28 அக்., 2010

23rd Oct 2010
சமீபத்திய சர்வே: கால்பந்தை நேசிக்கு நகரம்;பிரேசிலின் சாபாலோ முதலிடம்

சாபாலோ
கால்பந்து எந்த நகரங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது என்று சமீபத்தில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது.பட்டியலில் தென்அமெரிக்க நகரங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.முதலிடத்தை பிரேசிலின் சாபாலோவும் 2வது இடத்தை அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சும் பெற்றுள்ளன.இத்தாலியின் மிலான் 3வது இடத்தை பிடிக்கிறது.
1.சாபாலோ- பிரேசில்
--------------------------
பீலே பிறந்த சாபாலோ உலகில் கால்பந்தாட்டத்தை அதிகம் நேசிக்கும் மக்கள் நிறைந்த நகரங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.1902ம் ஆண்டு துவக்கப்பட்ட சாபாலோ ஸ்டேட் லீக் போட்டி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.பிரேசிலின் புகழ்பெற்ற அணிகளான கொரிந்தியன்ஸ்,சான்டோஸ்,சாபாலோ,பல்மாரிஸ் போன்ற அணிகளின் தாயகம் இந்த நகரம்.2 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தில் கால்பந்து வீரர் இல்லாத வீடே கிடையாது.
2.பியூனஸ் அயர்ஸ்- அர்ஜென்டினா
--------------------------------------------
அர்ஜென்டினியர்கள் அதிகம் விரும்பு விஷயத்தில் கால்பந்துக்கு முதலிடம்.இவர்கள் விரும்பும் இன்னொரு விஷயம் நீண்ட முடி வளர்ப்பது ஆகும்.அர்ஜென்டினாவின் தலைநகரமான பியூனஸ்அயர்சில் உலகின் மிகவும் புகழ்பெற்ற இரு அணிகள் உள்ளன.அவைகள் போகா ஜுனியர்ஸ்,ரிவர் பிளேட்.இதுதவிர பொம்பரானா ஸ்டேடியமும் உலக புகழ்பெற்றது.
3.மிலான்- இத்தாலி
------------------------
உலகின் புகழ்வாய்ந்த இரு கிளப்புகளை உள்ளடக்கியுள்ளது இந்த வடக்கு இத்தாலி நகரம்.இன்டர்மிலானும் ஏ.சி.மிலானும் இல்லாத கிளப் கால்பந்தை யோசித்துக் கூட பார்க்க முடியாது.இந்த இரு கிளப்புகளும் தெருக்களையும் பேருந்துகளையும் மட்டும் பகிர்ந்துக்கொள்ளவில்லை.அதிநவீன மைதானமான சான்சிரோவையும் பகிர்ந்து கொள்கின்றன.
4.மாட்ரிட்- ஸ்பெயின்
-------------------------
உலகின் பணக்கார அணியாக கருதப்படும் ரியல்மாட்ரிட் இங்குதான் உள்ளது.அது மட்டுமல்ல ஸ்பானீஷ் லீக்கில் அசத்தி வரும் அத்லெடிகோ மாட்ரிட்டின் தாயகமும் இந்த நகரம்தான்.உலகின் புகழ்பெற்ற கால்பந்து மைதானமான சான்டியாகோ பெர்னாபூ இங்குள்ளது.
5.மான்டிவிடியோ-உருகுவே
------------------------------------
உலக கோப்பை கால்பந்து போட்டியை துவக்கி வைத்த உருகுவே தலைநகரம் இது.நாசினியாரல்,பெனாரல் என இரு புகழ்பெற்ற கிளப்புகள் இங்குள்ளன.இந்த இரு அணிகளும் பரம வைரிகள் ஆகும்.இரண்டும் மோதினால் களத்தில் அனல் பறக்கும்.இந்த நகரத்துக்கு 5வது இடம்.
6.ரியோடி ஜெனிரோ- பிரேசில்
------------------------------------
பிரேசிலின் வர்த்தக தலைநகரமான இங்குதான் உலகின் மிகப்பெரிய மைதானமான மரக்கானா உள்ளது.2014ம் ஆண்டு உலக கோப்பையின் இறுதி ஆட்டமும் இங்குதான் நடைபெற போகிறது.பொடபாகோ, பிளமிங்கோ,வாஸ்கோடகாமா,பிளமினெஸ் போன்ற அணிகள் இந்த நகரத்தில்தான் பிறந்தன.
7.லண்டன்- இங்கிலாந்து
------------------------------
இங்கிலாந்தின் தலைநகராமான இங்கு செல்சி,ஆர்சனல் என்ற இரு புகழ்பெற்ற கால்பந்துஅணிகள்உள்ளன.டாட்டன்ஹாம்,வெஸ்ட்ஹாம்,புல்ஹாம்,கிரிஸ்டல் பேலஸ் என லண்டன் முழுவதும் புகழ்பெற்ற கால்பந்து அணிகள் நிறைந்துள்ளது.இந்த நகரத்துக்குள்ள ஒரே குறைபாடு ஐரோப்பாவின் கவுரவமிக்க கால்பந்து போட்டியான, சாம்பியன்ஸ் லீக்கில் இது வரை லண்டன் அணிகள் பட்டத்தை வென்றது இல்லை என்பதே.உலகின் புகழ்பெற்ற கால்பந்து மைதானமான வெம்ப்ளி இங்கு உள்ளது.ஆனாலும் லண்டனுக்கு 7வது இடமே கிடைத்துள்ளது.
8.மெக்சிகோ சிட்டி- மெக்சிகோ
--------------------------------------
உலகின் மிகப்பெரிய நகரமான மெக்சிகோ சிட்டியில் 3 கால்பந்து அணிகள் பிரசித்தி பெற்றவை.யுனிவர்சிடால் நாசியனால்,கிரஸ் அசூல்,கிளப் அமெரிகா போன்ற கிளப்புகள் மெக்சிகோ கால்பந்துக்கு அடித்தளம்.
9.லிவர்பூல்-இங்கிலாந்து
-----------------------------
லிவர்பூல்,எவர்ட்டன் என இரு புகழ்பெற்ற அணிகள் இந்த நகரத்தில் உள்ளன.எவர்ட்டனில் இருந்து பிரிந்துதான் லிவர்பூல் உருவானது.உலகிலேயே வன்முறை நிறைந்த கால்பந்து ரசிகர்கள் இங்குதான் உள்ளனர்.லிவர்பூல் எங்கு சென்றாலும் தொடர்ந்து சென்று எதிர் அணி ரசிகர்களிடம் வம்பிழுப்பது இந்த நகர ரசிகர்களின் வழக்கம்.கால்பந்தில் வன்முறை வெடித்தால் அதற்கு நிச்சயம் ஒரு லிவர்பூல் ரசிகர் காரணமாக இருப்பார்.இந்த நகரத்துக்கு 9வது இடம்.
10.போர்ட் அல்ஜீரே- பிரேசில்
------------------------------------
இந்த பட்டியலில் 10வது இடத்தை பிரேசிலின் கிரீமியோ அணி தலைமையகம் அமைந்துள்ள போர்ட் அல்ஜீரே பெறுகிறது.

கருத்துகள் இல்லை: