ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண தொடரின் இறுதியாட்டத்தில் ஆர்ஜன்டீனாவை எதிர்கொள்வோம் என பிரேஸில் அணியின் பயி ற்சியாளர் லுஸி பிலிப் சோலாரி எதிர்வு கூறியுள்ளார்.
உலெகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'பிபா' வின் 20 ஆவது உலகக்கிண்ணத் தொடர் பிரேஸிலில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
32 அணிகள் ஜூலை 13 வரை மோதும் இத்தொடரில் எந்த அணிகள் இறுதிப்போட்டியில் மோதும், கிண்ண த்தை கைப்பற்றும் அணி எது என்ற எதிர்பார்ப்பும் ஆவலும் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளன.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் பிரே ஸில்- ஆர்ஜன்டீனா அணிகளே மோத வாய்ப்புக்கள் உள்ளதாக பிரேஸில் அணியின் பயிற்சியாளர் சோலாரி கணித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை தொடர் குறித்து நாங்கள் ஆய்வு செய்ததில் தென்னமெரிக்க கண்டத்தில் உள்ள இரு வலிமையான அணிகளே இறுதிப்போட்டியில் மோதும் வாய்ப்பு உள்ளது. அதில் ஒன்று பிரேஸில் மற்றொரு அணி ஆர்ஜன்டீனா. ஏனெ னில் இரு அணியிலும் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர் என அவர் தெரிவித்ததார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக