இங்கிலாந்து, இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை 453 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 575 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 415 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் 4வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய மேத்யூஸ் தனது 3வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார்.
அவர் 102 ஓட்டங்களில் (172 பந்து, 12 பவுண்டரி) ஆட்டமிழந்தார். முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 453 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து 122 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 39 ஓவர் முடிந்திருந்த போது 6 விக்கெட்டுக்கு 126 ஓட்டங்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது மொத்தத்தில் இங்கிலாந்து 248 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது.
5வது நாள் ஆட்டத்தில் 267 ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து அணி 8 விக்கெட் இருந்த நிலையில் டிக்ளேர் செய்து 389 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கிறது. தனது இரண்டாவது இன்னிங்சை இலங்கை அணி விளையாடி வருகின்றது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக