பிரெஞ்ச் ஓபெனில் நாடால் வெற்றி பெற்றார்
உலக ஹாக்கி: ஜெர்மனி வெற்றி
Read more: http://www.viduthalai.in/home/sports.html#ixzz34E8098N2
பாரிஸ், ஜூன் 9- களி மண் களமான பிரெஞ்சு ஓபனில் அசைக்க முடி யாத மன்னன் என்பதை அழுத்தமாக நிரூபித்தார் ரபெல் நடால். நேற்று நடந்த பரபரப்பான இறு திப்போட்டியில் ஜோகோ விச்சை வீழ்த்தி, தொடர்ந்து 5ஆவது முறையாக கோப்பையை வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென் னிஸ் தொடர் நடந்தது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறு திப்போட்டியில், உலகின் நம்பர்-1 வீரரான ஸ்பெயி னின் ரபெல் நடால், நம்பர்-2 இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர் கொண்டார்.
முதல் செட்டை ஜோகோவிச் 6-3 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட நடால், ஒரு மணி நேரம் நீடித்த இரண்டாவது செட்டை 7-5 என போராடி தன்வசப் படுத்தி பதிலடி கொடுத் தார்.
தொடர்ந்து அசத் திய இவர், மூன்றாவது செட்டை 6-2 என மிகச் சுலபமாக தனதாக்கினார். நான்காவது செட்டையும் 6-4 என வென்றார். மூன்று மணி நேரம், 33 நிமிடங்கள் போராட்டத் துக்குப் பின் நடால் 3-6, 7-5, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, வாகையர் பட்டத்தை கைப்பற்றினார்.
உலக ஹாக்கி: ஜெர்மனி வெற்றி
நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரில், ஆண்களுக் கான 134ஆவது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
நேற்று பி பிரிவில் நடந்த லீக் போட்டியில், ஜெர்மனி, நியூசிலாந்து அணிகள் மோதின. அபார மாக ஆடிய ஜெர்மனி அணி 5-3 என்ற கோல் கணக் கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா அணி 5-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.
இன்று ஏ பிரிவில் நடக்கும் லீக் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. பெல்ஜியம், இங்கிலாந்து அணிகளிடம் தோல்வி கண்ட இந்திய அணி, ஸ்பெயினுக்கு எதிராக டிரா செய்தது. பின், மலேசியாவை வீழ்த்திய இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி, இன்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முழுத் திறமையை வெளிப்படுத்தி 2ஆவது வெற்றி பெற முயற்சிக்கலாம்.
நட்பு கால்பந்து அர்ஜென்டினா வெற்றி
பிரேசிலில், பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 12ஆம் தேதி துவங்குகிறது. இதில் ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு அணிகளும் நட்பு ரீதியிலான சர்வதேச போட்டியில் விளையாடுகின்றன.
அர்ஜென்டினா வில் உள்ள பியுனஸ் ஏர்ஸ் நகரில் நடந்த போட்டி யில், அர்ஜென்டினா, சுலோவேனியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர் ஜென்டினா சார்பில் ரிகார்டோ அல்வரஸ் (12ஆவது நிமிடம்), லியோனல் மெஸ்சி (76ஆவது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர்.
பிரெஞ்ச் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில், நம்பர் 1 இணையான சூ வெய் ஸை (தைபே) - ஷுவாய் பெங் (சீனா) இணை 6-4, 6-1 என்ற நேர் செட்களில் இத்தாலியின் சாரா எர்ரானி - ராபர்டா வின்சி இணையை (2ஆவது ரேங்க்) வீழ்த்தி வாகையர் பட்டம் வென்றது. கோப்பையுடன் சூ வெய் சை, ஷுவாய் பெங் மற்றும் 2ஆவது இடம் பிடித்த சாரா எர்ரானி, ராபர்டா வின்சி.
Add new comment
Read more: http://www.viduthalai.in/home/sports.html#ixzz34E8098N2