4 ஜூன், 2014

ரொனால்டோ உள்ளே இப்ராஹிமோவிச் வெளியே


ரொனால்டோ உள்ளே இப்ராஹிமோவிச் வெளியே

உலகக்கிண்ண உதைப‌ந்தாட்ட‌ த‌குதிகாண் போட்டிக‌ளில் பின்ன‌டைவைச் ச‌ந்தித்த‌ போத்துக‌ல்,ஐவ‌ரிகோஸ்ட், நைஜீரியா,
 எகிப்து, க‌ம‌ரூன்,பிரான்ஸ்,ரொமானியா,கொஸ்ர‌ரிகா, கிரீஸ்,மெக்ஸிகோ ஆகிய‌ன‌ பிளே ஓவ் போட்டியில் வெற்றி பெற்று உல‌க‌க் கிண்ண‌ப்போட்டியில் விளையாடத்தகுதி பெற்றுள்ளன.இதில் போத்துக‌ல் சுவீட‌ன் ஆகிய‌வ‌ற்றுக்கிடையேயான‌ போட்டியை ர‌சிக‌ர்க‌ள் ஆவ‌லுட‌ன் எதிர் நோக்கின‌ர்.

போத்துக‌ல்,சுவீட‌ன் ஆகிய‌வ‌ற்றுக்கிடையேயான‌ போட்டியாக‌ இல்லாம‌ல், அணித்த‌லைவ‌ர்க‌ளான‌ ரொனால்டோ,இப்ராஹிமோவிச் ஆகிய‌ இருவ‌ருக்குமிடையேயான‌‌ ப‌ல‌ப்ப‌ரீட்சையாக‌வே க‌ருத‌ப்ப‌ட்ட‌து. ஐரோப்பாவின் மிக‌ச்சிற‌ந்த‌ வீர‌ர்க‌ளான‌ இருவ‌ரும் இர‌சிக‌ர்க‌ளின் ஆவ‌லைப்பூர்த்திசெய்த‌ன‌ர். இறுதிச்ச‌ந்த‌ர்ப்ப‌மான‌ பிளே ஓவ் போட்டிக‌ளில் இர‌ண்டு முறை மோத‌வேண்டும் முத‌ல் போட்டியில் அதிக‌ கோல் அடித்து முன்னிலை பெற்றால் இர‌ண்டாவ‌து போட்டியை ப‌த‌ற்ற‌மின்றி எதிர் நோக்க‌லாம்.

 முத‌ல் போட்டியில் ரொனால்டோ ஒரு கோல் அடித்து வெற்றியை பெற்றுகொடுத்தார். அத‌னால், இர‌ண்டாவ‌து போட்டி ப‌ர‌ப‌ர‌ப்பான‌து.முத‌ல் போட்டியில் சாதிக்க‌த்த‌வ‌றிய‌ இப்ராஹிமோவிச் எழுச்சி பெறுவார் என்று எதிர்பார்க்க‌ப்ப‌ட்ட‌து. இர‌ண்டாவ‌து போட்டியில் ரொனால்டோ, இப்ராஹிமோவிச் ஆகிய‌ இருவ‌ரும்  மாறி மாறி கோல்க‌ள் அடித்து இர‌சிக‌ர்க‌ளுக்கு விருந்து ப‌டைத்த‌ன‌ர். என்றாலும் ரொனால்டோவின் அபார‌ ஆட்ட‌த்தினால் உல‌க‌க் கிண்ண‌ப்போட்டியில் விளையாடுவ‌த‌ற்கு போத்துக‌ல் த‌குதி பெற்ற‌து.

  விறுவிறுப்பான‌ போட்டியில் 50 ஆவ‌து நிமிட‌த்தில் அற்புதமான ஒரு கோல் அடித்து ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்தினார் ரொனால்டோ. த‌ன‌க்கு முன்னால் விழுந்து எழும்பிய‌ ப‌ந்தை வ‌ல‌து முழ‌ங்காலால் முன்னே த‌ட்டி இட‌து காலால் அடித்த‌ ப‌ந்து கோல் கீப்ப‌ரின் கைக்கு எட்டாது உள்ளே சென்ற‌து.

போத்துக‌ல் ர‌சிக‌ர்க‌ளின் உற்சாக‌ம் அதிக‌ நேர‌ம் நீடிக்க‌வில்லை. 68 ஆவ‌து,72 ஆவ‌து நிமிட‌ங்க‌ளில் சுவீட‌ன் ர‌சிக‌ர்க‌ளை உற்சாக‌ப்ப‌டுத்தினார் இப்ராஹிமோவிச். ச‌க‌ வீர‌ர் அடித்த‌ கோண‌ர் கிக்கை த‌லையால் முட்டி கோலாக்கினார். அடுத்து கிடைத்த‌ பிரீ கிக் வாய்ப்பை போத்துக‌ல் வீர‌ர்க‌ளை ஏமாற்றி நில‌த்தை உர‌சிச்செல்லும் வ‌க‌யில் அடித்து கோலாக்கினார்.

ம‌கிழ்ச்சியில் திளைத்த‌ சுவீட‌ன் இர‌சிக‌ர்க‌ள் 77 ஆவ‌து 79 ஆவ‌து நிமிட‌ங்க‌ளில் அ ‌திர்ச்சியில் உறைந்த‌ன‌ர் ரோனால்டோ தொட‌ர்ந்து அடித்த‌ இர‌ண்டு கோல்க‌ளினால் சுவீட‌ன் இர‌சிக‌ர்க‌ள் அமைதிய‌டைந்த‌ன‌ர். போத்துக‌ல் இர‌சிக‌ர்க‌ள் உற்சாக‌ கோஷ‌மிட்ட‌ன‌ர். முத‌ல் கோலைப்போன்றே இர‌ண்டாவ‌து கோலையும் இட‌து காலால் அடித்தார். இட‌து ப‌க்க‌ம் இருந்த‌ ப‌ந்தை திடீரென் வ‌ல‌து காலுக்கு மாற்றி மூன்றாவ‌து கோலை அடித்தார் ரொனால்டோ.


   போத்துக‌ல், சுவீட‌ன் ஆகிய‌வ‌ற்றுக்கிடையேயான‌ இப்போட்டி உல‌க‌க்கிண்ண‌ப்போட்டியைப்போன்றே விறு விறூப்பாக‌ இருந்த‌து. சுவீட‌ன் தோல்விய‌டைந்துவெளியேறினாலும் த‌ன‌து இர‌சிக‌ர்க‌ளை ம‌கிழ்ச்சிப்ப‌டுத்திய‌து. ஐரோப்பாவில்ந‌டைபெறும் முன்ன‌ணிப்போட்டிக‌ளில் ரொனால்டோவும் இப்ராஹிமோவிச்சும்முத்திரை ப‌தித்துள்ள‌ன‌ர். அண்மையில் ஏழு போட்டிக‌ளில் விளையாடிய‌ரொனால்டோ 16 கோல்க‌ள் அடித்துள்ளார். எட்டுப் போட்டிக‌ளில்விளையாடிய‌இப்ராஹிமோவிச் 14 கோல்க‌ள் அடித்துள்ளார். 10 உல‌க‌க்கிண்ண‌ த‌குதி காண்போட்டிக‌ளில் விளையாடிய‌ ரொனால்டோ எட்டு கோல்‌க‌ள் அடித்துள்ளார். 11உல‌க‌க்கிண்ண‌ த‌குதி காண் போட்டிக‌ளில் விளையாடிய‌ இப்ராஹிமோவிச் எட்டுகோல்க‌ள் அடித்துள்ளார். இருவ‌ருக்கும் எதிராக‌ த‌லா இர‌ண்டு த‌டவைக‌ள் ம‌ஞ்ச‌ள்அட்டை காண்பிக்க‌ப்ப‌ட்ட‌து.

 ஐஸ்ல‌ண்ட், கொஸ்ர‌ரிகா ஆகிய‌வ‌ற்றுக்கிடையேயான‌ முத‌லாவ‌து போட்டி கோல்எதுவும் அடிக்காது ச‌ம‌ நிலையில் முடிந்த‌து. இர‌ண்டாவ‌து போட்டியில் 2-0 கோல்க‌ண‌க்கில் வெற்றி பெற்ற‌ கோஸ்ர‌ரிகா உல‌க‌க்‌கிண்ண‌ உதை ப‌ந்தாட்ட‌ப்போட்டியில் விளையாட‌த் த‌குதி பெற்ற‌து.
கிரீஸ்,ரொமேனியா ஆகிய‌வ‌ற்றுக்கிடையேயான‌ போட்டியில் 3- 1 கோல் க‌ண‌க்கில்கிரீஸ் வெற்றிபெற்ற‌து. இர‌ண்டாவ‌து போட்டி 2 -2கோல்க‌ண‌க்கில் ச‌ம‌ நிலையில்முடிந்த‌து அதிக‌ கோல்க‌ளின் அடிப்ப‌டையில் கிரீஸ் த‌குதி பெற்ற‌து.

 உக்கேனுக்கு எதிரான‌ முத‌லாவ‌து போட்டியில் 2 -0 கோல்‌ க‌ண‌க்கில்தோல்விய‌டைந்த‌ பிரான்ஸ், இர‌ண்டாவது  போட்டியில் 3 -1 கோல் க‌ண‌க்கில்வெற்றி பெற்ற‌து. இர‌ண்டு அணிக‌ளு த‌லா மூன்று கோல்க‌ள் அடித்த‌ன‌. முன்ன‌ர் ந‌டைபெற்ற‌ கோல்க‌ளின் அடிப்ப‌டியில் அதிக‌ கோல் அடித்த‌ பிரான்ஸ் த‌குதிபெற்ற‌து.

நியூஸிலாந்துக்கு எதிரான‌ முத‌லாவ‌து  போட்டியில்  5- 1 என்ற‌  கோல் க‌ண‌க்கில்வெற்றி பெற்ற‌ எகிப்து இர‌ண்டாவ‌து போட்டியில் 4 -2  கோல் க‌ண‌க்கில் வெற்றிபெற்று த‌ன‌து இட‌த்தை உறுதி செய்த‌து.
ஜோர்தானுக்கு எதிரான முதாலாவது போட்டியில்5- 0 கோல் கணக்கில்உருகுவேவெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கோல அடிக்காது சம நிலயில்முடிந்த 

கருத்துகள் இல்லை: