27 அக்., 2010

22nd Oct 2010
பீலேவுக்கு 70 வதுபிறந்தநாள்-அவரைப்பற்றிய 70 சிறப்பு தகவல்கள்!
', LEFT, true, BGCOLOR, '#ffffff',FADEIN,'1000')" onmouseout="UnTip()">
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே 70வது பிறந்தநாளை கொண்டாடினார்.இந்த தருணத்தில் அவரை பற்றிய 70 சுவாரஸ்யத் தகவல்களை தமிழ்ஸ்போர்ட்ஸ் நியூஸ்.காம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது.பீலேவின் பிறந்த தினம் சரியாகத் தெரியவில்லை.அவர் 1940ம் ஆண்டு அக்டோபர் 21 அல்லது 23ந் தேதிகளில் பிறந்ததாக இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறது.
1.பீலே மொத்தம் 1,283 கோல்களை அடித்துள்ளார்.இதில் 92 கோல்கள் பிரேசிலுக்காக அடித்தது.
2.மூன்று முறை உலக கோப்பையை வென்றுள்ளார்.
3.அமெரிக்க விஞ்சானி தாமஸ் ஆல்வா எடிசனை நினைவாகவே எட்சன் அரான்டஸ் டி நாசிமென்டே என்ற இயற்பெயர் அவருக்கு சூட்டப்பட்டது.
4.பீலேவை 15 வயதில் பிரபல பிரேசில் அணியான சான்டோஸ் ஒப்பந்தம் செய்தது.
5.1956ம் ஆண்டு செப்டம்பர் 7ந் தேதி கொரிந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீலே களம் இறங்கினார்.இந்த போட்டியில் 4 கோல்களை அடித்து பிரமிக்க வைத்தார்.
6.17 வயதில் பீலே உலக கோப்பையை வென்று சாதனை படைத்தார்.இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.இறுதி போட்டியில் சுவீடனுக்கு எதிராக இரு கோல்களும் அடித்தார்.
7.கடந்த 1995ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை பிரேசில் விளையாட்டுத்துறை அமைச்சராக பீலே இருந்தார்.
8.1999ம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் 20ம் நுற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரராக பீலேவை அறிவித்தது.
9.1969ம் ஆண்டு நவம்பர் 19ந் தேதி சான்டோஸ் அணிக்காக பீலே ஆயிரமாவது கோலை அடித்தார்.10 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்திற்குள் வந்து பீலேவை தலையில் வைத்து கொண்டாடினார்கள்.
10.ஒவ்வொரு நவம்பர் 19ந் தேதியையும் சாபாலோ நகரத்தில் பீலே தினமான கொண்டாடப்படுகிறது.
11.உலக கோப்பையில் பீலே 12 கோல்களை அடித்துள்ளார்.உலக கோப்பை போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்களில் பீலேவுக்கு 5வது இடம்.
12.உலக கோப்பையில் அதிக கோல் அடித்த பிரேசில் வீரர்களில் பீலேவுக்கு 2வது இடம்.ரொனால்டோவுக்கு முதலிடம்.
13.நைஜீரியாவில் அரசு படைகளுக்கும் தீவிரவாத கும்பலுக்கும் இடையே போர் நடந்த சமயத்தில் பீலே ஒரு கண்காட்சி போட்டியில் விளையாட நைஜீரியா வந்தார்.அவரது ஆட்டத்தை காண்பதற்காக 48 மணி நேரம் போர்நிறுத்தம் செய்யப்பட்டது.
14.நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக பீலே விளையாடிய போது,ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் பீலேவிடம் ஜெர்சியை மாற்றிக் கொள்ள எதிர் அணி வீரர்கள் முண்டியடிப்பார்கள்.(கால்பந்தில் போட்டி முடிந்தவுடன் எதிர் அணி வீரர்களிடம் இருந்து ஜெர்சியை பரஸ்பரம் மாற்றிக் கொள்வது வழக்கம்)பீலே விளையாடும் ஒவ்வொரு போட்டியின் போதும் 30 பீலேவின் ஜெர்சிகளை நியூயார்க் காஸ்மோஸ் வைத்திருக்கும்.
15.ஆயிரக்கணக்கான அறக்கட்டளை அமைப்புகள் நிதி திரட்டுவதற்காக பீலேவை விளையாட அழைத்துள்ளன.அவரும் சளைக்காமல் சென்று வருவார்.
16.2001ம் ஆண்டு பீலே நியூயார்க் காஸ்மோசின் கவுரவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
17.பீலேவும் மரடோனாவும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள்''மரடோனா குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடல் இல்லை'' என்று பீலே சொன்னால் மரடோனா,''பீலே மியூசியத்தில் இருக்க வேண்டியவர்''என்று பதிலளிப்பார்.
18.1966ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பாபி மூர்,''பீலேவை போன்ற ஒரு கால்பந்தாட்டக்காரரை தன் வாழ்நாளில் கண்டது இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
18.அவரது குடும்பத்தினர் பீலேவுக்கு வைத்த இன்னொரு பெயர் டீகோ. பின்னர் அவரது பள்ளி பருவத் தோழர்கள் வாஸ்கோடகாமா அணியின் கோல்கீப்பர் பெலேவின் பெயரை சூட்டினர்.அதுவே பின்னர் பீலே என்று மாறியது.
19.பீலேவின் தந்தையும் ஒரு கால்பந்து வீரர்தான்.ஒரே போட்டியில் ஐந்து கோல்களை தலையால் முட்டி அவர் அடித்துள்ளார்.ஆனால் பீலேவால் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.அதிக பட்சமாக ஒரு போட்டியில் 4 கோல்களை பீலே தலையால் முட்டி அடித்துள்ளார்.
20.1970ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் பிரேசிலுக்கான 100வது உலக கோப்பை கோலையும் பீலே அடித்தார்.
21.1958ம் ஆண்டு உலக கோப்பை கால் இறுதி ஆட்டத்தில் வேல்ஸ் அணிக்கு எதிராக பீலே முதல் கோல் அடித்தார்.
22.1994ம் ஆண்டு மனதத்துவ நிபுணரும் பாடகியுமான அசிரியா லீமோசை 2வது திருமணம் செய்தார்.
23.கால்பந்து விளையாடும் ஒவ்வொரு குழந்தையும் என்னைப் போல வர முயற்சி செய்கின்றன.அந்த குழந்தைகள் என்னை போல் ஆவதை விட நல்ல மனிதர்களாக உலகத்தில் வலம் வரவே நான் விரும்புகிறேன் என்று பீலே ஒரு முறை சொன்னார்.
24. வெற்றி பெறுவதற்கு பீலே கொடுத்துள்ள விளக்கம் ''சக்சஸ் தற்செயலாக நிகழ்வது இல்லை,கடின உழைப்பு,கற்றுக் கொள்வது,கற்றுக் கொடுப்பது,தியாகம் எல்லாவற்றுக்கும் மேலாக நாம் விரும்புவதை நேசிப்பதில் நமது வெற்றி அடங்கியிருக்கிறது''
25.20ம் நுற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரராக குத்துச்சண்டை வீரர் முகமது அலியையும் பீலேவையும் கடந்த 2000ம் ஆண்டு பி.பி.சி தேர்வு செய்தது-
26.இத்தாலியின் புகழ்பெற்ற தடுப்பாட்டக்காரரான டாஸ்சிரியோ பர்ஸ்கிச்,1970ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது பீலே பற்றி குறிப்பிட்டதாவது'' எல்லாரையும் போலத்தானே அவரும் சதையாலும் எழும்புகளாலும் படைக்கப்பட்டுள்ளார் என்று நினைத்தேன்.ஆனால் எனது கணிப்பு தவறு என்பது பின்பு எனக்கு புரிந்தது''
27.பெரும்பாலான பிரேசிலியர்கள் பீலேவை 'பெரோலா நெக்ரா' என்றே கூறுகின்றனர்.இதற்கு அர்த்தம் 'கருப்பு முத்து'
27. பெரும்பாலான நாடுகள் பீலேவை தங்கள் நாட்டு குடிமகனாக்க முயற்சி செய்தன.இதனை தடுக்க 1961ம் ஆண்டு பிரேசில் பீலேவை தேசிய சொத்தாக அறிவித்தது.
28.1975ம் ஆண்டு நியூயார்க் காஸ்மோஸ் பீலோவை ஒப்பந்தம் செய்ய விரும்பியது.அப்போது அந்த அணியின் பொது மேலாளர் கிளைவ் டோயே,''இத்தாலிக்கு போக வேண்டாம் ஸ்பெயினுக்கு போக வேண்டாம்.அங்கே சென்றால் கோப்பைகளையும் பதக்கங்களையும் வெல்லலாம்.ஆனால் அமெரிக்காவுக்கு வந்தால் ஒரு நாட்டையே வெல்லலாம்'' என்று பீலேவிடம் கூறினார்.
29.இளமை பருவத்தில் பீலேவும் அவரது நண்பர்களும் ஒரு கால்பந்து அணி வைத்திருந்தனர்.அந்த அணியின் பெயர் 'காலணி இல்லாதவர்கள்'
30.கோகோ&கோலா நிறுவனம் பிரேசிலில் பீலேவை பற்றிய ஒரு கண்காட்சி வாகனத்தை உருவாக்கியுள்ளது.இந்த கண்காட்சி வாகனம் பிரேசில் நாட்டை சுற்றிக் கொண்டே வருகிறது.
31.கிறிஸ்டியானோ ரொனால்டோ பீலே பற்றி சொன்னது'' பீலே ஒரு முறைதான் பிறக்க முடியும்''
32. மூன்று முறை உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்த ஒரே வீரர் பீலேதான்.
33.இளமை பருவத்தில் கால்பந்து வாங்க பணம் இல்லாத பீலே,''துணி,சாக்ஸ்,பேப்பர்கள் ஆகியவற்றை அடைத்து பந்து செய்து பயிற்சி எடுப்பார்.
34.ரெயில் நிலையங்களில் ஷ§க்களுக்கு பாலீஸ் போடும் பணியையும் பீலே செய்துள்ளார்.
35.''முதலிடத்தில் இருக்க வேண்டும்.இரண்டாவது இடத்தில் இருந்தால் அது வேஸ்ட்'' வெற்றி குறித்து பீலே சொன்னது.
36.பீலே ஐ.நா.அமைப்பு,யுனிசெப் அமைப்புகளின் நிரந்தர அம்பாசடர்.
37. பிரேசிலில் கால்பந்தில் இருக்கும் லஞ்ச ஊழல்களை தடுக்க பீலே ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
38.1964 நவம்பர் 24ந் தேதி பொடபாகோ அணிக்கு எதிராக சான்டோஸ் வீரரான பீலே 8 கோல்களை அடித்தார்.இந்த ஆட்டத்தில் சான்டோஸ் 11-0 என்று வெற்றி பெற்றது.
39.ஒரு முறை 8 கோல்களையும், 6 முறை 5 கோல்களையும் பீலே அடித்துள்ளார்.
40. 31 முறை 4 கோல்களும் 92 ஹாட்ரிக் கோல்களும் பீலேவின் கோல் கணக்கில் அடக்கம்.
41. 1971ம் ஆண்டு ஜுலை 18ந் தேதி யூகோஸ்லோவாகியா அணிக்கு எதிராக கடைசி சர்வதேச ஆட்டத்தில் பீலே விளையாடினார்.இந்த போட்டி 2-2 என்று டிராவில் முடிந்தது.
42.கிளப் போட்டியில் கடைசி ஆட்டம் பிளமிங்கோ அணிக்கு எதிரானது.இந்த போட்டியில் சான்டோஸ் 2&0 என்று வெற்றி பெற்றது.இது 1976 அக்டோபர் 6ந் தேதி நடைபெற்றது.
43.1977ம் ஆண்டு அக்டோபர் 1ந் தேதி பீலே விளையாடிய சான்டோஸ் மற்றும் நியூயார்க் காஸ்மோஸ் அணிகள் ஒரு கண்காட்சி போட்டியில் நியூயார்க்கில் மோதின.இந்த போட்டியில் முதல் பாதியில் சான்டோஸ் அணிக்காகவும் இரண்டாவது பாதியில் நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காகவும் பீலே விளையாடினார்.
44.மறக்கப்பட்ட மாவீரன் கரிஞ்சாவும் பீலேவும் இணைந்து விளையாடிய எந்த போட்டியிலும் பிரேசில் தோற்றது இல்லை.
45.பிரேசில் அணிக்காக 92 கோல்கள் அடித்துள்ளார்.இந்த சாதனை எந்த பிரேசில் வீரரும் இன்னும் வரை முறியடிக்கவில்லை.
46.உலக கோப்பையில் பிரேசிலின் 100வது கோலை பீலே தலையால் முட்டி அடித்தார்.
47.1980ல் பீலேவின் கால்பந்தாட்டதை வைத்து வீடியோ கேம் வந்தது.அதன் பெயர் 'பீலேஸ் சாக்கர்'
48.கராத்தே வீரர் ஜோஸ் லேன்டி ஜேனுக்கும் பீலே என்ற நிக்நேம் உண்டு.
49.புகழ் பெற்ற நெதர்லாந்து நாட்டு ஓவியர் டிக் பிரினிஸ்டன் பீலேவை ஓவியமாக வரைந்து பரிசளித்துள்ளார்.
50.1975ம் ஆண்டு பீலே நியூயார்க் காஸ்மோசில் இணைந்தார்.நியூயார்க்கில் பீலே ஆடி வந்த காலத்தில்தான் கால்பந்து அமெரிக்காவில் பிரபலமாகத் தொடங்கியது.பீலே ஆடிய போட்டியை காண சராசரியாக 13 ஆயிரம் ரசிகர்கள் திரண்டனர்.அமெரிக்காவில் அப்போது இது ஒரு சாதனை ஆகும்.
51. 1956 ஜுன் 9ந் தேதி லேவ்ராஸ் அணிக்கு எதிரான சான்டோஸ் வீரர் பீலே முதல் ஹாட்ரிக் கோல் அடித்தார்.
52.1975ம் ஆண்டு ஜுன் 5ந் தேதி நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக பீலே டல்லாஸ் டொர்னாடோஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்கினார்.இதில் கோலும் அடித்தார்.இந்த ஆட்டம் 2-2 என்று டிரா ஆனது.
53.பீலே நடித்த 'எஸ்கேப் டு விக்டரி' என்ற ஆங்கிலப் படம் உலக மக்களை வெகுவாக கவர்ந்தது.
54.2005ம் ஆண்டு வயகராவை பயன்படுத்த வேண்டாம் என்று பீலே ஒரு விளம்பர படத்தில் நடித்தார்.
55.1970ம் ஆண்டு மெக்சிகோ உலக கோப்பை போட்டியில் ஒரு ஆட்டம் துவங்க இருந்தது.காலணி லேஸ் அவிழ்ந்து விட்டது வெயிட் என்று நடுவரிடம் பீலே கையை காட்டினார்.ஏதோச்சையாக கேமரா பீலே லேசை கட்டுவதை காட்டியது.அப்போது அவர் 'பூமா' காலணியை பயன்படுத்தி வந்தார்.அந்த ஒரே நாளில் மட்டும் லட்சக்கணக்கான பூமா காலணிக்கள் விற்று தீர்ந்தன.
56.பீலே 129 முறை 3 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார்.
57.பீலேவின் 1000வது கோல் பெனால்டி முறையில் அமைந்தது.இதே போல் ஆயிரம் கோல் அடித்துள்ள இன்னொரு வீரர் ரொமாரியோ.இவரும் பெனால்டி மூலம்தான் 1000வது கோலை அடித்தார்.
58.பீலே பிறந்த நகரம் சாபாலோ.
59.பீலேவின் உயரம் 5 அடி 8 அங்குலம்.
60.பீலே இரண்டு கிளப் அணிகளுக்கு மட்டுமே விளையாடியுள்ளார்.1956 முதல் 74 வரை சான்டோஸ்காக விளையாடி 1087 கோல்களை அடித்துள்ளார்.1975 முதல் 77 வரை நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக விளையாடி 67 கோல்களை அடித்துள்ளார்.
61.பீலேவின் தந்தை பெயர் டோன்டினோ.இவர் பிளமினெஸ் அணி வீரர்.
62.பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து மைதானமான மரக்கானாவில் பீலேவின் காலடித்தடம் பதிக்கப்பட்ட நினைவு சின்னம் உள்ளது.
63.பீலேவுக்கு 1966ம் ஆண்டு திருமணம் நடந்தது.ரோஸ்மேரி என்பவரை அவர் மணந்தார்.இவர்களுக்கு இரண்டு மகள்கள்.மூத்தவர் பெயர் கெல்லி கிறிஸ்டியானா,இளையவர் ஜெனிபர்.மகன் பெயர் எடின்கோ.1978ம் ஆண்டு இந்த தம்பதிகள் விவாகரத்து செய்தனர்.
64.1994ம் ஆண்டு பீலே இரண்டாவது திருமணம் செய்தார்.இதன் மூலம் பீலேவுக்கு இரட்டை குழந்தைகள் உண்டு.பெயர் ஜோசுவா,செலாஸ்டே
65.டைம் இதழ் 20ம் நுற்றாண்டின் 20 முக்கிய மனிதர்களில் ஒருவராக பீலேவை தேர்வு செய்தது.
66.கடந்த 2000ம் ஆண்டு 'பிபா' இணையம் மூலம் 20ம் நுற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர் யார்?என்று ஓட்டெடுப்பு நடத்தியது.இதில் மரடோனா முதலிடம் பிடித்தார்.இளைய தலைமுறையின் ஆதரவு மரடோனாவுக்கு அதிகமாக இருந்தது.ஏனென்றால் அவர்கள் பீலேவின் விளையாட்டை பார்த்தது இல்லை.இதனால் வேறு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி சிறந்த வீரராக இருவரையும் தேர்வு செய்தது.
67.உலகின் மிகப் பழமையான அணியான 'ஷெட்பீல்டு' துவங்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதையட்டி கடந்த 2007ம் ஆண்டு இன்டர்மிலானுடன் ஒரு நட்பு போட்டியில் மோதியது.இந்த போட்டியை துவக்கி வைக்கும் பெருமை பீலேவுக்கு வழங்கப்பட்டது.
68.திரைப்படம்,குறும்படம்,&

கருத்துகள் இல்லை: