கைகளிலாவது ஒப்படைக்கக் கூடியவர். ஆரம்ப நாட்களில் மந்தமாக இருந்த ஓட்டக் குவிப்பு வேகம் ஐ.பி.எல. போட்டிகளின் பின்னர் அதிகரித்திருப்பதும் இலங்கைக்கு பலம்.


நான்காம் இலக்கத்தில் களமிறங்கும் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவின் பயிற்சி நிலை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இந்திய அணியின் பாடு திண்டாட்டமாகவும்; மோசமாக இருக்கும். வைத்தால் குடுமி; அடித்தால் மொட்டை ரகத்தைச் சேர்ந்த மஹேலவின் ஓட்டக் குவிப்பிற்கு 2003 மற்றும் 2007 உலகக் கிண்ண போட்டிகள் சான்று. தனி மனிதனாக போட்டிகளின் முடிவை மாற்றக் கூடிய திறமையுடைய மஹேலவை வந்தவுடன் வெளியேற்றாவிட்டால் பின்னர் வெளியேற்றுவது எதிரணிக்கு சிரமமாக இருக்கும். சுழல் பந்துவீச்சிற்கு மிகவும் சிறப்பாக ஆடும் மஹேலவுடன் இலங்கையின் மத்திய வரிசைக்கு பலம் சேர்க்கும் இன்னுமொரு வீரர் திலான் சமரவீர.


சாமர சில்வா, கப்புகெதர இருவரையும்விட திலான் சமரவீர ஐந்தாம் இலக்கத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். அண்மைக்காலமாக இவரது ஆட்டத்தில் ஏற்;பட்ட மிகப்பெரும் மாற்றம் இவரது வேகமான ஓட்டக் குவிப்புத்தான். நல்ல ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுக்கும் போட்டிகளைக் கொண்டு செல்வதற்கு திலான் சமரவீர மிகவும் பொருத்தமாக இருப்பார். ஆறாம் இலக்கத்தில் அஞ்சலோ மத்யூஸ் மற்றும் ஏழாம் இலக்கத்தில் திசர பெரேரா இருவரும் இறுதிநேர அதிரடிக்கு உதவக் கூடியவர்களாயினும் அவர்களில் மத்யூஸ் எதிரணியின் ஓட்டங்களை துரத்தும்போது போட்டியின் தன்மைக்கேற்ப ஆடக் கூடியவர். இந்நிலையில் மத்தியூசுக்கு அரையிறுதி போட்டியின் போது முழுங்காலில் காயம் ஏற்பட்டது. எனவே நாளைய போட்டியில் விளையாடுவது பெரும்பாலும் சந்தேகமாகவே உள்ளது. எனவே இவருக்கு பதில் வீரராக சகலதுறை ஆட்டக்காரர் சமந்தவாஸ் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பந்து வீச்சை பொறுத்தவரை 2011 உலகக் கிண்ண போட்டிகளில் மிகவும் சிறந்த பந்துவீச்சு வரிசை என்று இலங்கை அணியைச் சொல்லலாம். அனைத்து அணிகளுக்கும் சவாலாக இருக்கக் கூடிய முரளிதரன் மற்றும் லசித் மலிங்கவுடன் ஆசிய அணிகள் தவிர்த்து எந்த அணியையும் நிலைகுலைய வைக்கும் திறமையுடைய அஜந்த மென்டிஸ் அணியில் இருப்பது இலங்கைக்கு மிகப் பெரும் பலம். இவர்கள் தவிர கடந்த ஓராண்டுக்கு மேலாக தரவரிசையின் முதல் பத்து இடங்களுக்குள் இருந்து வரும் நுவான் குலசேகரவும்; சகலதுறை வீரர்களாக பந்துவீச்சில் அண்மைக்காலமாக பிரகாசிக்கும் அஞ்சலோ மத்யூஸ் மற்றும் திசர பெரேராவும் இலங்கை பந்துவீச்சு வரிசையின் பலம். 

ஆனாலும் பலமான இந்தியாவை இலங்கை எதிர்கொள்வது மிகவும் சவாலான விடயமாகத்தான் இருக்கும். 1996 உலகக் கிண்ண வெற்றியின் பின்னர் 2003 உலகக் கிண்ண போட்டிகளில் அரைஇறுதிக்கும் 2007 உலகக் கிண்ணப் போட்டிகளில் இறுதிப் போட்டிக்கும் தெரிவான இலங்கை அணி இம்முறை கிண்ணத்தை மறுபடியும் கைப்பற்றுமா? என்கின்ற கேள்விக்கு கைப்பற்றுவதற்கு தகுதியான அணிதான் என்பது சரியான பதிலாக இருக்கும்.
15 பேர் கொண்ட குழாமிலிருந்து பதினொருவர் தெரிவு 
திலகரட்ன டில்ஷான் உப்புல்; தரங்க குமார் சங்ககார (தலைவர்), (விக்கட் காப்பாளர்) மஹேல ஜெயவர்த்தன திலான் சமரவீர அஞ்சலோ மத்யூஸ் திசர பெரேரா நுவான் குலகேகர முத்தையா முரளிதரன் லசித் மலிங்க அஜந்த மென்டிஸ்
மிகுதி நால்வரும்
சாமர கப்புகெதர சாமர சில்வா டில்ஹார பெர்னாண்டோ ரங்கன ஹேரத்

இந்தியா

ஆங்கில காலனித்துவத்தின் கீழிருந்த அனைத்து நாடுகளிலும் கிரிக்கட் மோகம் இருந்தாலும் இந்தியா அளவிற்கு கிரிக்கட்மீது வெறிகொண்ட ரசிகர்கள் வேறெந்த ஆங்கில காலனித்துவத்தின் கீழிருந்த நாடுகளிலும் இல்லை என்றே சொல்லலாம். வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும்போது வீரர்களைக் கொண்டாடும் ரசிகர்கள் தோல்விகளைச் சந்திக்கும்போது தாம் கொண்டாடிய வீரர்களையே வசைபாடுமளவிற்கு கிரிககெட்டின்மீது அதீத ஈடுபாடுடையவர்கள். இப்படி கிரிக்கெட்டை ஒரு மதமாகப் பார்க்கும் இந்திய கிரிக்கட் ரசிகர்களுக்கு சொந்த நாட்டிலே உலகக் கிண்ண இறுதிப் போட்டி இடம்பெறும்போது உணர்வு எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 1983 முதல் 28 ஆண்டுகளாக உலகக் கிண்ணக் கனவுடன் காத்திருக்கும் இந்திய ரசிகர்களுக்கும்; ஒருநாள் போட்டிகளில் துடுப்பாட்டத்திற்கான அதிகமான சாதனையை தன்னகத்தே வைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு மணிமகுடமாகவும் இந்த உலகக் கிண்ணம் இந்தியாவிற்கு மிகவும் அவசியமானது.


பலமான மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி 1983 இல் தனது முதல் உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட இந்தியா அதன் பின்னர் ஐசிசி நடாத்திய சுற்றுப் போட்டிகளில் இலங்கையுடன் 2002 இல் இணை சாம்பியனாக கிண்ணத்தைப் பகிர்ந்து கொண்டதுடன்; ஐசிசியின் முதல் 20-20 உலகக் கிண்ணத்தையும் வென்றுள்ளது. 2003 உலகக் கிண்ண போட்டிகளில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணிக்கு கிண்ணத்தை வெல்வதற்கு அவுஸ்திரேலியா அனுமதிக்கவில்லை. அதேபோல அடுத்த உலகக் கிண்ண போட்டிகளில் (2007) அடுத்த சுற்றுப் போட்டிகளுக்கு முன்னேறுவதற்கு பங்களாதே~; முட்டுக்கட்டையாக இருக்குமென்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 2003 உலகக் கிண்ண போட்டிகளில் இந்தியாவின் வெளியேற்றம் பல முன்னணி வீரர்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது நினைவில் இருக்கும் என்பதால் இம்முறை இந்தியர்கள் மிகவும் அவதானமாகவே இறுதிப் போட்டியிலும் ஆடுவார்கள் என்று நம்பலாம்.

இந்திய அணியின் மிகப்பெரும் பலம் என்று சொல்வதென்றால் அது அவர்களின் ஸ்திரமான துடுப்பாட்ட வரிசைதான். அணியிலுள்ள 8 துடுப்பாட்ட வீரர்களில் ஏழு வீரர்களை அணியில் தெரிவு செய்வதே அணித் தேர்வின்போது மிகவும் சிரமமான விடயமாக இருக்கும் என்பதில் இருந்து இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையின் பலத்தை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நிலைக்கும் ஏற்றாற்போல சிறப்பான வீரர்கள் துடுப்பாட்ட வரிசையில் இருப்பது இன்னமும் சிறப்பு.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உலகின் சிறந்த ஜோடியான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்திர செவாக் இவர்கள் இருவரையும் பற்றி என்ன சொன்னாலும் அது எல்லோருக்குமே தெரிந்த விடயமாகத்தான் இருக்கும் என்பதால் இவ்விருவரையும் பற்றி அதிகமாக சொல்லத் தேவை இல்லையென்றாலும் சவாக்கை முதல் பத்து ஓவர்களுக்குள் வெளியேற்றத் தவறினால் ஏற்ப்படும் விளைவையும் சச்சின் தனது முழுமையான இனிங்;ஸ் ஒன்றை வெளிப்படுத்துவதால் ஏற்ப்படும் விளைவையும் இலங்கை அணி  அறியாமல் இல்லை என்பதால் இந்தியாவுடனான போட்டியில் இவ்விருவரையும் வெளியேற்றுவதற்குத்தான் அவ்வணியினர் அதிக சிரத்தை எடுப்பார்கள்.

வேகம், சுழல் பந்து வீச்சுகளுக்கும்; ஓப், ஓன் திசைகளிலும்; நேர்த்தியாகவும், வேகமாகவும்; போட்டியின் தன்மைக்கேற்ப துடுப்பாடக்கூடிய இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான கௌதம் கம்பீர் மூன்றாம் இலக்கத்திற்கு வலுச்சேர்க்கும் அதேநேரம் இன்னுமொரு எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமான மிகச்சிறந்த பயிற்சி நிலையிலிருக்கும் வீராட் கோளி நான்காம் இலக்கத்திற்கு சிறப்பான வீரராக இருப்பார். நான்காம் இலக்கத்திற்கு அனுபவம் குறைவான வீரராக கோளி இருப்பினும் அதுவே அவருக்கு அழுத்தமில்லாமல் ஆடுவதற்கு எதுவாக அமைந்து விடும் என்பதால் கோளி நான்காம் இலக்கத்திற்கு சரியான தெரிவாக இருப்பார்.

ஐந்தாம் இலக்கத்திற்கு யுவராஜ் சிங்கை அணியில் இணைப்பதா அல்லது சுரே~; ரெய்னாவை இணைப்பதா என்பதுதான் பிரச்சியாகவே இருந்தது. ஆனால் இத் தொடரில் யுவராஜ் அனுபவம் வாய்ந்த மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் என்ற பெயரை நிலைநாட்டினார். எனவே ஐந்தாம் இலக்கத்தில் யுவராஜ் விளையாடும் சந்தர்ப்பம் அதிகம். எனினும் இறுதிப் நாள் போட்டி அவர்களுடையதாக அமையும் பட்சத்தில் ரெய்னாவை விட யுவராஜ் சிங்கின் இனிங்க்ஸ் மிரட்டக்கூடியதாக அமையும் என்பது யாராலும் மறுக்க முடியாதது. அடுத்து கையைவிட்டுப் போன ஒரு போட்டியை மீண்டும் இந்தியாவின் கைகளுக்குள் கொண்டுவரும் ஆற்றல் படைத்த ஒரே வீரர் யுவராஜ்தான் என்பதாலும் யுவராஜ் அணியில் இருப்பது இந்திய அணிக்குத்தான் சிறப்பு.

ஆறாம் இலக்கத்தில் டோனி இன்று சிறந்த பயிற்சி நிலையில் இல்லாதது இந்தியாவிற்கு பாதகமான விடயமாக இருந்தாலும் டோனி போன்ற வீரர்களுக்கு பயிற்சி நிலையாக ஒரு போட்டி போதும் என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். டோனியுடன் சேர்ந்து இணைப்பாட்டம் கொடுப்பதற்கு யூசுப் பதான் ஏழாம் இலக்கத்தில் களமிறங்குவதும்; எட்டாம் இலக்க வீரராக களமிறங்கும் ஹர்பஜனின் அதிரடியும் இந்திய துடுப்பாட்ட வரிசையின் பலமான விடயங்கள். ஆசிய ஆடுகளங்கள் என்பதால் இந்திய அணியின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்துவது எதிரணியினருக்கு மிகவும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


துடுப்பாட்டத்தில் இந்திய அணி எப்படி பலமாக உள்ளதோ அதற்;கு நேர்மாறாக பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பில் பலவீனமாக உள்ளதுதான் இந்திய அணியின் பிரச்சினையே. சஹீர்;கான், ஹர்பஜன் சிங்; இவ்விருவரையும் நம்பித்தான் இந்திய அணியின் பந்துவீச்சு வரிசை உள்ளது. ஆடுகளங்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் சிறப்பாக பந்துவீசும் சஹீரை எல்லா நேரங்களிலும் நம்ப முடியாது. ஆசிஸ் நெஹ்ரா, முனாப் பட்டேல் போன்றவர்களை அன்றைய நாள் நன்றாக இருந்தால் மட்டுமே நம்ப முடியும். களத்தடுப்பு ஆயிரம் பெரியார் வந்தாலும்...... போன்ற விடயம் தான்.


மிகப்பெரும் ஓட்ட எண்ணிக்கையை இந்தியா குவித்தாலும், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் எதிரணியைக் கட்டுப்படுத்துவது சற்று சிரமமாகவே இருக்கும். இந்தியா ஓட்டக் குவிப்பாலும் சஹீர், ஹர்பஜன் மற்றும் பகுதிநேர சுழல் பந்து வீச்சாளர்களான N~வாக், யூசுப், சச்சின், யுவராஜ் அல்லது ரெய்னா போன்றவர்களினது துணையினாலும் எதிரணியினருக்கு மிகுந்த நெருக்கடி கொடுப்பார்கள் என்று நம்பலாம். 2011 உலக கிண்ணத்தை வெல்வதற்கு சாத்தியமான அணி என்று பலராலும் ஆரூடம் கூறப்படும் இந்தியா இத்தடவை உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
15 பேர் கொண்ட குழாமிலிருந்து பதினொருவர் தெரிவு 
சச்சின் டெண்டுல்கர் விரேந்திர செவாக் கௌதம் கம்பீர் வீராட் கோளி யுவராஜ் சிங் மகேந்திரசிங் டோனி (தலைவர்), (விக்கட் காப்பாளர்) யூசுப் பதான் ஹர்பஜன் சிங் சஹீர் கான் ஆசிஸ் நெஹ்ரா முனாப் பட்டேல்
மிகுதி நால்வரும்
சுரேஷ் ரெய்னா ரவிச்சந்திரன் அஷ்வின் பியூஸ் சாவ்லா பிரவீன் குமார்

இப்ப சொல்லுங்க, எந்த அணி கிண்ணத்தைக் கைப்பற்றும் என்று எதிர்வு கூறமுடியுமா?  கிண்ணத்தை வெல்லப்போகும் நாடு எதுவென்பதை நாளை(ஏப்ரல் 2) வரை மிகுந்த எதிர்பார்ப்புடன், பரபரப்புடன், ஒருவித பதற்றத்துடன் எதிர்பார்த்துக் காத்திருப்போம். 

கருத்துகள் இல்லை: