2022 உலக கோப்பை கால்பந்து: கத்தாரில் போட்டி நடக்க ரூ.29 கோடி லஞ்சம்
உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2010ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்தது. 2014ம் ஆண்டுக்கான உலக கோப்பை வருகிற 12–ந்தேதி பிரேசிலில் தொடங்குகிறது. 2018ம் ஆண்டுக்கான போட்டி ரஷியாவிலும், 2022ம் ஆண்டுக்கான போட்டி கத்தாரிலும் நடக்கிறது.
உலக கோப்பை போட்டியை நடத்த கத்தார் தேர்வு செய்யப்பட்ட விதம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பல ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதற்கிடையே கத்தார் நாட்டில் உலக கோப்பை போட்டியை நடத்த ரூ.29 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கத்தார் நாட்டு முன்னாள் கால்பந்து நிர்வாகி முகமது பின் ஹமான் தங்கள் நாட்டை தேர்வு செய்ய சர்வதேச கால்பந்து சம்மேளனத்துக்கு கொடுத்ததாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் பிளாட்டர் கூறும்போது, 2022 உலக கோப்பையை நடத்த கத்தார் தேர்வு செய்யப்பட்டது மிகப்பெரிய தவறு என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக